Friday, August 19, 2016

மாமனிதனென் பேன்...

முயற்சி  இல்லாதவனை
முடவன்   என்பேன்
பயிற்சி  எடாதவனை
மூடன்  என்பேன்...

உனது  சோற்றை 
உருவாக்கு என்பேன்
தினக்கூலி எனினும்
உழைத்துன் என்பேன்...

கையேந்தி நிற்பது
கையாலாகாத் தனமென்பேன்
ஏந்திய  கைகளுக்கிடுவது
இறைத்தன  மென்பேன்...


கனவே  இல்லாதவன்
கடனாளி  என்பேன்
தனக்கானதை  தேடாதவன்
நோயாளி என்பேன்...

இலக்கே  இல்லாதவனை
இயலாதவன்  என்பேன்
வழக்கத்தை  மாற்றுபவன்
பலசாலி என்பேன்..

வெற்றியை நேசிப்பவன்
சாதனையாளன்  என்பேன்
எதிர்நீச்சல் போடுபவனையே
மாமனிதனென்  பேன்...

தோல்வியுடன்  என்றும்
தோழமை கொள் என்பேன்
வீழ்ச்சியின் பாடங்கள்தான்
வழிகாட்டி யென்பேன்...

கண்ணீரை ஆயுதமாக்குபவன்
கண்ணில்லாத  வனென்பேன்
மண்ணுயிரை மதிப்பவன்
மகத்துவமானவனென் பேன்...

போராட்டத்தை ஏற்பவன்
புகழுக்குரியவன்  என்பேன்
சீரான  வாழ்வுக்குரியவனை
சிறப்பான வனென்பேன்...

கடமை இல்லாதவனை
கபோதி என்பேன்
பொறுப்பை  சுமக்காதவன்
பிணம் என்பேன்.....

No comments: