கல்லை இணைத்தால்
கட்டிடம் எழும்பும்
சொல்லை இறைத்தால்
காயங்களுருவாகும்!!
Saturday, November 30, 2013
Friday, November 29, 2013
அநுபவம்
"ஒவ்வொன்றையும் ஆராய்ந்து தெரிந்துகொள்ளும்போது வெறும் அநுபவம்மட்டுமே நமக்கு கிடைக்கின்றது அதை அநுபவிக்கும் பாக்கியமில்லாமல் காலம் கடந்துவிடுகின்றது"
அதற்குத்தான் சொன்னாங்களோ, பெரியவங்க/அநுபவசாலிகள் சொல்றத கேக்கனும்னு... (ஆமாங்க உண்மைதான் அநுபவசாலிகள் சொல்றத கேட்டா அதைவைத்துகொண்டு நமக்கான சரியான விடயங்களை தெரிவுசெய்து நமது காலத்தையும் நேரத்தையும் சரியாக செலவுசெய்யலாம்)
அதற்குத்தான் சொன்னாங்களோ, பெரியவங்க/அநுபவசாலிகள் சொல்றத கேக்கனும்னு... (ஆமாங்க உண்மைதான் அநுபவசாலிகள் சொல்றத கேட்டா அதைவைத்துகொண்டு நமக்கான சரியான விடயங்களை தெரிவுசெய்து நமது காலத்தையும் நேரத்தையும் சரியாக செலவுசெய்யலாம்)
Wednesday, November 27, 2013
தமிழ்மொழியில் குறையா???
தமிழ்மொழியில் காணப்படும் குறையாக சில சப்தங்களுக்கான எழுத்துக்கள் இல்லாமை உறுத்தலாகவும் கடினமாகவும் இருக்கின்றது என்றே கூறவேண்டும். சில எழுத்துக்கள் வடமொழியிலிருந்து கடன்பெற்றாப்போல.... இன்று ஒரு மாணவி தன் பெயரெழுதுகையில் பார்த்த நான் ஒருகணம் குழம்பிப்போய்விட்டேன் காரணம், அவளுடைய உண்மையான் பெயர் Ganganiஅவள் எழுதியிருந்தது 'கங்காணி' என(கங்காணி என்பவர் கண்காணிப்பவர்) ப(Ba), க(Ga), த(Dha), ட(Da) போன்ற சப்தங்களுக்கான எழுத்துக்கள் சகோதரமொழியைப்போல தமிழ்மொழியில் காணப்படவில்லை இது பெருங்குறையே இதற்கான முயற்சிகளை எம் தமிழ்புலவர்கள்,தமிழ்பண்டிதர்கள்,பெரியவர்கள் கலந்தாலோசித்து ஆவன செய்தால் என்ன????? இது ஓரு குறையா அல்லது இவ்விடயம் அத்தனை பெரியபாதிப்பல்ல என்பதா என்பதை அறியத்தருவீர்களா?
Monday, November 25, 2013
நீயும் நானும் எங்கே எங்கே????
என் கண்ணீர்துடைத்த
உன் விரல்கள் எங்கே
என் கவலைகளை மறந்த
உன் புன்னகை எங்கே
என் பயணத்துக்கு துணையான
உன் பாதங்கள் எங்கே
என் கைகள் கோர்த்த
உன் கரங்கள் எங்கே
என் தலையைகோதும்
உன் தாய்மைவிரல்கள் எங்கே
என் கோபத்தை குறைக்கும்
உன் செல்லச் சிணுங்களெங்கே
என் அறியாமைகளை தகர்க்கும்
உன் ஆளுமைகுணமெங்கே
என் அன்பை யாசிக்கும்
உன் பாச இதயமெங்கே
என் கனவுகளை உயிர்ப்பித்த
உன் கனிவுகள் எங்கே
என் உள்ளத்தை மேயும்
உன் குறும்புகள் எங்கே
என் உளறல்களை அதிகரிக்கும்
உன் குழப்படிக்கள் எங்கே
என் நினைவுகளை தொலைக்கும்
உன் நாட்கள் எங்கே
என் வாழ்வுதனை அழகாக்கிய
நம் கடந்தகாலங்கள் எங்கே எங்கே???
நம் வாழ்க்கையை அர்த்தமாக்கிய
அந்த வசந்தங்கள் எங்கே
நம் ஆனந்தத்தை அதிகமாக்கிய
அந்த நிமிடங்கள் எங்கே
நம் எதிர்காலத்தை பறைசாற்றிய
அந்த நேரகாலங்கள் எங்கே
நீ எங்கே எங்கே
என் நெடிய இரவு அழைக்கின்றது
நீ எங்கே எங்கே
என் அஸ்தமித்த விடியலழைக்கின்றது
தொலைந்துபோகப்போகின்றேன்
சீக்கிரம் வந்துவிடு
தொலைதூரமிருப்பினும்
சீக்கிரமாக வந்துவிடு -சிலநேரம்
மூடியபெட்டியை திறப்பதற்கு
மூடக்கதைகள் சொல்லுவார்கள்!!
உன் விரல்கள் எங்கே
என் கவலைகளை மறந்த
உன் புன்னகை எங்கே
என் பயணத்துக்கு துணையான
உன் பாதங்கள் எங்கே
என் கைகள் கோர்த்த
உன் கரங்கள் எங்கே
என் தலையைகோதும்
உன் தாய்மைவிரல்கள் எங்கே
என் கோபத்தை குறைக்கும்
உன் செல்லச் சிணுங்களெங்கே
என் அறியாமைகளை தகர்க்கும்
உன் ஆளுமைகுணமெங்கே
என் அன்பை யாசிக்கும்
உன் பாச இதயமெங்கே
என் கனவுகளை உயிர்ப்பித்த
உன் கனிவுகள் எங்கே
என் உள்ளத்தை மேயும்
உன் குறும்புகள் எங்கே
என் உளறல்களை அதிகரிக்கும்
உன் குழப்படிக்கள் எங்கே
என் நினைவுகளை தொலைக்கும்
உன் நாட்கள் எங்கே
என் வாழ்வுதனை அழகாக்கிய
நம் கடந்தகாலங்கள் எங்கே எங்கே???
நம் வாழ்க்கையை அர்த்தமாக்கிய
அந்த வசந்தங்கள் எங்கே
நம் ஆனந்தத்தை அதிகமாக்கிய
அந்த நிமிடங்கள் எங்கே
நம் எதிர்காலத்தை பறைசாற்றிய
அந்த நேரகாலங்கள் எங்கே
நீ எங்கே எங்கே
என் நெடிய இரவு அழைக்கின்றது
நீ எங்கே எங்கே
என் அஸ்தமித்த விடியலழைக்கின்றது
தொலைந்துபோகப்போகின்றேன்
சீக்கிரம் வந்துவிடு
தொலைதூரமிருப்பினும்
சீக்கிரமாக வந்துவிடு -சிலநேரம்
மூடியபெட்டியை திறப்பதற்கு
மூடக்கதைகள் சொல்லுவார்கள்!!
Sunday, November 24, 2013
வாழவையுங்கள்
புதிய உலகமொன்றை செய்து -அதில்
புனிதக்காதலை மட்டும்
வாழவையுங்கள்
இந்த போலித்தனங்கள்
இங்கேயே அழிந்து
பொழிவிழந்து போகட்டும்!!
புனிதக்காதலை மட்டும்
வாழவையுங்கள்
இந்த போலித்தனங்கள்
இங்கேயே அழிந்து
பொழிவிழந்து போகட்டும்!!
Saturday, November 23, 2013
ஒரு மணமகளுக்கு என்ன தகுதி இருக்கவேண்டும் ஒரே கன்பியூசுங்க யாராவது சொல்லுவிங்களா????
ஒருதடவை அழைப்பெடுத்து பதிலில்லாவிட்டால் பேசாமல் இருக்கும் எனது நண்பி இரண்டு தடவைக்கும் பதிலளிக்காத எனது கைப்பேசிக்கு தொடர்ந்து அழைப்பெடுத்துக்கொண்டேயிருந்தாள். நீண்ட நேரத்துக்குப்பின் அதனை செவிமடுத்த நான், வேகமாக காதில்பொருத்திக்கொண்டு நண்பியின் திட்டுக்களோடு தொடர்ந்த அவளது வினாக்களை செவிமடுத்தேன். 'ஏன்டி மாடு......(இன்னும் பல) ஏன்டி இவ்வளவு நேரம் இந்த போன எடுக்க அவ்வளவு வேலையா உனக்கு என்ற திட்டலோடு ஆரம்பித்தாள். (இன்று அவளை பெண்பார்க்கவருவதாக சொல்லியிருந்தாள் அதான் அவ ரொம்ப பிஸியா இருப்பாளே என்று நாளும் தொலைபேசியை கவனிக்கவில்லை (அவளை தவிர வேறு அழைப்புக்கள் எனக்கு வருவது குறைவு அதுதான் )

"ஏன்டி, இவனுங்க மனதில என்ன நினைச்சுக்கொண்டு வாரானுங்க??? ஒரு குடும்ப பொண்ணுக்கு என்ன இருக்கவேணும்னு இவனுங்க நினைக்கிறானுங்க?" ஏன்டி என்ன ஆச்சு என்ற எனது வினாவுக்கு அவள், வந்தவங்க சாப்பாட்டுக்குப்பிறகு பேச்சை ஆரம்பிச்சாங்க எல்லா கேள்விகளுக்கும் அம்மாவும் அப்பாவும் பதில்சொல்லிக்கொண்டிருந்தாங்க நான் ஒன்றுக்கும் வாய் திறக்கவில்லை ஏன்னா அவங்க பாதியிலயே எழும்பி ஓடிடுவாங்க என்றதால் என்றாள். சரிடி என்ன நடந்திச்சுன்னு சொல்லு என்றேன், இததான்டி கேட்டாங்க அரசாங்க வேலைதானே? மாதச்சம்பளம் எவ்வளவு? பட்டதாரிதானே? ஆங்கிலம் கதைப்பாள்தானே? என்று கேட்டவர்கள் கடைசியில கேட்டாங்க கொம்பியூட்டர் தெரியுமா? என்று... இவங்க பொண்ணு பார்க்கவந்தாங்களா என்னை வேலைக்கு இன்டவீவ் பண்ண வந்தாங்க ஏன்டி இப்படி இருக்கானுங்க??
"வந்த ஆத்திரத்தை வாய்க்குள்ளே அடக்கிக்கொண்டேன் இன்னும் கொஞ்சநேரம் அவங்க உட்கார்ந்திருந்தாங்கன்னா என்னநடந்திருக்குமோ தெரியாது" என்றாள். அவளது ஆதங்கம் எனக்கு நன்றாகவே புரிந்தது. இப்படி எத்தனையோ வரன்கள் வந்து ஒவ்வொரு காரணங்களுக்காக தட்டிக்கொண்டுபோனதில் அவளுக்கு மனதளவில் பாதிப்புதான் ஆண்களைக்கண்டாலே வெறுப்போடு பார்க்குமவள் ஆண்கள் எல்லாரையும் ஒருவித சந்தேகத்தோடு பார்க்கும் புதிய பார்வையையும் புதிதாக உருவாக்கிக்கொண்டிக்கின்றாள் என்பது இன்றுதான் புரிந்தது. அவளது ஆத்திரமாக கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியாது வாயடைத்து நின்றேன். அவள் குடும்ப பொறுப்புக்களும் குணசாலியுமான பெண்ணென்பது எங்கள் யாவருக்கும் தெரியும் அவர்களுக்கு தெரியவில்லை உண்மையில் அவளை தவறவிடும் எவருமே துரதிஸ்டசாலிகளே துரதிஸ்டசாலிகளே என்பது நிச்சயம்.
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்த குடும்ப வாழ்க்கைக்கு வெறும் தகுதிகளையும் தாள்கள் நிறைந்த தராதரங்களையும் மட்டும் கொண்டு இணைத்துவிட முடியுமா? மனம் சம்பந்தப்பட்ட எந்த விடயங்களும் தேவைப்படுவதில்லையா? அன்பு அரவணைப்பு பாசம் என்ற விடயங்களெல்லாம் பணத்தாலும் பட்டங்களால் மட்டுமே நிர்ணயிக்கப்படக்கூடுமோ ஒன்றுமே புரியலப்பா????
ஆக, திருமணம் என்பது மனம் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல பணம் சம்பந்தப்பட்டது, திருமணம் என்பது பாசம் சம்பந்தப்பட்டதல்ல பட்டம் பதவி சம்பந்தப்பட்டது, திருமணம் என்பது நேசம் சம்பந்தப்பட்டதல்ல கலப்படமற்ற வேஷம் சம்பந்தப்பட்டது என்பதாக உறுதிசெய்துகொள்ளலாமா????
Friday, November 22, 2013
வாழவேண்டும்!!
வாழவேண்டும் நம்
வாழ்க்கையை நாமே
வாழ்ந்துவிடவேண்டும்
வலிகளும் வதைகளும்
வழிநெடுகில் வரட்டும்
புலிகளும் கரடியும்
புயலென பாயட்டும்
முன்வைத்த பாதம்
முன்னோக்கியே நகரட்டும்
பின்னிட்டு ஓடுவது நம்
பிழைகளும் தவறுகளுமாகட்டும்
இன்னுங்கொஞ்சம் கடந்தால்
இளமையுமோடிவிடும்
கண்ணுக்குள் வைரம்கொண்டால்
கனவுகளும் கரங்களுக்குள்ளாகும்
வாழவேண்டும் உயிர்
வானம்தாண்டி போயிடுமுன்
வாழவேண்டும் வாலிபம்
உடலைவிட்டு ஓய்ந்திடுமுன்...
வாழ்க்கையை நாமே
வாழ்ந்துவிடவேண்டும்
வலிகளும் வதைகளும்
வழிநெடுகில் வரட்டும்
புலிகளும் கரடியும்
புயலென பாயட்டும்
முன்வைத்த பாதம்
முன்னோக்கியே நகரட்டும்
பின்னிட்டு ஓடுவது நம்
பிழைகளும் தவறுகளுமாகட்டும்
இன்னுங்கொஞ்சம் கடந்தால்
இளமையுமோடிவிடும்
கண்ணுக்குள் வைரம்கொண்டால்
கனவுகளும் கரங்களுக்குள்ளாகும்
வாழவேண்டும் உயிர்
வானம்தாண்டி போயிடுமுன்
வாழவேண்டும் வாலிபம்
உடலைவிட்டு ஓய்ந்திடுமுன்...
இறைவா
வார்த்தைகள் வற்றிபோனது -எனக்குள்
வலிகள் தொற்றிக்கொண்டது
ஊர்பேரறியா இப்பிஞ்சுகள்
உலகத்துக்கு செய்த தீமைதானென்ன -இறைவா
உமக்கு செய்த துரோகம்தானென்ன???
இதயங்களெல்லாம் இரும்பாய்ப்போனதோ
இரக்கங்களெல்லாம் இயங்காமல்போனதோ
சதயமாய்ப்போன மனிதமனங்கள் மண்ணிலினி
உதயமாய் எழுந்து வருவதில்லையோ???
வலிகள் தொற்றிக்கொண்டது
ஊர்பேரறியா இப்பிஞ்சுகள்
உலகத்துக்கு செய்த தீமைதானென்ன -இறைவா
உமக்கு செய்த துரோகம்தானென்ன???
இதயங்களெல்லாம் இரும்பாய்ப்போனதோ
இரக்கங்களெல்லாம் இயங்காமல்போனதோ
சதயமாய்ப்போன மனிதமனங்கள் மண்ணிலினி
உதயமாய் எழுந்து வருவதில்லையோ???
Wednesday, November 20, 2013
எனக்கு மட்டுமா?? இல்லவே இல்லை...
என்னதான் நாம் மற்றவர்களுக்கு முன்பாக சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு இதயத்துக்குள்ளும் ஏராளமான வலிகளும் வேதனைகளும் குமுறிக்கொண்டிருப்பதை அநேக சந்தர்ப்பங்களில் நாம் மறந்துவிடுவதுண்டு. இன்று ஒரு மரணவீட்டுக்கு போகவேண்டியிருந்தது (சகோதரமொழி பேசும் ஒரு தோழியின் தாயார்) நாங்கள் பத்துபேர் போயிருந்தோம், அங்கிருந்து வரும்வழியில் தெரிந்த ஒரு பெண்ணை சந்திக்கவேண்டியிருந்தது அவருடன் கதைத்துக் கொண்டி ருக்கும் போதே அவரின் கணவர் அவரை அழைக்க 'ஐயோ அவர் கூப்பிடுகின்றார்..' என்றவண்ணமாக வாகனத்தை நோக்கி ஓடினார். இதனைப்பார்த்து என்னுடன் வந்த மற்ற நண்பியிடம்(என்னைவிட வயதில் மூத்தவர்தான்) நீங்களும் இப்படியா பயந்து ஓடுவீங்க என்று கேட்டதற்கு, இல்லை நான் யாருக்கும் பயப்படுவதில்லை என்றார் அதற்குநான், அப்போ அவர்தான் உங்களுக்கு பயமா என்று கேட்க தனது வெறுமையான மோதிரவிரலைக்காட்டினார். 'ம்ம்ம் அப்போ பிள்ளைகள்? பிள்ளைகளும் இல்லை' அம்மா அப்பா? அம்மா இல்லை அப்பா மட்டும் இருக்கின்றார் அவருக்கு பக்கவாதம் வந்த பிறகு அவர் தம்பியோடு இருக்கின்றார் விடுமுறை நாட்களில் அவரை பார்த்துவருவேன் நான் தனியாகத்தான்' என்றார். எனக்கு இதயம் ஒரு விநாடி இயல்பை மறந்தது ஏனோ மனதுக்குள் காயமேயில்லாம் வலிக்கத்தொடங்கியது.
வாழ்க்கையை நாம்தான் நல்லவழியில், நமக்கு பிடித்தமான வழியில், மற்றவர்களுக்கும் பயன்படும் விதத்தில், எவருக்கும் கஸ்டம் கொடுக்காத வகையில் சவாலாக வாழ்ந்துவிட வேண்டும். பிரச்சனைகள் வரட்டும் எம்மை விரும்பியது, நாம் விரும்பியது எம்மை கடந்து போகட்டும் ஆனாலும் நாம் நாமாக இருக்கமுயற்சிக்கவேண்டும். நல்லதோ கெட்டதோ உலகம் இரட்டை நாவினால்தான் எம்மை அணுகும் அதனால் அவற்றை கணக்கிலே எடுக்காவிட்டால் நாமும்கூட மகிழ்ச்சியாக வாழலாம் மனநிம்மதியாக சாதிக்கலாம்.
வாருங்கள் வாழ்வோம் வரும் வலிகளை தூக்கியெறிவோம் புதிய வழிகளை உருவாக்குவோம்
அதனால்தான்
உணர்ந்து காதலித்தேன்
உண்மையாய் காதலித்தேன்
உயிராக காதலித்தேன் -அதனால்தான்
உதறிவிட முடியாது
உருக்குழைந்து தவிக்கின்றேன்!!
உண்மையாய் காதலித்தேன்
உயிராக காதலித்தேன் -அதனால்தான்
உதறிவிட முடியாது
உருக்குழைந்து தவிக்கின்றேன்!!
Tuesday, November 19, 2013
உன்னிடம் மட்டுந்தான்
பத்துப்பேரும்
பலவிதமாய் பேசலாம்
பித்துக்கொள்ளவைக்கும்
பிதற்றல்களை உதறிடலாம்
குத்திக்கொல்ல
குறியும் பார்க்கலாம் -ஏன்
கூட இருந்தே
குழியும் பறிக்கலாம்
பலவீனப் பட்டு மட்டும்
போய்விடாதே -எல்லாவற்றையும்
தூக்கிநிறுத்தும்
துணிவு என்பது
உன்னிடம் மட்டுந்தான்
உலகளவில் குடிகொண்டிருக்கின்றது!!
பலவிதமாய் பேசலாம்
பித்துக்கொள்ளவைக்கும்
பிதற்றல்களை உதறிடலாம்
குத்திக்கொல்ல
குறியும் பார்க்கலாம் -ஏன்
கூட இருந்தே
குழியும் பறிக்கலாம்
பலவீனப் பட்டு மட்டும்
போய்விடாதே -எல்லாவற்றையும்
தூக்கிநிறுத்தும்
துணிவு என்பது
உன்னிடம் மட்டுந்தான்
உலகளவில் குடிகொண்டிருக்கின்றது!!
தமிழ் ஓதர்ஸ் இணைய இதழில்...
http://tamilauthors.com/04/222.html
என்ற வரிகள் தான் தந்தையாகிய பிறகுதான் தன்னுடைய பெற்றாரின் மகத்துவத்தை தன்னால் நன்றாக உணரமுடிகின்றது என்பதனை தெளிவுபடுத்துகின்றார் இது எல்லாவிதமான அநுபவங்களுக்கும் பொருத்தமான உதாரணமாக கொள்ளலாம்.
ஈழத்து இலக்கிய பரப்பில் 'புதுக்கவிதை' என்ற மகுடத்தோடு களமிறங்கியிருக்கின்றது 'மனவெளியின் பிரதி'. அநுராதபுர மாவட்டத்தைச்சேர்ந்த நாச்சியாதீவு பர்வீன் அவர்களின் 2வது தொகுதியாக வெளிவந்திருக்கும் இக்கவிதை தொகுதியானது வாசித்தலுக்கும் யோசித்தலுக்கும் உகந்த மிகச்சிறந்த நூலெனலாம். முற்றிய கரும்பை நுனியிலிருந்து அடிவரை சுவைக்கும் அநுபவத்தை பெற்றுத்தரும் மனவெளியின் பிரதியானது மொழியைவிட்டு புரிதலைவிட்டு இலகுவைவிட்டு சிதறிவிடாமல் பக்குவமான தண்டவாளப்பயணமாய் இருப்பது வாசகனுக்கு அவனது வாசிப்புப்பயணத்தை இலகுவாக்கிவிட்டிருக்கின்றது.
39கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பில் இயற்கையோடும் இதயங்களோடும் சந்திக்கின்ற உணர்வுகளை மிக அழகான கவித்துவத்துடன் வெளிப்படுத்தியுள்ள கவிஞரை நிச்சயமாக தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும்போதே வாழ்த்தத்தோன்றும். அத்தோடு மனித மனவோட்டங்களை அப்படியே பிரதியிட்டிருக்கும் இத்தொகுதிக்கு, 'மனவெளியின் பிரதி' எனும் நாமம் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.
அட்டைப்படத்துடன் நூலுக்கான முன்னுரையினை கவிஞரும் எழுத்தாளருமான மேமன்கவி தந்துள்ளார். சற்று வித்தியாசமாக 'பின்னுரை' என்ற பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது அதனையும் மேமன்கவி அவர்களே வழங்கியுள்ளார். கவிஞரின் கவிதையினை பரிந்துரை செய்ததுடன் அவரின் வளர்ச்சியில் பங்குகொண்டுள்ளவர்கள் குறிப்பாக மூத்த படைப்பாளி ஷம்ஸ் அவர்களைப்பற்றியும், நாச்சியாதீவு பர்வீன் அவர்களுக்கு நடைபெற்ற சுவாரஸ்யமான ஒரு விடயத்தினையும் நயம்பட குறிப்பிட்டிருப்பது விஷேடமாக காணப்படுகின்றது. இதனை நீங்களே வாசித்து அந்த சிறந்த அநுபவத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்.
'நாளை' என்ற ஆரம்பத்தோடு தொடங்கும் இத்தொகுப்பின் முதற்கவிதை, நாளைகாலப்புத்தகத்தின்ஒரு புதிய பக்கம்... என தொடங்கி
நாளைக்கே தெரியாதுநாளை என்னநடக்குமென்று" என முடிகின்றது. நாளைய நாளைப்பற்றிய அழகான கனவை கொண்டிருக்கும் இக்கவியானது 'நாளை; என்பதனை நம்பிக்கையின் நதிமூலம் என குறிப்பிட்டிருப்பது மாசுப்படாத அந்நாளைப்பற்றி எங்கள் மனமும்கூட ஒரு நீண்ட எதிர்பார்ப்பினை பெறுகின்றது. அதுபோல இயற்கையை தொட்டுப்பேசாத கவிஞர்கள் இல்லையெனலாம் அந்த வகையில் கவிஞர் பர்வீன் அவர்களும் இதில் விதிவிலக்கல்ல ஆனால் இவரின் இயற்கை கவிதைகளில் ஒரு விஷேடத்தன்மை காணப்படுவதை அவதானிக்கலாம். வெறும் இயற்கை ரசிப்போடு நின்றுவிடாமல் அதற்குள் சமூகத்தை பிரதிபலித்திருப்பதே அவ்விடயமாகும். இதனை 'நிலவு இராட்சியம்', 'இரவுத்திருடன்', 'பட்டாம்பூச்சியின் பறத்தல்பற்றி','மழைகொறித்த பூமி' போன்ற கவிதைகளினூடாக காணலாம்.
'எதிர்த்த சில நட்சத்திரங்கள்
எரி நட்சத்திரமாய்
உருமாறிப்போக
ஏக்கம் நிறைந்த மனதுடன்
சில நட்சத்திரங்கள்
பேசிக்கொண்டன
இன்னொருநிலவின் வருகைபற்றி..... என்ற வரிகளில் அரசியல்பற்றிய ஆதங்கங்களை இயற்கை ஆதாரத்தோடு வெளிப்படுத்தியிருப்பது கவிஞரின் கவித்துவத்தை ஆழம்பார்த்திருக்கின்றது எனலாம்.
காதலை விடுத்து கவிஞர்களின் பேனை,கவிவடித்துவிடுவது என்பது அரிதிலும் அரிது ஏன் இல்லையென்றே சொல்லலாம் அந்தளவுக்கு உலகத்தை சூழ்ந்திருக்கும் இக்காதல் இன்பமாகவோ துன்பமாகவோ எவ்வகையிலேனும் இணைந்தே இருக்கின்றது அந்த மனவுணர்வுகளை மிகப்பக்குவமாக செதுக்கிவிட்டிருக்கின்றார் கவிஞர்.
எல்லை கடந்தஎனது ஞானவெளியில்நீ இல்லாதஇந்தப்பொழுதுகள்மிக மிக இனிமையானவை ...
என்ற வரிகள் 'எல்லை கடந்த ஞானம்' எனும் கவிதையில் இடம்பெற்றுள்ளது. காதலை கடந்துவரும் எமது வாழ்க்கை அத்தியாயத்தில் அதன் வடுக்களும் வலிகளும் மட்டும் எம்மோடு ஒட்டிக்கொண்டே வந்துவிடுகின்றது. ஞாபகங்களை விளக்கிவைக்க எத்தனித்தாலும் அதிலிருந்து விலகிடமுடியாத நிர்ப்பந்தத்தில் ஒவ்வொரு மனங்களும் தவிப்பதை இக்கவிதையில் துல்லியமாக வரிகளாக்கியுள்ளார். அதனை,
நமக்கானஇடைவெளிகள் என்னமோஅதிகம்தான் இருந்தும்இன்னும் துரத்துகின்றதுஉனது ஞாபகம்...' என்ற வரிகளில் அவதானிக்கலாம்.
இதுபோன்று 'நீ பற்றிய நினைவுகள்', கனவுக்கோடுகள், ரயில் சிநேகம், பழைய டயரி, இந்த நாள் எப்பவரும், நீ இல்லாத சாயங்காலம், போன்ற கவிதைகளையும் சுட்டிக்காட்டலாம். குறிப்பாக 'சம்மதமில்லாத மெளனங்கள்' என்ற தலைப்பில்,
எனதான விட்டுக்கொடுப்புக்களைஉன் பிழையான மொழிபெயர்ப்புக்கள்எத்தனை நாட்கள்என் தூக்கத்தை விழுங்கிஉள்ளது தெரியுமா?
என்ற வரிகள் புரிதல் இல்லாத பிரிவுகளின் வேதனைகளோடும் ஏனைய கவிதைகளில் அன்பும் நேசமும் ஆறாய்ப்பெருகும் அழகிய காதல் வரிகளையும் படைத்திருப்பது வாசிப்பார்வத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றது.
உண்மையில் கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருப்பதைப்போல இவரின் கவிதைகளை வாசிக்கும்போது கவிஞர் வைரமுத்துவின் தாக்கம் மிகத்தெளிவாகத்தெரிகின்றது. வாசகர்களுக்கு சிரமமில்லாத மொழிநடை, நூலுக்கு வலுசேர்த்திருப்பதோடு கவிதைகளையும் வளப்படுத்தியுள்ளது
முன்பு கூறியதுபோல சமூகத்தின் பல தளங்களில்நின்று பாடியுள்ள இவரது கவிதைகளில் அழுத்தமான வரிகளை கொண்டு ஆற்றாமைகளையும் ஆளுமைகளையும் விதைத்திருப்பது வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் மனநிலை, தேசத்தில் நிகழ்ந்த காயங்கள் கண்ணீராறுகள் அதன் வலிகள் வடுக்கள், முட்டுக்கட்டைபோடும் மூடநம்பிக்கைகள்,நட்பு, பிரிவு ஒரு தந்தையின் மனநிலை என நீள்கின்றது இதனை தொட்டுக்காட்டி செல்வதற்கும் தொடுத்துவிட்டு செல்வதற்கும் இந்நூலில் ஒருசிலவற்றை பொறுக்கியெடுக்க முடியாமல் திகைக்கின்றது என் ரசனைக்கண்கள் ஏனெனில் அத்தனை கவிதைகளும் அத்தனை சுவைமிகுந்தவை.
வாசகனை சந்தத்தோடும் சந்திக்கின்றது 'பாவியாகிக்கிடக்கின்றேன்' 'அழுது வடிக்கிறோம்' போன்ற கவிதைகள். என்னதான் ஒரு விடயம் பிறரிடமிருந்து எம்மை பாதித்திருந்தாலும் அவ்விடயம் எம்மை பாதிக்கும்போதுதான் அதன் உண்மையான வலியையும் அந்த உணர்வினையும் எம்மால் விளங்கிக்கொள்ளமுடியும் அதனை கவிஞரின் 'மரியம் என்ற என் மகளுக்கு' என்ற கவிதையில் இனங்காணலாம்.
'மரியம் என் உயிரே
உனக்கு நன்றியம்மா
பெற்றோரின் பெறுமதியை
உணர்த்தியமைக்கு....
இத்தொகுப்பின் சில கவிதைகளில் 'நிர்வாணம் கலைந்த இரவு', 'எனது நிர்வாண மனத்தின்', இந்த நிர்வாண வெளியில்' என 'நிர்வாணம்' என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகித்திருப்பது கவிஞர், சில உண்மைகளை உயிரோட்டமாக காட்டுவதற்கும் வெளிப்படையாக தெரிவிப்பதற்கும் முயற்சித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தையை வாசிப்பது சுவாரஸ்யத்தை குறைத்துவிடுகின்றது.
நாம் சந்திக்கின்ற மனிதர்களின் குணவியல்புகள் எம் வாழ்வியலிலும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும் இதனை எம்மால் தவிர்த்திடவும் முடிவதில்லை அது நல்ல விளைவாகவும் இருக்கலாம் தீய விளைவாகவும் இருக்கலாம் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தினை கவிஞரின் 'வாழ்க்கைக்குறிப்புக்கள்' எனும் கவிதையில் துரோகம்,வஞ்சனை, ஏமாற்றங்களுக்கெதிரான குரலாகவும் வேதனை ஒலியாகவும் வெளிப்பட்டிருப்பது எமது வாழ்வில் சந்தித்த ஒர் அநுபவமாக எல்லோராலும் உணரமுடியும்.
இவ்வாறு எல்லா கவிதைகளையும் வாழ்வியல் அநுபவத்தினூடாக சமூக அவலங்களோடு அரசியலையும் மூடத்தனங்களையும் வெளிப்படுத்தியுள்ள கவிஞர் மிகத்தரமான ஒரு கவிதைத்தொகுப்பினை தமிழுலகிற்கு தந்திருப்பது வரவேற்கக்கூடிய விடயமாகும். கவியார்வம் சமூக ஆர்வமுள்ளவர்கள் மட்டுமன்றி வாசிப்பு பிரியர்கள் அனைவரிற்கும் மிகப்பெறுமதியான கவிதைகளடங்கிய 'மனவெளியின் பிரதி'யை தந்திருக்கும் கவிஞர் நாச்சியா தீவு பர்வீன் அவர்களை வாழ்த்துவதோடு ஒரு நல்ல நூலை வாசிக்கவேண்டும் என நினைக்கும் உங்களுக்கும் மனவெளியின் பிரதியை பரிந்துரை செய்து கவிஞருக்கு மனப்பூர்வமான வாழ்த்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இதுபோல நல்ல விளைவினை ஏற்படுத்தக்கூடிய இன்னும் பல தொகுப்புக்களை கவிஞரிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றேன்.
நூல்: 'மனவெளியின் பிரதி' கவிதை தொகுப்பு
ஆசிரியர்: நாச்சியாதீவு பர்வீன்
விலை: 350/=
Monday, November 18, 2013
மலரும் விடியல்!!
விடியும் பொழுதுகள் உனக்காகத்தான்
விதியின் பிடியில் சிலகாலந்தான்
மடியும் மகிழ்வுகள் உயிர்பித்தால்தான்
மலரும் விடியல் வரமாகத்தான்!!
விதியின் பிடியில் சிலகாலந்தான்
மடியும் மகிழ்வுகள் உயிர்பித்தால்தான்
மலரும் விடியல் வரமாகத்தான்!!
நல்ல நாடகம்
நல்ல நாடகம்
நளினமான நடிப்பு
மனதை வருடும்
மாயம்
உலகம் மயங்கும்
ஓவியம்
எப்படி முடிகின்றது
இப்படி நடிக்க
இதயங்கள் உணராவிட்டாலும் -இதனை
இறைவன் உணர்த்தியே ஆவான்!!
நளினமான நடிப்பு
மனதை வருடும்
மாயம்
உலகம் மயங்கும்
ஓவியம்
எப்படி முடிகின்றது
இப்படி நடிக்க
இதயங்கள் உணராவிட்டாலும் -இதனை
இறைவன் உணர்த்தியே ஆவான்!!
அகற்றுவதாகவே யில்லை..
உலகத்தவறுகளையெல்லாம்
உள்ளங்கையில் காண்பித்தோம்
உருகும் மொழிகளில்
உள்ளங்களை பிரதிபலித்தோம் -எம்
உள்ளங்களுக்குள் புதைந்திருக்கும்
அந்த அழுக்குகளைமட்டும்
அகற்றுவதாகவே யில்லை -ஏன்
உணருவதாகக்கூட இல்லை???
உள்ளங்கையில் காண்பித்தோம்
உருகும் மொழிகளில்
உள்ளங்களை பிரதிபலித்தோம் -எம்
உள்ளங்களுக்குள் புதைந்திருக்கும்
அந்த அழுக்குகளைமட்டும்
அகற்றுவதாகவே யில்லை -ஏன்
உணருவதாகக்கூட இல்லை???
Sunday, November 17, 2013
உனக்குமெனக்குமிடையில்....
மறத்தல் என்பது
மனதை மாற்றுவது -உன்
மமதை அகராதியில்
நினைத்தல் என்பது
நீள்நித்திரைதாண்டி நீள்வது
நினதகராதியில்!!
மனதை மாற்றுவது -உன்
மமதை அகராதியில்
நினைத்தல் என்பது
நீள்நித்திரைதாண்டி நீள்வது
நினதகராதியில்!!
Friday, November 15, 2013
உன்னோடு பேசமுடியாது
ஆயிரமாயிரம் வார்த்தைகள்
ஆழ்மனதிலிருந்து எழுகின்றது
உன்னோடு பேசமுடியாது
ஊமைநாவாய் ஒதுங்கிக்கொள்கின்றது
உறவில்லா சின்னஇதயம் !!
ஆழ்மனதிலிருந்து எழுகின்றது
உன்னோடு பேசமுடியாது
ஊமைநாவாய் ஒதுங்கிக்கொள்கின்றது
உறவில்லா சின்னஇதயம் !!
தனிமை
தனிமையே தோழனாக தனிமையே காதலனாக தனிமையே உறவாக தனிமையே நானாக நானே தனிமையாக என்று சுழன்றிடும் என்வாழ்நாட்களில் அண்மைக்காலமாக ஏராளமான மன அழுத்தங்களுக்கு ஆட்பட்டு அல்லல்படும் மனதை என்னால் கொஞ்சம் நிம்மதிநிலைக்கு அழைத்துசெல்லமுடியுமா என வகைப்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
மனதை திறந்திடும் தோழனாக அநேக நேரங்களில் உதவிக்கு வருவது இந்த பேனைக்கரங்கள் மட்டுமே அதுதான் இந்தப்பதிவின் உருவாக்கம். ஆழப்புதைந்திடும் அழுத்தங்களை அள்ளிவீசிட முடியாது அல்லலுறும் போதெல்லாம் ஆறுதல்தரும் பேனைகளுக்கு என்னென்று நன்றி சொல்வேன் நானறியேன்.
நம்பிக்கை துரோகம் என்பதின் வலியை ஆழம்வரை சென்று அநுபவித்த வடு இன்னும் மனதை விட்டு நீங்கமறுக்கின்றது. அதனை மாற்றுவதற்கு காலத்திடம் களிம்பு கிடைக்குமட்டும் காத்திருக்கின்றேன் உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்த்தவண்ணம்....
மனதை திறந்திடும் தோழனாக அநேக நேரங்களில் உதவிக்கு வருவது இந்த பேனைக்கரங்கள் மட்டுமே அதுதான் இந்தப்பதிவின் உருவாக்கம். ஆழப்புதைந்திடும் அழுத்தங்களை அள்ளிவீசிட முடியாது அல்லலுறும் போதெல்லாம் ஆறுதல்தரும் பேனைகளுக்கு என்னென்று நன்றி சொல்வேன் நானறியேன்.
நம்பிக்கை துரோகம் என்பதின் வலியை ஆழம்வரை சென்று அநுபவித்த வடு இன்னும் மனதை விட்டு நீங்கமறுக்கின்றது. அதனை மாற்றுவதற்கு காலத்திடம் களிம்பு கிடைக்குமட்டும் காத்திருக்கின்றேன் உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்த்தவண்ணம்....
Subscribe to:
Posts (Atom)