Thursday, January 3, 2013

"அக்குரோணி"க்கு (06.04.2011)


விமர்சிக்குமளவுக்கு-இச்
சிறியவளின் சிந்தையில்
சிறப்புக்கள் ஒன்றுமில்லை
தோன்றியதை சொல்கின்றேன்
பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளுங்கள்

"அக்குரோணி"க்கு

ஆழமான கருத்து கூறி
ஆரம்பித்த-இக் கவித்தொகுப்பின்
ஒவ்வொரு கவியும் படைபலத்துடன்
ஊடுருவியது மனதில்
ஒவ்வொன்றாய் எடுத்தியம்ப-காலநேரம்
ஒவ்வாமையில் முரண்படுகிறது...
'நானும் மரங்களும்'
கவிஞர் வைரமுத்துவின் கவியை
நினைவிற்கிழுக்கிறது
'சிறுபான்மை குடியானவனின் சிறுமடல்'
'சாதீ-தீ-தீ'
'யாதுமாகி நின்றாய்'
'என் செல்லமே'
'ஜனநாயக அடிமைகள்'
'நானும் மரங்களும்' என
ஒவ்வொன்றையும் உற்று வாசித்ததில்
உணர்வுக்குள் பட்டென்று அமர்ந்து கொண்டது!
தமிழும் காதலும் சமூகமும்
தாராளமாய் தொனிக்க-உங்கள்
எழுத்தின் முதிர்ச்சியில்
மனிதம் மிளிர்கிறது!
வளமான உங்கள் கவிப்பயணத்துக்கு
களமாக மனித்தை கொண்டு
பலமாக சமூகத்தை நோக்கி-கவியை
திடமாக தொனிக்கச்செய்ய
இன்னும் முயற்சியில் வெற்றி பெற
வாசகர்கள் சார்பில் -என்
பிரார்த்தனையுடன் கூடிய
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
கவித்தோழரே!!!

No comments: