Friday, July 22, 2011

கால‌த்தோ டேப‌ய‌ணிப்போம்

ஆபத்தே யென்றாலும் உண்மையையே பேசுவோம்
ஆஸ்தியே கூடினாலும் எளியோரை யேசிடோம் தீ
விபத்தே வந்தாலும் தீங்கினை நினைத்திடோம்
தீயவர ருகாமையை எப்போதும் விரும்பிடோம்...

அன்னை யுந்தந்தையுங் கடவுளாய் போற்றுவோம்
அவர்களின் தேவையை பக்தியாய் சாற்றுவோம்
என்னியு முன்னையும் வளர்த்ததனை உணர்வோம்
சொத்தினது பெறுமதியை தூரத்தே யெறிவோம்...

நாகரிக நட்பினை நல்லதாய் தெரிவோம்
நாளுமதை காத்திடவே உண்மையாய் சிரிப்போம்
மேகமதை போலவே ப‌கைமையினை கலைவோம்
மேன்மையான உறவினையே பொக்கிஷமா யடைவோம்...

சோத‌னைக‌ள் வ‌ந்தாலும் சோர்வுத‌னை முறிப்போம்
சோம்ப‌லினை காற்றினில் சாம்ப‌லாக‌ எரிப்போம்
வேத‌னைக‌ள் சூழ்ந்திட‌வே ஆண்ட‌வ‌னை நினைப்போம்
வேறுவ‌ழி தேடாம‌லே கால‌த்தோடேப‌ யணிப்போம்...

ஏழைக் குத‌விட‌வே எப்போதும் நினைப்போம்
ஏள‌ன‌மாயெ வ‌ரையும் எண்ணிட‌ ம‌ற‌ப்போம்
பாலைவ‌ன‌ம் போல‌வே கோப‌த்தினை வ‌ள‌ர்ப்போம்
பார்போற்றும் ந‌ல்வாழ்வை ஏகிட‌வே ந‌ட‌ப்போம்...

No comments: