Thursday, March 24, 2016

புனிதங்களை கற்றுத்தேரு..



உலக கவிதை தினத்தினை முன்னிட்டு இலங்கை கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 21.03.2016 அன்று கொழும்பு தாமரை தடாகத்தில், இலங்கை தமிழ் கவிஞர்கள் 82 பேரின் கவிதைகளை தொகுத்து வெளியிட்டது. "மானுடம் பாடும் கவிதைகள்" என்ற அந்நூலில் இடம் பிடித்த எனது கவிதை.







ஏழைக்குடிலுக்கு போயிபாரு
அன்பு எலாம் கொட்டிக்கிடக்கு
வாழையடி வசதிமனை தேடிப்பாரு
அசிங்கமெலாம் முட்டிமோதுது...

தேகம் மினுமினுக்கும் திரும்பிப்பாரு
தேரோடும் வீதிவியக்கும் நின்றுபாரு
பாகம் பிரிக்கும் பாசம்பாரு இவர்
வேகமெல்லாம் பணந்தான் பாரு...

பசித்த வயிறு பாசத்தால் நிறஞ்சிருக்கு
பாமர குடிலுக்கு போயிபாரு
பாசங்கூட பங்குக்காய் பிரியும்
பணக்கார மனையில் நின்றுபாரு...

குடும்பக்கட்டு உடைந்துகிடக்கும்
குபேரன் தட்டு உணவைப்பாரு
கூழும் அமுதாய் உண்டு களிக்கும்
குடிசைக்கதவை தட்டிப்பாரு...

வயிறு பெருத்து வளர்ச்சி காணும்
நோய்களேராளம் எண்ணிப்பாரு
கயிறுபோல் சிறுத்து நிற்கும்
ஏழைமருந்து நீர்தான் பாரு....


கட்டுக்கட்டாய் காசிருக்கும்
கட்டிலுறக்கம் விட்டொழியும் பாரு
கட்டாந்தரையில் சொர்க்கபூமி
தட்டி நிற்கும் எட்டிப்பாரு...

புன்னகையும் தன்னலமாய் விரியும்
புதுமையான மனிதவர்க்கம் பாரு
புன்னகைக்காய் தன்னலமிழக்கும் புனித‌
உறவுகளை நீயும் கற்றுத்தேரு...

No comments: