Friday, October 28, 2016

பூவையர் எழுவது

பூக்கள் பிறந்தது  பெண்ணாக  -அப்
பூவையர்  எழுவது  தீயாக‌
தாக்கிடும் தீங்கினை  அம்பாக -அவர்
தாக்கிடுவார்  வேங்கையாக

கல்விக்கோலினை ஆயுதமாக -கொண்டு
கடந்திடுவார் உலகினை லாவகமாக -குறை
சொல்லிடும் நாவுகளை அலட்சியமாக‌
பொசுக்கிடுவார் செயல்களாலே

அடுப்படிச் சாசனத்தை சாம்பலாக -பொசுக்கி
அகிலம்  புகழும் விரமாக‌
இடுப்பொடிந்த கதைகளை கந்தலாக -எங்கும்
இல்லாதொழித்திடுவார் புயலாக‌

தவறாக நோக்கிடும்  கண்களினை -கூரான‌
விழிகளால்  துவம்சிப்பர்  வீரராக‌
இறவாத  லட்சியத்தினை சுமந்து -நல்ல‌
இலட்சியங்கள் படைப்பர் நேர்த்தியாக...


தேங்கி நில்லா நதியாக -தினம்
தேடல் கண்டனர் எறும்பாக‌
ஓங்கி வளரும் மரமாக -குடும்ப‌
ஏழ்மை போக்குவர் வள்ளலாக...

அச்சமும் நாணமும் அணியாக -ஏற்று
அறியாமையை எரிப்பர் மடமையாக  -வெற்றி
உச்சத்தை தொட்டிட  நில்லாமல்
சுழலுவார்  பூமியாக...

No comments: