Thursday, August 18, 2016

43வது படைப்பாளி புகைப்படக்கலைஞர் ரமீனா அன்சார் (19.08.2016)

http://kalkudahnation.com/48788





வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களை ச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட  கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில்  நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில், இவ்வாரமும் ஓர்  இளைய படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். 

கல்குடா  நேசனின் 43வது படைப்பாளியாக இணைகிறார் புகைப்பட  கலைஞரான ரமீனா அன்சார்  அவர்கள். இவர் பாணந்துறையை பிறப்பிடமாகக்கொண்டவர்  தற்போது தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடொன்றிலிருக்கின்றார். விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்த  அவரை கல்குடா  நேசனுக்காக அணுகினோம் அவரது அவசர  வேலைகளுக்கு மத்தியில் எமது  கேள்விகளுக்கு சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் பதிலளித்த  அவருக்கு எமது  வாழ்த்துக்களோடு  நேர்காணலில் இணைவோம்.


(புகைப்படத்தினம் கொண்டாடும் இந்த இனிய நாளில் கல்குடா நேசன் வழங்கும் நேர்காணல் பகுதியில் ஓர் புகைப்படக்கலைஞரை அறிமுகம் செய்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சியும் பெறுமையுமடைகின்றோம். கல்குடாநேசன் சார்பாக புகைப்படக்கலைஞர் சகோதரி ரமீனா அன்சார் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அனைத்து புகைப்படத்துறைசார் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்)


01. தங்களைப்பற்றிய   அறிமுகம் எமது வாசகர்களுக்காக? 


பெயர் ரமீனா அன்சார், இலங்கையில் பாணத்துறை பிறப்பிடம் .  அம்பலந்துவை முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயின்றேன்
. உயர் கல்வி களுத்தறை மகளிர் மகா  வித்தியாலயத்தில் முடித்தேன்  தற்போதுமத்திய கிழக்கில்  பணிபுரிகின்றேன்.


02.  தங்களின் தொழிற்துறை பற்றி?

 கம்பியூட்டர் எம்ப்ரோய்டைரி டிசைனர்& போட்டோகிராபர்

03.புகைப்படத்துறையில் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?

முதலில் செல்போனில்  தொடங்கிய எனது தேடல் .இயற்கை காட்சிதான் எனது முதல் புகைப்படம்..  குவைத் போன்ற பாலைவன நாட்டில்  இயற்கை காட்சிகள் இல்லை
இருப்பினும் என் பயணத்தை தொடர்ந்தேன்


04.இந்தப்பாதையில் நீங்கள்  சந்தித்த  சவால்கள்?

பெண் என்ற முறையில் இந்த துறையே சவால் தான் என்னை  பொறுத்த வரை.

05.முஸ்லிம் பெண் என்ற  வகையில் உங்களுக்கு பல வரைமுறைகள் கட்டுப்பாடுகள் இருக்கும் அதனுடன் உங்கள் புகைப்படத்துறை வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்கின்றீர்கள்?

இன்றய நவீன உலகில்  பல துறையில்  பெண்கள் சாதித்து வருகிறார்கள். நம் ஒழுக்கத்தை பேணி எத்துறையிலும்
சாதிக்கலாம் என்பதே என் கருத்து.

06.இத்துறையில் தங்களுக்கு  கிடைத்த வெற்றிகள் பாராட்டு பரிசுகள் பற்றி?

குவைத் இளங்குயில் வழங்கிய பொதுநல வேந்தர்  அவார்ட்.
 ஒன்லைன் சிங்கில் போட்டோகிராப்பில் பல முறை  அவார்ட் கிடைத்துள்ளது



07.பொதுவாக வெளியுலகிற்கு வரும் பெண்களுக்கு பல எதிர்ப்புக்கள் சவால்கள் காணப்படுகின்றது  இவற்றை எவ்வாறு எதிர்நோக்கவேண்டும்  என நினைக்கின்றீர்கள்?

ஒவ்வொரு எதிர்ப்புக்களையும்  முறியடித்து நமக்கு சாதகமாக அமைந்தது கொள்வது தான் மிக முக்கியமான அம்சமாகும்

08. குடும்பத்தில் தங்களுக்கிருக்கும்  ஆதரவு பற்றி?

கண்டிப்பாக இதில் நான் சந்தோஷம் அடைகின்றேன்.வீட்டில் எல்லோரும் எனக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருக்கின்றார்கள்


09.இத்துறையில் நீங்கள் சாதிக்க விரும்புவது?

அமையும் வாய்ப்புக்களை குறையின்றி முடிப்பதே ..


10.உங்கள் முன்னோடி யார்? உங்களை வழிநடத்துபவர்கள் ஊக்கப்படுத்துபவர்கள் பற்றி?

புகைப்பட துறையிலிருக்கும் எனது தோழி நசீமா அவர்கள் தான்



11.புகைப்படக் கலைஞர் எனும்போது நேரகாலம் சூழல் பாராது இயங்க வேண்டும் அவ்வகையான உங்கள் அநுபவங்களை பகிர்ந்துகொள்ள முடியுமா?


ஆம் சில சமயங்களில் நாள் முழுதும்
நிகழ்வு இருக்கும் .. சில நிகழ்வுகளில்
பெண்களே இல்லாமல் இருக்கும்.
உதாரணமாக இலங்கையில் பாண‌துரை
பிரதேசத்தில் நடந்த போதைப்பொருள்
எதிர்த்து நடைபவனியில் கலந்துகொண்டேன் அதில் பெண்ணாக நானும் .பொதை பொருள் தடுப்பு அதிகாரி ரிப்கா சாலி அவர்களும் மட்டுமே ..


12. எவ்வகையான புகைப்படங்கள் எடுப்பதில்  ஆர்வம்காட்டி வருகின்றீர்கள்?

இயற்கை.மற்றும் சமூக நடைமுறைகள்


13. இத்துறையில் இளம் வயதினரின் ஈடுபாடு, புதியவர்களின்  வருகை எவ்வாறு காணப்படுகின்றது?

தற்போது இளம்பெண்கள் ஆண்களை விட அதிகமாக ஈடுபாடு என்பதை சில நிகழ்வில் பார்த்து வருகிறேன்


14.புகைப்படத்துறையின்  மூலம் தங்களுக்கு  பொருளாதார ரீதியிலான முன்னேற்றம் காணப்படுகின்றதா?

வருமானம் தேவைதான் இருப்பினும்    தன்னார்வம் மட்டுமே.


15. இன்றுகளில் புகைப்படத்துறை என்பதின்  வளர்ச்சியினை முகநூலில் அதிகமாக காணமுடிகின்றது. எல்லோராலும் இக்கலைத்துறையில் ஈடுபட  முடியுமா? அல்லது இதற்கு எவ்வகையான நுட்பமுறைகள் தேவைப்படுகின்றது?


விருப்பம் உள்ளவர்களுக்கு எதுவும் சாத்தியமே

16.உங்களுக்கான வாய்ப்புக்கள் சந்தர்ப்பங்கள் எவ்வாறு  அமைகின்றது?


சிரமம் தான் என்னுடய ஆர்வதினாலும் நண்பர்களின் உதவியினாலும் வாய்ப்புகள் கிடைக்கிறது.



17. கல்குடாநேசன் இணைய  வாசகர்களோடு இணைந்துகொண்டது பற்றி?


மிக்கமகிழ்ச்சி என்னையும் ஒரு  கலைஞராக‌ தேர்வு செய்து உங்களில் ஒருவராக   ஏற்றுக்கொண்டமைக்கு.
மற்றும் என்னுடைய துறையில் கிடைக்கும் தமிழ் செய்திகள் புகைப்படத்துடன்  பகிர்வேன்  கல்குடா  நேசன் இணைய  வாசகர்களுக்கு.


18. நீங்கள் பகிர்ந்துகொள்ள நினைக்கும் ஆலோசனைகள் அல்லது எதிர்பார்ப்புக்கள்? 

ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை  வாழ்வில் இன்னும் சாதனைகள் செய்யவேண்டும் எனபதே எனது ஆசை.

No comments: