எத்தனை மலர்களின் மணங்கள்
எனை கடந்துபோயிருந்தன
என்னை சுவாசிக்கச்செய்தது
உந்தன் நினைவுகள் மட்டுந்தான்
இன்றுவரை இதயத்தை
இயங்கச்செய்வதும் அந்த
இறவாத இளஞ்சுவாலைதான்
தென்றலாய் நம் நாட்கள்
குளிர்ச்சி தந்திருந்தாலும்
சூறாவளியாய் இதயங்களை
சுழற்றிவீசிய கொடுமைகள்
இன்னும் ரணமாகவே
ஆயிரமாயிரம் அர்த்தங்களை
அழகாக்கிக்காட்டினும் -கண்களுக்குள்
எனதாசை முகமாய்
நிறைந்திருப்பது நீமட்டுந்தான்
காலங்கொன்ற காதலாய் -அது
கண்ணீர் வடிப்பினும்
காயாத ஈரமாகவே கவிபாடிடும்
காலகாலமாய்
நீங்கிச்சென்ற நிலவாக
நீ தூரமே இருந்தாலும்
நீள் நித்திரையென் மரணத்திலும்
நிம்மதிதரும் பூமுகம் -நீ
நீமட்டுந்தான்!!
(14.02.2013 வழங்கப்பட்ட தலைப்புக்கு லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான கவிதை)
No comments:
Post a Comment