Thursday, January 17, 2013

கண்ணீர்!!



கண்ணீர் ஒரு மந்திரம்!
கண்ணீர் ஒரு வரம்!
கண்ணீர் இதய ஊற்று!
கண்ணீர் இன்ப ஸ்பரிசம்!

ஆத்திரம் பெருகும்போதும்
ஆனந்தத்தில் உருகும்போதும்
கண்ணீர் ஒரு வரம்...

துரோகத்தை தாங்கி 
துளித்துளியாய் மறந்துபோக‌
கண்ணீர் ஒரு வரம்...

தாளாத உணர்வுகளை
தள்ளிவிட்டு சுவாசிக்க‌
கண்ணீர் ஒரு இதய ஊற்று...

தோல்விகளின் ஈரத்தை
துடைத்துவிட்டு எழுந்திட‌
கண்ணீர் ஒரு  இன்பஸ்பரிசம்...

இதயபாரத்தின் இறுக்கங்கள் குறைந்து
இன்ப உறக்கந்தழுவிட‌
கண்ணீர் ஒரு மந்திரம்...

துணையும் தேவையில்லை
தோழனும் தேவையில்லை -தனிமை
கண்ணீர் ஒரு வரம்!!


                                                                                                               (தினகரன் 04.11.2012)

No comments: