உன்னிடம் நான்
என்னிடம் நீ
தோற்றுப்போவோம்
ஜெயிப்பது நம்
காதலாக இருக்கும்...
எத்தனை சண்டைகள்
எத்தனை வாதங்கள்
எதுவும் வீரியங்கூடியதாய்
இருந்ததில்லை நிச்சயம்
ஆழமான கோபங்கள்
நீளமான பிரிவுகள் எதுவும்
நாட்களிரண்டை தாண்டியதில்லை
ஒரேயொரு புன்னகைக்குள்
எல்லாமே மறைந்துபோகும்
மாயம் நம்காதலில்தான்
நிச்சயம் நம்காதல் ஜெயிக்கும்...
வானம் பாடியாய்
எதிர்கால பயங்கள்
வசந்தங்களை மட்டுந்தேடும்
அன்றாடங்காய்ச்சியாய் நம்
அநாயச பயணங்கள்
தடைகற்களின் மீதேறியே
தாளம்போடும் தைரியங்கள்
எப்படியோ நம்காதல்
ஜெயிக்கவேண்டும்...
உன்னையும் என்னையும் பிரிக்க
உலகிலுள்ள அத்தனை வேறுபாடுகளையும்
நம்மிடையே இணங்காட்டட்டும்
ஒருமித்த நம்மிதயங்களை
அவை ஒன்றும் செய்துவிடப்போவதில்லை...
ஏற்றம் இறக்கம்
உயர்வு தாழ்வு
பெரியது சிறியது
உள்ளது இல்லாதது எதனாலும்
நம் சிந்தைகள் கலையப்போவதில்லை
காதல் ஜெயிக்கும்
நமதான இதயங்கள்
நமதானதாக மட்டும்
இ(ற)ருக்கும் வரையில்...
No comments:
Post a Comment