Wednesday, August 3, 2011

மனந் திறந்திட்டவோர் மகிழ்வான சந்தர்ப்பந்தனில்......

எழுத்துத்துறையில் என் பாதங்களை எட்டிவைத்து நடந்திடவே கிறுக்கிவ‌ந்த என் எழுத்துக்களை மக்களின் பார்வைக்காக ஊடகங்களினூடாக உட்புகுத்தினேன் சென்ற பயனது பெற்று மனங்களாளுணர்ந்து பாராட்டப்பட்டபோது என் கவிகளும் பூப்பெய்திய பூரிப்பையடைந்தன.

த‌மிழ‌முத‌க்க‌ட‌லில் நானும் நீந்திச்செல்ல‌வெ ஆசைகொண்டு வீழ்ந்தேன் ஆனாலும் என்னால் த‌த்த‌‌ளிக்க‌த்தான் முடிகிற‌‌து. த‌த்தித்த‌த்த‌ளித்து எப்ப‌டியேனும் நீந்த‌க்கூடிய‌ நிலையினைய‌டைய‌ முய‌ற்சித்துக்கொண்டிருக்கிறேன் இம் முய‌ற்சியும் அங்கீக‌ரிக்க‌ப்பட்ட‌போது என‌தான‌ ஆர்வ‌ங்க‌ள் இன்னுமின்னும் அதிக‌ரித்த‌து அந்த‌ அங்கீகார‌த்தின் முத‌ல் அத்தியாய‌ம் "ல‌ண்ட‌ன் த‌மிழ் வானொலி"யின் 'கீதாஞ்ச‌லி' எனும் ந‌ம்ம‌வ‌ர் ப‌டைப்புக்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தும் அருமையான‌ நிக‌ழ்ச்சிக்காக‌ என்னை நேர்காண‌ அழைத்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌மே.

எந்த‌வித‌மான‌ முன்ன‌றிமுக‌முமில்லாது க‌விதைக‌ளினூடாக‌ கிடைத்த‌ இவ்வ‌ரிய‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தினை அநுப‌வித்த‌போது என் க‌விதையின் உயிரோட்ட‌த்தினை என்னால் உண‌ர‌முடிந்த‌து.

பொதுவாக‌ ஒரு எழுத்தாள‌ன் அல்ல‌து க‌விஞ‌ன் என்ற‌ அந்த‌ஸ்தினைய‌டைய‌ மிக‌வும் சிர‌ம‌ப்ப‌ட்டு க‌ஸ்ட‌ப்ப‌ட்டு ப‌ல‌ பாதைக‌ளை க‌ட‌ந்தே அடைய‌வேண்டியிருக்கிற‌து அதிலும் அந்த‌ அந்த‌ஸ்தினை பெறுவ‌த‌ற்கும் ஒரு த‌குதி இருக்க‌வேண்டும், ச‌மூக‌த்தை நோக்கிய‌ வீச்சுக்க‌ளில் ஆளுமையிருக்க‌ வேண்டும். இவ்வாறான‌ த‌குதிக‌ளே ஒரு ப‌டைப்பாளியையும் அவ‌ரின் ப‌டைப்புக்க‌ளையும் ச‌மூக‌த்திட‌ம் கொண்டுசெல்கிற‌து.என்ன‌தான் ப‌டைப்புக்க‌ளை பிர‌ப‌ல்ய‌ப்ப‌டுத்தினாலும் அது ஒரு நூலுருவில் வெளிவ‌ரும்போதே அவ‌ன் ப‌டைப்பாளியாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌டுகின்றான்.

ஆனாலும் மேற்குறிப்பிட்ட‌ எந்தத்‌த‌குதியுமில்லாத‌ ஒரு வ‌ள‌ரும் அல்ல‌து வ‌ள‌ர‌ எத்த‌னிக்கும் என‌து முய‌ற்சியையும் ஊக்க‌ப்ப‌டுத்தும் இந்நிக‌ழ்வான‌து உண்மையில் என‌து எழுத்துல‌கின் முத‌ற்க‌ல்லாக‌வே எண்ணுகின்றேன் இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தினை என‌க்கு வ‌ழ‌ங்கிய‌ அறிவிப்பாளினி திரும‌தி பேக‌ம் அவ‌ர்க‌ளுக்கு என் உள‌ப்பூர்வ‌மான‌ ந‌ன்றியினை ம‌ன‌தார‌ ச‌ம‌ர்ப்பிக்கின்றேன்.

30.07.2011 ச‌னிக்கிழ‌மை மாலை கிட்ட‌த்த‌ட்ட‌ அரைம‌ணித்தியாள‌ங்க‌ளை சும‌ந்த‌ நேர்காண‌லின் ஒலிப்ப‌திவு சிற‌ப்பாக‌வும் சுவார‌ஸ்ய‌மாக‌வும் செய்ய‌ப்ப‌ட்ட‌து. 31.07.2011 அன்று இல‌ங்கை நேர‌ப்ப‌டி ந‌ண்ப‌க‌ல் 12 ம‌ணிக்கும் ம‌றுஒலிப‌ர‌ப்பு மாலை 5.30 ம‌ணிக்கும் நிக‌ழ்ச்சி ஒலிப‌ர‌ப்பாகிய‌து. குறைக‌ளையும் நிறைக‌ளாக‌ காட்டி ஊக்க‌ப்ப‌டுத்திய‌ பேக‌ம் அக்காவுக்கு மீண்டும் என் ந‌ன்றிக‌ள்.

உள்ளூரிலே அதிக‌மாக‌ பேச‌ப்ப‌டாத‌ என் க‌வியை உல‌க‌ த‌மிழ் காதுக‌ளுக்கு எட்ட‌ வ‌ழிச‌மைத்த‌ ல‌ண்ட‌ன் த‌மிழ் வானொலி அங்க‌த்த‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்றிக‌ள்.

இதுபோல‌ இன்னும் ப‌ல‌ இலைம‌றைக்காய் க‌லைஞ‌ர்க‌ளை ஊக்க‌ப்ப‌டுத்தி உல‌க‌றிய‌ச்செய்து அவ‌ர்க‌ளுட‌ய‌ ப‌டைப்புக்க‌ளை ச‌மூக‌த்திற்கு வ‌ழ‌ங்கிட‌ இவ்வானொலி நிக‌ழ்ச்சிக‌ளின் முய‌ற்சியும் சேவையும் வ‌ள‌ர‌வும் வெற்றிப் பாதைத‌னைய‌டைய‌வும் இறைவ‌னை பிரார்த்திக்கின்றேன்.

3 comments:

Shaifa Begum said...

மனது திறந்து நீங்கள் பரிமாறக்சொல்லிக் கொண்ட சில விசயங்கள் உண்மையில் எனக்கும் மிகுந்த
பூரிப்பையும் மனநெகிழ்வையும் தந்தது என்பது தான் உண்மை.. நீங்கள் என்பக்கமாக நன்றி சொல்வற்கு ஒன்றுமேயில்லை. திறமை எங்கிருந்தாலும் அதனை வெளிக்கொணர வேண்டும் என்பதே எமது வானலையின் அடிநாதம்..தவிர ,இந்த நேரத்தில் நான் எனது வானலையின் இயக்குனர் திரு. நடாமோகன் அவர்களுக்கு எனது நன்றியை சொல்லியே ஆகவேண்டும்.. முழுமையாக இந்த நிகழ்ச்சிக்கு சுதந்திரம் தந்து என்னுடைய போக்கிற்கு விட்ட அவரைத்தான் நான் இப்போது நன்றியோடு பார்க்கிறேன்.. அவர் எனக்கு இடம் கொடுத்திராவிட்டால் நான் உங்களைச் சந்தித்திருக்க முடியாது..எனவே அவர் கொடுக்கும் ஊக்கமும் ஆக்கமும் தான் உங்களைப் போன்ற நிறைய பேரை உலப்பரப்பிற்குள் இணைக்க வெண்டும் அவாவை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது.வாழ்வியலை நோக்கி நகரும் லண்டன் தமிழ் வானொலி.. உங்களை மாதிரி தன்னடக்கமுள்ள ஒரு திறமைசாலியை உலகுக்கு காட்டியதில் பெருமை கொள்கிறது.. உங்கள் திறமைகள் மேலும் மேலும் வளரவேண்டும்..இந்ததுறையில் உங்கள் பயணம் பல எல்லைகளைக் கடக்க வேண்டும் என்ற பிராரத்தனைகளோடு.. உங்கள் வளர்ச்சியில் கண்டிப்பாக லண்டன் தமிழ் வானொலியும் பின்னால் நிற்கும் என்ற உறுதிப்பாட்டோடு விடைபெறுகிறேன்..

.நன்றி.. Shaifa Maleek

elizabeth said...

thanks u akka...

Elizabeth said...

லண்டன் தமிழ் வானொலியின் இயக்குநர் திரு. நடாமோகன் அவர்களுக்கும் அறிவிப்பாளினி திருமதி.ஷ‌யிபா மலிக் அவர்களுக்கும் மற்றும் வானொலி குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

உங்களின் இந்த இளைய கலைஞர்களின் தேடல் முயற்சி நிச்சயமாக நல்ல பல விளைவுகளை ஏற்படுத்துமென்பதில் எவ்வித ஐயமுமில்லை, அதில் என்னையும் இணைத்துக்கொண்டதில் பெறுமையடைகின்றேன்.உங்களின் ஒத்துழைப்புக்கும் ஊக்குவிப்புக்களுக்கும் எப்போதும் என் நன்றிகளை சமர்ப்பிப்பதில் பெறுமையடைகின்றேன்.

நன்றி!

த.எலிசபெத்