Tuesday, May 31, 2016

கனகேஸ்வரன் அவர்களின் “துளிர்” என்ற கவிதை நூல் பற்றிய விமர்சனம் கல்குடா_நேசன்‬ தளத்தில் 31.05.2016









http://kalkudahnation.com/

இலக்கியப்பரப்பில் இடைவெளியில்லாது தொடரும் நூல் வெளியீடுகளில் மலையக மைந்தரொருவரின் கன்னி வெளியீடும் இணைந்து கொள்கின்றது. பொகவந்தலாவையைச் சேர்ந்த அவுஸ்திரேலியா வாழ் KG என அறியப்பட்ட கனகேஸ்வரன் அவர்களின் “துளிர்” என்ற கவிதை நூல் வெளியீடு 09.04.2016 அன்று வெளியிடப்பட்டது. 

முற்றுமுழுதாக வர்ணத்தாள்களில் பதிக்கப்பட்டுப் பிரசுரமான இந்நூலுக்கு ஆசியுரையினை டென்மார்க் ரதிமோகன் அவர்களும் அணிந்துரையினை எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன் அவர்களும் வாழ்த்துரைகளினை லோஜினி அவர்களும் மித்திரன் வாரமலர் ஆசிரியர் பொன்மலர் சுமன் அவர்களும்  கவிஞர் வே.முல்லைத்தீபன் அவர்களும் வழங்கியுள்ளதோடு, இந்நூலினைச் சிறப்பாக வடிவமைத்துள்ள விஜய் அச்சுப்பதிப்பகத்தின் என்.விஜய் அவர்கள் பதிப்புரையினையும் வழங்கியுள்ளார். பின்னட்டைக்குறிப்பினை செல்லமுத்து வெளியீட்டக இயக்குநர் யோ.புரட்சி அவர்கள் தந்திருக்கின்றார். 


இக்கவிதை நூலினை கையிலெடுத்ததும் வாசிக்கும் ஆர்வத்தினை அதிகப்படுத்துவதே இந்நூலின் வடிவமைப்புத்தான் பசுமை போர்த்தப்பட்ட அட்டைப்பட வர்ணம், கவிதைகளுக்கு ஏற்றாற்போல  கருத்தாழம் கொண்ட படங்களுமே. நறுக்கென்று நான்கைந்து வரிகள் ஆழமான கருத்துக்களைக் கொண்டுள்ள கவிதைகள் அனைத்தும் மிக அருமை. கூற வந்த விடயத்தைச் சுற்றி வளைக்காமல் தந்திருப்பதே இந்நூலுக்கு அதிக கனதியைத் தந்துள்ளது.


 ‘மலையகத்தில் பல பெண்கள் குடும்பச்சுமை பாரம் அழுத்தியே சீக்கிரம் பூப்பெய்தி விடுகின்றனர்..” கவிஞர், தனது வரிகளில் கற்பனைக்கு அதிக இடங்கொடாமல் யதார்த்தமாக சமூக அவலங்களைப் படம் பிடித்திருப்பதைச் சிறப்பாகக் கூறலாம். ஏழ்மை, பசி, துரோகங்கள், மூடநம்பிக்கை எனப்பல்வேறு விடயங்களைத் தொட்டுக்காட்டியுள்ளார். சாதாரணமாக நாம் பார்க்கும் கோணத்தை விட, கவிஞர்கள், கலைஞர்கள் ஒரு விடயத்தைப் பார்க்கும் கோணம் வேறாக, வித்தியாசமானதாக இருக்கும். அந்த அநுபவத்தை கவிஞர் கனகேஸ்வரன் அவர்களின் எல்லாக் கவிதைகளிலுமே காணலாம்.

 “நிழலைப்பார்த்து குரைக்கிறது நாய் ஏன் நாய்க்கு பேயை பட்டும் தான் அடையாளம் தெரியுமா? அது கடவுளைக்கூட கண்டிருக்கலாம்” தொட்டுக்காட்டிட கவிதைகள் முட்டி மோதிக்கொண்டு முன்னால் வருகின்றது. எனினும், வாசகர்களின் பொறுப்பில் ஏனையவற்றை விட்டு விடுகின்றேன். வாசிப்பார்வம் கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் வாசித்து மகிழக்கூடிய எளிமையான சொல்லாடலுடன் மிக அழகான நூல். 

அட்டைப்படம் முதல் அனைத்தும் ஓர் வித்தியாசத்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது. கவிஞரின் முதல் படைப்பென்பதால் சிறு சிறு குறைகளைத் தவிர்த்து காத்திரமான ஆலோசனைகளாலும் கருத்துக்களாலும் அவரை ஊக்கப்படுத்த வேண்டும். ஈழத்து இலக்கிய வரலாற்றிற்கு புது வரவான “துளிர்” கவிதைத்தொகுப்பைத் தந்த கவிஞர் இன்னும் பல நல்ல படைப்புக்களைத் தர வேண்டுமென வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 




நூல் வகை: கவிதைத்தொகுப்பு 
நூலின் பெயர்:  துளிர் 
நூலாசிரியர்: ப.கனகேஸ்வரன் (KG) 
விலை : 250 ரூபாய் 

Monday, May 30, 2016

தமிழன்24 மே மாத வெளியீடு 2016



தமிழன்24 மாத சஞ்சிகையில் ( ஏப்ரல் வெளியீடு‍ 2016








கல்குடா நேசன் - 36வது படைப்பாளியாக கவிஞரும் ஊடகவியலாளருமான அருண் வெங்கடேஷ் அவர்கள்


http://kalkudahnation.com/

வான்கதவுகளை....

எனக்கெதிராக 
எல்லா கதவுகளையும்
மூடிவிடாதீர்கள்- பின்னர்
வான்கதவுகளை திறக்கவேண்டிய
அவசியம் ஏற்பட்டுவிடலாம்...!!

ஈடேதுமுண்டோ

மின்சாரமில்லா இரவை -தன்
மிடுக்கான ஒளியால்
அழகாக்கும் நிலவு...

மரங்களுக்கிடையில் 
மறைந்தும் விரைந்தும்
மனதை இளக்கிவிடும் - இந்த
மன்மத அழகுக்கு
ஈடேதுமுண்டோ இரவினில்....

உறவுகளும்

நிரந்தரமில்லா பலவற்றில்
உறவுகளும் ஒன்று

கருத்துக்கலால்...

நாயை நாயாகவும், பூனையை பூனையாகவும் பார்க்கத்தெரிந்த மனிதனுக்கு மனிதனை மனிதனாக பார்க்கத்தெரியவில்லை....

சில மத இன வாதிகளின் கருத்துக்கலால்....

ஒரு கதை..... காதல்..... உண்மை காதல்


காதலர்கள் ( அப்படித்தான் சொன்னார்கள்) அவர்களின் திருமணம் பற்றி, காதலனின் வீட்டில் கதைக்கத்தொடங்கிய சந்தர்ப்பம்.

காதலனின் வீட்டாரில் ஒருவர் காதலியை சந்தித்துபேசவருகிறார்கள்.

வீட்டவர்: நீங்க என்னம்மா பசிச்சிருக்கீங்க?

காதலி: க.பொ.த உ/த

வீட்டவர்: தம்பி டிகிரி எல்லாம் முடிச்சிட்டாரே, நீங்க.....

காதலி: நானும் இப்ப படிக்கலாமென்று தொடங்கியிருக்கன்.

வீட்டவர்: ம்..... இங்கிலீஸ் கதைப்பீங்களா????

காதலி: கொஞ்சம் கதைப்பன் கிளாஸ் போகனும் சீக்கிரம் கதைக்க படிச்சிருவன்.

வீட்டவர்: ஓ.... எங்க வீட்ட எல்லாரும் இங்கிலீஸ் ல தான் கதைப்பம்.

காதலி: ..........

வீட்டவர்: நீங்க செய்றது அரசாங்க உத்தியோகமா?

காதலி: இல்ல தனியார் நிறுவனத்திலதான் வேலை...

வீட்டவர்: ஓ.. அரசாங்க வேலைக்கு ட்ரை பண்ணுங்க நல்லம்தானே...

காதலி: ம்

வீட்டவர்: உங்க சம்பளத்தில என்ன செய்வீங்க? இவ்வளவு நாளில நல்ல சேமிப்பு இருக்கும் தானே....

காதலி: இல்ல.... வீட்டு செலவில பாதி நான்தான். சேமிப்பு பெரிசா இல்ல இனி கொஞ்சங்கொஞ்சமா சேமிக்கனும்.

வீட்டார்: நீங்க ப்யூட்டி பாலருக்கெல்லாம் போகமாட்டிங்களா.... ஐப்ரோ ஷேப் பண்ணினா நல்லாயிருப்பீங்க தானே....

காதலி: ஹீ...... பழக்கமில்ல பார்ப்பம் அதையும் பழகிக்கொள்ளனும்...

வீட்டார்: சரி... அப்ப நான் வாரன் சந்திப்போம் நானும் வீட்டாக்களோட கதைச்சிட்டு உங்க வீட்டுக்கு வாரம்.

காதலி: ஓகே...

வாரங்கள் மாதங்களானபின் காதலன் வீட்டாரிடமிருந்து கடிதம் வந்தது....... காதலனின் திருமண அழைப்பிதலாக.

(இதுக்கு நான் என்ன ‪#‎கருத்து‬ சொல்லலாமென‪#‎யோசித்துகொண்டிருக்கிறேன்‬. நீங்க இதுபற்றி என்ன‪#‎நினைக்கிறீங்க‬ நட்புக்களே)

இது வெறும் கற்பனை
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அல்ல‌
.
.
.
நிஜம்.




Like

கவிதை உட்பட பல

எப்போதும் கரையும் காகம் போலல்லாது
எப்போவாவது தோகைவிரிக்கும் மயிலைப்போல
இருக்கவேண்டும்
கவிதை உட்பட பல.....

அன்புக் கேது துணை

கல்விக் கேது கரை -நல்
அறிவுக் கேது தடை...
பண்புக் கேது விலை -மெய்
அன்புக் கேது துணை.....?????

Monday, May 16, 2016

போதுமிது இறைவா

வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றோம் -இறைவா 
எம்மீது இறங்குமென்றால்
இதயம் காயும்வரை
வெயிலை தருகிறாய்....

போதுமிது இறைவா- உயிர்
போகுது வேதனையாலென்றால்
போக வழியின்றி த(க)ண்ணீர் தருகிறாய்....

இதுதான் இறை திருவிளையாடலோ...


Sunday, May 15, 2016

 
மேகம் இறக்கும் விழுதுகள்
மண்ணை சிதைக்க விழுகிறது
தாகம் இல்லா பொழுதுகள்
தடுமாறி பற்றிக்கொள்கிறது
  

மழை

அடிக்கிற மழை
கடிக்க முறுக்கு
குளிருக்கு தேநீர்
அளித்தது ஒரு விடுமுறை.....

Monday, May 9, 2016

09/ 05/ 2016

http://www.oodaru.com/?p=10000

தீயிட்டு கொளுத்துவோம்..

   

-த.ராஜ்சுகா -இலங்கை
 
பெண்பிள்ளையினை
படுக்கை பொருளாய் பார்க்கும்
பாவியின் கண்கள் பறித்து
பருந்துக்கு விருந்திடுவோம்….
 
தனிமையின் அலங்காரத்தை
தீனியாக்கி கொள்ள வெண்ணும்
தீயோர் கரமெடுத்து
தீயிட்டு கொளுத்துவோம்…..
 
குழந்தையின் அழகைகூட
குரூரத்தனமாய் ரசிக்கும்
கயவர்தம் கழுத்தை நெரித்து
கல்லறை வாசலை காட்டிடுவோம்…
 
பேதையரெம் பாதுகாப்புக்காய்
வேங்கையென எழுவோம்
போதையாய் எமைநோக்கும்
போக்கிரிகளை எதிர்ப்போம்…..
 
மாந்தரெங்கள் மகிமையுணர்த்த
மணிமாலையாக இணைவோம்
மாண்டுகிடக்கும் சட்டங்களுக்கு
மருந்தளித்து உயிரூட்டுவோம்..

Sunday, May 8, 2016

அனுபவித்துவிட்டோம்

சிலுவையும் -மூன்று
ஆணிகளுமின்றியே
அனுபவித்துவிட்டோம்
அத்தனை பாடுகளையும்....
மேதின வாழ்த்துக்கள்

பழகிக்கொள்

விழுந்தவுடன்
எழுந்துவிட பழகிக்கொள்

கை நீட்டி தூக்கிடும்
உறவுகளை விட
காலால் மிதித்தோடிவிடும்
உள்ளங்களே அதிகமிங்கு.......

அழகு முக்கியமில்லை

அழகை தரிசிக்கும்
கண்களுக்கு
அகம் தெரிவதில்லை...
அகத்தை தரிசிக்கும்
இதயத்துக்கு
அழகு முக்கியமில்லை....