Wednesday, March 16, 2016

கடவுள் வந்தாலும் திருந்தாராம்.....



பாரில் தீமை பெருத்து மகிழுதாம்
பாவங்கள் பலதும் புதிதாய் ஆகுதாம்
யாரில் அன்பு நிலைத்து நிற்குதாம்
யாவரும் அவரை மனிதரென்றாராம்.....

பொல்லாப்பை விரும்பி விரைந்து நின்றாராம்
பொறுமையை தூரவே வீசி விட்டாராம்
கல்லாகி கருணையை கடலில் கரைத்தாராம்
கடவுள் வந்தாலும் திருந்தாராம்.....

பொன்னும் பொருளும் வாழ்வாய் வரைந்தாராம்
பொதுமையை ஏற்று பழக மறுத்தாராம்
விண்ணுலக சாயல் மறந்து மகிழ்ந்தாரம்
வினையை விதைத்து எழுந்தாராம்

அறுவறுப்புகள் பாவமாய்  பதியப்படுத்தினாராம்
அசைவே இல்லாமல் அமிழ்ந்துபோனாராம்
வெறுப்புகளை மனதில் தேக்கி வைத்தாராம்
வெளியில் நலமாய் நடித்தாராம்...

சாதியம் பேசியே சாதிக்க நினைத்தாராம்
சாதல்பற்றிய சிந்தனை மறந்தாராம்
போதிமர புத்தன் வந்தாலும் மசியாராம்
போட்டியில் மனிதம் துறந்தாராம்...

No comments: