ஆத்திரப்படும் போதும்
ஆதங்கப்படும் போதும் என்னால்
அழத்தான் முடிந்தது
ஆளத்தெரியவில்லை -என்னை
பேனா உணர்ந்துகொண்டது போலும்...
அழுகை எழுகையாக வேண்டுமெனில்
அழுகை ஆளுகையாக வேண்டுமெனில்
எழுத்தாணியால் சலவை செய்யவேண்டும்...
சிலுவையிலறையவும்
சிந்தனைகள் கிளர்ந்தெழவும்
சத்துவக்கரமொன்றை சம்ர்ப்பித்தது...
பேனைக்குள் ஒளிந்திருந்த
தன்னம்பிக்கைதனை கண்டுகொண்டேன்...
சவுக்கெடுக்கவும்
சாமரம் வீசவும் கற்றுக்கொண்டேன்...
சவுக்கடியால் சாதிக்காவிட்டாலும்
பிரம்படியாய் உணரவைத்திடத்தான்
பிரஸ்தாபங்கொண்டேன்...
No comments:
Post a Comment