Wednesday, December 26, 2012
விடைகாணா ஒளிதனிலே...
இலங்கையின்
இதயமாம் மலையகம்
வியர்வை சிந்தி வருந்துவோரில்
ஒருவராம் எம்மினம்...
அதிகாலைச் சேவலோடு
அந்தரப்பட்டு எழும்பிடு
அவசரத்தொழிலாளிகளாம்
சூரியோதயம் அஸ்தமிக்கும்வரை
சுழன்றிடும் இயந்திரங்களாம்...
சுழற்றியடிக்கும் காற்றானலும்
சுடுகின்ற வெயிலானாலும்
சுறுசுறுப்பாயியங்கிடனும் இல்லையேல்
சுடுசொல் கேட்டிடனும்...
மழையும் வெயிலும்
மாறி மாறி பொழிந்தாலும்
மறைவிடமிலாது மாண்டிடனும்
மலைகளிலே
மரங்களாய் நாமும் நின்றிடனும்...
கூடை மட்டும் நிரம்பிடனும் அவர்களுக்கெம்
குறைகள் ஒன்றும் கேட்டிடாது
பாதம் கடுகடுக்க பாரமாயினும் அவர்களையெம்
பட்டினி ஒன்றும் பாதித்திடாது...
தேசம் வளரவே எம்
தேகம் வருத்தினோம்
வையம் செழிக்கவே எம்
வியர்வையினை ஊற்றினோம்...
வறுமையை மட்டும் பலனாய்க்கொண்டோம்
வசந்தத்தை நாமும் வாழ்வில் தொலைத்தோம்
விடியலின் வழிதனை தேயிலையடிதனில் தேடுகிறோம்
விடைகாணா ஒளிதனில் தொடர்ந்து(ம்)
தொலைந்தே போகிறோம்...
29.09.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் "கவிதை நேரம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய எனது கவிதை.
-நன்றி லண்டன் தமிழ் வானொலி-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment