Wednesday, July 27, 2011

இன்ப‌ மிது வன்றோ

ஐந் திரு மாத‌ங்க‌ளா யென்ம‌ணி வ‌யிற்றில்
நிந்த‌னை யோடே சும‌ந்தே னென் க‌ருவை -இந்
நாள் ம‌ட்டும‌தை என்குழ‌ந்தை யென்றுண‌ர‌வில்லை
நான் பெற்றுக் கொள்ள‌வும‌தை விரும்பிட‌வில்லை...

என் னைபுதைத்து முளைத்தெழுந்த‌ குழ‌ந்தாய்
நின் சோக‌க் க‌ருவாய் ஏனிங்கு ம‌ல‌ர்ந்தாய் -விண்
ம‌ழை போலொரு க‌ண்ணீர்க்க‌தை என‌க்குண்டு
ம‌ன‌ம் விட்டுசொல்லிட‌வே ம‌ன‌மொன் றிங்கில்லை...

ஊர்வாய் க‌ளையிழுத்து மூடிட‌வே என‌துற‌வுக‌ள்
பேர் காப்பாற்றிக் கொள்ள‌ ம‌ண்ணிலே -வேர்
விட்டு போன‌த‌ம் கெளர‌வ‌ம் காத்திட‌வேயென்
விட‌லை ப‌ருவ‌ம‌தை வீணாக்கிய‌ விரோத‌க்க‌ருவிது...

ம‌ண‌வாள‌ன‌து பேரும‌றியா முக‌ம‌றியா பேதையாய்
க‌ன‌வினில் ஜொலித்த‌ யென் க‌ற்ப‌னைக‌ள் -என‌
தாசையின் தாட்ப‌ரிய‌ங்க‌ளை ய‌ழித்து புகுத்திய‌
தாழாமையில் உருவான‌ தாய்மை யின்ப‌ம‌ல்ல...

மெய்தொட்டே யெழுதுகிறேன் ம‌ன‌தில் காய‌மே
தாய்மையில் வ‌யிற்றை நானும்த‌ட‌வி -சேய்
யென‌ நினைந்து ம‌ச‌க்கையில் ம‌கிழ்ந்த‌துமில‌
க‌ல்லைச் சும‌ப்ப‌தாய் கல்லாய்த்தான் விழித்திருந்தேன்...

ப‌த்துமாத‌த் தின்ப‌ல‌னாய் தாய்மையின் வ‌லியெனை
சித்த‌ங் க‌ல‌ங்க‌ச் செய்கையிலே சிசுவுனை -ப‌த்
திர‌மாயுல‌க‌ங்காண‌ச் செய‌வென‌ ப‌கைமையும் ம‌ற‌ந்தேன்
தாய்மையின் ம‌க‌த்துவ‌மிதோ த‌ர‌ணியில் ந‌ற்பேறிதோ...

பூரித்திட்ட‌ நெஞ்ச‌ம‌து பூமுக‌முனை க‌ண்ட‌தும்
வாரிய‌ணைத் திட்டெ னைம‌ற‌ந்தே கொஞ்சிய‌தும் -பாரி
போலென‌து ம‌ன‌மும் பாலூட்டி துஞ்சிய‌தும்
போர்க்க‌ப்ப‌லென் குண‌மே மூழ்கிற்றே உன‌த‌ழுகையில்...

ப‌த்திரிகையில் பிர‌சுர‌மாகிய‌ என‌து முத‌ல் க‌விதை...

மண்ணுக்குள் விழுந்திருந்த விதையாய்
எனக்குள் முளைத்திருந்த க விதைகள்
எனதேடுகளை விட்டு முதன்முதலாய்
பத்திரிகை பக்கமொன்றில் ப(பி)ரவசமானது
25.07.2004 அன்றைய வீரகேசரி வார இதழில்.

நான் வளர்த்த ரோஜாச்செடி மலர்ந்து
பூரிப்பைத்தந்திட்ட மகிழ்வை யெனக்குள்
நிகழ்த்திய அந்த கவிதையிது....

வரமாட்டாயா?

நிம்மதி
நிலைகெட்டுப்போனது

ஆனந்தம்
அடங்கிப்போனது

ம‌கிழ்ச்சி
ம‌ங்கிப்போன‌து

சுறுசுறுப்பு
சுருங்கிப்போன‌து

என்னுட‌ல் உன்
நினைவுக‌ளா லுருகி
உருக்குழைந்து போன‌து நீ
வ‌ர‌மாட்டாயா

ச‌மாதான‌மே நீ
வ‌ர‌மாட்டாயா?

Monday, July 25, 2011

பிடிக்கும்.....பிடிக்கும்

உன தவ சரம் பிடிக்கும்
உன தாளுமை பிடிக்கும்...

இனிக்க இனிக்க இதழ்
வலிக்க வலிக்க‌
சலிக்காமலே பேசிடு முன்
சரளம் பிடிக்கும்...

மடமைகளை நீக்கிடு முன்
கடமைகளை திடமாகவே
பேசி விடு முன் தீர்மானங்கள‌தை
வாசித்திட‌வே மிக‌ப் பிடிக்கும்...

வேக‌மான‌ வினைத்திற‌னும் உப‌
யோக‌மான‌ க‌ன்னிய‌ங்க‌ளும் யாக‌
மேற்றிடாதே வாய்த்த‌ உன‌தான‌
மேல‌ன‌வை க‌ளெலாம் மிக‌ப் பிடிக்கும்...

ப‌ய‌ங் கொள்ளாத‌ வாய்வீச்சுக்க‌ளும்
ந‌ய‌ங் காட்டி வீழ்த்திடவே த‌ய‌ங்
கிடுமுன் தாய்மைக்குண‌ங்க‌ளும்
கிளை ப‌ர‌ப்பிட‌வே மிக‌ப்பிடிக்கும்...!!!

எழுத‌த்தோன்றிய‌ வ‌ரிக‌ள்

01.மேகத்தீண்டல் போல‌
மோகம் கொண்டெழும்
தேகக் காதல் வேண்டாம்
இரும்பை உருக்கி வடித்த‌
உறுதியான‌
உள்ளக்காதல் வேண்டும்
உலக மின்னு மின்னும்
கண்ணீர்க்கதைகளை சுமக்காதிருப்பதற்கு...!!

02.அகத்தி ன‌ழகு
முகத்தினில் தெரியுமென்பர்
அலங்கரித்துக் கொள்ளுங்க ளுங்க‌ள்
அக‌ங்க‌ளை ய‌ன்பினாலும் ந‌ற்
ப‌ண்புக‌ளின் ப‌ய‌ன்க‌ளினாலும்...!!

03.தாழ்மை யுங் களை மேன்மையாக்கிடும்
மேட் டிமையோ தாழ்த்தி விட்டிடும்
உங் க‌ளை நீங்க‌ளே யுய‌ர்த்தாதீர்
உய‌ர‌த்திற்கு போனாலும் திமிராதீர்...!!

04.ப‌ற்றிய‌து ப‌ற்றிய‌து தீய‌தும் ப‌ற்றிய‌து
ப‌ற்றிய‌து ப‌ற்றிய‌து ம‌ன‌முனை ப‌ற்றிய‌து
எட்டிய‌து எட்டிய‌து காத‌லு மெட்டிய‌து
எட்டி ய‌து எட்டி ய‌து வாழ்வுத‌னை யெட்டிய‌து...!!

05.ந‌ம்மை சுற்றியுள்ளோ ரெலாம்
ந‌ல்ல‌வ‌ர்க‌ளில்லை
ந‌ம்மை சுற்றியுள்ள‌வ‌ர்க‌ளில் தான்
ந‌ல்ல‌வ‌ர்க‌ளு மிருக்கிறார்க‌ள்...!!

Friday, July 22, 2011

கால‌த்தோ டேப‌ய‌ணிப்போம்

ஆபத்தே யென்றாலும் உண்மையையே பேசுவோம்
ஆஸ்தியே கூடினாலும் எளியோரை யேசிடோம் தீ
விபத்தே வந்தாலும் தீங்கினை நினைத்திடோம்
தீயவர ருகாமையை எப்போதும் விரும்பிடோம்...

அன்னை யுந்தந்தையுங் கடவுளாய் போற்றுவோம்
அவர்களின் தேவையை பக்தியாய் சாற்றுவோம்
என்னியு முன்னையும் வளர்த்ததனை உணர்வோம்
சொத்தினது பெறுமதியை தூரத்தே யெறிவோம்...

நாகரிக நட்பினை நல்லதாய் தெரிவோம்
நாளுமதை காத்திடவே உண்மையாய் சிரிப்போம்
மேகமதை போலவே ப‌கைமையினை கலைவோம்
மேன்மையான உறவினையே பொக்கிஷமா யடைவோம்...

சோத‌னைக‌ள் வ‌ந்தாலும் சோர்வுத‌னை முறிப்போம்
சோம்ப‌லினை காற்றினில் சாம்ப‌லாக‌ எரிப்போம்
வேத‌னைக‌ள் சூழ்ந்திட‌வே ஆண்ட‌வ‌னை நினைப்போம்
வேறுவ‌ழி தேடாம‌லே கால‌த்தோடேப‌ யணிப்போம்...

ஏழைக் குத‌விட‌வே எப்போதும் நினைப்போம்
ஏள‌ன‌மாயெ வ‌ரையும் எண்ணிட‌ ம‌ற‌ப்போம்
பாலைவ‌ன‌ம் போல‌வே கோப‌த்தினை வ‌ள‌ர்ப்போம்
பார்போற்றும் ந‌ல்வாழ்வை ஏகிட‌வே ந‌ட‌ப்போம்...

***எண்ணத்தில் விழுந்த வண்ணங்கள்***

 01.வங்கியில் வளருது வலியோரின் தர்மம்
வறுமையில் திமிருது எளியோரின் கருமம்!!



02.நெருக்கப் படும்போதெலாம்
நொருங்கிடாதே
வருத்தப் பட்டுன் மனமெலாம்
திருத்தப்படுவதை யறிந்திடு!!



03.என்னவனே நீ
என்னை விலக்கினால் வாழ்வை யிழந்தாய்
எண்ணை விலக்கினால் நோயை யிழந்தாய்!!



04.அன் பன்பென்று ஆர்ப்பரித்திடாதே
அமைதியாக‌வே அக‌ங்க‌ளை யாண்டிடு
செய்த‌வையெலாம் சொல்லிடாதே
செய் ந‌ன்றிசொல் வ‌தை எதிர்பார்த்திடாதே!!



05.ஒரு ம‌னித‌ம்
இன்னொரு ம‌னித‌த்துட‌ன் முற‌ண்ப‌டுகிற‌து
விந்தையான‌ உல‌கில்
விசித்திர‌ ம‌னித‌ர்க‌ளால்...



06.வான‌ம் பிர‌ச‌வித்த‌
வெள்ளி நில‌வு
வெண்ணிலாவின் துணையாக‌
ந‌ட்ச‌த்திர‌த் த‌ங்கைக‌ள் என்
பிர‌ப‌ஞ்ச‌ம் ம‌ட்டும் வெறுமையாக‌...



07.ஆண்ட‌வ‌னைய‌டி க்க‌டி
ஆராதித்தால் ம‌ட்டு முன்
ஆழ்ம‌ன‌தி ன‌ழுக்குக‌ள் அக‌ன்றிடுமோ
அக்கினி சுட்ட‌துபோ லுன‌க்குள்
ஆண‌வ‌ம‌ழிந்தா ல‌ன்றோ
ஆத‌வ‌னாயு ன‌க்குள்
ஆண்ட‌வ‌ன் வ‌ந்த‌ம‌ர்ந்திடுவான்...





08.ம‌ன‌மின் றென்னி ட‌மில்லை





Thursday, July 21, 2011

புகலிட‌ம் த‌ருவீர்

பண்டிதருக்காய் ஏழ்துகையில் பாமரனுமெதை புரிய‌
பக்கம் பக்கமாய் நீள்கையில் படிக்காதவனெதை யறிய‌
பதக்கங்கள் பெற்றிடவே பட்டை தீட்டப்பட்டதிவை
மனங்கள் புரிந்திடவே பதிக்கப்படாவேடு களிவை...

யாப்பறிந்த தமிழ் யாசகரிங் கரிது
வெண்பாவினை புரிந்ததமிழ் மனங்களிங் கரிது
எளிமையாய் தெளிமையாய் எழுதிவிட்டதை யிங்கு
ஏளனம் செய்திடவே மனம்ஏகத்துக்கு மிருண்ட தின்று...

ஏழைத்தமிழினையும் ஏற்கத் தலைபடுவீர்
இயலாமைக்கு கரமிட்டு ஏற்றம் காண்பிப்பீர்
குறைகளும் கலைந்திட நிறைகளை சொல்லிடுவீர்
கறைகளை யகற்றிட கவிதனை செய்திடுவீர்...

புதுமைக்கு தலையாய் புகலிடம் தருவீர்
புய‌லெனும் மாற்ற‌த்தினை விரைந்துநீர் பெறுவீர்
மாற்ற‌ங்க‌ள் காண்ப‌து ம‌ட‌மைய‌ல்ல‌ அறிவீர்
ம‌ர‌புக‌ள் நீங்கிய‌து த‌மிழ்ம‌ர‌ணம‌ல்ல‌ தெளிவீர்...

Wednesday, July 20, 2011

உற‌வுக‌ளின் நிலையிதுவோ...

ஒவ்வொரு முறையுமே ஒன்றிடு ம‌வ்வேளையிலே
உற‌வென்று சொல்லியே உத‌றிவிட்டு செல்கையிலே
உள்ள‌ம‌து வெம்பியே உள்ளுக்குள் ளழுகையிலே
உயிர்க்கூடு த‌னிம‌ர‌மாய் உதிர்ந்தே போகிடுதே...

ந‌ட்பென்று நாசூக்காய் நாலுபேரு சொன்னாங்க‌
நானும‌தை நிஜ‌மாக உற‌வென்று ந‌ம்பினேங்க‌
நாலு நாளு பேசிட்டு நீங்கியே போனாங்க‌
ந‌ட்ட‌ந‌டு க‌ட‌லிலே ந‌ட்புக்காய் நானுமுங்க‌...

ஆளில்லா ஊரிலே ஆறுத‌லு ண்டாகிடுமோ
ந‌ண்ப‌ரில்லா வாழ்வினிலே நிம்ம‌திதா நிய‌ங்கிடுமோ
உண்மைக் கிங்கேன் ம‌திபேதும் வ‌ழ‌ங்க‌வில்லை
உறுதியாய் இருதிவ‌ரை உற‌வுக‌ளும் புல‌ங்க‌வில்லை...

வான‌ மேக‌முமே வ‌ங்க‌க் க‌ட‌ற்க‌ரையுமே‌
கொண்ட‌ முடிச்சினை தொட்டு தொட‌ருமே
வாங்கிவந்த‌ ப‌ந்த‌மும் வ‌லித‌ந்தே வில‌குதே
உற‌வுக‌ள் நிலையிதுவோ எண்ணிமன‌ம் புல‌ம்புதே...