Thursday, March 24, 2016

"முகவரி இழந்த முச்சந்தி" கவிதை நூல்




      காலவோட்டத்தில் அடித்துச்செல்லப்படாமல் காலத்தையும் சம்பவங்களையும் உள்வாங்கிக்கொண்டு கடந்துசெல்வதிலேயே ஓர் எழுத்தாளனின் வெற்றி காணப்படுகின்றதுகுறுகிய காலமெனினும் காத்திரமானபடைப்புக்களை ஓர் படைப்பாளியால் தரமுடிந்தால் அதுவே காலத்தால் பேசப்படும் இலக்கியமாககாணப்படுகின்றது.


குறுகிய காலத்துக்குள் இந்த கருத்தை நிதர்சனமாக்கியிருப்பவர் கவிஞர் ஓட்டமாவடி ரியாஸ் அவர்கள்.பெருவாரியாக காதல் கவிதைகளை தவிர்த்து உணர்வுபூர்வமான சமூகக்கருத்துக்களை பதித்துவருவதில்இளைஞரான கவிஞர் அவர்கள் இளையவர்களில் தனித்து நிற்கின்றார்.
தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் வெளியீடு செய்யப்பட்ட "முகவரி இழந்த முச்சந்திஎனும்கன்னிப்படைப்பினூடாக தனக்கான ஆழமான பாதையினை தெரிவு செய்திருக்கின்றார். 50 கவிதைகளடங்கியஇந்நூல் கருத்தை கவரும் வகையிலான‌ அட்டைப்படத்துடன் 115 பக்கங்களில் தன் உணர்வுகளையும்குவித்துள்ளார் கவிஞர்.

நூலுக்கு பின்னட்டைக்குறிப்பை தடாக கலை இலக்கிய வட்ட அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்விஅவர்களும் அணிந்துரையினை இந்திய கவிதாயினி செந்தாமரைக்கொடி அவர்களும் வாழ்த்துரையினை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம் நெளபல் அவர்களும் கல்குடா நேசன் இணைய ஆசிரியர்எம்..லெப்பை தம்பி அவர்களும் கவிஞர் தம்பிராசா ரூபன் அவர்களும் எம்.டீ.எம்யூனுஸ் அவர்களும்டென்மார்க் கவிதாயினி சிவனேஸ்வரி றொபட் கெனடி அவர்களும் கவிதாயினி இப்றாஹிம் ஷபீனா அவர்களும்வெளியீட்டுரையினை கவிஞர் வன்னியூர் செந்தூரன் அவர்களும் வழங்கியுள்ளனர்.

நூலினை பெற்றாருக்கு அர்ப்பணமாக்கியுள்ள கவிஞர்எழுதுவதே தனது இலட்சியம் என்ற நோக்கத்துடன்உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் தாராளமாகவே நன்றிகளை வழங்கியுள்ளார்.


முதல் கவிதையிலேயே இதயத்தின் மூலை முடுக்கெல்லாம் வேதனை வேர்கள் ஊடுருவி செல்லும்படிவழிவிட்டிருக்கின்றார் கவிஞர்.'வெள்ள நிவாரணம்தலைப்பில்எதிர்பார்ப்பு ஏழ்மை நிறைவேறா கனவுடன்அல்லலுரும் ஓர் ஆதரவற்ற குடும்பத்தின் வேதனை ஓலத்தினை படமாக்கியுள்ளார்.

"சுருட்டுவோர்
சுருட்டிக்கொண்டு போனது போக
மிகுதி மாவாவது
கையில் கிடைக்குமா என்ற
பெரும் ஏக்கத்துடன்.."

என்று  வெள்ள நிவாரண அறிவிப்பில் மகிழும் குடும்பம் அது கைநழுவிப்போகும் வேளையில் அடையும்வேதனைகளை மிக இயல்பாக எடுத்துக்காட்டியுள்ளார்.


'கல்லறை தேடும் வரிகள்' 'பேசும் ஆத்மாஎனும் தலைப்புகளில் ஓர் ஆன்மாவின் ஏக்கமாக வரிகள் பாடுகின்றதுஅநீதியின் கரங்கள் ஆற்றிய கொலைகளினால் கல்லறையில் அடக்கப்படாத ஆத்மாக்களின் வேண்டுகோள்களேவரிகளாயுள்ளதுகடந்தகால யுத்தங்களின் வடுக்கள் அப்பட்டமாய் சிதறியிருக்கும் வரிகள் அவை.

"காலமும் கழிந்தது
கலவரமும் முடிந்தது
கரையாத என் ஆத்மா மட்டும்
கல்குடா வீதிகளில்
இன்றும்..."
யுத்தத்தில் இருப்பிடமிழந்து உடமைகளிழந்து வெறுமையாய் நிற்கும் மக்களோடு மக்களாக சாந்தியடையாதஎத்தனையோ ஆத்மாக்களின் உணர்வுகளை உலகுக்கு பறைசாற்றுகின்றார் கவிஞர்.


பாடாத பொருளையும் பாடுபொருளாய் கொள்ளும் வித்தை ஓர் கலைஞனால் மாத்திரமே சரியாக கையாளமுடியும்கல்லையும் கடலையும் கண்காணா அத்தனையும் ஓர் படைப்பாளியால் மட்டுமே பேச வைக்கமுடியும்அந்த அநுபவங்களை கவிஞர் ரியாஸ் அவர்களின் கவிதைகளிலும் காணமுடிகின்றதுசமூகத்தைமட்டுமே பெரும்பாலான கவிவரிகளில் சுமந்து வந்திருக்கின்றார் குறிப்பாகபட்டதாரிகளின் வேலையில்லாபிரச்சனைகுடும்பங்களை இழந்து மத்திய கிழக்கில் துன்பமனுபவிப்பவர்களின் மனநிலை,சீதனம்,பெண்ணடிமைசீரழியும் கலாச்சாரம்சிறுவர் துஷ்பிரயோகம்கடந்த கால யுத்தங்களின் காயங்கள்,பெண்ணின் பெருமை அவர்களை முன்னிறுத்திய தட்டிக்கொடுப்புக்கள் என பல்வேறு விடயங்களை பலதலைப்புக்களில் பேசியுள்ளார் கவிஞர்.


தனது நூலில் ஓர் சிட்டுக்குருவியை பேசவைத்துள்ள கவிஞர் அதன் வேதனையை இவ்வாறு விவரிக்கின்றார்.
"எங்கள் இனத்தையே
கொன்று குவித்துவிட்டு
இன்று சிட்டுக்குருவி தினம்
கொண்டாடுகின்றாயோ
கொண்டாடு
கொண்டாடுவதும்
பந்தாடுவதும் தானே
உங்க இனத்தின் பண்பாடு..."


தான் பிறந்து வளர்ந்த ஊரை மிக அதிகமாக நேசிக்கும் ஒருவராக அடையாளமாகும் கவிஞர், "ஓட்டமாவடி"என்ற தனதூரினை பல தலைப்புக்களில் பேசியுள்ளார். 'எங்க ஊரு இந்த ஊரு' 'ஓட்டமாவடி பாலம்''ஓட்டமாவடிபழைய பாலம்என்று சுட்டிக்காட்டிய‌ போதிலும் "முகவரி இழந்த முச்சந்திநூலில் தலைப்பில் அமைந்தகவிதையே கவிஞர் ஓட்டமாவடி ரியாஸ் அவர்களைப் பற்றி பேசவைத்தது எனலாம்.


மனிதாபிமானமுள்ள எந்த மனமும் இயற்கையை நேசிக்கின்ற எந்த உள்ளமும் வீணாய் அழியும் இயற்கை பற்றிசஞ்சலப்பட்டு வேதனைப்படாமல் இருக்கமுடியாதுஅதிலும் ஒரு படைப்பாளி அதுபற்றி கரிசனை கொண்டுவெகுண்டெழவில்லை என்றால்தான் வியப்புஇங்கு கவிஞர் தனது ஊரின் மத்தியில் கம்பீரமாய் வீற்றிருந்தமரத்தைப்பற்றி கவலை கொள்கின்றார் ஆத்திரமடைகின்றார்அதன் வெளிப்பாடே இக்கவிதை,
"ஓட்டமாவடியின்
வரலாற்றைத் தேட
ஏடுகளை புரட்டாதீர்கள்
என்
முதுகுப்பட்டையை
புரட்டுங்கள்"

மரத்தின் வேதனை மிகுதியான குரல் மேலும் நீள்கின்றது.

"திறந்து பாருங்கள் என்
இதயக்கிளைகளை
அது பல
துப்பாக்கி ரவைகளுக்கும்
குண்டுகளுக்கும்
பதில் சொல்லியிருக்கும்"
என தொடர்கின்றது கவிதைஊருக்கு மத்தியில் செழிப்பாக பாதுகாப்பாக நின்றிருக்கும்  பசுமையான மரத்தினைஆயிரங் காரணங்களை சுட்டி அப்புறப்படுத்துகையில் அம்மரமே வாய்விட்டுக்கதறும் விதமாக கவிதையினைபாடியுள்ள கவிஞரின் இயற்கையுள்ளத்தினை பாராட்டாமல் இருக்க முடியாதுஓர் திருப்புமுனையாக அமைந்தஇக்கவிதை பல வாத பிரதிவாதங்களுக்கும் உட்பட்டது என்பதனையும் இவ்விடத்தில்சொல்லிக்கொள்ளவேண்டும்.


இன்னும் இக்கவிதைத்தொகுப்பிலுள்ள கவிதைகளை ரசித்து ஆராய்ந்துகொண்டே செல்லலாம்வாசகர்களாகியஉங்களின் பங்கினை நீங்களும் செவ்வனே செய்வதற்காகவே எனது ரசனைக்குறிப்பு இத்துடன்நின்றுவிடுகின்றது.

'முகவரி இழந்த முச்சந்திகாத்திரமான கவிதைகளை உள்ளடக்கிய தரமான நூல்சில இடங்களில் காணப்படும்எழுத்துப்பிழைகளை கவனித்தில் கொள்வதோடு ஒரே தலைப்பில் கவிதை எழுதுவதனையும் தவிர்த்தால்இன்னும் சிறப்புஇவை பிழைகளல்ல தவறுகள் இதனையும் கவனத்திற்கொண்டுவந்து சேருகின்ற தரமானவிமர்சனங்களையும் உள்வாங்கி எதிர்காலத்தில் இலக்கியத்தில் தடம்பிடிக்கக்கூடிய இன்னும் பலபடைப்புக்களை கவிஞர் ஓட்டமாவடி ரியாஸ் அவர்களிடமிருந்து எதிர்பார்த்த வண்ணம் அவருக்கானவாழ்த்துக்களை வாசகர்கள் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன்.









நன்றி
த.ராஜ்சுகா.

நூலின் வகை :         கவிதைத்தொகுப்பு
நூலின் பெயர் :         முகவரி இழந்த முச்சந்தி
நூலாசிரியர்:             ஓட்டமாவடி ரியாஸ்
வெளியீடு:                 தடாகம் கலை இலக்கிய வட்டம்
விலை:                       240/=
தொடர்புகளுக்கு:       53 C, கொமைனி வீதி,வாழைச்சேனை- 04.

No comments: