01.வந்தாரை வாழவைப்பது
வளம் கொழிக்குந் திருநாடு
நொந்தோரை தேற்றியணைப்பது
குணங் கொண்டிடும் நம்வீடு!!
02.அடுத்தவரின் வேருண்டு வாழ்வாருமுண்டு
அன்பினில் வேருண்டு வாழ்வாருமுண்டு
மற்றாரில் வேருண்டு வாழ்வாருமுண்டு
மறைவினில் வேருண்டு வாழ்வாருமுண்டு...
03.நடையுடை பாவனை மட்டுமல்ல
பேசும் வார்த்தையிலும்
நாகரிகம் நளினமடையட்டும்
கேட்கும் செவிகளுக்கு
தேனாக இல்லாவிட்டாலும்
தேவையான தாகவேனு மிருந்திடட்டும்!!
04.உறவுகளை
வரவுக்குள் சேருங்கள்
பகைதனை
தரவினின்று மீறுங்கள்!!
05.மகா லக்ஷ்மிகளே
மருமகளாக வேண்டுமென்றால்
கோயில் குருக்களின் கைகளே
உண்டியலை துடைக்கலாம்!!
06.நல்லெண்ணமுயர அன்புயரும்
அன்புயர உறவுகளுயரும்
உறவுயர சமத்துவமுயரும்
சமத்துவமுயர சமாதானமுயரும்
சமாதானமுயர மனிதமுயரும்
மனிதமுயர மண்ணிலே
நன்மைகளே யுயரும்
தீமைகளெ லாமுதிரும்!!
07.இருதிவரை என்
இதயமிப்ப டியேயிருந்து
இறந்துவிடும்
இறவாத உன் நினைவுகளுடன்!!
08.காதல் காதல் காதல்
காதலில்லையேல் சாதலல்ல
சாதித்தல் சாதித்தலே
பாதித்தலில் பயனுமுண்டென்பதை
பரிசோதித்தலே...
09.என்னுடையதாக இருந்தும்
என்னைபற்றி இல்லாமல்
உன்னையே நினைக்கு தெனுள்ளம் இது
நம்பிக்கை துரோகமா
காதலி னகோரமா...
No comments:
Post a Comment