Wednesday, December 26, 2012

"நாம்" இதழ்


முகப்புத்தக கவிதைகளுக்கான அங்கீகார சாதனை

  
காலத்தின் எதிரொலியாய் காலங்காலமாய் காலத்துக்கு காலம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இலக்கியத்தின் தாயாய் தனித்துவமாய் "கவிதை" இடம்பிடித்திருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.இவ்விலக்கியத்தை செதுக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் தனது பெறுமதிமிக்க இலக்கியப்பேற்றை நூலாக பிரசவிக்க எத்தனையோ சவால்களையும் இதர பிரச்சனைகளையும் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல வள‌ர்ந்துவரும் கவிஞர்களும் தமக்கென ஒரு அடையாளத்தை உறுதிபடுத்திக்கொள்ளவும் தமது படைப்புக்களை வெளிப்படுத்தவும் சிரமங்கள் காணப்பட்டது. ஆனால் இந்த விடயத்தில் ச‌ற்று ஆறுதலான விடயமாக "முகப்புத்தகம்" கைக்கொடுத்துவருவது யாவருமறிந்த உண்மை.

 இவ்வாறு முகப்புத்தகத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் வளர்ந்துவரும் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து நூலுருவாக்கம் பெற்றிடுப்பது ஒரு வரலாற்று சாதனையே. ஆம் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி அன்று காலை 9 மணிக்கு யாழ் வைத்தீஸவரா கல்லூரியில் யாழ் இலக்கிய குவியம் கவிஞர் வேலணையூர் தாஸ் அவர்களின் தலைமையினாலும் முயற்சியினாலும் "நாம்" இதழ் face book கவிதைகள் என நாமம் சூட்டப்பட்டு இக்கவிதை நூல் இருமாத நூலாக வெளியிடப்பட்டது.

 44 பக்கங்களை கொண்ட சிறிய வடிவிலான கைக்கடக்கமான இந்நூலின் விலை 30 ரூபாய் மட்டுமே.
நம்மவரின் இம்முயற்சியை பாராட்டுவதோடு இந்நூலினை பெற்று எமது ஆதரவினையும் வழங்கிடுவோம். பொதுவாக ஒரு நூலுருவாக்கத்திற்கு எத்த‌னை பொருளாதார சிக்கல்கள் காணப்படுகின்றது என்பத நாமறிவோம் எனவே இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதற்காயும் இலைமறை காயாக இருக்கும் இளைய படைப்பாளிகளை இனங்கண்டு வெளிக்கொணரவேண்டும் என்பதற்காயும் எமது ஆதரவினை வழங்கிடுவோம்.

  புத்தகத்தினை பெற்றுக்கொள்ளவும் யாழ் இலக்கிய குவியத்துடன் தொடர்பினை ஏற்படுத்தவும் கீழ்கண்ட முகவரிகளுடன்   தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

 email: yarlelakiyakuviyam@gmail.com
 தபால் முகவரி: 37,2ம் குறுக்குத்தெரு
                                கொழும்புத்துறை
                                யாழ்ப்பாணம்
                                 இலங்கை.

தொலைபேசி இல :(0094)776284687

No comments: