Wednesday, December 26, 2012


மொழி இலக்கிய சஞ்சிகை குறித்ததான ரசனைக்குறிப்பு!!

முல்லைத்தீவு மண்ணிலிருந்து வெளிவரும் "மொழி" சஞ்சிகை, இருமாத இலக்கிய சஞ்சிகையாக இவ்வாண்டு தைமாதந் தொடங்கி வெளிவந்துகொண்டிருக்கின்றது.மிக இளம் ஆசிரியரான இராமசாமி ரமேஷ் அவர்களையும் வசந்தன், நிரோஷா ஆகிய இணை ஆசிரியர்களையும் கொண்டு படைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மொழி தனது 2வது வெளியீட்டை அண்மையில் வெளியிட்டது.

சிறந்த வடிவமைப்புடன் 28 பக்கங்களை கொண்டு எம் தேசத்து படைபாளியின் அட்டைப்படத்துடனான இச்சஞ்சிகை 'மொழியின் விழியிலிருந்து...'என்று நன்றிப்பெருக்குடன் ஆரம்பித்து, இந்நிலை எப்போது மாறும் இந்நிலை எப்போது மாறும்? என்ற ஆசிரியரின் ஆதங்கமான நியாயமான கருத்துக்களோடு விரிந்து செல்கின்றது.படைப்பாளிகளை வெளிக்கொணரும் நோக்கம் பக்கங்கள் அத்த‌னையிலும் பளிச்சிட்டு நிற்கின்றது. அந்த வகையில் இ.ஒ.கூ.தா தென்றல் வானொலி அறிவிப்பாளர் மறைந்த இராஜேஸ்வரி சண்முகம் அவர்களுக்கு கண்ணீரஞ்சலியாக 'அலைகள் ஓய்வதில்லை' திருமதி மியூரியல் அவர்களின் கவிதையோடு யாதவ்,மருதோடை நிலா, யோ.புரட்சி,வை.பிரசன்யா, சுமன், கீ.பீ.நுதன்,கலாபூசனம் கல்முனை பூபால்,சீ.என். துரைராஜா,த.எலிசபெத்,பா.ரிசாந்தன், இராமசாமி ரமேஷ்,பிரதீப்,கிருஷ்ண‌சாமி அருள், அகல்யா,தேனினியன்,இரா.ரவிரகு, ச.சுவேந்திரன், வேல்நந்தன், ஆகியோரின் கவிதைகளும் எம்.சம்ஸ் அவர்களின் அருமையான சிறுகதையுடன் அமிர் வசந்தன், அனுஷா கணேசலிங்கம் ஆகியோரின் சிறுகதைகளும் நூலுக்கு கனத்தை வழங்கியுள்ளது.

நம் நாட்டு படைப்பாளியும் இணைய வானொலி அறிவிப்பாளருமான கவிதாயினி அனுஷா கணேசலிங்கம் அவர்களின் சுவாரஸ்யமான கலைவாழ்க்கை குறித்ததான நேர்காணல் விஷேட அம்சமாக காணப்படுகின்றது. 'மொழி நூலகம்' எனும் பக்கத்தில் நம் நாட்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள் குறித்ததான அறிமுக குறிப்புக்களுடன் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதி பக்கத்தில் 'மொழியின் தடங்கள்' என "மொழி" வெளியீட்டுவிழா பற்றிய புகைப்படங்களையும் வெளியிட்டு மகிழ்கின்றது சஞ்சிகைக்குழு. காத்திரமான படைப்புக்களோடு இலக்கியத்தை சுமந்து வந்துள்ள இச்சஞ்சிகை தனது இந்த ஆரம்ப நாட்களை மிடுக்குடன் உலகிற்கு பறைச்சாற்றிக்கொண்டிருக்கின்றது குழுவினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் இன்னும் அதிகமான பல்துறை சார்ந்த இலக்கிய நிகழ்வுகள், கட்டுரைகள் என தனது பரப்பையும் அநுபவத்தையும் அதிகரிக்குமாயின் காலத்தை வெளிப்படுத்தி நிற்கும் ஓர் சாதனை நூலாக படம் பதித்திட முடியும். அத்துடன் நூலில் காணப்படும் சில எழுத்துப்பிழைகளையும் தவிர்ப்பது படைப்புக்களின் ஆரோக்கியத்துக்கு வழிகோலும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மொழி சஞ்சிகை ஆசிரியருக்கும் குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவிப்பதோடு இவ்விதழை வாசித்து வாசகர்களாகிய எமது ஆதரவினையும் பங்களிப்பினையும் வழங்கிடுவோம்.


தொடர்புகளுக்கு:  இராமசாமி ரமேஷ்,
                                    உடுப்புக்குளம்,
                                   அளம்பில்,
                                   முல்லைத்தீவு.
Email                          :alampilamal@yahoo.com
தொ.பே                   : 0775929258
விலை                     :50/=


No comments: