Wednesday, August 10, 2016

காதலுக்குள் அடைகாப்பேன்!! (28.08.2016 Mithiran)

சுவாரஸ்யமில்லா உன் நாட்களை
சுவையாக்கிடுவேன்
ஆரவாரமில்லா உன் நடைகளை
அழகாக்கிடுவேன்..


தோழமையில் உனை தாங்குவேன்
தோல்விகளிலென் தோள்கொடுப்பேன்
வாழ்க்கையை பகிர்ந்திடுவேன் என்
வானத்தையுனக்கு  பரிசாக்குவேன்...


தொலைந்துபோன எல்லாவற்றையும்
தொகுத்துனக்கு  தந்திடுவேன்
தொல்லையாய் உனைதாக்கிய துன்பத்தினை
தொலைதூரம் எரிந்திடுவேன்...


காதலினை கவிதையாய்  படைப்பேன்
காத்திருப்புக்களை காவியமாக்குவேன்
காலமெலாம் கைப்பிடிப்பேன் உனை
காதலுக்குள் அடைகாப்பேன்!!






No comments: