Saturday, April 2, 2016

கல்குடா நேசனின் நேர்காணல் கவிதாயினி சிவரமணி (18.03.2016)




01.    தங்களைப்பற்றி?

வணக்கம் . என் இயற்பெயரே சிவரமணி தான். நான் படித்தது  உயர்தரம் கலைப்பிரிவு.  கல்வி பயின்றேன். அம்மா அப்பா இருவரும் இறந்துவிட்டனர் திருமணமாகிவிட்டது. . இல்லத்தரசியாகவே வாழ்கின்றேன்

02.    நீங்கள் இலக்கியத்தினுள் காலடிவைத்த அனுபவத்தினை எம்மோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?

படிக்கும் காலத்திலேயே  இலக்கிய செய்ற்பாடுகளில் இறங்கிவிட்டேன்.கவிதைகள் கட்டுரைகள் நாடகங்கள் என பங்குபற்றுவேன் அத்தோடுசில பொறுப்புகளில் இருந்தும் பணியாற்றி உள்ளேன் கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது என் எழுத்தார்றல்.  காலமாற்றம் நாட்டுச்சூழல் நீண்ட இடைவெளி விட்டுவிட்டேன் மீண்டும் அன்மைக்காலமாக தொடர்ந்தேன் .இன்று ஒரு நிலையை அடைந்துள்ளேன்  ஏறவேண்டியது பலபடியாயினும் ஒரிரு படியிலாவது ஏறி நிற்கின்றேன்


03.    அண்மையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டதுதங்களின் பார்வையில் இந்த தினம் பற்றி?

கொண்டாட வேண்டியது என  குறைகாணாதவர்கள் கூறலாம், தவறில்லை  ஆனால் பேச்சளவில் தான் பெண்கள்  சுந்தந்திரம் . ஒருசிலர் விதிவிலக்காயிருப்பினும்.  பெரும்பான்மையினர் அடக்குமுறையினுள் அகப்பட்டே. பெண் குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத கொடுமை இன்று. . ஒரு  உபயோகப்பொருள் என  பெண்மை  . இதில்  மகளிர்மட்டும் மகளிர்க்காக  என்பது கந்துடைப்பே//




04.    நீங்கள் முன்னெடுக்கும் இலக்கிய செயற்பாடுகள்?

கலைஞர்கள்  ஊக்குவிப்பு  . எமது  கலைஞர்களுக்காக  தாய்தேசக்கலைஞச்ர்கள்   அமைப்பு  என உருவாக்கி சிறந்தமுறையில் கொண்டு செல்கிறோம், அதன் செயலாளராய்  உள்ளேன், அத்துடன்  . செந்தணல் வெளியீட்டக அமைப்பின் செயலாளராயும் உள்ளேன்,  வெளியீடுகள் போன்றவற்றிற்கு முடிந்தவரை பங்களிப்பு செய்து ஊக்குவிப்பு தர முயல்கின்றேன்.

05.    நீங்கள் சந்தித்து அதிர்ச்சியான வேதனைப்பட்ட விமர்சனங்கள் பற்றியும் நெகிழ்ந்துபோன கருத்துக்கள் பற்றியும் கூற முடியுமா?
அதிர்ச்சியடைந்த விடயம் . இலக்கியவாதிகளென்  சிலமுகமூடி அணிந்த குள்ளநரிகளை காண்கையில் ஒருத்தை புறம்பேசி தன்னை முன்னிலைப்படுத்துபவரையும் காண்கையில். ஆதங்கமாயும் வேதனையாயும் இருக்கும்.

நெகிழ்ந்த சந்தர்ப்பங்கள் நிறைய  .வயதுமுதிர்ந்த அனுபவசாலிகளின்  வாழ்த்து என் எழுத்துக்களுக்கு அவர்களின் அனுபவ முத்துக்களில் ரசிகதனமை இப்படி. பல  அத்துடன்  தடாகம் கலையிலக்கிய வட்டமும் மலேசிய எழுதாளர் சங்கமும் வழ்ங்கிய கவியருவி பட்டமும் விருதும்.அத்துடன்  நான் நீண்ட காலம் காணத்துடித்த  சிரேஸ்ட  அறிவிப்பாளர்  நாகபூசனி  கருப்பையா  அவர்களின் முன் அவர்களால் வசந்தம் தொலைக்காட்சியின் நேரகாணலில் சந்தித்த பொழுது. இந்திய உறவுகள்  என் இல்லம்  வந்த போது. /
எல்லாவற்றிற்கும் மேலாக  என்  நூல் வெளியீட்டின் போது./




06.    வாசிப்பறிவை பொறுத்தவரையில் நம் சமூகம் மிக பின் தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது இதுபற்றி?

உண்மை  அன்று  செய்திகளோ கதைகளோ கவிதைகளோ  எழுத்துவடிவில் மட்டுமே  . நூல்கள்  படிப்பதில் ஆர்வம் தேடல் அதிகம்.  இன்று  நாகரீக வளர்ச்சி உலக செய்திகளே உள்ளங்கை கைபேசியில்  தொலைக்காட்டி செய்தி படம் நாடகம்  வானொலி செய்தி எதுவோ எதையும் பார்க்கமுடியும். அப்படியான  சூழலில் வாசிப்பு திறன் அருகிவிட்டது என்றால் மிகையில்லை

07.    இலங்கை படைப்புக்கள் மக்களிடையே எவ்வாறான வரவேற்பினை பெற்றுள்ளது?

திறமைகள்  அது நிறையவே உண்டு  உலக அரங்கில் சரியான  அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதுவும் தற்போது கொஞ்சம் கொஞ்சம் மாறிவரும் சூழல்  காணப்படுகிறது .அதனால் எனிவரும் காலத்தில் நல்லவரவேற்பினை பெறும் . எப்போதும் வரவேற்பு உண்டு.




08.    இலக்கிய உறவுகளுடன் தங்களுக்கிருக்கும் நட்புறவு பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?

கடல்கடந்தும் பலர்  என் நட்பில் இதனை சாத்தியமாக்கியது  முகநூல். யாருடனும் போட்டிபொறாமையில்லை அதனால் யாவரும் நல்லநட்புடனேதான் பயணம்

09.    இலக்கியத்தில் தாங்கள் சாதிக்க நினைப்பது?

நிறைய எழுதனும் .தற்போது  சஞ்சிகை ஒன்று தொடங்க உள்ளேன் . அது பெரியளவில் எல்லோராலும் பேசப்பட்டு போற்றப்படனும்.

10.    குடும்பப்பெண்ணான உங்களுக்குஇலக்கிய செயற்பாடு தொடர்பில் கிடைக்கும் சுதந்திரம் பற்றி?

நேரம்  பிரச்னைக்குரிய விடயமே. இருந்தும் நேரம் ஒதுக்கி செயற்படுவேன் அதனால்  எந்த பிரச்னையும் இல்லை. என் இலக்கிய செயற்பாட்டில் தடையில்லை




11.    நீங்கள் சந்தித்தவரையில் கலைத்துறையோடு இளையவர்களுக்கு இருக்கும்  ஈடுபாடு எவ்வகையில் காணப்படுகின்றது?

நல்லமுறையில் . பலர் ஆர்வமிகுதியாய் உள்ளார்கள் நல்லவழிக்காட்டல் இருந்தால் சாதிக்கவல்லவர்கள் ஆனால்  அவர்களின் பாதை அவர்களின் தேர்வு  சிறப்பாய் இருத்தல் வேண்டும்

12.    இணையத்தளங்களின் அதிகரிப்புசமூக வலைத்தளங்களின் தளர்வு நிலை போன்றவற்றால் இன்று அதிகமானவர்கள் படைப்பாளர்களாக தங்களைஇணங்காட்டி விருதுக்குரியவர்களாகின்றார்கள்இந்நிலையின் ஆரோக்கியத்தன்மை பற்றி?

அது  ஒரு  மாயை  ஆனால் திறமைகள் போற்றப்படனும்/ பல கவிஞ்சர்களோடு பலகவிதைகளோடு   போட்டியிட்டு தம்ம்மை வளர்த்துக்கொள்ளமுடியும். ஆனால் தகுதியில்லாதவர்கள் தூக்கிவைப்படும்போதும் பொருந்தாத விருதின் போதும் சலுகைகளால் சிலர் பெரியவர்களாக உருவகிக்கப்படும் போதும் இலக்கியத்தின் ஆரோக்கியம் இருட்டடிப்பே





13.    நீங்கள் வெளிப்படுத்த நினைக்கும் எண்ணங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்?

எல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை கொட்டிக்கிடக்கும் அதனை  உணரவேண்டும். அதற்கு தம் உணர்வுகளால் மூலாம் பூசவேண்டும்.சிற்பியில்லா  சிற்பம் ஏது உளிபடாத கல் சிலையாவதேது. ஒவ்வொரு கலைஞனும் தன்னை செதுக்கவேண்டும் . தனித்துவமான பாதையில் பயணிக்க வேண்டும் . இலக்கு எதுவோ அதை அடைய இறுதிவரை போராடவேண்டும். .விற்பனைக்காக  கலையில்லை  கலைக்காகத்தான் நாம்.

  #விலைக்கள் கேட்காதே  கலையை வளரவிடு
  தலையைக்கொடுத்தேனும் தமிழை வாழவிடு..  இது எமது செந்தணல் அமைப்பின் தாரகமந்திரம்

# உயிர் நிகராவது உயர் தமிழ் உயிர் கலைதாகம். இது தாய்தேசக்கலைஞர்களின் அமைப்பின் தாரகமந்திரம்.

# தமிழோடு  தமிழுக்காக  கலையோடு கலைக்காக வாழ்வ்தே கலைஞர்கள் இது கவிச்சுடர் சிவரமணி


No comments: