Saturday, September 3, 2016

45வது படைப்பாளி லிந்துலை தனபாலசிங்கம் அவர்கள்

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு படைப்பாளிகளின் பல்வேறுபட்ட  கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில்  நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இந்நேர்காணலில் அறிமுகமாகும் பலர் தமது  துறைசார்ந்த   வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டதாகவும் கூறி மகிழும்போது  எமது  நோக்கத்தை அடைந்துவிட்டதாய் நாம் பெருமிதமடைகின்றோம் அந்த‌ வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். 


கல்குடா  நேசனின் 45வது படைப்பாளியாக இணைகிறார் மருத்துவ நிறுவனமொன்றின்  முகாமையாளரும்  இணைய வானொலி அறிவிப்பாளருமான லிந்துலை தனபாலசிங்கம்  அவர்கள். தற்போது    குறும்பட   இயக்குநராக   வெளிப்பட்டுக்கொண்டே     சமூகசேவைகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ளும் இவர் மலையகம், இளைஞர்கள், அறிவிப்பு தொடர்பான  பல்வேறு  சுவாரஸ்யமான  அனுபவங்களோடு  இணைந்துகொள்கின்றார். இவரது  முயற்சிமிக்க வாழ்க்கை அனுபவக்களோடு   நாமும் இணைந்துகொள்ளலாம்.








01. உங்களை  எமது வாசகர்களோடு அறிமுகப்படுத்திக்கொள்ளலாமா?

ஆம் கட்டாயமாக. 

எனது  பெயர்  .தனபாலசிங்கம் சொந்த இடம் லிந்துலை  சென் ரெகுலர்ஸ், அப்பா  பெயர் கந்தையா அம்மா தனபாக்கியம் எனக்கு  09  சகோதர்களும்  ஒரு சகோதரியும் இருக்கின்றார்கள்.  நான்  எனது ஆரம்ப கல்வியை  நு/சென் ரெகுலர்ஸ் தமிழ் வித்தியாலயத்திலும்  6. தொடக்கம் உயர்தரம் வரை நு/ஹோல்புரூக்   கல்லுரியிலும்  கற்றேன் அதன்பின்னர்  முகாமைத்துவம் இலங்கை திறந்த பல்கலை கழகத்திலும் ,டிப்ளோமா ஊடக கல்வியை  கொழும்பு பல்கலை  கழகத்திலும் ,இளங்கலை பட்ட  படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்திலும்  கற்கின்றேன்.

02.தங்களது  தொழில், திறமைகள் பற்றி?

தொழில் திறமை என்பவற்றில் எனக்கு இரண்டு துறைகளில் அனுபவம் இருக்கின்றது 01.மருத்துவ துறை, இதில் முகாமைத்துவ‌ம்  சாதாரணமாக ஆரம்பித்த தொழில் முகாமையாளராக உயர்த்தியது. நிறுவனம் என் மீது வைத்த நம்பிக்கை   நான் தொழில் மீது வைத்த அக்கறை தன் நம்பிக்கை படி படியாக உயர்த்தியது ஆனாலும் இன்னும் இதில் கற்று கொண்டே இருக்கிறேன் .மற்றையது ஊடகம், பகுதி நேரமாக இருந்தாலும்  முயற்சியின்காரணமாக குறுகிய காலத்தில் ஜனாதிபதி ஊடகத்தில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது அதே போல 04 ற்கும்  மேற்பட்ட‌ இணைய வானொலிகளில் அறிவிப்பாளராக கடமை புரிந்து இருக்கிறேன் ஊடக துறையில் 07 வருடங்களாக பயணித்து கொண்டிருக்கிறேன்அத்துடன்  குறும்பட  இயக்கமும் அடங்கும்

03.உங்கள் திறமைகளுக்கு கிடைத்த  வெற்றிகளாக நீங்கள் கருதுவது?

எங்கள் நிறுவனத்தில் நான் முகாமையாளராக இருப்பதும் ,நீங்கள் ஒரு பிரபல்யமான எழுத்தாளர், கல் குடா நேசனில் நிறைய படைப்பாளிகள் அடையாளம் கண்டு அறிமுக படுத்துகின்றீர்க‌ள் இங்கே உங்கள் கண்ணில் நானும் பட்டு இருக்கேன் என்றால் இதுவும் எதோ ஒரு வகையில் ஒரு வெற்றி தான்.

04.நீங்கள் முன்னெடுக்கும்  சமூக  செயற்பாடுகள்  குறித்து?

நிறைய உண்டு நான் மருத்துவ நிறுவனம் மூலம் அரச தனியார் நிறுவனங்களில் தொழில் புரிவோருக்கு நீரிழவு நோய் ,உடற் பயிற்சி  உணவு கட்டு பாட்டு பற்றி  விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வது
, அதே போல மலையக பகுதில் உள்ள சகோதர  சகோதரிகளுக்கு வேலை வாய்ப்புகளை தேடி கொடுத்தல் அங்குள்ள பாடசாலைகளுக்கு தேவையான முடிந்த உதவிகளை வழங்குதல் ,சமுக அபிவிருத்தி நிறுவங்களோடு சேர்ந்து மக்களுக்கு சேவைகளை வழங்குதல்





05.ஊடகத்தில் எவ்வாறு  ஆர்வம் ஏற்பட்டது?

பாடசாலை காலங்களில் இருந்து ஆர்வம் இருந்தது .எனினும் ஊடக துறைக்கு வருவதற்கு  என் நண்பியும்  ஊடகவியளாலருமான‌, நடிகை அகல்யா தான் எனக்கு அடித்தளத்தை போட்டு தந்தவர் .

06.அதில் நீங்கள்  சாதிக்க நினைப்பது?

ஒரு நேர்மையான ஊடகவியாளனாக இருக்க வேண்டும் ஊடகம் என்ற பெரும் பரப்பை நன்றாக கற்று கொண்டு அதனுடாக சமூகத்து  நல்ல விடயங்களை கொண்டு செல்ல வேண்டும் .

07.உங்களது அறிவிப்பு  அனுபவங்கள் பற்றி?

07 வருடங்களுக்கு மேல் இணைய வானொலிகளில் அறிவிப்பாளராக அனுபவம் உண்டு உள் நாட்டு,வெளி  நாட்டு இணைய வானொலிகளில் கடமை செய்துருக்கிறேன் அதே போல மேடைகளில் நூல் வெளியீடுகள் கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன் ,ஆனாலும் மூத்த அறிவிப்பாளர்களின் நிகழிச்சிகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்பதுண்டு அவ்ர்களிடம் நிறைய கற்று கொள்கின்றேன்

08.உங்களை கவர்ந்த அறிவிப்பாளர்கள்? எதனால்  அவ்வபிமானம் ஏற்பட்டது?

பல மூத்த அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீத் ,ஜெய கிருஷ்ணா,அபர்ணா, லோஷன்,  நவா,   பரணி அண்ணா இப்படி பல பேர் இன்னும் நிறைய  இளம் அறிவிப்பாளர்கள்.  இவர்களிடம் காணப்படும்மொழி ஆளுமை, திறமை, தங்களுக்கென தனி  நடை   என்பவற்றை  கூறலாம்






09. இன்றைய  இளம் அறிவிப்பாளர்களிடம் சினிமாச்சாயல் காணப்படுகின்றதே,  தமக்கான  தனிப்பாணியை  தக்கவைத்துக்கொள்ளவில்லையே  இதுபற்றி?

இங்கு ஆர்வம் காரணமாக அறிவிப்பாளர்களாக ஆனவர்கள் அதிகம் ஆனாலும் அதை முழுமையாக கற்று கொண்டவர்கள் அல்லது நல்ல திறமையான மூத்த அறிவிப்பாளர்களின் வழிகாட்டலில்  வந்தவர்கள் மிகவும் குறைவு.  நல்ல தேடல் உள்ள திறமையான அறிவிப்பாளர்களும் இப்பொழுது இருகின்றார்கள் ,இங்கு சினிமா பாணி என்பது வானொலிகளை பொறுத்த மட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது சினிமா இல்லை என்றால் வானொலிகள் இல்லை என்ற நிலைக்கு சினிமாவின் ஆதிக்கம் வானொலி என்ற ஊடகத்தை ஆக்கிரமித்து இருக்கிறது ,ஆகையால் வானொலி அறிவிப்பாளர்கள் பெரும்பாலானோர் ஒரே மாதிரி பயணிக்கின்றார்கள்.


10.ஆரம்பகாலங்களில் இலங்கை வானொலிக்கு  உலகளவிய  ரீதியில் பாரிய அபிமானமும் வரவேற்பும் இருந்தது அதற்கான  முக்கிய காரணம் "தனிப்பாணியே" அந்த  தகைமை இதுபோன்ற வேறு பாதிப்புக்களால் சிதைவடைகின்றதே  இதுபற்றி?

இது நல்லதொரு கேள்வி ஆரம்பகாலங்களில் இலங்கை வானொலி உள் நாட்டில் மாத்திரம் அன்றி கடல் கடந்தும் பிரபல்யமடைந்து காணப்பட்டது குறிப்பாக தென் இந்தியாவில் இதற்கு முக்கிய காரணம் தென் இந்திய சினிமா பாடல்களை முதலில் வானொலியில் ஒலிபரப்பிய பெருமை இலங்கை வானொலிக்கே உண்டு ஆகையால் அக்கால சினிமா பிரபல்யங்களான எம் .ஜீ.ஆர் .சிவாஜி கணேஷன் கூட எம் வானொலிக்கே நேயர்களாக இருந்திருக்கின்றார்கள்.  தனித்தமிழ் நடையுடன் மிகவும் திறமையான அறிவிப்பாளர்கள் இக் கால கட்டத்தில் வானொலி ஊடகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கை வகித்து வ‌ருக்கின்றார்கள் அதே போல இன்றும் கூட இந்தியாவில் கே.ஸ் .ராஜா ,ராஜேஸ்வரி  சண்முகம் போன்றவர்கள் பேசப்படுபவ்ர்களாக இருப்பதோடு திரு B.H.அப்துல் ஹமீது இன்றும் கூட உலகை சுற்றி வரும் உலக கதாநாயக அறிவிப்பாளராக  வலம் வந்து கொண்டிருக்கிறார் ,இதற்கு காரணம் சரியான ஆரம்பம்  திரு .மயில் வாகனம் போன்றோர் மறக்க முடியாதவர்கள் .ஆனாலும் காலப்போக்கில் தொலை காட்சி வளர்ச்சி தனியார் வானொலிகளின் ஆதிக்கம் மக்களின் ரசனையில் மாற்றம் போன்றன வெகுவாக பாதிக்க ஆரம்பித்தது ஆகையால் ஆரம்ப கால வானொலி கலாச்சாரத்தை தொடர்ந்தும் பாதுகாத்து கொள்ள முடியவில்லை.







11.அறிவிப்பிலும்  ரசிகர்களை கவர்வதற்கான நுணுக்கங்கள் காணப்படுகின்றதா? அதில்  உங்களது  அனுபவம், தனித்தன்மை பற்றி?

நிச்சயமாக நுணுக்கங்கள் இல்லாவிடின் தொடர்ந்து நேயர்கள் மனதில் இடம் இல்லாமல் போய் விடும்  வானொலியை கேட்பவர்கள் பெரும்பாலும் பாடல்களை  கேட்கவே  விரும்புகின்றனர் இந்த நிலையில் ஒரு அறிவிப்பாளர்களுக்காக கேக்கின்ற  நிகழ்ச்சிகளும் இருக்கவே செய்கின்றது  அதட்கு காரணம் அவர்களின் நுணுக்கம் தனி நடை குரல் வளம் போன்றன,ஆனாலும் இணயத்தள வானொலிகளை பொறுத்தமட்டில் இணையத்தில் இருப்பவர்கள் மாத்திரம் கேக்க முடிகிறது ஆகவே கேக்கும் அந்த நேயர்களை தன் வசம் படுத்த புதுமையாகவும் அவர்கள் விரும்பும் விதத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது தொடர்ந்தும்  அவர்கள் எங்களோடு இருப்பதோடு தங்களுடைய இணைய நண்பர்களையும் கேக்க வைக்கின்றார்கள் இந்த வழியை தான் நாங்கள் பின்பற்றுகின்றோம் இணைய வானொலி அறிவிப்பாளர்களை  பொறுத்தமட்டில் நேயர்களோடு நல்ல நெருங்கிய தொடர்பும் அவர்களின் நிகழ்ச்சிக்கு வெற்றி வாய்ப்பை தேடி தருகின்றது .


12.இணைய  வானொலிகளுக்கு மக்களிடம் காணப்படும் வரவேற்பு எப்படியானது?

பெரும்பாலும் புலம் பெயர்ந்தவர்கள், வெளி நாட்டில்  தொழில் புரிவோர் அதிகமாக விரும்பி கேட்பார்கள் அதே போல இங்கே இணைய வானொலிக்கென்றே  பல ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர்  அதே போல ஸ்மார்ட் போன்கள் பாவனை இணைய வானொலி ரசிகர்களை அதிகரித்து கொண்டே இருக்கிறது.


13.எவ்வகையான  நிகழ்ச்சிகள் ரசிகர்களை கவர்வதாக இருக்கின்றது?

நல்ல பாடல் தெரிவுள்ள நிகழ்ச்சிகள் பெரும் பாலும் இணைய வானொலிகளில் ரசிகர்கள் விரும்புகின்ற நிகழ்ச்சிகளாக இருக்கின்றன.


14. வெறுமனே பாடல் நிகழ்ச்சிகளால் சமூக மாற்றத்துக்கான  வழி  உண்டாகுமா?

நிச்சயமாக  இல்லை இணைய வானொலி  நிகழ்ச்சிகளை பொருத்தமட்டில் பாடல்கள்தான் முக்கியத்துவம்  பெறுகின்றன  நல்ல  பாடல் தெரிவுகள் நேயர்களை  அதிகரிக்கும்  இப்படி நேயர்கள் எங்களுடைய  நிகழ்ச்சிகளை  கேட்க‌  ஆர்வம் அதிகரிக்கும்  போது  பாடல்களுக்கு  இடையே சமூக முன்னேற்ற  கருத்துக்களுக்கு  முன்னுரிமை  வழங்கும் போது  ஏதேனும்  சிறு மாற்றத்தை  ஏட்படுத்தலாம் .


15. சமூக மாற்றத்தை விரும்பும் துடிப்புள்ள இளைஞன்  என்ற  வகையில் எவ்வகையான  மாற்றங்களை காண  விழைகின்றீர்கள்?

ஊடகங்கள் எப்பொழுதுமே மக்களுக்கானதாக  செயட்பட வேண்டும்  கோப்பி பாஸ்ட் கலாச்சாரம் இல்லாத உண்மையான உறுதியான தகவல்களை வழங்க வேண்டும் .மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை புதுமையோடு வழங்க வேண்டும் .




16.சமூகம் தொடர்பான சேவையில் ஈடுபடும்போது  நீங்கள் சந்தித்த அனுபவங்கள்  பற்றி?

.நிறைய அனுபவங்கள் உண்டு  நாங்கள் செய்கின்ற சேவையை பெற்றுக்கொள்கின்றவர்களுக்கு முழுமையாக சென்றடையாத போது  எங்களது நேரம் காலம் எல்லாம் வீணாகி விடுகின்றது ,அதே போல மக்களுக்கு நிறைய அடிப்படையான விஷயங்கள் குறிப்பாக சாதாரண மக்கள் மருத்துவம் சார்ந்த விடயங்கள் அவர்கள்   அறிந்து வைத்திருப்பதில்லை தங்களுக்கு இப்படியான பிர‌ச்சனைகள் இருக்கிறது என்பதை  காலம் தாமதமாகி தெரிந்து கொண்டு வேதனை படுகின்றனர் ,அதே போல  மக்களுக்கு சேவைகளை  வழங்கும் போது அந்த மக்கள் பெருகின்ற இன்பம் மனதுக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சியை தருகின்றது 


17.  நீங்கள்  முன்னெடுக்கும் சமூக நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டுசெல்ல எவ்வாறான  விளம்பரங்களை முன்னெடுக்கின்றீர்கள்?

பெரும்பாலும் நண்பர்கள் , நிறுவன மனிதவள முகாமையாளர்கள் மூலம்மும்  இதனை தவிர்த்து  எங்களது இணையத்தளம் , சமூக இணையதளத்தில் பதிவிடுவது சில நேரங்களில் பத்திரிகை  விளம்பரங்களும் உண்டு .



18.மலையகத்து  இளைஞர்களின் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றி  உங்கள் பார்வையில்?

சொல்ல முடியாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது பெரும் பாலும் எல்லா துறைகளிலும்  அவர்கள் இப்பொழுது வளர்ச்சி பெற்று விட்டார்கள் குறிப்பாக சமூக இணையத்தளங்களை நன்றாக பயன் படுத்துகின்றார்கள் அரசியல் வாதிகளுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள் மலையகம் முன்னேற வேண்டும் என்று ஒவ்வொரு பகுதியிலும் சமூக அமைப்புகளை உருவாக்கி தேவையான நேரம் போராட்டங்களையும் நடத்துகின்றனர் கல்வி  மாத்திரம் மன்றி விளையாட்டு விவசாயம் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர் .இப்பொழுது அங்கு பல இளம் சுய தொழில் உற்பத்தியாளர்கள் இருக்கின்றார்கள் .அதே போல பல்கலைகழக‌ம் தெரிவோரின் வீதமும் முன்பை விட அதிகரித்து கொண்டே வருகின்றது .

19.இன்னும் முன்னேற்றப்பட  வேண்டிய  விடயங்கள் பற்றி?


இன்னும் முன்னேற நிறைய விஷயங்கள் இருக்கின்றன குறிப்பாக  தொழில் நுட்ப கல்வியில் முன்னேற்றம் அவசியம் 
அதே போல தேடலும் அவசியம் வாசிப்பு திறனை அதிகரிக்க வேண்டும்  உயர்தரத்தில் கலை பிரிவையும் தாண்டி விஞ்ஞான பிரிவு , வர்த்தக பிரிவு, கணித பிரிவில் ஆர்வம் செலுத்த வேண்டும் .உயர்தரம் முடித்தவர்கள் அத்தோடு நிறுத்தி விடாமல் அடுத்த கட்ட கல்வியை நாட வேண்டும் குறிப்பாக வெளிவாரி பட்ட படிப்புகள் தொழில் நுட்ப கல்லுரி பாடநெறிகளை தேடி கற்க வேண்டும் அதே போல பெண்களுக்கான தொழில் கல்விகளை அவர்கள் தேடி கற்பது காலத்தின் தேவையாகும்


20. மலையகத்து  பிரச்சனைகளாக நீங்கள்  காண்பது?

மக்களுக்கானஅடிப்படை பிரச்சனைகள் இன்னும் சரியாக தீர்க்கப்படவில்லை ,சம்பள பிரச்சனையில் மக்களுக்கு  இன்னும்  சரியான தெளிவின்மை,  இளையயோர்  மத்தியில் அதிகரித்து வரும்  மது பாவனை ,இங்குள்ள  விவசாயிகளுக்கு ஏனைய மாவட்டங்களை போல அரசாங்கம் சலுகைகளை வழங்குவதில்லை.


21. குறுந்திரைப்பட  இயக்குநராகவும் உங்களை அடையாளப்படுத்தினீர்கள்குறுந்திரைப்படம் இயக்கவேண்டுமென்ற  ஆர்வம் ஏன்  ஏற்பட்டது?


வேகமான தொழிநுட்ப காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு முழு நேர திரை படத்தை பார்ப்பதற்கு  நேரம் கிடைப்பதிலை ஆனால் நேரம் கிடைக்கும்  போது குறுந் திரை படங்களை பார்க்க விரும்புகின்றனர் காரணம் ஒரு கொஞ்ச நேர அளவில் ஒரு நல்ல கதையை  இதில் சொல்லி முடிக்கின்றனர் ஆகவே எனக்கும் நடை முறையில் நடக்கின்ற விஷயங்களை இந்த குறுந் திரை படங்கள் மூலம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு திரைப் படங்களை எடுத்து இருக்கின்றேன் ஒன்று இளம் தலை முறையினரின் முறையான உணவு பழக்கம் உடற்பயிற்சி இன்மை காரணமாக ஏற்படும் நீரிழிவு நோய் பற்றி சொல்லும் ....Silent Killer  ........ மற்றது சமூக இணையதள ஆர்வத்தால் ஏற்படும் பிரச்சனை ஒன்றினை சொல்லும் Uploding. இரண்டு படங்களை எடுத்து இருக்கின்றேன்  இன்னும் ய‌தார்த்தமான சமூக விழிப்புணர்வு குறும்படங்களை எடுக்கலாம் என்று இருக்கின்றேன்.


22.கல்குடாநேசன் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பது?

கல் குடா நேசனை பொறுத்தமட்டில் நிறைய படைப்பாளிகளை அடையாள படுத்தி வருகின்றது இது புதிய படைப்பாளர்களை பொறுத்தமட்டில் ஆரோக்யமான விடயமாகும் முதலில் என்னையும்  அடையாள படுத்த நினைத்த கல்குடா இணையத்தளத்துக்கும் நேர் கண்ட கவி மங்கை ராஜ் சுகாவுக்கும் எனது மன மார்ந்த நன்றிகள் .நல்ல நோக்கமுடைய இணையதளங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது வாசகர்களின் கடமை யாகும் கல் குடா நல்ல வாசகர்களின் இணையதளம் .அதே போல copy paste  கலாசாரத்தை தடுப்பது வாசகர்களால் தான் முடியும்.





No comments: