Wednesday, March 30, 2016
வேஷத்தை கலைத்து நீயும் நிற்பதென்ன
கனவுக்குள் தொலைந்த நீ
நினைவில் வந்தொ துங்கியதென்ன
நிஜமாக நீங்கிய நீ
நித்தமெனை வதைப்பதென்ன....
பூங்காட்டில் தள்ளி நீயும் சிரிப்பதென்ன
புயலலையில் வீசியெனை புதைப்பதென்ன
காற்றாறு போல வந்து அடித்துவிட்டு
காணாதவனாய் நீ நடிப்பதென்ன.....
தேன்கூடாய் நெஞ்சத்தை கலைத்ததென்ன
தேனியாய் வந்து வந்து கடிப்பதென்ன
பால்மனதை வண்ணமாய் மாற்றியதென்ன
பாலைவனத்தில் தீ மூட்டியதென்ன....
வஞ்சத்தை மறைத்துக்கொண்டு மலர்ந்ததென்ன
வரண்டுபோன அன்பதனை காட்டியதென்ன
நெஞ்சத்தின் ஈரமெலாம் காய்ந்ததென்ன
நெருஞ்சியாய் நீ தெரிவதென்ன...
நேசத்தை காசாக பார்த்ததென்ன
நேரத்துக்கு பச்சோந்தியாய் மாறியதென்ன
வேஷத்தை கலைத்து நீயும் நிற்பதென்ன
வேதனையரும் புன்னில் மரித்ததென்ன....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment