சங்ககால இலக்கியத்தை
மெய்ப்பித்து விடுகிறாய்
நம் கூடலில்...
சங்கமருவிய காலத்தை
காட்டிவிடுகின்றாய்
நம் ஊடலில்...
ஊடலும் கூடலும் கூடி
ஊணுறக்கமற்று நிற்கையில்
பல்லவர்கால பக்தியையும்
வாடலும் வதைப்பையும்
உணர்கையில்
இலக்கிய மொத்தத்தையும் பேதை
இள நெஞ்சில் விதைத்து
இயல்பாய் நகைப்பதேனோ
இராமனாய் சிதைப்பதேனோ...
No comments:
Post a Comment