Friday, October 28, 2016

பூவையர் எழுவது

பூக்கள் பிறந்தது  பெண்ணாக  -அப்
பூவையர்  எழுவது  தீயாக‌
தாக்கிடும் தீங்கினை  அம்பாக -அவர்
தாக்கிடுவார்  வேங்கையாக

கல்விக்கோலினை ஆயுதமாக -கொண்டு
கடந்திடுவார் உலகினை லாவகமாக -குறை
சொல்லிடும் நாவுகளை அலட்சியமாக‌
பொசுக்கிடுவார் செயல்களாலே

அடுப்படிச் சாசனத்தை சாம்பலாக -பொசுக்கி
அகிலம்  புகழும் விரமாக‌
இடுப்பொடிந்த கதைகளை கந்தலாக -எங்கும்
இல்லாதொழித்திடுவார் புயலாக‌

தவறாக நோக்கிடும்  கண்களினை -கூரான‌
விழிகளால்  துவம்சிப்பர்  வீரராக‌
இறவாத  லட்சியத்தினை சுமந்து -நல்ல‌
இலட்சியங்கள் படைப்பர் நேர்த்தியாக...


தேங்கி நில்லா நதியாக -தினம்
தேடல் கண்டனர் எறும்பாக‌
ஓங்கி வளரும் மரமாக -குடும்ப‌
ஏழ்மை போக்குவர் வள்ளலாக...

அச்சமும் நாணமும் அணியாக -ஏற்று
அறியாமையை எரிப்பர் மடமையாக  -வெற்றி
உச்சத்தை தொட்டிட  நில்லாமல்
சுழலுவார்  பூமியாக...

Saturday, October 15, 2016

கவிதையொன்றுதான்

படிப்பெனக்கு
பயங்கரமாய் தெரிந்தபோதெல்லாம்
பக்கத்தில் வந்து
பக்குவமாய்  தலைவருடியதெல்லாம்
இந்த  கவிதையொன்றுதான்

Thursday, October 13, 2016

பொறுமையின் ஆயுளை

நினைவுகளில்
பசியாறிக்கொள்ளும் -என்
நிமிடங்களெல்லாம்
பொறுமையின் ஆயுளை
நிரந்தரமாய்  பெற்றவையே

Sunday, October 9, 2016

அந்தக் கணத்தில்தான்

இதயம் துடித்தும்
உயிர்  ஓடிக்கொண்டிருந்தும்
உணர்வுகள் இயல்பாயிருந்தும் நான்
இயங்காமல் நின்றதென்னவோ
நீ
காதல் சொல்லிய
அந்தக் கணத்தில்தான்!!

காதல் எனும் மந்திரம்

ஒருவேளை
நாம் சந்திக்காது போயிருந்தால்
காதல் எனும் மந்திரம்

வலுவிழந்திருக்கக்கூடும்!!

வெட்கத்துக்கூட‌

வெட்கத்துக்கூட
உயிர் இருப்பதை
இன்றுதான் அறிந்துகொண்டேன்
உன்னைக் கண்டதும் அது

துடிதுடித்து சிறகு விரிக்கையில்!!

Saturday, October 8, 2016

கவிஞனின் கலை

கண்ணீர்  கொடுப்பது
கடவுளின்  வலை  அதை
கவியாய்  தொடுப்பது
கவிஞனின் கலையோ...!!

Thursday, October 6, 2016

சுதந்திரம் தேடி

வெட்கத்தை
குடைக்குள் அடைத்துவிட்டு
நீ தந்த  முத்தம்
வெளியேறத்  துடிக்கிறது
சுதந்திரம் தேடி!!

நீ வந்தாய்


என்னை
தேடிக்கொண்டிருந்தவேளைதான்
நீ வந்தாய்
நானாக!!