Friday, December 2, 2016

குழந்தைகள் கிளிகள் போல,

குழந்தைகள் கிளிகள் போல, பிரதிசெய்வது மட்டுமே அவர்களுக்கு தெரிந்தது அது நல்லதோ கெட்டதோ...

இன்று ஒரு 5வயது மாணவியை சந்தித்தேன். அவரது வகுப்பாசிரியர் அவரிடம் கேட்டார் ஏன் நீங்க நேற்று பாடசாலைக்கு வரவில்லை என்று அதற்கு அவள் தாத்தாவுடைய நினைவுதினம் அதனால என‌க்கு காய்ச்சல்' என்றாள். அதற்கு நான், 'உங்களுக்கு காய்ச்சல் இல்லைதானே அம்மாதானே உங்களுக்கு காய்ச்சல் என்று சொன்னாங்க? என்றேன் அதற்கும் அவள் ஆமாம் என்றே பதிலளித்தாள்.

குழந்தைகள் எப்போதும் ஆச்சரியமானவர்கள் அவர்களுக்கு நாம் கண்ணாடிகளைப்போல இருக்கவேண்டும் ஏனெனில் நம்மில்தான் அவர்களை காணவிழிகின்றார்கள் எம்மையே பிரதிசெய்கின்றார்கள் முன்மாதிரியாய் நடக்கவேண்டியது எத்தனை முக்கியமென்பதை இன்று ஓர் அநுபவமாக உணர்ந்துகொண்டேன்.

No comments: