Friday, February 15, 2013

நான் இல்லாத நீ



http://www.thuruvam.com/2013/03/blog-post_3529.html




இப்போதும்
நம்பமுடியவில்லை நாம்
இரு துருவங்களென்று...

பிரதான நுழைவாயில்
அடைக்கப்பட்டும்
எந்த எதிர்ப்பார்ப்பிலென்
காத்திருப்புக்களென்றும்
புரியவில்லை...

நான் இல்லாத நீ
அங்கேதும்
மாற்றங்கள்நிகழவில்லை -நீ
இல்லாத நான்
சுவாசம் கூட கனத்து
எனக்கு நானே
பாரமாகிப்போயிருக்கின்றேன்...

எனதான தவிப்புக்களுக்கு
தாழிடத்தெரியவில்லை -உன்
நினைவுகளை மறுதலித்து
மகிழ்வுகளை எனதாக்கமுடியவில்லை

நீதந்த காயங்களில் 
மரித்துபோனாலும் -மீண்டும்
பீனிக்ஸாய் நம்காதலுக்குள்
முளைத்து மூழ்கிவிடுகின்றேன்...

நிஜமாய் தெரியவில்லை
நம்நாட்களை அழித்துவிட்டு
எனக்கான நிமிடங்கள் செய்ய...!!

-த.எலிசபெத்-

(Thuruvam.com 07.03.2013)

No comments: