Friday, July 22, 2011

***எண்ணத்தில் விழுந்த வண்ணங்கள்***

 01.வங்கியில் வளருது வலியோரின் தர்மம்
வறுமையில் திமிருது எளியோரின் கருமம்!!



02.நெருக்கப் படும்போதெலாம்
நொருங்கிடாதே
வருத்தப் பட்டுன் மனமெலாம்
திருத்தப்படுவதை யறிந்திடு!!



03.என்னவனே நீ
என்னை விலக்கினால் வாழ்வை யிழந்தாய்
எண்ணை விலக்கினால் நோயை யிழந்தாய்!!



04.அன் பன்பென்று ஆர்ப்பரித்திடாதே
அமைதியாக‌வே அக‌ங்க‌ளை யாண்டிடு
செய்த‌வையெலாம் சொல்லிடாதே
செய் ந‌ன்றிசொல் வ‌தை எதிர்பார்த்திடாதே!!



05.ஒரு ம‌னித‌ம்
இன்னொரு ம‌னித‌த்துட‌ன் முற‌ண்ப‌டுகிற‌து
விந்தையான‌ உல‌கில்
விசித்திர‌ ம‌னித‌ர்க‌ளால்...



06.வான‌ம் பிர‌ச‌வித்த‌
வெள்ளி நில‌வு
வெண்ணிலாவின் துணையாக‌
ந‌ட்ச‌த்திர‌த் த‌ங்கைக‌ள் என்
பிர‌ப‌ஞ்ச‌ம் ம‌ட்டும் வெறுமையாக‌...



07.ஆண்ட‌வ‌னைய‌டி க்க‌டி
ஆராதித்தால் ம‌ட்டு முன்
ஆழ்ம‌ன‌தி ன‌ழுக்குக‌ள் அக‌ன்றிடுமோ
அக்கினி சுட்ட‌துபோ லுன‌க்குள்
ஆண‌வ‌ம‌ழிந்தா ல‌ன்றோ
ஆத‌வ‌னாயு ன‌க்குள்
ஆண்ட‌வ‌ன் வ‌ந்த‌ம‌ர்ந்திடுவான்...





08.ம‌ன‌மின் றென்னி ட‌மில்லை





2 comments:

Bharathi pitthan said...

வானம் பிரசவித்த
வெள்ளி நிலவு!
வெண்ணிலாவின் துணையாக
நட்சத்திர தங்கைகள்!
என் பிரபஞ்சம் மட்டும்
வெறுமையாக.....

புதுக்கவிதையின் சிகரம்!

Elizabeth said...

மிக்க நன்றி பாரதி பித்தன் அண்ணா உங்களின் அன்பான வாழ்த்துதல்களுக்கு.....