கள்ளன்
வந்தான் என்னூரில்
கையை வைத்தான் பலநூறில்
மெல்லெம்
வீட்டை உடைத்திட்டே
மெதுவாய்
பையை நிரப்பிட்டான்...
இரவுச்சத்தம்
கூவவில்லை
இரட்டை
நாயும் குறைக்கவில்லை
அரவம் ஒன்றும் இல்லாமலே
அனைத்தையும்
கொண்டே ஓடிட்டான்...
மர்ம மனிதன் நினைவாலே
மனிதர்
உறக்கம் தொலைவாலே
மறைந்து
பிடிக்க பார்த்துமே
விரைந்து
போறான் சிக்காமலே..
ஆட்கள்
இல்லா வீடுகளையே
ஆண்களில்லா
கதவுகளையே
நோட்டம்
விட்டே தட்டினானாம்
நோவாய்
பயத்தை தந்தானாம்...
கண்ணி வைத்துப் பிடித்திடவே
கண்முன்
கள்வனை கொணர்ந்திடவே
எண்ணி இரவில் விழித்தாரே
என்றன்
ஊரின் சிங்கங்கள்....
வீசிய வலையில் வசமாக
வீழ்ந்துபோனான்
நிஜமாக
தேடியவன்
வேறு எவருமல்லன்
கூடவே இருந்த குடிகாரனே....
ஐந்துக்கும்
பத்துக்கும் அல்லாடிய
ஜந்து வான
அவனுக்கு
எந்த தொழிலும் கையிலில்லை
எடுத்தான்
களவை தைரியமாக....
திருடன்
சிக்கிய மகிழ்விலே
தினமும்
நொந்த வெறியிலே
கருடன்
போலே காளையர்கள்
கம்பால்
தாக்கி வீசினாரே....
உழைத்து
வாழா கள்ளனுக்கு
உள்ளமுடலும்
காயந்தான் -தீங்கில்
தழைத்து
ஓங்கி வளர்ந்தாலும்
தப்பு என்றும் தப்புத்தான்!!
No comments:
Post a Comment