Friday, February 21, 2014

தீயில் நடப்பதும் நன்றே!!

கடந்த காலத்தின்
கறைகளை
நடந்த பாதத்தின்
வலிகளை
உடைந்த சிலைகளின்
புலம்பல்களை
தடுத்து நிறுத்திடவோர்
எதிர்காலமுண்டென்றால் இன்று
தீயில் நடப்பதும் நன்றே!!



மனிதர்

குறைகளில்லாமல் மனிதர்களில்லை
நிறைவானவர்கள் மனிதர்களுமில்லை!!

ஊடறு இணைய இதழில் எனது கவிதை (18.02.2014)

http://www.oodaru.com/?p=6960


த.எலிசபெத் (இலங்கை)

எழுந்து புன்னகைப்பேன்


தோற்றுப்போனது
வாழ்க்கையில்தான்
துவண்டுபோனது
துடிப்புள்ள இதயமல்ல!
அடிவீழ்ந்தது
உயிரில்தான்
அணைந்து போனது
ஆழ்மனதல்ல!
காயம் கண்டது
கனிவான காதல்தான்
நோயாகிப்போனது
கண்ணியங்கொண்ட கடமைகளல்ல!
இன்னும் ஆணிகளும்
இரக்கமில்லா வஞ்சனைகளும்
என்னைச்சுற்றி சூழட்டும்
எரிந்துகொண்டிருப்பது மனமாயிருந்தாலும்
எழுந்து புன்னகைப்பேன் மலராகவே!!!

Wednesday, February 19, 2014

தூக்குக்கயிறு!!

கழுத்தில் ஏறினால்
தாலிக்கயிறு -இது
கழுத்திலேறாவிட்டால்
பலருக்கு வாழ்வின்
தூக்குக்கயிறு!!

நம் காதலே காட்சி!!

காதல் அழகானதென்பதற்கு
நாமே சாட்சி
அதி ல‌ழுகை தவிர்க்கமுடிதாதென்பதற்கு
நம் காதலே காட்சி!!



என் கேள்விக்குறி நீ

எப்போதும்
என் கேள்விக்குறி நீ
என்று முற்றுப்புள்ளி வைத்து
விடைதரப்போகின்றாய்??



Tuesday, February 18, 2014

என்னதான் செய்யவேண்டுமென்று நீங்க நினைக்கிறீங்க????

பெண்களுக்கெதிராய் நீட்டப்படும் கேள்விகள் எந்த சந்தர்ப்பத்தில் திருப்தியாகும் அல்லது விடைபெற்று சமாதியாகுமென்று புரியவில்லை உங்களுக்கென்டாலும் புரியுதா நண்பர்களே இது இப்படித்தாங்க ஆரம்பிக்குது ஆனால் முடிவுதான் இன்னுமில்லை.

01. 18‍ 20 வயதுக்குள்ள விரும்பியவனை திருமணம் செய்துகொண்டால், 'பாரு ஆடுகாழி இந்த வயசில விருப்பத்துக்கு புருஷன் தேடிக்கொண்டா...'

02. 28 வயதுக்கு மேல் திருமணம் முடிக்காமல் இருந்தால், 'என்ன ஒன்றும் பார்க்கவில்லையா? இப்ப காலம் சரிதானே அப்படி இப்படியென்று இறுதியில் முதிர்க்கன்னியென்ற முத்திரையோடு நிற்கவிடுவர் (இந்த வயதுக்காரருக்கு இன்னொரு சிறப்புமுண்டு அதாவது, இத்தனை காலம் காதல்வலையில் வீழாமல் அம்மா அப்பா பிள்ளையாக இருந்தபோது தூக்கிவைத்த சமூகந்தான் முதிர்க்கன்னியென்ற முக்காட்டை சடுதியில் போட்டு அழகுபார்ப்பர்)

03. அப்பெண், திருமணம் முடித்து ஒரு வருடம் கடந்துவிட்டால், 'இன்னும் ஒரு விஷேசமுமில்லையா?

04. அதுவே வருடங்கள் பலவற்றை தொட்டுவிட்டால் 'மலடி' யென்ற மகுடத்தை பகிரங்கமாகவே வழங்கிடுவார்

05. ஒரு பெண்ணுக்கு ஒரேயொரு பெண்குழந்தை மட்டும் பிறந்துவிட்டால், 'என்னம்மா பொண்ணு மட்டுந்தானா ஒரு பையன் இருந்தா நல்லது நாளைக்கு பின்னுக்கு ஆம்பிள பிள்ளதான் உதவுவான்' என்றொரு குதர்க்கம்

ம்ம்ம்.... இப்படியே வேண்டாக் கதைகளை சொல்லிக்கொண்டு போனால் கடைசியில ஒரு பெண் எப்படித்தான் இருக்கவேண்டும் என்னதான் செய்யவேண்டுமென்று நீங்க நினைக்கிறீங்க????

அழி தெளி...

விழிநுதழ் பதிக்கும்
அழுநிலை அகற்று
வழியதில் நிலைக்க‌
அழி தெளி ஜொலிக்கும்!!


Monday, February 17, 2014

உன்வாசம்

அடிக்கடி உன்வாசம்
வந்துபோகின்றது
துடிக்கின்ற‌ சுவாசந்தனில்!!



காதல் - மோதல்

புரிந்துக்கொள்ளும் வரை
காதல் -நன்றாக‌
புரிந்துகொண்டபின்னரோ
மோதல்!!


பிரித்துப்பார்க்காதே

உன்னையு மென்னையும்
பிரித்துப்பார்க்காதே -அந்நொடியதில்
உயிர் இருப்பதில்லை!!


Sunday, February 16, 2014

அத்தனை இலகுவில்....

மறுத்துப்போகும் உறவுகளை
அத்தனை இலகுவில்
மறந்துபோக முடிவதில்லை!!



Saturday, February 15, 2014

உயிராக!!

உதட்டோடு
உன்னை வெறுத்தாலும்
உள்ளத்தோடு
உயிர்வாழ்ந்துகொண்டேயிருக்கின்றாய்
உயிராக!!



Friday, February 14, 2014

தமிழ்லீடர் இணைய இதழில் எனது கவிதை 12.02.2014


http://tamilleader.com/?p=27616



இனியும் வேண்டாம்…..!!!

 
காதல் பிரிவு





வாழ்வின் பாதியும் நீதான் என்
இதயத்தின் பகுதியும் நீதான்
தாழ்வின் கோரம்வரும்போதும்
தாங்கிடுவேன் உன்னை நானென்று
தாராளமாயுரைத்த கண்மணியே
தாங்காச்சோகந்தனை தந்து
தாலிபெற்று சென்றதென்ன?
நோயாய் நீகொளுத்திய தீதா னின்றும்
நொடியிடை வெளியின்றி
பொடிப்பொடியாக்கிப் போட்டது
தத்தளிக்கும் தளிராய்
தனித்துவிடப்பட்டிருக்கின்றேன்
நினைவுகளை கொன்றழித்திடமுடியாது
செத்துபிழைக்கின்றேன் எப்படியடி
சேர்த்தெல்லாவற்றையும் புதைத்திட்டு
செந்தாமரையாய் புன்னகைக்கின்றாய்?
நிமிடத்துக்கொருமுறை சொல்வாயே என்
நிம்மதியெல்லாம் நான்தானென்று
அடிக்கடியணைப்பாயே கண்ணாளனே
அழிவொன்றில்லாது நமைபிரிப்ப
தரிதென்று
என்னவென்றடி எல்லாவற்றையும்
புதைத்திட முடிந்தது
மணிமணியாய் செதுக்கி
மாளிகையா யெழுப்பிய‌
காதலிதயத்தை கலைத்தெறிவதெப்படி
நிறைந்திருக்கும் உன்
நினைவுகளை நீக்கிடும் வழியறியாது
உறைந்திருக்கின்றேன்
ஒற்றைநொடி திரும்பிப்பார்த்திருக்கலாம்
ஓராயிரம் ஆழம்பொதிந்த நம்
காதல் நினைவுகளை
ஆனந்துத்துக்கும் அன்புக்கும் குறைவிலா
அந்த நிமிடந்தனையொரு நொடி
மீட்டியிருக்கலாம் என்னிடம்
ஓடிவந்திருப்பாய்….
இனியும் வேண்டாம்
இரவான எனதுகளில்
ஒளிநிரப்ப வேண்டாம்
நிம்மதி தேடும் வழிகளெனதில்லை
நிகழ்ச்சிகளை நிரப்புவதில் உடன்பாடில்லை
உன்பாதை வேறு
எனது பயணம் வேறு
பிரிவோம் செல்வோம் இனியொருமுறை
சந்திக்காதபடி…
- த.எலிசபெத் (ராஜ்சுகா)

உனக்கான திறவுகோல்கள்

வாழ்வு உன் தவறல்ல‌
தாழ்வு முன் தவறல்ல‌
அதுவே உனக்கான திறவுகோல்கள்
அதுதான் உனக்கான வாழ்க்கைப்படிகள்

நிமிர்ந்து நின்றிட முயற்சிசெய்
உதிர்ந்து விழுந்திடும் மனச்சிதை
துளிர்த்து முளைத்திட எழுந்திடு
தளர்ந்து ஒதுங்கிடும் வீண்வதை!!


Thursday, February 13, 2014

வேரறுந்த மரத்தில்

வேரறுந்த மரத்தில்
பூப்பதெப்படி
காய்ப்பதெப்படி??
நீங்கள்
தண்ணீர் தெளிக்காதீர்கள்!!



Tuesday, February 11, 2014

மிகக்கோரமானவை

நம் நினைவுகள்
எத்தனை அழகானவை இன்று
என் நிகழ்வுகள் மட்டும்
கோரம் மிகக்கோரமானவை
கோரிக்கையறிவாயா???



கண்ணாடிக்காண்கையில்

கண்ணாடிக்காண்கையில் 
கண்களை பதிக்காமல் 
கடப்பதாரோ
கன்னியரை காணும்
காளையரைப்போல‌!!


அடிகள் வலிப்பதில்லை!!

படிகள் ஒவ்வொன்றும்
அடிகளாகவே இருந்ததால் -இப்போதெல்லாம்
அடிகள் வலிப்பதில்லை
பிடிகளாய் எழுந்துவிடுகின்றேன்!!



Monday, February 10, 2014

நிஜம்‬

அழகான காதலியைத்தேடி சிலர் 
அருமையான மனைவியை இழந்துவிடுகின்றார்கள்

அன்னையாக தாங்குவேன்

நான்
அன்னையாக வேண்டாம் உன்னையே
அன்னையாக தாங்குவேன் உலகமென்னை
மலடியென்று சொல்லவில்லையென்றால்

ம‌ண‌(ன‌)நாளில்!!

நீயும்
நானும்
ஒன்று
இரண்டு
நூறு
ஆயிரமென
எண்ணிக்கை
கடந்தின்று
ஓருயிர்
ஓரித‌ய‌மானோம்-ந‌ம்
ம‌ண‌(ன‌)நாளில்!!




தமிழ் எழுத்தாளரான சிவத்தம்பி கார்த்திகேசு ஐயா அவர்களின் மறைவை முன்னிட்டு எழுதியது.

  1. 11.07.2011  எழுதியது. 

  2. இழப்புக்கள்
    பலாத்காரமாய் சந்திக்கவேண்டிய
    பலவந்தம்...

    விரும்பியோ விரும்பாமலோ
    விதியின் வழியில்
    வழிமறித்திடும் நிஜங்களிவை...

    நாளை பார்த்திட முடியுமெ ன்ற
    த‌ற்காலிக‌ பிரிவு முண்டு
    நாட்க‌ள் சென்றாலும்
    நினைவுக‌ளை மட்டும் சும‌ந்திடும்
    நிர‌ந்த‌ர‌ பிரிவுமுண்டு...

    கால‌வோட்ட‌த்துக்கு பின்னால்
    க‌ட்ட‌ளை போலோட‌ வேண்டிய‌
    க‌ட‌ப் பாடுண்டெம‌க்கு
    நித‌ர்ச‌ன‌ங்க‌ளை சும‌ந்துகொண்டு
    ந‌டைபோட‌ வேண்டிய‌து
    ந‌ம‌க்கான‌ வாழ்விய‌ல் ச‌ட்ட‌ங்க‌ள்...

    த‌மிழுக்கு ம‌ர‌ண‌மில்லையென்றால்
    த‌மிழ் காத்த‌ த‌லைவ‌ர்க‌ளுக்கும் ம‌ர‌ண‌மில்லை
    அவ‌ர்க‌ளின் சுவாச‌ம்
    ம‌ண்ணின் ம‌றைவு வரையில்
    த‌மிழோடு சுவாசித்துக்கொண்டேயிருக்கும்
    கால‌ம‌வ‌ர்க‌ளை அசைபோட்டுக்கொண்டேயிருக்கும்... ‌



க‌விஞ‌ர் வைர‌முத்து அவ‌ர்க‌ளுக்கு இனிய‌ பிற‌ந்த‌ நாள் ந‌ல் வாழ்த்துக்க‌ள்*****

13.07.2011 எழுதியது


மொழிவள நாட்டிலே
கனி வளமாய் கவிந்துருகிடு துங்கள்
கலை நிலம்!

தமிழ் காத்திடு தலைமக னகராதியில்
தனித்து வக்குரலாய் கர்ஜனையில்
தகித்திடும் சிம்ம சொப்பனமே -நீவீர்
காலச்சமூத்திரம் கண்டெடுத்த
வையகத்தின் முத்து -நின்
வைரங்கள் பாய்ந்த பாக்களால் -தமிழ்
சுர மீட்டுகையில் ம‌ன‌தெங்கும்
உர மாயிடுதே உலகமொ ழியின்னும்
தரமாகிடுதே...

வாழ்வாங்கு வாழ்தலினை பெற்று
தாழ்வாங்கு போயிடா தமிழினைகொண்டு
புக‌ழ்வாங்கு பேர‌ர‌சே நீ சாத‌னைப‌ல‌ க‌ண்டு
புவி வாழ்வின் பேற்றினை பெற‌வே -இப்
புல்லி னுஞ்சி‌றிய‌ க‌விப்பூக்க‌ளை உங்க‌ள்
அக‌வை க‌ட‌ந்த‌ அக‌ம‌கிழ் நாளில்
அள்ளி தெளிக்கிறேன் ம‌ன‌தார‌ச்
சொல்லி ல‌ளிக்கிறேன்...





Sunday, February 9, 2014

மழலைக்கு நிகர்!!

மனதை மயக்கும்
மழலைக்கு நிகர்
வையத்திலேது...

ஒருகோடி அழகுகள்
ஒவ்வொன்றும் புதுமைகள்!!


Saturday, February 8, 2014

உயிர்ப்பு இல்லை??

வார்த்தைகளை மட்டும் வெறும்
வர்ணமயமாய் வனைந்துவிடுகின்றாய் அதில்
உயிர்ப்பு இல்லையே!!



தருவாயா??

நாம் தொலைந்துபோன‌
நாட்கள் வேண்டும் தருவாயா
நாளை தொடராது போகும்
நாயகியின் கவிதை காண்பாயா!!



வா னிலா!!

விலைபேசினாய்
தொலைந்துபோனது
கலையாத வா னிலா!!


Friday, February 7, 2014

தீயாக பரவியதேன்???

ஓயாத தொலைபேசிச்சிணுங்கள்
காயாத புன்னகைச்சிதறல்
தேயாத ஆனந்த நட்சத்திரங்கள் -எல்லாம்
மாயாதென்றுதானே நினைத்திருந்தேன்
தாயாகி அதனால்தானே காத்திருந்தேன்...

பேயாகத்தோன்றியதேன்
பகட்டும் போலியும் -உனக்குள்
தீயாக பரவியதேன்
பெறுமையும் பணத்தாசையும்??



நியதி

வருவதும் போவதும்
வாழ்வின் நியதி
நிலைப்பதும் நீடிப்பதும்
உனக்கான பகுதி!!



சரிதானா இதில் சம்மதம்தானா???

கலைப்படைப்பினிலே
காற்றையும் கடலையும்
காணும் காட்சிதனையும்
கருவாக்கி கதாநாயகனாக்குவது
கற்பனையின் உச்சமன்று
கற்பித்தலின் உத்தியது!!



மீறுகையில்.....

எல்லை மீறுகையில்
கால் நனைக்கும் அலைகள்கூட‌
காலனாய்த்தான் திரண்டுஎழும்!!


Wednesday, February 5, 2014

என்ன ‪வாழ்க்கைடா‬ சாமி




நம்முடைய வெற்றிகளும் சந்தோஷங்களும் எத்தனையோ இருக்க, தோல்விகளையும் தவறவிட்டவைகளையுமே அதிக நேரங்களில் சிந்தித்து இருக்கும் நிம்மதிகளையும் இழந்துவிடுகின்றோம்!!

போலி புன்னகை

வலியறுத்து
வசந்தங்கொள்ள நினைத்தேன்
போலி புன்னகை சிந்துவதைதவிர‌
வேறேதும் புதிதாய் நிகழவில்லை!!


தயங்குவதில்லை!!

வலியென்று தெரிந்தும்
கீறிப்பார்ப்பதில் உனக்கென்ன‌
சந்தோஷமோ??
அதுவே உனக்கு திருப்தியென்றால்
கண்ணீர்விடுவதற்கு என்
விழிகளும் தயங்குவதில்லை!!



Monday, February 3, 2014

விரல்பிடிக்கும் வரிகள்







விழிநீரின் வடிகாலோ
விரல்பிடிக்கும் வரிகள் -இல்லை
அழியாத தடம்பதிக்க‌
அணைக்கின்ற கரமோ??

சங்கடமானது

ஒப்பனை கலைந்த
முகத்தைவிட‌ அகமே
ரசிக்க சங்கடமானது!!



நல்லார் எல்லாம்...

உள்ளோர் எல்லாம் 
நல்லார் இல்லை
நல்லார் எல்லாம்
உள்ளோர் இல்லை!!



மலைகள் இணைய இதழில்( 02.02.2014)

http://malaigal.com/?p=3962


தீயென்பதால் நா சுடுவதில்லை

நாளையென் மரணத்தை இன்றே
உணர்வதில் தவறுமில்லை
இந்நொடி இல்லையென்றாலும்
காலந்தாழ்த்திய ஓர் நொடியில்
இது நிகழ்ந்தேயாக வேண்டும்
கண்மூடி அத்தருணத்தில் என்
நினைவுகளை சங்கமிக்கின்றேன்...

அலறல்களும் அழுகுரல்களுமாய்
எனதில்லம் ஓலமிடும்
அற்பாயுளில் போய்விட்டதாய்
ஆதங்கப்படும் அனைவரிலும் என
தன்னையின் கதறல்களென்
நெஞ்சத்தைப் பிழிகின்ற்து
இத்தனை வருடங்களில்
எனைதாங்கிய தந்தை
வேதனையை விழுங்கமுடியாதவராய்
விம்மியழும் காட்சி ஐயகோ…

சங்கறுந்துவிழு மளவுக்கென்
சகோதரர்களின் வீறிட்ட அழுகை
அன்பென்ற ஆச்சரியத்தை
ஆழமாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது
ஊரிலுள்ளவர் குழுமியிருக்க‌
உறவினர்கள் கலங்கிநிற்க‌
எனை பிடிக்காத சிலர்கூட‌
கன்னத்தில் கரம்வைத்ததும்
இப்போதுதான்
‘பாவம் நல்ல பிள்ளை’
இறுதியில் எல்லாருக்குமான‌
மரண சான்றிதழ் எனக்கும்
கிடைக்கலாம்…

பழகிய உறவுகள்
நெருங்கிய சொந்தங்கள்
அறிந்த பந்தங்கள்
தெரிந்த நட்புக்களென‌
எல்லாரும் கலந்துகொள்ளலாம்
இறுதுயூர்வலத்தில்
வாய்வழிச் செய்தியறிந்து
அநுதாபங்கள் சில‌
வந்துவிழலாம்
ஆச்சரிய செய்தியாய் முகநூலில்
நட்புக்களின் கண்ணீர்துளிகள்
கவிதை வடிக்கலாம்

இதயம் நெகிழும் இறுதியூர்வலத்தில்
இளகாத நெஞ்சம் ஒன்றில்லாதிருக்கலாம்  ஆனால்
எனதிதயமறியா ஓர்நெஞ்சம் மட்டும்
இச்செய்தியறியாமலிருக்கலாம்
கதறல்களோடு கல்லறையாக்கப்பட்ட‌
எனதுடலம்
மலர் வளையங்களினால்
அலங்கரிக்கப்படும்
சாஸ்திர சம்பிரதாயங்கள்
சமய வழிபாடுகளுடன் என்
பூலோக வாழ்வின் பூரணமும்
ஆறடி நிலத்துக்குள் நிரப்பப்படும்
ஆறாத சோகங்களுடன்
நிறைவேறிய என்
வாழ்வியல் யாத்திரையுள்
முடிந்துபோனது எல்லாமே
நினைவுகளோடூ திரும்பிப்பாராமல்
திரும்பி போகுமுறவுகள்
நாற்பதாவது நாளை நினைவுகொள்வார்கள்
நிஜங்களுக்குள் தொலைந்துபோகும்
நிமிடங்கள்  நிஜமாயென்
ஞாபக சுவடுகளை தொலைத்துக்கொண்டிருக்கும்