Thursday, January 17, 2013

யாழ் இலக்கிய குவியம் முகநூலில் நடத்திய 'இணைய கவியரங்கம்' பகுதியில் இடம்பெற்ற கவிதை (15.01.13)


யாருக்கெடுத்துரைப்போம்?

இணையக் கவியரங்கில் கவிதை தர
------------------- ராஜ் சுகா(த.எலிசபெத்)

ஈன நிலை கண்டு துள்ளும் . காதல் கவியென்றால் கொஞ்சும் கவதை நெஞ்செல்லாம் அறியும் இவள் கவிதை மென்மேலும் உயரும்.

பிற்போக்கு தனமான மதவாத கொள்கைகளும்
நீதிநெறி பிழைக்கின்ற அரசுகளும்
பாவிகளை கொல்கின்ற வகை சொன்னீர்
மனமுருக்கம் கவிதை இது ------- 

யாருக்கெடுத்துரைப்போம்???


மாநுடத்துள் மனிதம் மாண்டுபோ ன‌தோ
மாநிலத்தில் தூய்மை ஓய்ந்துபோ னதோ
நீதியிடத்தில் புனிதம் நலிந்து போ னதோ
நன்மைகளோ டியொழிந்து கொண்டதோ...
வறுமையி னவலம் வயதையும் மறைத்தது
வயிற்றை நிரப்பிட விமான மேறியது
அருமைகள் பலவிழந்து அபலையாய் குலைந்தது
அமுதூட்டியதே யமனாய் வந்தது...
சட்டத்தின் கரங்கள் சாட்டையா யடித்தது
சாஸ்திரங் காட்டியே சமத்துவங்கள் மரித்தது
திட்டங்கள் ஒவ்வொன்றும் திமிறி வெடித்தது
தீமைக்கு அஞ்சாது தீர்ப்பளித்தது...
குற்றஞ்செய் தவரெத்தனையோ கொழுத்திருக்க‌
குழந்தை நெஞ்சத்தை குதறி யெடுத்தீர்
பெற்றமனமும் பெருங்கல்லாய்ப் போக‌
பெரும்பாவமல்லவோ புரிந்தீர்...
ஆயிரமாயிரம் அபலைகள் ஆரியவதிபோ லங்கே
ஆணிகளும் அநியாயங்களுமேற்றி அல்லலோடு வந்திறங்க‌
அவருக்கெலாம் நீதியின்கண் இருட்டில் குனிந்ததோ
அறியாமைக்குத்தான் சட்டம் நிமிர்ந்திடுமோ...
ஆய்ந்து தீர்த்திடா அத்தனை நீதிகளும்
ஆறாத ரணமாய் சரித்திரஞ் சொல்லுகின்றது
மாய்ந்தவர் இயேசுவும் மண்ணுக்குள்பல் லாயிரமுயிர்களும்
மாறாத சாட்சிகளாய் ஓலமிடுகின்றது...!!

4 comments:

த.எலிசபெத் (ராஜ் சுகா) said...




Muhilan Priya சொன்னது..

nice..........................மாய்ந்தவர் இயேசுவும் மண்ணுக்குள்பல் லாயிரமுயிர்களும்
மாறாத சாட்சிகளாய் ஓலமிடுகின்றது...!! —

த.எலிசபெத் (ராஜ் சுகா) said...

ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா சொன்னது..


குற்றஞ்செய் தவரெத்தனையோ கொழுத்திருக்க‌
குழந்தை நெஞ்சத்தை குதறி யெடுத்தீர்
பெற்றமனமும் பெருங்கல்லாய்ப் போக‌
பெரும்பாவமல்லவோ புரிந்தீர்...

***** நல்ல பதிவு!! எழுத்துப் பிழைகள் கவனிக்க வேண்டும்!! வாழ்த்துக்கள்!!

த.எலிசபெத் (ராஜ் சுகா) said...

Anand Varun சொன்னது..

kavithai alla ethu kanneer oru tamilan nin kanneer

த.எலிசபெத் (ராஜ் சுகா) said...

யதார்த்தவாதி விஸ்வாமித்ரர் சொன்னது..


மோனையில் கவனம்போல் எதுகையும் சந்தமும் அணிகளும் கவனித்தால் மரபு செறிந்து நிற்கும் கவி..!!