Wednesday, December 26, 2012


என்செய்வேன்??


அன்பைக்குழைத்து
அமுது பருக்கினாய்
கள்ளமில்லாக் கருணையில்
கடைவிழி நீரையுமெனகாய்
கண்மூடி மறைத்தாய்...

என்னன்ன நடையிலே
அகிலம் மறந்தாய்
அடுபூதும் பெண்ணான நீயுமென்னை
அகிலமறிய
அவதாரமளித்தாய்...

குடிபோதையிலே கொல்லவரும்
இடியுமெனக்காய் பொறுத்து
இரவிரவாய் இதயம் நொறுக்கும்
இம்சைதனை -உன்
வம்சத்துகாய் சகித்தாய்...

தண்ணீரிலே வயிறு நிறைத்து
தரணியிலெனை நிறுத்தி
பண்போடெனை வளர்தத
பாசத்தாயே-உனக்காய்
பிரதியுபகாரம் செய்ய-இப்
பிறப்பில் என்செய்வேன்...


    No comments: