Sunday, December 30, 2012
துர்ப்பாக்கியக்காதல்
நீ
மறுத்துப்போன இதயம்
மறக்கமுடியாமல் நிதம் நிதம்
மரித்துக்கொண்டிருக்கின்றது
காதல்
வெறும் நேரக்கடத்தலாய்
வேட்கைக் கதவுகளாய்
காணத்தெரிந்த உனக்கு
வெந்துபோன எனதிதயத்தை
புரிய முடியவில்லையா
நான்
இன்னும் மரிக்கமுடியாமல்
மனதோடு போராடுகின்றேன்
உன் ஒற்றைவார்த்தையின்
ஏக்கத்தோடு
நமது
கடந்த காலங்களின் பசுமை எனக்குள்
கல்வெட்டாய் வலிக்கின்றது
கல்லாய்ப்போனதா நான்
காதலோடுபார்த்த உன்னிதயம்???
இரக்கம் தெரிந்திருந்தால் என்
இதயம் அறிந்திருப்பாய்
உறவு உண்மையாயிருந்திருந்தால் என்
உள்ளத்தை அறிந்திருப்பாய்
மனம் உணர்ந்திருந்தால் என்
மாறாக்காதலை அறிந்திருப்பாய்
காலங்கடந்த ஓர்நாளில்
நம் சந்திப்பு வெறும்
கண்ணீர்துளிகளால் மட்டுமே
சந்தித்துக்கொள்ளும்
ஒரு தனியார் வானொலியின் பிரபலமான நிகழ்ச்சி ஒன்றுக்காக எழுதப்பட்ட பாடல்வரிகள். குறிப்பிட்ட இசையமைப்பாளரால் கேட்கப்பட்ட இப்பாடல் வரிகளை அவர் ஏற்றுக்கொள்ளாதது ஏன் காரணம் என்ன என்பது எனக்கு இன்றுவரை புரியாத புதிர்தான்
ஓ..தோழனே//...என் தோழனே தோழியே
ஓ..தோழனே//...என் தோழனே தோழியே
வேதனை தீயதை கொன்றிடவே....ஓ.....
சொந்தமாய் பந்தமாய்
சொல்லிடு சொல்லிடு
சோகமே தொலைக்கவே
என்னிடம் சொல்லிடு...
வானமே எல்லையே
வந்திடு முல்லையே
வறுமைதான் தொல்லையோ-இன்ப
வாழ்விலினி இல்லையே.....
தோழனே என் தோழனே
சொந்தமாய் பந்தமாய்
சொல்லிடு சொல்லிடு -சோகமே
என்னிடம் நீயும் சொல்லிடு....
1.வேருக்குள் வீசிடும்
பூக்களின் வாசமும்
உயிருக்குள் வலித்திடும் -உந்தன்
நேசத்தின் ஏக்கமு.....ம்..ஆ....ஆ
ஊமையாய் காரிருள்
என்னிடம் உன்னிடம்
உயிரதை உருக்கிடும்-எந்தன்
கரமதை வாங்கிடு...
தூங்கிடும் இரவினில்
துக்கம் தரும் தொல்லைகள்
தொலைத்திட்டு சுவாசிக்க
அருகினிலிங்கே வசந்தம்...
பூகம்பம் வரட்டுமே
புயலாகிப்போகட்டும்
புன்னகை சூடிக்கொள்ள
புண்களும் ஆறுமே //
தோழனே/// என் தோழியே
சொந்தமாய் பந்தமாய்
சொல்லிடு சொல்லிடு
என்னிடம் நீயும்... சொல்லிடு
சோகமே... என்னிடம் சொல்லிடு
தோழனே...என் ...தோழியே...
Saturday, December 29, 2012
ஆசையில் ஓர் கடிதம்
அன்புள்ள விதியே
உனக்கொரு கடிதம்
துன்பத்தை மட்டுமேன்
துணையாக தந்தாய்...
பண்புள்ள விதியே
பரிவாக எனை பார்த்திடு
கண்ணீர் பிள்ளையென்னில்
கருணையே வரவில்லையா???
பாசமுள்ள விதியே
படைத்தலில் பிழையோ
மாசற்ற எனதன்பை மனங்கள்
மண்ணுக்குள் புதைப்பதேன்???
நேசமுள்ள விதியே
நேயமற்று நடப்பதேன்
வேஷமிடும் மாயைகளுக்கிடையில்
வேதனையின் உச்சத்தை தருவதேன்...
பரிவுள்ள விதியே
கரிசனையும் இல்லையோ
தரிசு நிலமா யென்னை
தனியாய் தவிக்கவிடுவதேன்???
இதயமுள்ள விதியே
சதையமில்லாது நடந்துகொள்வதேன்
உதயமாகும் விடியல்களெல்லாம்
உதிர்ந் துதிர்ந்து போகின்றதே...
விடைதருவாய் விதியே
நடைபோடும் கண்ணீரலைகளை
தடைசெய்ய விரைவாய் வா
தடுமாற்றங்களை தடுத்திட வா...
.தூரத்தில் தேடாதே
ஏன் பிறப்பெடுத்தேன்
என்று கலங்கும் மனமே
ஏழ்பிறப்பிலு முன்
பிறப்புதானிங்கு சிறப்பே...
என்று கலங்கும் மனமே
ஏழ்பிறப்பிலு முன்
பிறப்புதானிங்கு சிறப்பே...
நீட்டிமுடக்கும் கால்களிரண்டு
நிமிர்ந்து நின்றிடும் முதுகெழும்பு
போட்டிவளர்த்திடும் புத்தறிவு
போதாமைக்கு கண்களிரண்டு...
நிமிர்ந்து நின்றிடும் முதுகெழும்பு
போட்டிவளர்த்திடும் புத்தறிவு
போதாமைக்கு கண்களிரண்டு...
வானத்து விடிவெள்ளியென்ன சிறப்பு
வாழ்க்கைக்குன் நம்பிக்கைதான் திறப்பு
கானகத்தை கடந்துஜெயிப்பதே உழைப்பு
காவியமாயது எழுந்து நிற்பதே மதிப்பு...
வாழ்க்கைக்குன் நம்பிக்கைதான் திறப்பு
கானகத்தை கடந்துஜெயிப்பதே உழைப்பு
காவியமாயது எழுந்து நிற்பதே மதிப்பு...
உன்னை ஜெயித்து உலகைவென்றிடு
உச்சகட்டமுயற்சியில் உயிரையும் மறந்திடு
மண்ணை பொன்னாய் விளையச்செய்திடு
மனதை உழுது மனிதனாய் முளைத்திடு...
உச்சகட்டமுயற்சியில் உயிரையும் மறந்திடு
மண்ணை பொன்னாய் விளையச்செய்திடு
மனதை உழுது மனிதனாய் முளைத்திடு...
சோர்வை நெஞ்சில் சேர்த்துவைக்காதே
சோகமதனை மலையாயெண்ணாதே
தீர்வுகளிங்குதான் தூரத்தில் தேடாதே
தீமைகளே ஏணிகள் பயந்துஓடாதே...
சோகமதனை மலையாயெண்ணாதே
தீர்வுகளிங்குதான் தூரத்தில் தேடாதே
தீமைகளே ஏணிகள் பயந்துஓடாதே...
அவள்
ஆதியிலே
ஆண்டவனுக்கும் புரிந்தது
ஆண்மகனொருவன் அவனியிலே
தனித்திருந்திட முடியாதென்று...
ஆண்டவனுக்கும் புரிந்தது
ஆண்மகனொருவன் அவனியிலே
தனித்திருந்திட முடியாதென்று...
துணையாய் தந்தான் பரிசை
மனைவியாய் தந்தான்
அவனில் சரிபாதியாகிட
விலாவெடுத்து பங்கிட்டுவைத்தான்
மனைவியாய் தந்தான்
அவனில் சரிபாதியாகிட
விலாவெடுத்து பங்கிட்டுவைத்தான்
அவளும் அவனும் சரிபாதி பிறகேன்
ஆடவர் தம்மை
உயர்த்திக்கொள்வது ஆளுமையில்???
ஆடவர் தம்மை
உயர்த்திக்கொள்வது ஆளுமையில்???
நின்றால் அவளும் நிற்பாள்
நிமிர்ந்தால் அவளும்
நிமிர்ந்திடுவாள்
நீ சாதித்தால் அவளும்
சாதிப்பாள் நீ
சண்டையிட்டால் அவளும்
சண்டையிடுவாள்...
நிமிர்ந்தால் அவளும்
நிமிர்ந்திடுவாள்
நீ சாதித்தால் அவளும்
சாதிப்பாள் நீ
சண்டையிட்டால் அவளும்
சண்டையிடுவாள்...
தாய்மையின் புனிதத்தை
சாதகமாக்கிவிட்டாய் அவளை
பலவீனப்படுத்திக்காட்ட
இதைத்தவிர இல்லையுனக்கு
தனித்திறமையொன்று...!!
சாதகமாக்கிவிட்டாய் அவளை
பலவீனப்படுத்திக்காட்ட
இதைத்தவிர இல்லையுனக்கு
தனித்திறமையொன்று...!!
மித்திரன் வாரமலர் (2006)
வருடமொன்று கழிந்துபோகிறது
வருடமொன்று கழிந்துபோகிறது
வாழ்க்கை இரசத்தில் கொஞ்சம் கரைந்துபோகின்றது
முதுமையின் சாயல் பூசப்படுகின்றது
இளமையின் மாயம் உறிஞ்சப்படுகின்றது
மரணவாசலுக்கு செல்லும் வழிக்கு
ஒருஅடி முன்னே நகரப்படுகின்றது
மகிழ்ந்துகொள்ள முடியவில்லை
மனதார வாழ்த்தினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இது விழாவல்ல
வாழ்வின் விபரீதம்
குழந்தை மனம் கழுவப்பட்ட
குழப்பத்திற்கான ஆரம்பம்
வயது வந்ததென்றல்ல என்
வருடம் போகின்றதே என வருந்துகின்றேன்
இனிப்பைத் தந்து
இன்பம் பகரேன் என்
இளமையின் விபத்தை
இயற்றி மகிழேன்
கடந்துபோன காலத்தினில்
கால் பதிக்கா இடமெல்லாம்
தரிசாய் காய்ந்து கிடக்கின்றது
உணர்த்தப்படுகின்றேன்
உருவேற்றப்படாமல் கழிந்ததை
உணர்த்தப்படுகின்றேன்!!
வாழ்க்கை இரசத்தில் கொஞ்சம் கரைந்துபோகின்றது
முதுமையின் சாயல் பூசப்படுகின்றது
இளமையின் மாயம் உறிஞ்சப்படுகின்றது
மரணவாசலுக்கு செல்லும் வழிக்கு
ஒருஅடி முன்னே நகரப்படுகின்றது
மகிழ்ந்துகொள்ள முடியவில்லை
மனதார வாழ்த்தினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
இது விழாவல்ல
வாழ்வின் விபரீதம்
குழந்தை மனம் கழுவப்பட்ட
குழப்பத்திற்கான ஆரம்பம்
வயது வந்ததென்றல்ல என்
வருடம் போகின்றதே என வருந்துகின்றேன்
இனிப்பைத் தந்து
இன்பம் பகரேன் என்
இளமையின் விபத்தை
இயற்றி மகிழேன்
கடந்துபோன காலத்தினில்
கால் பதிக்கா இடமெல்லாம்
தரிசாய் காய்ந்து கிடக்கின்றது
உணர்த்தப்படுகின்றேன்
உருவேற்றப்படாமல் கழிந்ததை
உணர்த்தப்படுகின்றேன்!!
எம்விதி
பெருவீதி சிறுவீதியமைத்தோம்
எம்விதி நடுவீதியில் சமைத்தோம்
எம்விதி நடுவீதியில் சமைத்தோம்
கூட்டாக கொண்டாட்டத்தில் களித்தோம் மழைநாளை
கூரையில்லா திண்டாட்டத்தில் கழித்தோம்
கூரையில்லா திண்டாட்டத்தில் கழித்தோம்
விழாக்காலங்களில் விதவிதமாய் மிதந்தோம் நாம்
விலைவாசியினால் விழிபிதுங்கி நெளிந்தோம்
விலைவாசியினால் விழிபிதுங்கி நெளிந்தோம்
சொத்துக்களை சொப்பனத்திலும் சேர்த்தோம் ஏழைகளாய்
சோறில்லாமல் பலராத்திரி விழித்தோம்
சோறில்லாமல் பலராத்திரி விழித்தோம்
கொள்கலனில் கொடுமைகளை யடைத்தோம் கொடூரமாய்
குடிநீரில்லாது குடிமகன்களாய் அலைந்தோம்
குடிநீரில்லாது குடிமகன்களாய் அலைந்தோம்
சிங்கப்பூரில் வாழ்வதாய் சித்திரம் வரைந்தோம் வசந்தத்தில்
சிக்காது பன்நெடுங்காலமாய் வறுமையிலுறைந்தோம்
சிக்காது பன்நெடுங்காலமாய் வறுமையிலுறைந்தோம்
உபசரிப்பில் உறவுகளை வளர்த்தோம் இருட்டறையின்
அநுசரிப்பில் வரவுகளையே வளைத்தோம்
அநுசரிப்பில் வரவுகளையே வளைத்தோம்
தினசரி செய்திகளில் தினுசாய் கையசைப்போம் அவசியமாய்
தீங்களிக்க வென்றால் திரும்பியும் பாரோம்
தீங்களிக்க வென்றால் திரும்பியும் பாரோம்
பெருவீதி சிறுவீதியமைத்தோம்
எம்விதி நடுவீதியில் சமைத்தோம்!
எம்விதி நடுவீதியில் சமைத்தோம்!
அத்தைமகனுனை கண்ட ஆனந்தத்தில்!!
உள்ளம் உன்னோடு போனதென்ன
உலகம் நீயென்று ஆனதென்ன
எல்லா உறவும் உனக்குள்ளென -என்
எதிர்காலம் சொல்லும் விந்தையென்ன.......
கோபத்தில் பேசாது இருந்தபோதும்
கோடையில் தாகமாய் நானிருந்தேன்
ஆபத்தை கண்ட குழந்தைபோல -உன்னை
ஆவலாய் பார்த்திடத் துடித்தேன்...
தூரங்கள் நீண்டிட துவண்டுபோனேன்
தூதாக கவியனுப்பி காத்திருந்தேன்
பாரத்தின் கொடுங்கோன்மை தாளாமலே
பாதையை தொலைத்த பாதமானேன்...
வானோடு நிலவுக்கு வஞ்சமென்ன
வாராமல் எனைதாண்டி போனதென்ன
மானோடு தொலைந்திட்ட சீதைபோல
மாயவனே உனக்குள்ளே தஞ்சமென்ன...
ஒதுங்கி யொதுங்கி சென்றாலும் பின்னலே
ஒட்டிக்கொண்டு வருகின்றாய் நினைவாலே
அடங்கியிருந்த ஆசையெல்லாம் முன்னாலே
அள்ளி தெளிக்குதென் கண்ணாலே...
இத்தனைநாள் அடக்கிய சோகமெல்லாம்
இதயத்தை வாட்டிய தாக்கமெல்லாம்
அத்தைமகனுனை கண்ட ஆனந்தத்தில்
ஆறாக பெருகியது விழியோரத்தில்....
கோபத்தில் பேசாது இருந்தபோதும்
கோடையில் தாகமாய் நானிருந்தேன்
ஆபத்தை கண்ட குழந்தைபோல -உன்னை
ஆவலாய் பார்த்திடத் துடித்தேன்...
தூரங்கள் நீண்டிட துவண்டுபோனேன்
தூதாக கவியனுப்பி காத்திருந்தேன்
பாரத்தின் கொடுங்கோன்மை தாளாமலே
பாதையை தொலைத்த பாதமானேன்...
வானோடு நிலவுக்கு வஞ்சமென்ன
வாராமல் எனைதாண்டி போனதென்ன
மானோடு தொலைந்திட்ட சீதைபோல
மாயவனே உனக்குள்ளே தஞ்சமென்ன...
ஒதுங்கி யொதுங்கி சென்றாலும் பின்னலே
ஒட்டிக்கொண்டு வருகின்றாய் நினைவாலே
அடங்கியிருந்த ஆசையெல்லாம் முன்னாலே
அள்ளி தெளிக்குதென் கண்ணாலே...
இத்தனைநாள் அடக்கிய சோகமெல்லாம்
இதயத்தை வாட்டிய தாக்கமெல்லாம்
அத்தைமகனுனை கண்ட ஆனந்தத்தில்
ஆறாக பெருகியது விழியோரத்தில்....
வேறுபாடுகள்
பிறந்தவீட்டு மகிழ்வுகளோடு
புகுந்தவீட்டுக்குள் நுழைந்து
வருடங்கள் ஒன்றானது
வசந்தகால விடுமுறையில்
வசதியான மாற்றங்களோடு மீண்டும்
அம்மா வீட்டுக்கு ஆனந்தமாய்...
புகுந்தவீட்டுக்குள் நுழைந்து
வருடங்கள் ஒன்றானது
வசந்தகால விடுமுறையில்
வசதியான மாற்றங்களோடு மீண்டும்
அம்மா வீட்டுக்கு ஆனந்தமாய்...
உள்ளமெல்லாம் மகிழ்வோடு
நெஞ்சமெங்கும் நேசத்தோடு எனக்கு
ஆரத்தழுவின வரவேற்பு
ஓர் விருந்தாளியைப்போல
அத்தனை கவனிப்புகள்
அதிரடியான கனிவுகள்...
நெஞ்சமெங்கும் நேசத்தோடு எனக்கு
ஆரத்தழுவின வரவேற்பு
ஓர் விருந்தாளியைப்போல
அத்தனை கவனிப்புகள்
அதிரடியான கனிவுகள்...
அதே வீடு
அதே அம்மா
அதே சூழல்
அதே சுவர்
அதே அறைகள்
அதே கதிரை
நான் மட்டும் புதிதாக என்
மனம் மட்டுமோர் வேறுபாட்டை உணர்ந்தது
நின்றாலும் இருந்தாலும்
இறந்த காலத்திலிருந்த இன்பங்கள்
இப்போது இல்லாமலிருந்தது என்
சொந்த இடம் இதுவல்லவென்ற
மெல்லிய உணர்வு இழையோடிக்கொண்டிருந்தது!!
அதே அம்மா
அதே சூழல்
அதே சுவர்
அதே அறைகள்
அதே கதிரை
நான் மட்டும் புதிதாக என்
மனம் மட்டுமோர் வேறுபாட்டை உணர்ந்தது
நின்றாலும் இருந்தாலும்
இறந்த காலத்திலிருந்த இன்பங்கள்
இப்போது இல்லாமலிருந்தது என்
சொந்த இடம் இதுவல்லவென்ற
மெல்லிய உணர்வு இழையோடிக்கொண்டிருந்தது!!
முளைத்து எழுந்திடுவேன்
போகும் திசையெங்கிலும்
பொல்லடியும் கல்லடியுமாய்
ஏகும் நிலையெங்கிலும்
ஏமாற்றமும் எரிகாயங்களுமாய்...
திரும்பிடுந் திக்கெங்கிலும்
திகிலூட்டும் சோதனைகளாக
வருத்திடும் கண்ணீராய்
வாழ்வெனக்கு கானலாக...
எடுத்துவைத்த அடிகளெல்லாம்
எழும்பிட முடியா அடிகளாக
தடுத்து நிறுத்திடும் வழிகளதும்
தலைமறைவுத் தாக்கமாக...
இலட்சியங்கள் ஒவ்வொன்றும்
இலட்சங்களற்றதால் உதிர்ந்தது
அலட்சியமா யெனைப்பார்த்து
அத்தனையுறவும் எதிர்த்தது...
தோற்றுப்போன சருகுசேர்த்து
தோன்றியெழுந்திட முயல்கின்றேன்
ஆற்றுப்படுத்தியென் நெஞ்சத்தை
ஆளச்செய்திட துடிக்கின்றேன்...
சூறாவளியாய் சுமைகள் சூழட்டும்
சூதுகள் எனைச்சுற்றி வீசட்டும்
ஆறாகப்பெருகிய ரணங்கள் ஆளட்டும் மனம்மட்டும்
ஆழப்புதைந்தேனும் முளைக்கட்டும்...
(31.01.2013 அன்று இலங்கை வானொலி தென்றலின் 'கவிப்பெட்டகம்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது)
மித்திரன் வாரமலரில்
பிரசுரமான நேர்காணல்

01. தற்போது லண்டன் வாசியான தங்களைப்பற்றி மித்திரன் வாசகர்களுக்காக...
மித்திரன் வாசகர்களுக்கு முதலில் என் அன்பு வணக்கம். என்னைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. என்றாலும் கூட என் அறிமுகத்திற்காக , என்னுடைய முழுப்பெயரை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.. சைபா பேகம் அப்துல் மலீக்.. நான் இலங்கையில் மாவனல்லையை பிறப்பிடமாகக் கொண்டவள்..எனது குடும்பம் நான்கு பேரைக் கொண்டஒரு சின்னக் குடும்பம்..தாய் தந்தை தம்பி மொத்தமாக என்னுடன் சேர்த்து நான்கு பேரைக் கொண்ட குடும்பம்நான் ஆரம்பக் கல்வியை மாவனல்லை தேசிய பாடசாலையிலும், உயர்கல்வி பேராதனைப் பல்கலைக்ழகத்தில் அரசியல் சிறப்புத்ததுறையிலும், இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் கல்விapயல் டிப்ளொமா முடித்திருக்கிறேன்..இதன் பிறகான காலங்கள் நாட்டுக்கு வெளியே தான் கழிகிறது..10 வருடங்களுக்கு மேலாக கணவருடன் இலண்டன் ஈஸ்ட்ஹாமில் வசித்து வருகிறேன்.
04. தமிழ்பேசும் இலங்கை மக்களுடன் தங்கள் வானொலி கொண்டுள்ள தொடர்பு பற்றி..
06. ஊடகத்துறை தவிர தங்களின் வேறு செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றது?
பிரசுரமான நேர்காணல்

தேசங்கடந்து வாழ்ந்தாலும் நேசம்மாறாத ஓர் பிணைப்பை இலங்கையுடன் கொண்டிருக்கும் லண்டன் தமிழ் வானொலி புலம்பெயர் தமிழர்களோடு நம்மையும் இணைத்து ஓர் உறவுப்பாலமாக செயற்படும் ஓர் அளப்பரிய சேவையாற்றிக்கொண்டிருக்கின்றது.அந்த வகையில் தமிழால் சந்தித்து தமிழோடு கைகோர்த்திருக்கும்'கீதாஞ்சலி' எனும் நிகழ்ச்சியினூடாக இலங்கையின் சகலதுறை கலைஞர்களையும் இலைமறைகாயாக இருக்கும் படைப்பாளிகளையும் சந்தித்து அவர்களை உலக அரங்கில் திரைநீக்கி வெளிச்சமிட்டுக்கொண்டிருக்கும் அச்சேவையில் வெற்றியும் கண்டுள்ளது. இந்நிகழ்ச்சியை சிறப்பாகவும் வெற்றியுடனும் தொகுத்துவழங்கிக்கொண்டிருக்கும் அறிவிப்பாளினி திருமதி ஷாபா பேகம் அவர்களுக்கும் இவ்வானொலிக்கும் நன்றிகளை கூறிக்கொண்டு மிகுந்த வேலைப்பளு, சிரமங்களின் மத்தியில் எம்மோடு இணைந்த அறிவிப்பாளினியின் நேர்காணலுடன் இணைந்துகொள்வோம்.
01. தற்போது லண்டன் வாசியான தங்களைப்பற்றி மித்திரன் வாசகர்களுக்காக...
மித்திரன் வாசகர்களுக்கு முதலில் என் அன்பு வணக்கம். என்னைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. என்றாலும் கூட என் அறிமுகத்திற்காக , என்னுடைய முழுப்பெயரை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.. சைபா பேகம் அப்துல் மலீக்.. நான் இலங்கையில் மாவனல்லையை பிறப்பிடமாகக் கொண்டவள்..எனது குடும்பம் நான்கு பேரைக் கொண்டஒரு சின்னக் குடும்பம்..தாய் தந்தை தம்பி மொத்தமாக என்னுடன் சேர்த்து நான்கு பேரைக் கொண்ட குடும்பம்நான் ஆரம்பக் கல்வியை மாவனல்லை தேசிய பாடசாலையிலும், உயர்கல்வி பேராதனைப் பல்கலைக்ழகத்தில் அரசியல் சிறப்புத்ததுறையிலும், இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் கல்விapயல் டிப்ளொமா முடித்திருக்கிறேன்..இதன் பிறகான காலங்கள் நாட்டுக்கு வெளியே தான் கழிகிறது..10 வருடங்களுக்கு மேலாக கணவருடன் இலண்டன் ஈஸ்ட்ஹாமில் வசித்து வருகிறேன்.
02. ஊடகத்துறைக்குள் தங்களது பிரவேசம் பற்றியும் அதனூடான அநுபவங்கள் பற்றியும் எம்மோடு பகர்ந்துகொள்ளுங்கள்..
நான் இன்னுமே ஆச்சர்யப்பட்டு்க் கொள்ளும் விடங்களில் இதுவும் ஒன்று..இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.. உண்மையைச் சொன்னால் , எதிர்பாராமல் நிகழ்ந்த ஒரு பிரேவேசம் என்று தான் சொல்ல வேண்டும்..பாடசாலையில் படிக்கின்ற காலத்தில் கூட மேடையேறி ஒர வார்தை நான் பேசினதாக எனக்கு ஞாபகம் இல்லை..வெட்கத்தை விட்டு சொல்வதானால் சபை வணக்கம் சொல்வதற்கு கூட வாயைத் திறக்க மாட்டேன்.. அப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... ஆமாம் எதிர்பாராமல் தான் இந்த ஊடகத் தறைக்குள் 2004 ஆம் நுழைந்தேன்..அதாவது லண்டன் தமிழ் வானொலி என்னை அரவணைத்துக் கொண்டது....ஆரம்பம் கொஞ்சம் திண்டாட்டமாகத் தான் இருந்தது..பேச்சு வரவில்லை. உச்சரிப்பு வரவில்லை. இருந்தாலும் சக அறிவிப்பாளர்கள்.. நேயர்கள்.. அதிபர் நடாமோகன் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் தான் என்னில் தன்னம்பிக்கையை தந்தது. நான் வளர்ந்திருக்கிறேனென்றால் அவர்கள் தான் இறைவனுக்கு அடுத்த படியான காரணம்..உண்மையில் நேயர்களின் அன்பு என்பது இந்த வானொலியைப் பொருத்த மட்டில் பிரமாணடமானது.. என்னால் யாரையும் மறக்க முடியாது.. நான் இன்றும் கூட என்னை உயர்த்திவிட்டவர்களை நினைத்துப் பார்ப்பதுண்டு.......
03.தற்போது அதிகமான இணைய வானொலிகளின் வருகை,போட்டி நிறைந்த சூழல், இளைஞர்களிடம் காணப்படும் கணனி மோகம் போன்றவற்றுக்கு மத்தியில் உங்களின் வானொலியின் வளர்ச்சி பற்றியும் தமிழ் வானொலி என்ற வகையில், லண்டன் மக்களின் (புலம்பெயர் தமிழர்கள் ) மத்தியில் வரவேற்பும் எவ்வாறு காணப்படுகின்றது?
லண்டன் தமிழ் வானொலியைப் பொருத்தமட்டில் அதற்கு 15 வருடகால அனுபவம் இருக்கிறது..பாடல்கள் ஒலிபரப்புவதைத் தவர்த்து தமிழை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது என்ற ஒரு மந்திரத்தனுாடாக இற்றை வரைக்கும் தனது கொள்கையில் மாறாமல் தளராமல் தனது ஒவ்வொரு அடியையையும் எடுத்து வைக்கும் ஒரு வானொலியாகவே இது செயற்படுகிறது..என்னைப் பொருத்த மட்டில் போட்டி நிறைந்த சூழல் ஆரோக்கியமானதே.. மக்களைக் கவரக் கூடிய வகையில் அவர்களின் ஆற்றல்களை எந்த வகையிலாவது வெளிக் கொணரக் கூடிய நிகழ்ச்சிகள் பெருகி வரும் வானொலிகளினடகவும் வரும் என்றால்..அது ஆரோக்கியமான போட்டியே.. ஆரோக்கியமான வளர்ச்சியே........புலம்பெயர்வில் தமிழ் வானொலி என்ற வகையில் .. லண்டனில் மட்டுமல்ல.. உலகப்பரப்பில் மக்கள் இந்த வானொலியோடு இணைந்திருக்கிறார்கள்.. உலகப்பரப்பில் சிறுவர்கள் எழுத வைக்கப்படுகிறார்கள்.. அவர்களது பேசும் திறன்.. உள்ளார்ந்த ஆற்றல். ”திறமைத் தென்றல்” என்னும் ஒரு நிகழ்வின் ஊடாக வெளிக் கொணரப்படுகிறது...பெரியவர்களின் எழுத்துத்திறனுக்கு பேசும் திறனுக்கான நிகழ்ச்சிகள்.. சுருங்கச் சொல்லின்.. “அடுத்த தலைமுறை நோக்கி”.... என்பது தான் இதன் வாசக மந்திரம்.. புலம்பெயர்வில் நிறைய சிறுவர்கள்.. பெரியவர்கள் தமிழோடு இணைந்து தங்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்........
04. தமிழ்பேசும் இலங்கை மக்களுடன் தங்கள் வானொலி கொண்டுள்ள தொடர்பு பற்றி..
உண்மையில் மனதுக்கு நிறைவான சந்தோசம் எதுவென்றால் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு மிகத் திறமையுள்ள படைப்பாளிகள் இலங்கையில் இருக்கிறார்கள்.. இந்த வானொலிக்கும் இந்த படைப்பாளிகளுக்கும் இடையிலான உறவு எப்படி வந்ததென்றால் அதற்கு முகப்புத்தகம் தான் வழியமைத்துத் தந்தது என்று சொல்லலாம். அந்த வகையில் என்னால் இனங்காணப்பட்ட பல படைப்பாளிகளை உலகப்பரப்பில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்... அவர்களும் லண்டன் தமிழ் வானொலியுடன் இணைந்து எழுதுவதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுத்து அவர்களுக்குள்ளும் ஒரு மனநிறைவைக் கொடுக்க முயற்சித்துள்ளேன் என்று தான் சொல்ல வேண்டும்..இற்றை வரைக்கும் இலங்கை படைப்பாளிகளில் நிறைய பேர் எழுதுகிறார்கள்.. ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளில் நேரடியாக இணைந்தும் பங்கு கொள்கிறார்கள்..
05. ஊடகத்தில் சாதித்துக்கொண்டிருக்கும் குடும்பப்பெண்ணான நீங்கள் எதிர்கொள்ளும் சவாலகள், குடும்பத்தில் உங்களுக்கான பங்களிப்பு பற்றி...
நான் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்ணா என்பது எனக்குத் தெரியவில்லை.. ஆனால் மனநிறைவோடு இருக்கிறேன் என்பது உண்மை..எனக்கு விருப்பமான விசயங்களைத்தான் நான் வானொலியிலும் செய்கிறேன் என்பதால்.. ஆர்வமாகச் செய்கிறேன்.. ஆசையோடு செய்கிறேன்..சவால்கள் என்று சொல்லப்போனால்..குடும்பப்பெண் என்று வரும் போது எந்தப் பெண்ணும். குடும்பவிசயங்களையும் அனுசரிததுப் போக வேண்டிய ஒரு பொறுப்பு , கடமை இருக்கிறது..என்னைப் பொருத்தமட்டில் இதிலிருந்து விலகி.. அல்லது உதாசீனம் செய்துவிட்டு புறம்பாக செயற்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.. இரண்டையும்..ஒன்றிலிருந்து ஒன்று விலகாமல் ஒருங்கே போவதால் எனக்கு பிரச்சிகைள் சவால்கள் என்பது குறைவு தான்.. குடும்பத்தின் நகர்வைப் பொறுத்தமட்டில் தலை இல்லாமல் வால் ஆட முடியாது.. எனது குடும்பத்தின் தலை நிறைவான ஒத்துழைப்பை எனக்குக் கொடுக்கிறார்.. எனது கணவருக்கு கலை சம்பந்தப்பட்ட விடயங்களில் முழு ஈடுபாடு குறைவு என்றாலும். கூட .நான் சம்பந்தப்பட்ட விடயங்களில் எனக்கு , அறிவுரை . ஆலோசனை வழங்குபவராகவே அவர் இருக்கிறார்..எனவே அவர் ஒத்துழைப்பு என்பது எனக்கு மிகப் பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும்..
06. ஊடகத்துறை தவிர தங்களின் வேறு செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றது?
வேறு செயற்பாடுகளுக்கான நேரம் எனக்கு மிகக் குறைவு தான்.. எனக்க ஓய்வு நேரங்களில் கூட பதிவின் நிகச்சிகளை செய்தல் அவற்றை எடிட் பண்ணுதல் போனற விசயங்களில் நேரம் கழிவதால் .. வேறு செயற்பாடுகளில் மனதை ஒட்ட வைப்பது என்பது கடினமே.. என்றாலும்.. மதரீதியான நிகழ்வுகள் என்று வரும் போது அதற்கும் நேரத்தை ஒதுக்கி முன்னுரிமை கொடுத்து ..வானொலி வேலைகளோடும் ஏனைய செயற்பாடுகளோடும் தொடர்கிறேன்........
07. மித்திரன் வாசகர்களுடனும் இலங்கை நேயர்களுடனும் தாங்கள் பகர்ந்துகொள்ள விரும்புவது?
மித்திரன் பத்திரிகைக்காக என்னை அணுகிய உங்களுக்கு நன்றிகள்.. வாசகர்கள் நீங்கள் தொடர்ந்து மித்திரன் பத்திரிகையை படியுங்கள்.. தளம் கொடுக்கும் களம் மித்திரனில், உங்கள் ஆக்கபூர்வமான படைப்புக்களை ஒப்பேற்றிக் கொள்ளுங்கள்... முடியும் பொழுதுகளில்www.firstaudio.net.. கைத்தொலைபேசிகளில் www.ltr.fmகேளுங்கள்.. உங்கள் படைப்புக்களுக்கான அங்கீகாரத்தை உலப்பரப்பிலும் பெற்றுக்கொள்ளுங்கள்.. அந்த நிலைப்பாட்டைப் பெற்றுத்தர நாங்கள் மிக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்.........மீண்டுமாய் எனக்கு இந்த சந்தர்ப்த்தைத் தந்த மித்திரன் பத்திரிகைக்கும் சகோதரி எலிசபெத் அவர்களுக்கும் நன்றி வணக்கம்...
சைபா பேகம் அப்துல் மலீக்
நேர்காணல்: த.எலிசபெத்.
Friday, December 28, 2012
எனது காதலனும் அவனது காதலியும் ????
தலைப்பைப்பார்த்து தப்பாய் நினைத்துவிடாதீர்கள் நான் அந்தளவுக்கு ஒன்றும் கசமுசா காரியமெல்லாம் சொல்லவரவில்லை. இந்த காலத்தோடு சம்பந்தப்பட்ட சமூக கருத்தொன்றுதான்
இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஒருவர் மற்றவரை பார்த்து 'அட அவர் எத்தனை அதிஸ்டசாலி' என்று மகுடம் சூட்டி புகழுவார்கள். அத்தோடு பொறாமையும் கொள்வார்கள் அது இரண்டாவது விடயம். ஆனால் இந்த அதிஸ்டசாலி என்ற பதம் தமக்கு கிடைக்காத அல்லது இல்லாத அல்லது நாம் விரும்புகின்ற ஒரு விடயம் மற்றவரிடம் இருக்கும்போது அதனையே அதிஸ்டமாக எம் மனம் காணவிழைகின்றது . இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை தமது அதிஸ்டமாக நினைக்கையில் இவ்வகிலத்தில் மிக மிக அதிஸ்டமாக என்னால் பார்க்கப்படுவது ஒரே ஒரு விடயம்தான். அதாவது கணவன் மனைவி குடும்ப உறவில், கணவனுக்கு மட்டும் அவள் மனைவியாக காதலியாகவும் அந்த மனைவிக்கு மட்டும் அவன் கணவனாக காதலனாகவும் இருப்பதையே நான் முன்மொழிய விரும்புகின்றேன்.
ஏனெனில் இன்றைய அவசரமான வேகமான உலகில் எதனையும் இலகுவாக பெற்றுக்கொள்ளும் வழிகள் அதிகமாக காணப்படுவதால் நாம் எந்த ஒன்றையும் முக்கியமாகவும் மதித்து பாதுகாத்திடும் இயல்பினையும் இழந்து நிற்கின்றோம் இதில் குடும்ப உறவுகள் மட்டுமென்ன விதிவிலக்கா? வேகமான தொழிநுட்ப தொடர்பாடலுலகில் உறவுகளுக்குள் பேணப்படும் தகைமைகளை மறந்து தான் தோன்றித்தனமான நிலமைக்குள் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதே நிஜம். விவாகரத்தில் ,முற்றுப்பெறும் எத்தனையோ திருமண உறவுகள் ஆழமான காதலில் ஆரம்பித்தவைகள்தான். தங்களுக்குள் இருக்கின்ற புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு, ஒருவரின் குறை நிறைகளை தாங்கக்கூடிய பொறுமை,ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் தன்மை காணப்படாமை போன்ற அசாதாரண குறைபாடுகளாலேயே குடும்ப உறவுகள் ஊனமடைந்து உருவழிந்துபோகின்றது.
குறிப்பாக தீவிரமான தொடர்பாடல் காரணமாக மேற்கூறிய அசமந்தபோக்குகள் வலுவடைய ஏதுவாய் அமைந்துவிடுகின்றது. ஏனெனில் எண்ணிக்கையில்லா நண்பர்கள்தொகை அவர்களுடன் அதிகமாக நேரம் கழிக்ககூடிய வசதி, வாய்ப்புக்கள் போன்றன தங்களது துணைக்கு கொடுக்கும் நேரத்தையும் முன்னுரிமையையும் விழுங்கிவிடுகின்றன இதனால் ஏற்படும் சிறிய சிறிய சண்டைகள் சந்தேகங்கள் முறுகி முற்றி இறுதியாக வெடித்து சின்னாபின்னமாகிவிடுகின்றது. ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இவ்வாறு பிரிந்துவிடும் உறவுகளோடு சேரவேண்டும் அவர்களோடுதான் வாழவேண்டும் என்ற அந்த ஆத்மார்த்தம் இல்லாமல் போவதுதான் வேதனை.
மனித உறவுகள் அன்பு, காதல், விட்டுக்கொடுப்பு, சகோதரத்துவம், தியாகம் போன்ற நற்பண்புகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பதால்தான் நாம் விலங்குகளிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்றைய உறவுமுறைகளை எடுத்துக்கொண்டால் 'போலி' என்ற வரையரைக்குள் உலவும் முகமூடி உறவுகளையே காணமுடிகின்றது. மிதமிஞ்சிய நவீன தொடர்பு சாதனங்களின் பாவனை எந்தளவிற்கு நன்மை பயக்கின்றதோ அதேயளவுக்கு உறவுகளின் ஸ்திரத்தன்மையை அழித்துக்கொண்டிருக்கின்றது என்பதை உறுதிபடக்கூறலாம். அண்மைய ஆய்வொன்று இவ்வாறு கூறுகின்றது " செக்ஸ், மது இவற்றைவிட முகப்புத்தகம் (FB) மிக மோசமானது".
இந்த தீவிர நட்பு வட்டத்தில் சில சில சின்ன விடயங்களில் எம்மோடு ஒருவர் ஒத்துப்போகும்தன்மை காணப்பட்டால் அந்தப்பக்கமாக ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகின்றது. தமது துணையை விட கவர்ச்சியான பேச்சு, கலகலப்பான தன்மை, வெளிப்படையான இயல்புகள் போன்ற அற்ப விடயங்களுக்காக மனந்தாவுதல் ஏற்பட்டுவிடுகின்றது. இதுபோன்ற காரணங்களினால் விவாகரத்து, தற்கொலை, கொலை, பழிவாங்கல்கள், மனரீதியான பாதிப்புக்கள், போன்ற எத்தனையோ சமூக சீர்கேடுகள் வெகு இலகுவாக அரங்கேறிவருகின்றன.
எனவே எம்மைப்பொருத்த வரையில் எமக்கென்று ஒரு சுயக்கட்டுப்பாடு, தெளிவான பரந்த சிந்தனை, சீராக முடிவெடுக்கும் தன்மை, இவற்றோடு முக்கியமாக தமது உறவு/துணையிடன் உண்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் அன்பாகவும் இருக்கக்கூடிய பண்பினை வளர்த்துக்கொண்டால் அல்லது இருக்கும் அந்தப்பண்பினை காத்துக்கொண்டாலே இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து எம்மை நாம் பாதுக்காத்துக்கொள்ளலாம்.
தேசிய கவிஞர்கள் சம்மேளனம் நடத்திய விருது விழா
http://www.jaffnamuslim.com/2012/10/blog-post_3022.html
01. கவிஞர் புன்னியாமீன் மற்றும் அவரது துணைவியார் மஜீதா புன்னியாமீன் |
02.நிகழ்வில் சகோதரியுடன்... |
03.மஜீதா புன்னியாமீன் அவர்களுடன் |
04. |
05 |
06 |
வாருங்கள் பரிசுத்த திருநாளில்...
குழந்தை இயேசு குடிசையிலே
குளிராம் வருடக் கடைசியிலே
மழலை முகிழப் புவியினிலே
தவழ்ந்தார் இந்தத் தினத்தினிலே...
பாலகன் அவரே பிறந்தாரே
பாவங்கள் போக்கிடும் மருந்தாக
தாளங்கள் கீதங்கள் முழங்கிடவே
தரணியில் இன்பம் பூப்பதாக...
கன்னிகை மரியாள் வயிற்றினிலே
கருவாய் அமர்ந்தார் ஆவியிலே
தன்னலம் மறந்திடும் பலியாக
தன்னையே துறக்க உயிர்த்தாரே...
ஆகாயம் எங்கிலும் ஆனந்தமாக
ஆர்ப்பரிக்கும் நட்சத்திரம் பூக்களாக
தாளாத இன்பத்தில் குழந்தையாக
நாமெல்லாம் மகிழ்வோம் ஒற்றுமையாக...
அல்லேலூயா ஓசைகள் எழுப்பிடவே
அவரின் நாமம் உயர்ந்திடவே
எல்லோரும் அன்பில் இணைந்திடவே
எழும்பட்டும் வெற்றிநாளாய் இத்தினமே...
தூயவர் புகழை பாடிடவே
தூதர்கள் எங்கும் ஆரவாரத்தில்
வானவர் பிறப்பில் திளைத்திடவே
வாருங்கள் பரிசுத்த திருநாளில்...
நத்தார் கீதங்கள் தொனிக்கட்டும்
நன்மைகள் எங்கும் தொடரட்டும்
இத்தனைநாள் துன்பங்கள் ஓய்ந்திடட்டும்
இனிவரும் காலமெல்லாம் ஒளிர்ந்திடட்டும்...
Wednesday, December 26, 2012
மொழி இலக்கிய சஞ்சிகை குறித்ததான ரசனைக்குறிப்பு!!
முல்லைத்தீவு மண்ணிலிருந்து வெளிவரும் "மொழி" சஞ்சிகை, இருமாத இலக்கிய சஞ்சிகையாக இவ்வாண்டு தைமாதந் தொடங்கி வெளிவந்துகொண்டிருக்கின்றது.மிக இளம் ஆசிரியரான இராமசாமி ரமேஷ் அவர்களையும் வசந்தன், நிரோஷா ஆகிய இணை ஆசிரியர்களையும் கொண்டு படைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மொழி தனது 2வது வெளியீட்டை அண்மையில் வெளியிட்டது.
சிறந்த வடிவமைப்புடன் 28 பக்கங்களை கொண்டு எம் தேசத்து படைபாளியின் அட்டைப்படத்துடனான இச்சஞ்சிகை 'மொழியின் விழியிலிருந்து...'என்று நன்றிப்பெருக்குடன் ஆரம்பித்து, இந்நிலை எப்போது மாறும் இந்நிலை எப்போது மாறும்? என்ற ஆசிரியரின் ஆதங்கமான நியாயமான கருத்துக்களோடு விரிந்து செல்கின்றது.படைப்பாளிகளை வெளிக்கொணரும் நோக்கம் பக்கங்கள் அத்தனையிலும் பளிச்சிட்டு நிற்கின்றது. அந்த வகையில் இ.ஒ.கூ.தா தென்றல் வானொலி அறிவிப்பாளர் மறைந்த இராஜேஸ்வரி சண்முகம் அவர்களுக்கு கண்ணீரஞ்சலியாக 'அலைகள் ஓய்வதில்லை' திருமதி மியூரியல் அவர்களின் கவிதையோடு யாதவ்,மருதோடை நிலா, யோ.புரட்சி,வை.பிரசன்யா, சுமன், கீ.பீ.நுதன்,கலாபூசனம் கல்முனை பூபால்,சீ.என். துரைராஜா,த.எலிசபெத்,பா.ரிசாந்தன், இராமசாமி ரமேஷ்,பிரதீப்,கிருஷ்ணசாமி அருள், அகல்யா,தேனினியன்,இரா.ரவிரகு, ச.சுவேந்திரன், வேல்நந்தன், ஆகியோரின் கவிதைகளும் எம்.சம்ஸ் அவர்களின் அருமையான சிறுகதையுடன் அமிர் வசந்தன், அனுஷா கணேசலிங்கம் ஆகியோரின் சிறுகதைகளும் நூலுக்கு கனத்தை வழங்கியுள்ளது.
நம் நாட்டு படைப்பாளியும் இணைய வானொலி அறிவிப்பாளருமான கவிதாயினி அனுஷா கணேசலிங்கம் அவர்களின் சுவாரஸ்யமான கலைவாழ்க்கை குறித்ததான நேர்காணல் விஷேட அம்சமாக காணப்படுகின்றது. 'மொழி நூலகம்' எனும் பக்கத்தில் நம் நாட்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள் குறித்ததான அறிமுக குறிப்புக்களுடன் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதி பக்கத்தில் 'மொழியின் தடங்கள்' என "மொழி" வெளியீட்டுவிழா பற்றிய புகைப்படங்களையும் வெளியிட்டு மகிழ்கின்றது சஞ்சிகைக்குழு. காத்திரமான படைப்புக்களோடு இலக்கியத்தை சுமந்து வந்துள்ள இச்சஞ்சிகை தனது இந்த ஆரம்ப நாட்களை மிடுக்குடன் உலகிற்கு பறைச்சாற்றிக்கொண்டிருக்கின்றது குழுவினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் இன்னும் அதிகமான பல்துறை சார்ந்த இலக்கிய நிகழ்வுகள், கட்டுரைகள் என தனது பரப்பையும் அநுபவத்தையும் அதிகரிக்குமாயின் காலத்தை வெளிப்படுத்தி நிற்கும் ஓர் சாதனை நூலாக படம் பதித்திட முடியும். அத்துடன் நூலில் காணப்படும் சில எழுத்துப்பிழைகளையும் தவிர்ப்பது படைப்புக்களின் ஆரோக்கியத்துக்கு வழிகோலும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மொழி சஞ்சிகை ஆசிரியருக்கும் குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவிப்பதோடு இவ்விதழை வாசித்து வாசகர்களாகிய எமது ஆதரவினையும் பங்களிப்பினையும் வழங்கிடுவோம்.
தொடர்புகளுக்கு: இராமசாமி ரமேஷ்,
உடுப்புக்குளம்,
அளம்பில்,
முல்லைத்தீவு.
Email :alampilamal@yahoo.com
தொ.பே : 0775929258
விலை :50/=
கலகம் செய்திடு !!
தோழா தோழா துணிந்து எழுந்திடு
சீறும் பாம்பாய் சிலிர்த்து நின்றிடு
வாளால் தலையை கொய்தல் தடுத்திடு
வாய்மையதனை விளங்கச்செய்திடு...
பாசம் போக்கும் பணத்தை மிதித்திடு
பாரில் நல்ல விளைச்சல் செய்திடு
காசாய் பார்க்கும் கன்னியர் வாழ்வை
காதலால் உருவாக்க கலகம் செய்திடு...
நீயா நானா போட்டி வளர்த்திடு
தீங்காய் முடியும் பொறாமை கொன்றிடு
தீயால் மலர்ந்த தீபம் போலவே
தீமையில் நன்மையை திமிராய் வென்றிடு...
போகப் போகப் புலமை கண்டிடு
போற்றும் அறிவை பரிசாய் பெற்றிடு
தேகம் தின்றிடும் வறுமை ஒழிக்க
வேகத்தை நீயும் வியர்வையாய் ஒற்றிடு...
ஒழியு மொழியும் தனி மையொழியும்
ஒளியும் அருகே தெளிவா யெரியும்
விழியும் வழியை விரை வாயறிய
அழிவும் மறைந்து பொழிவாய் மிளிரும் !!!
"நாம்" இதழ்
முகப்புத்தக கவிதைகளுக்கான அங்கீகார சாதனை
இவ்வாறு முகப்புத்தகத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் வளர்ந்துவரும் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து நூலுருவாக்கம் பெற்றிடுப்பது ஒரு வரலாற்று சாதனையே. ஆம் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி அன்று காலை 9 மணிக்கு யாழ் வைத்தீஸவரா கல்லூரியில் யாழ் இலக்கிய குவியம் கவிஞர் வேலணையூர் தாஸ் அவர்களின் தலைமையினாலும் முயற்சியினாலும் "நாம்" இதழ் face book கவிதைகள் என நாமம் சூட்டப்பட்டு இக்கவிதை நூல் இருமாத நூலாக வெளியிடப்பட்டது.
44 பக்கங்களை கொண்ட சிறிய வடிவிலான கைக்கடக்கமான இந்நூலின் விலை 30 ரூபாய் மட்டுமே.
நம்மவரின் இம்முயற்சியை பாராட்டுவதோடு இந்நூலினை பெற்று எமது ஆதரவினையும் வழங்கிடுவோம். பொதுவாக ஒரு நூலுருவாக்கத்திற்கு எத்தனை பொருளாதார சிக்கல்கள் காணப்படுகின்றது என்பத நாமறிவோம் எனவே இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதற்காயும் இலைமறை காயாக இருக்கும் இளைய படைப்பாளிகளை இனங்கண்டு வெளிக்கொணரவேண்டும் என்பதற்காயும் எமது ஆதரவினை வழங்கிடுவோம்.
புத்தகத்தினை பெற்றுக்கொள்ளவும் யாழ் இலக்கிய குவியத்துடன் தொடர்பினை ஏற்படுத்தவும் கீழ்கண்ட முகவரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
email: yarlelakiyakuviyam@gmail.com
தபால் முகவரி: 37,2ம் குறுக்குத்தெரு
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
இலங்கை.
தொலைபேசி இல :(0094)776284687
கவிதைப்புரட்சி !
மரபுச்சாதம் வடித்து
புதுக்கவி குழம்புவைத்து
வரப்போகும் கணவனுக்கு
வாய்க்குருசியாய் பங்கிடுவேனென
வதந்தி பரப்பிடுகிறாளென் தோழி....
புகுந்த வீட்டிலுன்
புதுக்கவியெலாம் செல்லாது
வகை வகையாய் சமைக்கும்
வசியமறிந்தி டென்கிறாளென் அக்கா...
சிந்தனைப் புரட்சியாலுன் சமூக
சீர்திருத்தமெலாம் போதும்
சந்தோஷமான குடும்பமுருவாக்க அம்மாவிடம்
கற்றுக்கொள்ளென கண்டித்தாரப்பா...
பேனையோடு எனைக்கண்டால்
காகிதங்களை பதுக்கிடும் தங்கை
பூனைபோல பதுங்கியிருந்து
புன்னகை செய்கிறாளன்பில்....
சமவுரிமை பேசுமெனக்கிங்கு
சண்டைபோடமுடியவில்லை
அமைதிகாக்க நெஞ்சமெனை
ஆணையிட்டே அடக்குகின்றது...
என்செய்வேன்??
அன்பைக்குழைத்து
அமுது பருக்கினாய்
கள்ளமில்லாக் கருணையில்
கடைவிழி நீரையுமெனகாய்
கண்மூடி மறைத்தாய்...
என்னன்ன நடையிலே
அகிலம் மறந்தாய்
அடுபூதும் பெண்ணான நீயுமென்னை
அகிலமறிய
அவதாரமளித்தாய்...
குடிபோதையிலே கொல்லவரும்
இடியுமெனக்காய் பொறுத்து
இரவிரவாய் இதயம் நொறுக்கும்
இம்சைதனை -உன்
வம்சத்துகாய் சகித்தாய்...
தண்ணீரிலே வயிறு நிறைத்து
தரணியிலெனை நிறுத்தி
பண்போடெனை வளர்தத
பாசத்தாயே-உனக்காய்
பிரதியுபகாரம் செய்ய-இப்
பிறப்பில் என்செய்வேன்...
- ஊரும்... உலகமும்....கைகளால் பூச்செண்டுதரு வாரவரேகாலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார்தூக்கிவைத்து கொண்டாடுவார்தூரப்போனதும் பந்தாடுவார்...அன்பொழு கப்பேசுவார் அடிமனதில்அழிக்கவே திட்டம் தீட்டுவார்உதவி யென்றதும் யோசிப்பார்உதவ வில்லையென்றால் தூசிப்பார்...சொத்திருந்தால் கூடவே சேர்ந்திருப்பார்சோறில்லா திருந்தால் சேதிகேட்டிடார்ஊர்ப்பிள்ளைக்கு ஜோடி தேடிவைப்பார்தம்பிள்ளை புகழ் பாடியே வைப்பார்...ஊரிலுள்ள ஓட்டைகளையெல்லாம் தேடுவார் தம்ஓட்டைகளை உள்ளுக்குள் வைத்துமூடுவார்பணம் எவ்வளவும் பத்தாதென்பார்பணத்துக்காக எதையும் பத்தவைப்பார்...நண்பனென்றே சேர்ந்திருப்பார்சந்தர்ப்பம் வந்தால் சேருமடிப்பார்முகஞ்சுழிக்க பேசமாட்டார் எம்மில்முன்னேற்றங் கண்டால் பொறுக்கமாட்டார்...புன்னகையில் பூக்கள் மலர்த்துவார்புற்றுப்பாம்பாய் விஷத்தையும் தெளிப்பார்நல்லவர்களென்றே தம்மை காட்டுவார்நாகமாயாக கொஞ்சமும் தயங்கார்...கைகளால் பூச்செண்டுதரு வாரவரேகாலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார் !!
உழைப்புக் கத(தை)!!!
நாலு வெத வெதக்கையில
நாத்து நட்டு மகிழயில
ஏழு ஏழ்கடலு
எழும்பி கை தட்டுதையா...
ஏர்பிடிச்சி உழுதோமுங்க
ஊர்செழிக்க உழைச்சோமுங்க
நார்நாரா போகுமட்டும்
நாட்டுக்காக விளைஞ்சோமுங்க...
கூட(டை)சொம தலையிலங்க
கூடக் கூட அழுத்துதுங்க
வாட காத்து மழையிலயு
ஓடியாடி வளையிறோமுங்க...
வேதனந்தா கூடலீங்க
வேர்வ மணம் மாறலீங்க
ஆதவனா உங்க வாக்கு
வந்து வந்து போகுதுங்க...
அலைமேல வலை போட்டோம்
உலைவைக்க பட காணோம்
தலைமேல பயவோட்டம்
தத்தளிப்பேயெம் திண்டாட்டம்...
சொன்னதெல்லாம் கூலிக்கத(தை)
சொத்தில்லாத உழைப்புக்கத
பொன்னாக மண்ணையாக்க
பொறந்த எங்க சோகக்கத...
Subscribe to:
Posts (Atom)