Sunday, May 18, 2014

வசியமா வைத்திருக்கின்றாய்??

வசியமா வைத்திருக்கின்றாய் -உன்
வசந்தமான கண்களுக்குள்
உசிரையே வாங்குகின்றாய் -அந்த‌
உருட்டிவிளையாடும் கவிதைகளுக்குள்!!



பூக்களை பரிசளியுங்கள்

கத்தி(க்)கொண்டு வருபவனுக்கு
பூக்களை பரிசளியுங்கள் -சத்தமேயில்லாமல்
புன்னகையோடு திரும்பிசெல்வான்!!




Saturday, May 17, 2014

கதவுகளனைத்தும் மூடப்பட்டுவிட்டன...

நாம் சென்றுவந்த பாதைகள்
நமக்காக காத்திருந்த காற்றுவெளி
நம்மை வரவேற்ற பூந்தோட்டம் -எல்லாமே
அவசரத்தந்தி அனுப்பிவைத்து
காத்துக்கிடக்கின்றது
கதவுகளனைத்தும் மூடப்பட்டுவிட்டனவென்பதனை
அறியாமலேயே...!!



Friday, May 16, 2014

தமிழ் லீடர் இணையத்தில்... (14.05.2014) தாக்கமெல்லாம் பூக்களென்று!!

http://tamilleader.com/?p=33415



உருண்டுவிழும் ஆலங்கட்டியாய்
திரண்டு உதிர்ந்த அத்துளிகள்
உருண்டை விழிகளை நிறைத்து
உள்ளக்காயத்தை ரணப்படுத்திக்கொண்டிருந்தது
இயலாமைகளை சுட்டிக்காட்ட‌
இமையிதழ்களில் கதறுவதே
இவளின் வழமையாகிப் போனதில்
இப்போதெல்லாம் உடன்பாடேயில்லை
வெறும் ஏமாற்றங்களிலும்
வெறுமையான உறவுகளினாலும்
வெளிரிப்போன அவளுணர்வுகளில்
வெளித்தள்ளிக்கொண்டிருந்தது ஒருதுளிர்
அன்பெனும் முகமூடிதரித்த‌
அத்தனை திரைகளும் விலகியபின்
அவளுக்கென்ற ஒற்றைநாதம்
அசரீரியாய் ஒலித்தது
‘நம்பிக்கை’யென்று
பயணங்களுக்கு மட்டுமுதவும் பாதணியாய்‍ அவளை
பயன்படுத்திக்கொண்ட சில பாதைகள்
படிவாசலில் கழற்றிவிட்டு சென்றதைக்கூட‌
பாடங்களுக்கான விளக்கங்களாவே ஏற்றுக்கொண்டாள்
இனியவள் வாசலுக்குள்
கோலங்களின் அலங்கரிப்பில்லை
இனியொரு வார்த்தையிலேனும்
காயங்களின் பரிசீலிப்பில்லை
தனியொரு சாம்ராஜ்யமுருவாக்கி
தரணிக்கெலாம் சொல்லிடுவாள்
தன்னம்பிக்கை உண்டெனில்
தாக்கமெல்லாம் பூக்களென்று!!

ஊடறு இணைய இதழில்... (14.05.2014) பிரிந்து செல்வதில் பிழையென்ன???

http://www.oodaru.com/?p=7424


த.எலிசபெத்(இலங்கை)
ஒத்துப்போகவில்லையெனில்
விட்டு விலகுதலில் தவறேது
பத்துத்திங்கள் கழித்து
அத்துக்கொண்டு செல்வதிலும்
பித்துக் கொ(ல்)ள்ளும்வரை
பிதற்றித்திரிவதிலும்
பிரிந்து செல்லுதலில் தவறேது???
சீர்வரிசைகளென்று தந்தையின்
மார்வலியை அதிகப்படுத்தாது
ஊர்வாயில் விரல்வைக்கவென்று
தேர்மீது அலங்காரமிடாது
வார்த்தைகள் வளர்த் ததனால் -கண்ணீர்களை
சேர்த்தெவரையும் வதைக்காது
பிரிந்து செல்வதில் தவறேது???
பத்துமாதம் சுமந்துபெற்ற பிள்ளை
தத்தித்தவழ்ந்து நடக்குந்தரு வாயில்
புத்திமாறி புதியவழி தேடுமவர்களோடு
கத்திச்சண்டையிடுவதிலும் -வாய்
பொத்தியழுது ஜீவியத்தை
நித்திலத்தில் தொலைப்பதிலும்
பிரிந்து செல்வதில் தவறேது???
அலுவலகத்திற்கு ஒரு(வன்)த்தி
அழகாக இருந்தாலோ அவ(ன்)ள்
திறமையில் என்னைவிட
தினுசாக மிளிர்ந்தாலோ
அனுதினமதை சுட்டிக்காட்டி
அணுவணுவாய் நமைகொல்லும்
ஆட்கொள்ளி வருவதற்கும் -இப்போதே
பிரிந்து செல்வதில் பிழையென்ன???
பிந்திய சிலநாட்களில்
எந்தனின் தலையெழுத்தென்னவென‌
ஏங்கியே தவிக்காது மண்ணில்
உதித்ததே பாவமென புலம்பாது
விதியினை நொந்து விதவிதமாய் கண்ணீர்
வடித்தழாது இப்போதே
பிரிந்துவிடுதல் நலமன்றல்லவா???

Tuesday, May 13, 2014

நிர‌ந்தமில்லை!!

தீயவர்களின் வெற்றியும்
நல்லவர்களின் தோல்வியும்
நிர‌ந்தமில்லை!!

முகநூல் காதலெல்லாம்

முகம்பார்த்த காதலே
முழுக்குப்போடும் காலத்தில்
முகநூல் காதலெல்லாம் காதலா
முகவரியற்றுப்போவது தேவையா??


இதற்குப்பெயர்தானோ காதல்??

அன்னையாக இருப்பேனென்றவனுக்கு -வெறும்
புண்களை மட்டுமே கொடுக்கமுடிந்தது
தன்னையே அன்பாக்குவேனென்றவனுக்கு -ஏனோ
கண்ணீரையே இலகுவாக தரமுடிந்தது

இதற்குப்பெயர்தானோ காதல் உலகில்
இதனைத்தானோ அன்பென்கின்றார்கள்???




Wednesday, May 7, 2014

பிரிந்து செல்வதில் பிழையென்ன???

>>>>>>>>        >>>>>>>>>              >>>>>>>>              >>>>>>>

ஒத்துப்போகவில்லையெனில்
விட்டு விலகுதலில் தவறேது
பத்துத்திங்கள் கழித்து
அத்துக்கொண்டு செல்வதிலும்
பித்துக் கொ(ல்)ள்ளும்வரை
பிதற்றித்திரிவதிலும்
பிரிந்து செல்லுதலில் தவறேது???

சீர்வரிசைகளென்று தந்தையின்
மார்வலியை அதிகப்படுத்தாது
ஊர்வாயில் விரல்வைக்கவென்று
தேர்மீது அலங்காரமிடாது
வார்த்தைகள் வளர்த் ததனால் -கண்ணீர்களை
சேர்த்தெவரையும் வதைக்காது
பிரிந்து செல்வதில் தவறேது???

பத்துமாதம் சுமந்துபெற்ற பிள்ளை
தத்தித்தவழ்ந்து நடக்குந்தரு வாயில்
புத்திமாறி புதியவழி தேடுமவர்களோடு
கத்திச்சண்டையிடுவதிலும் -வாய்
பொத்தியழுது ஜீவியத்தை
நித்திலத்தில் தொலைப்பதிலும்
பிரிந்து செல்வதில் தவறேது???

அலுவலகத்திற்கு ஒரு(வன்)த்தி
அழகாக இருந்தாலோ அவ(ன்)ள்
திறமையில் என்னைவிட
தினுசாக மிளிர்ந்தாலோ
அனுதினமதை சுட்டிக்காட்டி
அணுவணுவாய் நமைகொல்லும்
ஆட்கொள்ளி வருவதற்கும் -இப்போதே
பிரிந்து செல்வதில் பிழையென்ன???


பிந்திய சிலநாட்களில்
எந்தனின் தலையெழுத்தென்னவென‌
ஏங்கியே தவிக்காது மண்ணில்
உதித்ததே பாவமென புலம்பாது
விதியினை நொந்து விதவிதமாய் கண்ணீர்
வடித்தழாது இப்போதே
பிரிந்துவிடுதல் நலமன்றல்லவா???




ஊடறு இணைய இதழில் எனது காதலுக்கு கண்ணில்லையென்று?? என்ற கவிதை (07.05.2014)



காதலிக்கவென்றால் ஒரு
பொண்ணுமட்டும் தேவை -அவளை
கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ
அழகிருக்கனும் கொஞ்சம்
அந்தஸ்துமிருக்கனும்
படித்திருக்கனும் லேசாய்
பளபளப்புமிருக்கனும்
தொழிலிருக்கனும் அதிலும்
கொழுத்த வரவிருக்கனும்
மெலிவாயிருக்கனும் மேனி
பொழிவாயுமிருக்கனுமாம்
ம்ம்ம்ம்
இதுக்குத்தான் சொன்னார்களோ
காதலுக்கு கண்ணில்லையென்று??
அப்போ
கண்ணை மூடிக்கொண்டா காதலிக்கின்றார்கள்
அப்படியென்றால்
எதனை காதலிக்கின்றார்கள்??

Monday, May 5, 2014

தமிழ்லீடர் இணைய இதழில் எனது கவிதை (04.05.2014)

http://tamilleader.com/?p=32738

மணித்தியாலங்களோ
இருபத்துநான்கு -உனை
மனதுக்குள் நினைப்பதோ
நொடிகளின் எண்ணைக்கை
வேறு சிந்தைகள் கடந்தாலும்
மாறாக எதனைச் செய்தாலும்
ஆறாக ஓடுவதென்னவோ
மாறாத உன் ஞாபகந்தான்
அன்றாடங்களின் கடக்கும்
ஆயிரம் அதிசயங்கள் இருக்க‌
வென்று கொண்டிருப்பதென்னவோ
நினதான நினைவுகளே
எதிர்ப்புக்கள் எனக்கெதிராய்
எழும்பிவந்த போதெல்லாம்
எடுத்தெறிந்து விடத்தானெத்தனித்தேன்
எல்லாவற்றையும் துடைத்தெறிந்ததென்னவோ
எமக்குளுண்டான நேசம்மட்டுமே
அது என்னவோ
இங்குமட்டுந்தான்
விலக நினைக்கும்போதெல்லாம்
விடாமல் ஒட்டிக்கொள்வதும் நினைவுகளில்
விடாப்பிடியாய் கட்டிக்கொள்வதும்…
ஒன்றே தெய்வமென்றால்
காதலும் ஒன்றல்லவோ
ஒருவனே தேவனென்றால்
ஒருவருக்கு ஒருவரன்றோ
காத(லி)லன்
காதலுக்கு சாட்சியாய்
காத்துக்கிடக்கின்றது -நம்
காதல்
நாளைய‌
சரித்திரத்தை நிரப்பிவிட‌
காதல் ஆழமானதென்று!!

வலிகள்- வலிமை

கற்றுத்தந்த பாடங்கள் மிகவும்
வலிகள் நிறைந்தவை
கற்றுக்கொண்ட பாடங்களோ அதிகம்
வலிமை பெற்றவை!!


Friday, May 2, 2014

அதிகம் மென்மைவாய்ந்தது!!

மனிதனுக்குள் இருக்கின்ற மிருகம் மிகவும் பயங்கரமானவன்
மிருகத்துக்குள் இருக்கும் மனிதமோ அதிகம் மென்மைவாய்ந்தது!!