Wednesday, July 27, 2011

ப‌த்திரிகையில் பிர‌சுர‌மாகிய‌ என‌து முத‌ல் க‌விதை...

மண்ணுக்குள் விழுந்திருந்த விதையாய்
எனக்குள் முளைத்திருந்த க விதைகள்
எனதேடுகளை விட்டு முதன்முதலாய்
பத்திரிகை பக்கமொன்றில் ப(பி)ரவசமானது
25.07.2004 அன்றைய வீரகேசரி வார இதழில்.

நான் வளர்த்த ரோஜாச்செடி மலர்ந்து
பூரிப்பைத்தந்திட்ட மகிழ்வை யெனக்குள்
நிகழ்த்திய அந்த கவிதையிது....

வரமாட்டாயா?

நிம்மதி
நிலைகெட்டுப்போனது

ஆனந்தம்
அடங்கிப்போனது

ம‌கிழ்ச்சி
ம‌ங்கிப்போன‌து

சுறுசுறுப்பு
சுருங்கிப்போன‌து

என்னுட‌ல் உன்
நினைவுக‌ளா லுருகி
உருக்குழைந்து போன‌து நீ
வ‌ர‌மாட்டாயா

ச‌மாதான‌மே நீ
வ‌ர‌மாட்டாயா?

2 comments:

sinnathambi raveendran said...

மகாரணியே,
வாழ்த்துகள்.
இன்னும் சமாதானத்தையே
வேண்டிநிற்கிறோம்.
தொடர்க.

வதிரி.சி.ரவீந்திரன்

த.எலிசபெத் (ராஜ் சுகா) said...

மிக்க நன்றி கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்களே