Monday, June 24, 2013

மழலைகளுக்குள் தொலைந்த மனம்!!


******************************************************************************************************************************************************************

     






 எப்போதும் குழந்தைகள் என்றால் எனக்கு பிரியம்தான் அதுவும் அவர்களது மழலையினை ரசிப்பது இன்னும் கொள்ளைப்பிரியம். இந்த குட்டிஸ்களின் சிரிப்பு அழுகை குறும்பு குழப்படிகள், தத்தித்தத்தி நடக்கும் புதிய நடை, விழுந்து எழும் அழகாக முகஞ்சுழிப்புக்கள் என்று இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.



                                                   




குழந்தை மனம் எவ்வளவு அழகானது என்பதனை அநுபவித்து பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கே அதை வார்த்தைகளில் வர்ணித்துவிட முடிவதில்லை. ஒருவித கள்ளங்கபடம் சஞ்சலம் இல்லாத அந்த வெள்ளை உள்ளங்களை பார்த்துமகிழும்போது கிடைக்கும் திருப்தி எனக்கு எப்போதும் பரமதிருப்தி.






                                              






                                                



அதிலும் இப்போதெல்லாம் நான் வேதனையின் உச்சத்துக்கு போய்வருவது வழமையாகிவிட்டது அப்போது எங்காவது குழந்தைகளை கண்டால் என்னையறியால் என்னையே நான் மறந்துவிடுவேன் அந்தளவிற்கு குழந்தைகளின்  அசைவுகள் என்னை அசையாமல் நிலைக்கச்செய்துவிடும்




















                                                                  



என்னை மறந்து உண்மையாக சிரிப்பதுகூட இந்த குழந்தைகளை கண்டு ரசிப்பதில் மட்டுமே என்று நான்கூறுவதை எத்தனைபேர் நம்புவீர்களோ தெரியாது ஆனால் என் மனம் இப்போதெல்லாம் இதற்குமட்டுமே அடிமையாகிக்கிடக்கின்றது போலியான இந்த உறவுகள் மத்தியில்....




         









   





நான் வேலைக்கு பேரூந்தில் செல்வது எனது வழக்கம் 
போகும்போது அந்த சனநெரிசலிலும் போக்குவரத்து நெரிசலிலும் பேரூந்து மிக மெதுவாக போய்க்கொண்டிருந்தது வெளியில் ஒரு 2வயது மதிக்கத்தக்க அந்தக்குழந்தை தன் தந்தையுடன் நடந்துபோகும் அந்த மழலை நடையும் பிஞ்சுக்கைகளை ஆட்டி ஆட்டி நடக்கும் விதமும் என் பார்வைக்கும் மனதுக்கும் புதுய உற்சாகத்தை பிரவாகித்துக்கொண்டிருந்தது. அன்றைய நாள் முழுதும் அந்தக்குழந்தையில் நினைவுகளை நிழலாடிக்கொண்டிருந்ததோடு அன்றைய நாளுக்கான என்னுடைய கதைக்களமாகவும் மாறிவிட்டது.
















குழந்தைகளுக்கு அலங்காரமிட்டு அழகுபார்க்க எனக்கும் கொள்ளை ஆசைதானுங்க ஆனால் யார் அவங்க குழந்தைய என்னிடம் தருவாங்க?? அதனால அவங்க செய்வதை சும்மா நின்று பார்த்துகொண்டு இருப்பன்.நெற்றியில் பொட்டு வைக்க அம்மா படும்பாடும் அதை வைக்கவிடாமல் அவர்கள் படும் பிரயத்தனமும் இருக்கே அப்பப்பா என்ன ஒரு பிடிவாதம் அழாகான பிள்ளைவாதம்.









அழும் குழந்தையை அள்ளிக்கொஞ்சிட ஆசை......














               துயிலும் குட்டிக்களை தலைக்கோதி மகிழ்ந்திட ஆசை









அசைவுகள் ஒவ்வொன்றும் அகிலத்தின் ஆச்சரியங்கள்.....








இவர்களின் குறும்புகளை உங்கள் உள்ளங்களில் சேமித்துக்கொள்ளுங்கள் உயிரை உருக்கும் சோகம்கூட சுகமாக மாறிவிடும்...



       








                  ****************************************************************















எனக்கும்கூட குழந்தையாகிவிட ஆசைதான் ஆனால் முடியாது இருந்தாலும் மனதை குழந்தைத்தனமாக வைத்துக்கொள்ளமுடியும் அதைத்தான் முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன் நீங்களும் முயன்றுபாருங்கள்.








       முக்கியமாக குழந்தைகள் உன்னை ஞாபகப்படுத்துவதாலும் உன்னுடைய குழந்தைத்தனங்களை அவர்கள் வெளிப்படுத்துவதாலும்      இன்னும் குழந்தைகளை அதிகமாக விரும்புகின்றேன். 














Friday, June 21, 2013

CPM Song பாவம் செய்தேன் நான்....





பாவம் செய்தேன் நான்
பாழாய்ப்போனேன் நான்
துணிந்து பாவம் செய்தேன்

நியாயம் சொல்ல என்னில் ஒன்றுமில்லை
பாவியாமென்னில் கிருபை கூறும் //


மரணவேதனையால் துடிக்கும் என் மனமதை
மகிமையாக மாற்றிடவே இயேசுவே
ஒருவிசை பெலந்தாருமே//


பாவம் செய்தேன் நான்
பாழாய்ப்போனேன் நான்
துணிந்து பாவம் செய்தேன்

நியாயம் சொல்ல என்னில் ஒன்றுமில்லை
பாவியாமென்னில் கிருபை கூறும்//


குற்ற உணர்வதினால்
எந்தன் உள்ளம் கதறிடுதே//
பளிங்கைப்போல என் வாழ்க்கை மாறிட‌
மன்னிப்பை  தேவா //


பாவம் செய்தேன் நான்
சொந்தம் உமக்கே நான்
உந்தனின் சேவை செய்வேன்

அன்பில் தூய்மையாய் உம்மை பின் செல்ல 
ஏழையென்னோடு கூடஇரும்  //

தனி மரமாய் தவிக்கிறேனே Youthcamp song

தனி மரமாய் தவிக்கிறேனே
மாயமான வாழ்வினிலே
உம்மையன்றி கதியில்லையே
ஏதுமில்லா ஏழையெனக்கே

நினைப்பீரையா உமதன்பிலே
நீடூழியாய் வாழ்ந்திடவே
உந்தன் உள்ளம் தேடிடுவேன்
தூயனே உம் சமூகம்
அஞ்சி அஞ்சி வேர்க்குமென் பயத்தை
நேசக்கரத்தால் மாற்றிடுமே
கெஞ்சி கெஞ்சி வந்தெனும் சமூகம்
உம்மோடு மகிழ்ந்திடவே


தனி மரமாய் தவிக்கிறேனே
மாயமான வாழ்வினிலே
உம்மையன்றி கதியில்லையே
ஏதுமில்லா ஏழையெனக்கே



CPM Song






சுவாசம் நீ !!










எப்போதும் 
எனக்குள் நிறைந்திருக்கும் 
சுவாசம் நீ -இன்று
என் சுவாசக்காற்று
திண்மமாகிக் கிடக்கிறது நான்
சுவாசிக்கமுடியாமல்!!

Sunday, June 16, 2013

என் பிணமேட்டில்




என் சொப்பனங்களின்
கதவுகள் தாழிடப்பட்டு 
கல்லறைகதவுகள்
திறக்கப்பட்டிருக்கின்றது
உன்  
ஒற்றை வார்த்தை கொண்டு
அதனை மூடிவிடு இன்றேல்
என் பிணமேட்டில் உன்
கண்ணீர்துளிகளையாவது 
சமர்ப்பித்துவிட்டு செல்
ஆன்மாவாவது நிம்மதியடையட்டும்



தோற்றுக்கொண்டிருக்கின்றோம்








கணவன் மனைவியாய் 
ஜெயித்த நாம்
காதலர்களாய் 
உலகை எதிர்கொள்ளதெரியாமல் 
தோற்றுக்கொண்டிருக்கின்றோம்
தாம்பத்தியத்துக்கு
கல்யாணத்தைவிட காதலே
கல்லான அத்திவாரம் என்பதை
புரிந்துகொள்ளும்வரை...!!

Thursday, June 6, 2013

***** මගේ රත්තරO *****







            MAGE RATTHARANG







ඕබ මගේධ 
මා ඔබේධ 
අපි අපේධ කියලා 
ධෙන්වත් කියන්න 
මගේ රත්තරO





Tuesday, June 4, 2013

மறவாத நினைவுகள்!!



என்னை நினைப்பதற்கான‌
சந்தர்ப்பங்களே உனக்கு
அற்றுப்போயிருக்கலாம் ஆனால்
எனதான சந்தர்ப்பங்கள் எல்லாமே
உன்னை மட்டும் 
நினைவுபடுத்துவதாய் அமைந்துவிடுகின்றது!!



எல்லாமே பொய்யா????????





நீ எனக்காய் தீட்டிய மையென‌
நானாய் நினைத்துக்கொண்டதை
இப்போது மீண்டும் பார்க்கின்றேன்
ஒவ்வொன்றும் 
யாருக்காகவோ எழுதியிருந்தது இன்று
வெறுமையான என்னைப்போல‌
அவ்வார்த்தைகளும் வெறுமையாகவே
என் பார்வைகளுக்குள்!!

Monday, June 3, 2013

ஆசை




உன்னோடு வாழ ஆசை
உன்னோடு வாயாட ஆசை
உன்னோடு பேச ஆசை
உன்னோடு போட்டியிட ஆசை
உன்னோடு நடக்க ஆசை
உன்னைமட்டும் பார்க்க ஆசை
உன்னோடு பழக ஆசை
உன் பார்வையை ரசிக்க ஆசை
உன் புன்னகையை ருசிக்க ஆசை
ஆசை ஆசை அவ்வளவு ஆசை
நீ மட்டுமென்றால் கொள்ளை ஆசை!!

உண்மையாகக்கூட இருக்கலாம்

** கடவுளுக்கு இதயத்தில்
கோயில் கட்டுங்கள்
ஏழைகளுக்கும்
வாழு மில்லங்கள் சொந்தமாகட்டும்!!



**தத்துவங்கள் பிறப்பதுகூட
செய்த‌
தப்பிலிருந்து
தப்பிக்கொள்வதற்காகவேயன்றி
தவறுகளை திருத்துவதற்காகவல்ல!!