Saturday, February 9, 2013

விழிகள் நிலைத்தபோது (இதனை ரசித்தேன்)


கடலாழ‌ம் வரை கருத்தாழம் கொண்ட கவியரசு வைரமுத்துவின் வரிகளில் வியந்த கதையொன்றுண்டு. வார்த்தைகளில் வாழ்ந்திவிட்டுபோகுமவரின் நிஜங்களை ருசிக்கையில் எண்ணவலைகள் ஏனோ என்றுமில்லாது எகிறிக்குதிக்கின்றது. குலுகுலு குமுதத்தை புரட்டிக் கொண்டே சென்றஎன் விழிகள் புதையுண்டதைப்போல நிலைத்துநின்றது.


//வாழ்வே கல்வி
பயணங்கள் பாடங்கள்
நாடுகள் வகுப்பறைகள்
அநுபவங்கள் ஆசான்கள்//

********************************
********************************


நான்கே வரிகளில்
நச்சென்ற வசனஅடிகள்
வாழ்வின் நிலைகள் அதன்
நிதர்சனங்களை நான்கேவரிகளில் எப்படி?
விழிகள் நின்று நின்று
பயணத்தை தொடர்ந்த்தது
வார்த்தை வனப்பில்
இயற்கையின் புத்துணர்ச்சி செழிப்பாயிருந்தது
சுவிஸில் குடியேறி ஐந்துநாள் விடுமுறையில்
சுற்றுலா சென்ற நிம்மதி!

சுகமான இயற்கை தென்றலில்
குலுகுலு நதிகள்
குளிர்மையான மலைகள்
கொஞ்சிக்குழவி குதூகலிக்கும் பறவைகள்
குடும்பத்தொல்லைகளற்ற‌
சுதந்திர மனித சுவாசங்கள்
சட்டங்களை கடவுளாய்மதிக்கும்
மனிதாபிமானமுள்ள மாநிடம்
நகரம் கிராமமென்ற பாகுபாடில்லா
இயற்கை வாசனை
ஆயிரமாயிரம் அநுபவசாரலை
அள்ளித்தூவியிருந்த
கவிமழையை  பருகிதிளைத்தேன்
சுற்றுலா சென்ற களைப்போடு
கட்டிலில் விழுந்தேன் இந்த‌
இரவின் கனவு சுவிஸில் கழிப்பதைப்போல...



(20.05.2002 குமுதத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் 'ஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும்' என்ற மினிபயணத்தொடரில் என் மன அலைகள்)






No comments: