இளைய கிறுக்கல்கள்

Friday, February 15, 2013

நான் இல்லாத நீ



http://www.thuruvam.com/2013/03/blog-post_3529.html




இப்போதும்
நம்பமுடியவில்லை நாம்
இரு துருவங்களென்று...

பிரதான நுழைவாயில்
அடைக்கப்பட்டும்
எந்த எதிர்ப்பார்ப்பிலென்
காத்திருப்புக்களென்றும்
புரியவில்லை...

நான் இல்லாத நீ
அங்கேதும்
மாற்றங்கள்நிகழவில்லை -நீ
இல்லாத நான்
சுவாசம் கூட கனத்து
எனக்கு நானே
பாரமாகிப்போயிருக்கின்றேன்...

எனதான தவிப்புக்களுக்கு
தாழிடத்தெரியவில்லை -உன்
நினைவுகளை மறுதலித்து
மகிழ்வுகளை எனதாக்கமுடியவில்லை

நீதந்த காயங்களில் 
மரித்துபோனாலும் -மீண்டும்
பீனிக்ஸாய் நம்காதலுக்குள்
முளைத்து மூழ்கிவிடுகின்றேன்...

நிஜமாய் தெரியவில்லை
நம்நாட்களை அழித்துவிட்டு
எனக்கான நிமிடங்கள் செய்ய...!!

-த.எலிசபெத்-

(Thuruvam.com 07.03.2013)
Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 7:39 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: இதழ்கள் சிந்தும் பனித்துளிகள்

Thursday, February 14, 2013

தப்பினாலே போதும்!










ஆண்களுக்கு மட்டும்
ஆசனமொ துக்குங்கள் -பேரூந்தில்
மூச்சையடக்கி
முட்டிக்கொண்டுபோனாலும்
இச்சை கொண்டொழுகும்
இம்சையிலிருந்து
தப்பினாலே போதும்!!
Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 8:03 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: குட்டிக் கவிதைகள்

பட்டாம்பூச்சிக்கவிதை

01.தோற்றுப்போனது
நிஜம்தான்
ஆனாலுமொரு நிம்மதி
தோற்றது
உன்னிடமென்பதால்!!







02.உனக்கும்
எனக்குமான இடைவெளி
நீள்கின்றது
கானலுக்கும்
தாகத்துக்குமிடையிலான‌
தூரமாய்.

உனக்கும்  எனக்குமான இடைவெளி நீள்கின்றது கானலுக்கும்  தாகத்துக்குமிடையிலான‌ தூரமாய்



Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 7:28 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: இதழ்கள் சிந்தும் பனித்துளிகள்

Wednesday, February 13, 2013

குட்டிக் கவிதைகள்







இதயத்தை புரியுமளவுக்கு நீ
இளகியவனுமல்ல‌
இறைஞ்சி நிற்குமளவுக்கு என்காதல்
இளக்காரமானதுல்ல‌




இறந்து பிறக்கும்
வர‌ம் கிடைத்தால் நீ
விரும்பும் ஒருத்தியாய்
மலர்ந்து வருவேன்




கூடவே வந்ததும்
நிழலென்று நினைத்துவிட்டேன்
நீங்கிச்சென்ற பின்புதான் புரிந்தது
அது நிலவென்று!!





காதல் பற்றிய அநுபவம்
உன்னில் ஏராளம் அதன்
ஆழம் பற்றிய புரிதலைதான்
நீயின்னும் எட்டவில்லை
காலத்திடம் நம்பிக்கையில்லை என்
காதலால் உணர்த்தமுடியாததை
காலம் உணர்த்திடுமென்ற துளி
நம்பிக்கையுமே இல்லை






Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 8:06 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: குட்டிக் கவிதைகள்

Sunday, February 10, 2013

நேரடி ரிப்போட் (04.02.2013)

முதன்முதலாக வெளிநடப்பை அறிய, நேரடியாக சென்ற சந்தர்ப்பம்



http://www.thuruvam.com/2013/02/kammalwatta.html




இன்றைய காலைப்பொழுது சுறுசுறுப்பாய் விடிந்தது. மனதை அழுத்திய ஏராளமான அழுத்தங்கள் என்னை இயங்கவிடாமல் தடுத்திருந்த இக்கணங்களில் இந்த சுறுசுறுப்பு எனக்கு தேவையான ஒன்றாகவே நினைத்தேன்அதனால் மறுப்புக்கள் எதுவுமில்லாமல் இப்பயணத்தை ஏற்றுக்கொண்டேன்.




மாசி மாதம் 4ம் திகதி இலங்கையின் 65வது சுதந்திரதினத்தன்று காலை 10 மணியளவில் துருவம் இணையத்தின் உறுப்பினர்களான ஜனூஸ் அவர்களும் பிரோஸ் அவர்களும் என்னையும் சகோதரி சுமையாவையும் இணைத்துக்கொண்டு மட்டக்குளி பகுதிக்கு சென்றோம்.





நவமணி பத்திரிகைக்கு சேகரிக்கச்சென்ற செய்தி. கம்மல்வத்தை, அப்பல்வத்தை, ஸ்டேஷன் பகுதி மக்களை அவர்களின் குடியிருப்பிலிருந்து அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்காக வெளியேற்றிமை, அவர்களுக்கு பொறுத்தமான குடியிருப்புக்களையும் வசதிகளையும் செய்துகொடுக்காமை போன்ற பிரச்சனைகளை கண்டறியக்கிடைத்த வித்தியாசமான சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்திய பயணம்.






சேகரித்த செய்திகளோடு சில எதிர்ப்பான சம்பவத்தினையும் சந்திக்கநேர்ந்தது 
வந்த களைப்போடு ஒரு சிற்றுண்டிச்சாலையில்....





(நன்றி: நவமணி, துருவம்)

Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 5:27 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: அநுபவ சுவாரஸ்யங்கள்

Saturday, February 9, 2013

விழிகள் நிலைத்தபோது (இதனை ரசித்தேன்)


கடலாழ‌ம் வரை கருத்தாழம் கொண்ட கவியரசு வைரமுத்துவின் வரிகளில் வியந்த கதையொன்றுண்டு. வார்த்தைகளில் வாழ்ந்திவிட்டுபோகுமவரின் நிஜங்களை ருசிக்கையில் எண்ணவலைகள் ஏனோ என்றுமில்லாது எகிறிக்குதிக்கின்றது. குலுகுலு குமுதத்தை புரட்டிக் கொண்டே சென்றஎன் விழிகள் புதையுண்டதைப்போல நிலைத்துநின்றது.


//வாழ்வே கல்வி
பயணங்கள் பாடங்கள்
நாடுகள் வகுப்பறைகள்
அநுபவங்கள் ஆசான்கள்//

********************************
********************************


நான்கே வரிகளில்
நச்சென்ற வசனஅடிகள்
வாழ்வின் நிலைகள் அதன்
நிதர்சனங்களை நான்கேவரிகளில் எப்படி?
விழிகள் நின்று நின்று
பயணத்தை தொடர்ந்த்தது
வார்த்தை வனப்பில்
இயற்கையின் புத்துணர்ச்சி செழிப்பாயிருந்தது
சுவிஸில் குடியேறி ஐந்துநாள் விடுமுறையில்
சுற்றுலா சென்ற நிம்மதி!

சுகமான இயற்கை தென்றலில்
குலுகுலு நதிகள்
குளிர்மையான மலைகள்
கொஞ்சிக்குழவி குதூகலிக்கும் பறவைகள்
குடும்பத்தொல்லைகளற்ற‌
சுதந்திர மனித சுவாசங்கள்
சட்டங்களை கடவுளாய்மதிக்கும்
மனிதாபிமானமுள்ள மாநிடம்
நகரம் கிராமமென்ற பாகுபாடில்லா
இயற்கை வாசனை
ஆயிரமாயிரம் அநுபவசாரலை
அள்ளித்தூவியிருந்த
கவிமழையை  பருகிதிளைத்தேன்
சுற்றுலா சென்ற களைப்போடு
கட்டிலில் விழுந்தேன் இந்த‌
இரவின் கனவு சுவிஸில் கழிப்பதைப்போல...



(20.05.2002 குமுதத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் 'ஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும்' என்ற மினிபயணத்தொடரில் என் மன அலைகள்)






Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 11:41 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சுகா கவிதைகள்

கணக்காய் இருக்கணும்


கணக்காய் இருக்கணும்
கணக்கும் வழக்கும்

அளவாய் இருக்கணும்
அன்பும் பாசமும்

பதமாய் இருக்கணும்
பண்பும் பழக்கமும்

உண்மையாய் இருக்கணும்
உழைப்பும் காதலும்

தூரமாய் இருக்கணும்
துன்பமும் தோல்வியும்

எதிரே இருக்கணும்
முயற்சியும் நம்பிக்கையும்

கண்களாய் இருக்கணும்
அன்னையும் தந்தையும்

கடமையாய் இருக்கணும்
பொறுப்பும் புண்ணியமும்





(09.08.2007ல் எழுதியது)
Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 11:21 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சுகா கவிதைகள்

மீண்டும் நிரப்பப்படுமா???




உனக்குமெனக்குமிடையில்
உருவமில்லாவோர் இடைவெளி
கண்ணாடித்திரையொன்றும்
கட்டிவைக்கப்பட்டுள்ளது...

நமதுறவுக்கான
அத்தனை அடையாளங்களும்
சற்றுமுன்னர்தான் அழிக்கப்பட்டிருந்தது
நமக்கென்ற பிரத்தியேகங்கள்
நமதான அந்நியோன்யங்கள்
எல்லாவற்றிலுமோர் சிறுசிறு உடைவுகள்
மீண்டும்
தகர்த்தெரியப்பட்ட பிளவுகளில்
தளிரொன்று  முளைத்து -நமக்கான‌
தடயங்களை உருவாக்கிடுமா???


இறுகிப்போன இதயத்தில்
ஈரமேயில்லாமல் உறிஞ்சியெடுத்த விழிகள்
ரணங்களை கிளறியெடுக்கும்
ரம்யமான நினைவலைகள்
ஊணுறக்கங்களை தின்றுவிட்ட‌
கொடிய வலிகள்
சுயாதீன மிழந்துபோன நான்
அநாதைப்பிணமாய் என்காதல்
நம் இடைவெளியின் கோரக்காட்சிகளாய்
இவை அடையாளமிட்டு நிமிர்ந்திருக்கின்றது...

உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
தொலைந்தது நிஜமென்றால்
ஏனிந்த நிர்கதியான நிலவரம்?
எதேட்சையாய்தான் அந்த‌
மாயத்திரை விலகியது
மயானமாய்ப்போன என்மனதை
மறுபடியும் உயிர்ப்பிக்கமுடியாதவளாய்
புதைந்துகொண்டிருக்கின்றேன்...

கலவரமே இல்லாமல்
கைகாட்டி மறைந்தாய் இன்றும்
உயிர்வாழும் கருவாய் காதல்
கலைத்துவிட முடியா தாயாய்நான்...

உன்னால் வழங்கப்பட்டதல்ல‌
எந்த அதிகாரமும்
நானாகவே எடுத்துக்கொண்ட‌
உரிமைகள்தா ன‌த்தனையும்
இன்றோ,
கோபப்படமுடியாமலும்
அதிகாரத்தை பிரயோகிக்க இயலாமலும்
உரிமையினை உபயோகிக்காமலும்
நம் சந்திப்புக்கள்
வெறுமையாகவே தோன்றிமறைகின்றது...

மீண்டும் நிரப்பப்படுமா
நாளைய விடியலில்
குயில்களின் பாடலே
தேசியகீதமாக - இல்லை
அர்த்தமற்றுப்போகுமா என்
காதலைப்போல சில எளிமைகளும்...






Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 11:15 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சுகா கவிதைகள்

இப்போதும்






தவிர்க்கமுடியாமல்
தவிக்கின்றேன்
தனிமைச்சூளையில்
சாம்பலாகின்றேன்...
நினைவுகளா அவை
உயிர்கொல்லும் கொடியவிஷம்!

ஏதேனும் ஒன்றிலென்னை
ஆழப்புதைத்துக்கொண்டாலும்
புதையலெடுத்துவிடுகின்றது இந்த‌
அபாயமான பாதாளம்

உலகத்துக்குள் மனதை
மறைக்க முயற்சித்தாலும்
பூமிக்குள் ஒளிந்திருக்கும்
எரிமலையாய்
போரிட்டு வெடித்துவிடுகின்றது
உனதான நினைவுகள்...

இப்போதும்
தவிர்க்கமுடியாமல் தவிக்கிறேன்
உனதான நினைவுகளிலிருந்து!!


Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 4:32 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: இதழ்கள் சிந்தும் பனித்துளிகள்

துருவம் இணைய இதழில் (02.02.2013)








http://www.thuruvam.com/2013/02/elizebeth.html


ஏழைக் குடிலுக்கு போயிபாரு
அன்புஎலாம் கொட்டிக் கிடக்குது
வாழையடி வசதிமனை தேடிப்பாரு
அசிங்கமெலாம் முட்டிமோதுது...

தேகம் மினுமினுக்கும் திரும்பிப்பாரு
தேரோடும் வீதிவியக்கும் நின்றுபாரு
பாகம்பிரிக்கும் பாசம்பாரு இவர்
வேகமெலாம் பணந்தான்பாரு...

பசித்தவயிறு பாசத்தால் நிறைஞ்சிருக்கும்
பாமர குடிலுக்கு போயிபாரு
பாசங்கூட பங்குக்காக பிரியும்
பணக்காரமனையில் நின்றுபாரு...

குடும்பக்கட்டு உடைந்து கிடக்கும்
குபேரன் தட்டு உணவைப்பாரு
கூழும் அமுதாய் உண்டுகளிக்கும்
குடிசைக்கதவை தட்டிப்பாரு...

வயிறுபெருத்து வளர்ச்சி காணும்
நோய்களேராளம் எண்ணிப்பாரு
கயிறுபோல சிறுத்து நிற்கும்
ஏழைமருந்து நீர்தான் பாரு..

கட்டுக் கட்டாய் காசிருக்கும்
கட்டிலுறக்கம் கனன்றெரியும் பாரு
கட்டாந் தரையில் சொர்க்கபூமி
தட்டிநிற்கும் எட்டிப்பாரு...

பிறந்தநாளும் மணந்தநாளும் தவறாது
விழாக்காணும் ரசித்துப்பாரு
மறந்துபோன எல்லாநாளும்
அன்பால் மகிழும் உணர்ந்துபாரு...

புன்னகையும் தன்னலமாய் விரியும்
புதுமையான மனிதவர்க்கம் பாரு ஒற்றை
புன்னகைக்காய் தன்னலமிழக்கும் புனித‌
உறவுகளை நீயும் கற்றுத்தேரு...
Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 4:26 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: இணையத்தில் வெளியானவை

Tuesday, February 5, 2013

நம்காதல் ஜெயிக்கும்...


உன்னிடம் நான்
என்னிடம் நீ
தோற்றுப்போவோம்
ஜெயிப்பது நம்
காதலாக இருக்கும்...

எத்தனை சண்டைகள்
எத்தனை வாதங்கள்
எதுவும் வீரியங்கூடியதாய்
இருந்ததில்லை நிச்சயம்
நம்காதல் ஜெயிக்கும்...

ஆழமான கோபங்கள்
நீளமான பிரிவுகள் எதுவும்
நாட்களிரண்டை தாண்டியதில்லை
ஒரேயொரு புன்னகைக்குள்
எல்லாமே மறைந்துபோகும்
மாயம் நம்காதலில்தான்
நிச்சயம் நம்காதல் ஜெயிக்கும்...

வானம் பாடியாய்
எதிர்கால பயங்கள்
வசந்தங்களை மட்டுந்தேடும்
அன்றாடங்காய்ச்சியாய் நம்
அநாயச பயணங்கள்
தடைகற்களின் மீதேறியே
தாள‌ம்போடும் தைரியங்கள்
எப்படியோ நம்காதல்
ஜெயிக்கவேண்டும்...

உன்னையும் என்னையும் பிரிக்க‌
உலகிலுள்ள அத்தனை வேறுபாடுகளையும்
நம்மிடையே இணங்காட்டட்டும்
ஒருமித்த நம்மிதயங்களை
அவை ஒன்றும் செய்துவிடப்போவதில்லை...

ஏற்றம் இறக்கம்
உயர்வு தாழ்வு
பெரியது சிறியது
உள்ளது இல்லாதது எதனாலும்
நம் சிந்தைகள் கலையப்போவதில்லை
காதல் ஜெயிக்கும்
நமதான இதயங்கள்
நமதானதாக மட்டும்
இ(ற)ருக்கும் வரையில்...












Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 7:49 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சுகா கவிதைகள்

Monday, February 4, 2013

இன்றும்!




                 அலை அடித்திடும் கரையாய்          
    மனம் துடித்தபோதும்
               வலை தேடும் மீனாய்
   உனக்காகவே இன்றும்!




Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 3:48 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: குட்டிக் கவிதைகள்

Friday, January 25, 2013

நாளை எதுவும் நடக்கலாம் (02)



கவிவடிக்கும் மையினை
காலம் உறிஞ்சித்துப்பிடலாம்
புவியதிரும் புரட்சிசெய்த
பேனையது உடைக்கப்படலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

உடைத்து எறியப்பட்டது
உணவுசமைப்பதற்காய் எரிக்கப்படலாம்
உடைகளை துவைப்பதற்கு
உயிருள்ள விரல்கள் குறைக்கப்படலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

எழுதிட நினைக்கும் நிமிடங்களில்
அழுதபடி யடுப்பூதிட நேரிட‌லாம்
தொழுதிடா வென் கரங்களில்
தொய்ந்துபோன ஈனக்குரலொலிக்கலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

சுதந்திர சாம்ராஜ்யத்து சுவாசங்களில்
சுருதிகள் மரிக்கப்படலாம்
வதங்களால் வென்றெடுத்த வரிகளில்
வரட்சிகள் தென்படலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

நாளையிதுபோல் எதுவும் நடந்திட்டால்
நானுந்தான் காரணம் இல்லை
நானேதான் காரணம்!

திருமணவுறவு இருமன நிறைவாய்
திங்களொலிபோல எழிலேற்றிட‌
வருகின்ற துன்பமெறிந்து தான்
வாழ்வினை படித்திடலாம்
புரிதலின் தொடக்கமும்
விட்டுக்கொடுப்பின் இறுதியுமே
விடைகாணா விவாகரத்துகளுக்கு
விதிசெய்திடும் வினையமென்கின்றேன்
ஏட்டில் பதித்தவள் நான் என்
வீட்டில் வித்திடுவதில் பிழையென்ன‌
இல்லறஞ்சிறக்க விட்டுக்கொடுத்தலின்
எல்லைவரை செல்வதில் தப்பென்ன
நாளை எதுவும் நடக்கலாம்...

விட்டுக்விட்டுக்கொடுத்ததா லவ் முற்றுப்புள்ளி
இன்னொரு புள்ளியிட்டு தொடங்கப்படலாம்
தட்டிக்கொடுத்து என்னையது
தனித்துவமாக எழுப்பியும் விடலாம்
நாளை எதுவும் நடக்கலாம்...

இரண்டில் ஒன்று
எப்படியும் நடக்கலாம்
திரண்டிடும் சவால்கள்
திறமையால் வெல்லப்படும் என்னால்
வாழ்தலுக்கான உத்தரவாதம்
வழங்கப்பட்டாயிற்று ஏனெனில்
இன்னு மோ ரிருமா தங்களில்
எனக்கு திருமணமாம்...!!









Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 9:22 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சுகா கவிதைகள்

ஊருக்கெல்லாம் தெரியும்
நாம் காதலர்களென்று
உனக்கு மெனக்கும் மட்டுந்தான் புரியும்
நமக்குள் மோதலென்று

நாலும் ஐந்தும் அருகருகே
நானும் நீயும் பிரிவுக்குள்ளே
வீழும் துளிகள் அதிகமிங்கே
விடைகறியா வேள்விக்குள்ளே...

தயவுசெய்து என்
கல்லறைக்கு வந்துவிடாதே
உயிரின் உணர்வறியா உனக்கு
பிணத்தின் உறுதியை
உள்வாங்கிக்கொள்ள முடியாது

காதல்தான் 
துரோகம் செய்தது ஏனோ
கடவுளை
கோபித்துக்கொள்கின்றோம்

மலடியின் மனதைகூட‌
புரிந்த உன்னால்
நீயறிந்த இந்த‌
மங்கையின் மனதை
புரியமுடியவில்லையா?

Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 5:10 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: குட்டிக் கவிதைகள்

இப்போதும் அழகானது!!





நமதான காதல் அழகானது
நமைமீட்டிய நிமிடங்கள் அற்புதமானவை
இப்போதும் சுகமான ஸ்பரிசங்களோடு
இமைகளுக்குள் உலவுகின்றன..


உனக்கு ஞாபகமா,
நம்முடைய பயணங்களெல்லாம்
நிறத்திலும் நினைவுகளிலும்
ஒன்றாகவே இருக்கும்
பூகம்பமாய் கிளம்பும் கோபங்களும்
புன்னகையில் உதிர்ந்துபோகும்
சந்திப்புக்களின் கடைசி நிமிடந்தரும்
பிரிவின் வலிகளுக்கு
வந்துநிற்கும் வாகனத்தையெல்லாம்
தவறவிட்டு 
கடைசி வண்டியில் தாவிச்செல்வாயே
இன்று மது இதயத்தில்
ரணத்தோடு ரம்யத்தையும் 
தடவிச்செல்கின்றது
நம் காதல் எப்போதும் அழகானது...


நான் காட்டுக் செல்லங்களும்
நீ தந்திடும் கொஞ்சல்களும்
குழந்தையுலகில் நாமிருப்பதான‌
குதூகல நிமிடங்கள்
அடிக்கடி கண்ணடிக்குமுன்
கண்ணாடிக்கண்களுக்குள் 
தொலைந்துபோகு மென் வெட்கங்களும்
அதிர்ந்துபோகு மென் இமைகளுக்குள்
அலையலையாய் புகுந்திடு முன்
சிங்கார சேஷ்டைகளும்
இப்போதும் அழகானதுதான்...

மிச்சமான எனதுணவை 
அச்சமின்றி ருசிப்பாயே
நான் பருகியதை
நீயும் பருகி யென்னைபார்ப்பாயே
எல்லாமின்னும்
புயலாய் நெஞ்சத்தை தாக்குகின்றது...


வருங்கால திட்டங்களனைத்தும்
வரலாறு காணாத கானலாய்
வழி தொலைந்து போகின்றது நம்
வாழ்வுக்காய் சேமித்த 
சுவாரஸ்யங்கள் ஒவ்வொன்றும்
சுட்டுப்பொசுக்குகின்றது இந்த‌
வெறுமையான வெட்டாந்தரையில் 
என்றாலும் நம் காதல்
அழகான அழகுதான்...


நம் நினைவுத்தடங்கள்
நினைத்து மகிழுமளவுக்கு
நிஜமான அற்புதங்கள்தான்
அதிகபட்ச கோபங்கள்
அரைநாளேனும் நீண்டதில்லை
குறைந்தபட்ச பிடிவாத‌ங்கள்
குழப்பத்தினை தந்ததில்லை இப்போதும்
எப்போதும் நம் காதல்
எழில் மிக்கதுதான்...

உன் குழந்தை தனங்களில்
நான் தொலைந்துபோவதும்
என் குளறுபடிகளில் நீ
குதூகலித்துது மகிழ்வதும்
ஆயிரம் ஜென்மங்களுக்கும்
ஆறாத இவ்வானந்தங்கள் போதும்
என்றென்றும் நம்காதல்

அழகான ஆரோக்கியம்தான்..!!














Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 5:02 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சுகா கவிதைகள்

01உன்னிடமென்றால்
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போவேன்
ஜெயிப்பது நாமென்பதால்!!



02.அலை அடித்திடும் கரையாய் 
மனம் துடித்தபோதும் 
வலை தேடும் மீனாய்
உனக்காகவே இன்றும்!

Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 4:36 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: இதழ்கள் சிந்தும் பனித்துளிகள்

கொலையினை புரிந்திடாதே!!


உயிர் கொல்லுதலை விட‌
மனங்கொல்லுதலே
மா பெருங் கொலையென்கின்றேன்

நொந்து நொந்து மரணித்திடும்
நோவினை தந்துவிடாதே -எவருக்கும்
உன் வார்த்தையில்
உன் குணத்தில்
உன் கோபத்தில்
உன் வெறுப்பினில்
உன் வேடிக்கையிலென்று
எதிலுமோர்
மர்மக் கொலையினை புரிந்திடாதே!!




Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 4:25 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: வ(ழி)லியின் குறிப்புக்கள்

படிக்க முயலாதே...


தயவுசெய்து
மனிதனை படிக்க முயலாதே
பாவம் நீ
சந்தர்ப்பம் வரும்வரை காத்திரு
சட்டென முடிவுகொள்ளாதே எவ‌ரும்
நல்லவரே வேளை வரும்வரையில்...

உடனடியாய் உறுதிபடுத்தாதே
உறவுகளெல்லாம்
உயிராய்த்தான் விம்பம் காட்டும்
தயவுசெய்து
மனிதனை படிக்கமுயலாதே..

காற்றெனத் தழுவும்
கத்தியாயும் வீசும் இலாபமில்லையெனில்
கசக்கியுமெறிந்திடும் கடதாசியாய்
வானவில் திரைபோடும்
வாயார வாழ்த்துரையுமீந்திடும் நீ
வலுவிழந்த தறிந்தால் வழியிலே
விடைகொடுத்து  மனுப்பிடும்
தயவுசெய்து
மனிதனை படிக்க முயலாதே..

உண்டது ஓரிலையில்
உற‌ங்கியதுமே ஒன்றாகவே
என்றாலும்
உதவியொன்று நீ தரதவறின்
உன்நிலை பரிதாபமே
தயவுசெய்து
மனிதனை படிக்க முயலாதே...

Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 4:17 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சுகா கவிதைகள்

சாதித்துக்கொண்டேயிருப்பேன்!


உதிர்ந்து விழும் நீர்க்கொப்புளங்கள்
உயிரின் வலிகளை உணர்த்திச்செல்கின்றது
உணரப்படாத அந்த ஆத்மார்த்த நேசம்
உருப்பெறா கர்ப்பமாய் கலைந்துபோனது!

நிஜங்கள் அழிந்துபோவதில்லை
நீர்த்தும் போவதில்லை
வாதித்த வலிகளெல்லாம்
போதித்த வழிகளினூடாக‌
சாதிக்க அழைத்ததென்னை நானும்
வீதிக்கு வந்த விதி நினைந்து
சாதிப்பேன் சாதிப்பேன் சாதித்துக்கொண்டேயிருப்பேன்!

இடிக் குறங்கும் விழிகளாய்
அடிக்கு விடுபட்டு வந்தேன்
தடுக்கி விழுந்த தடயம்
முடக்கிய வழி திறந்தது
முயல்வேன் முயல்வேன்
எதுவந்தபோதும்
முயன்றுகொண்டேயிருப்பேன்!!!



Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 3:52 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சுகா கவிதைகள்

Thursday, January 24, 2013


01.வாழ்தல் பற்றிய புரிதல்
வா வென்றவுடன் வருவதில்லை
வீழ்ந்து எழும்போதும்
விபத்தில் தப்பும்போதும்
தா னாய் வந்துவிடுகின்றது!!


02.பலவந்தமாய்
உமைவிட்டுப் போகும் எதையும்
துரத்திப்பிடிக்காதீர்
சிலநேரங்களில்
அதுவே உனக்கான
அதிஸ்டக்கதவாகவும் இருக்கலாம்!!



















03.உன்னால்
வலிகளை மட்டுந்தான்
கொடுக்கமுடியும்
என்னால்
வழிகளை
கொடுக்கமுடியும்
ஏனெனில் நான்
துரோகங்களிலிருந்து
புதிதாய் முளைத்தவள்!!










04.சிலருக்கு
முகமூடிகள்தான் அழகு
நிஜங்கள் வெளிப்படும்போது
நிலமைகள் கலவரப்பட்டுவிடுகின்றது
அவர்களுக்கு
மாயைகள்தான் அழகு!!



05.துன்பத்தில் உன்னால்
சிரிக்கமுடியுமா
ஏன் முடியாது
முடியும்!
துளியளவு துரோகத்தில் கூட‌
துவண்டுவிடும் நானே
முதன்முதலாய் சிரிக்கின்றேன்
வலிகளுக்குள்தான் வாழ்க்கை
வழிகளுக்கதுதான் நம்பிக்கை!!




Posted by த.எலிசபெத் (ராஜ் சுகா) at 7:43 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: வ(ழி)லியின் குறிப்புக்கள்
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

என்னைப்பற்றி

My photo
த.எலிசபெத் (ராஜ் சுகா)
தலவாக்கலை, Sri Lanka
2004ம் வருடம் வீரகேசரி வார இதழில் 'வரமாட்டாயா? ' என்ற கவிதையினூடாக எழுத்துத்துறைக்குள் எனது சிறிய பாதங்களை வைத்துப்பார்த்தேன். இடறி இடறி விழுந்த என் காகித ரகசியங்கள் முதன்முதலாய் வீரகேசரி வார இதழிலேயே எழும்பி நின்றது. பின்னால் வந்த நாட்களில் மித்திரன் வாரமலர் எனது எல்லா வெள்ளோட்டமான எழுத்தார்வத்திற்கும் களந்தந்து கைகொடுத்தது. அதில் கிடைத்த ஊக்குவிப்புக்களும் உற்சாகமும் இதுவரை என்னை இழுத்துவந்தது எனலாம். எனக்கான வாழ்வியலில் கிடைத்த‌ அடிகளே என் எழுத்துக்களுக்குமான‌ அடிகளாக தொடர்கின்றேன். சமூகத்தினை அசைத்தவண்ணம் கவிகளை இசைக்கின்றேன்.பின்புலமில்லை எனக்கு பெரும் புலமையுமில்லை எண்ணற்ற பட்டம் ஏராளம் பரிசென்று எதுவுமில்லை கடலெனும் தமிழ்மொழியில் கடுகளவு கவிகொண்டுவருகின்றேன் வாசிக்கும் உங்களுக்குள்ளும் ஓசைகள் எழுமாயின் வசையாயினும் பகர்ந்திட்டே செல்லுங்கள் திசையாக இல்லாவிட்டாலும் ஓர் விசையாக என் கவிகள் வளரட்டும்.
View my complete profile

கிறுக்கல்களில் இதுவரை

  • ▼  2017 (1)
    • ▼  March (1)
      • கற்கவழி செய்குவீர்...
  • ►  2016 (280)
    • ►  December (19)
    • ►  November (8)
    • ►  October (10)
    • ►  September (24)
    • ►  August (38)
    • ►  July (21)
    • ►  June (25)
    • ►  May (18)
    • ►  April (34)
    • ►  March (43)
    • ►  February (7)
    • ►  January (33)
  • ►  2015 (76)
    • ►  December (33)
    • ►  November (24)
    • ►  October (9)
    • ►  September (6)
    • ►  August (4)
  • ►  2014 (131)
    • ►  November (1)
    • ►  October (5)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  May (13)
    • ►  April (13)
    • ►  March (26)
    • ►  February (39)
    • ►  January (32)
  • ►  2013 (305)
    • ►  December (39)
    • ►  November (41)
    • ►  October (24)
    • ►  September (29)
    • ►  August (28)
    • ►  July (16)
    • ►  June (12)
    • ►  May (12)
    • ►  April (15)
    • ►  March (16)
    • ►  February (24)
    • ►  January (49)
  • ►  2012 (64)
    • ►  December (53)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2011 (49)
    • ►  December (2)
    • ►  November (6)
    • ►  October (7)
    • ►  September (7)
    • ►  August (19)
    • ►  July (8)

இதுவரை வந்து போனவர்கள்.

கிறுக்கல்களை தொடர்பவர்கள்.

கிறுக்கல் வகைகள்.

  • FUN (4)
  • My Life (1)
  • My Youtube poems (3)
  • அஞ்சலி (2)
  • அநுபவ சுவாரஸ்யங்கள் (7)
  • அநுபவம்ஸ் (1)
  • இணையத்தில் வெளியானவை (54)
  • இதழ்கள் சிந்தும் பனித்துளிகள் (10)
  • இலக்கிய சந்திப்புக்கள் (17)
  • என் அழகான உலகம் (1)
  • ஒரு கதை..... காதல்..... (1)
  • கட்டுரைகள் (10)
  • கிறிஸ்தவப்பாடல்கள் (3)
  • குசும்பு (1)
  • குட்டிக் கவிதைகள் (362)
  • குரல்வழிக்கவிதை (1)
  • கொதிப்பு (1)
  • சந்தேகம் (1)
  • சமூகக்கட்டுரை (2)
  • சமூகத்தில்... (2)
  • சிறுகதைகள் (4)
  • சிறுவர் பாடல் (1)
  • சிறோவின் பதிவு (2)
  • சுகா கண்ட நேர்காணல்கள் (56)
  • சுகா கவிதைகள் (216)
  • சுகாவின் நேர்காணல்கள் (9)
  • தத்துவம்ஸ் (44)
  • தமிழன்24 (2)
  • படைப்பிற்கு கிடைத்த பரிசுகள் (6)
  • பத்திரிகையிலென் படைப்பு (18)
  • புதுசு (1)
  • மனசுக்குள்ளிருந்து... (1)
  • மனம் திறக்கவிரும்புகின்றேன் (1)
  • ரசனைக்குறிப்புக்கள் (28)
  • வ(ழி)லியின் குறிப்புக்கள் (16)
  • வலி (1)
  • வாழ்த்துக்க‌ள் (1)
  • விருது (2)
  • ஹைக்கூ (7)

உங்களால் பிரபலமானவைகள்

  • கல்குடா நேசன் 34வது படைப்பாளியாக கவிஞர் MU.அப்துல் பாஸித் அல் அர்ஷத் அவர்கள்
    http://kalkudahnation.com/#!/tcmbck கல்குடா நேசன் இணையத்தினூடாக வாராவாரம் கலைஞர்கள் படைப்பாளிகளைச் சந்தித்து, அவர்களுடனான கலந்துரையாடலை...
  • தினக்குரல் வாரமலரில் கவிஞர் முல்லைத்தீபன் வே அவர்களின் நேர்காணல்.. 17.07.2016
    முப்பது வருடத்திற்கு மேற்பட்ட ஆயுதப் போராட்டத்தின் முடிவை பெரும் அழிவுகளின் மத்தியில் சந்தித்த முல்லை மாவட்டத்தை பிறப்பிடமாகவு...
  • மழை நதி கடல் கவிதை தொகுப்பு மீதான எனது ரசனைப்பார்வை
     "மழை நதி கடல்" எனும் இயற்கையின் நாமம் சூட்டி இயற்கையை மொழிபெயர்த்திருக்கும் மிக இயற்கையான மொழிநடையில் வாழ்வின் அங்கங்களை ...
  • “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” (25.03.2016) கவிதாயினி எச்.எப். ரிஸ்னா
    http://kalkudahnation.com/ பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எ...
  • துருவ நட்சத்திரமாக மலேசிய பெண்படைப்பாளி கே.எஸ்.செண்பா அவர்களின் நேர்காணல்
    பெண் படைப்பாளிகள் அனுபவங்களை எழுத்தில் வடிக்கிறார்கள்: மலேசியா செண்பகவள்ளி  http://www.thuruvam.com/2013/03/php_74.html பெண்களின் புனைவ...
  • மித்திரன் வாரமலர் (20.02.13) சீனா உதயகுமார் அவர்களின் நேர்காணல்
    யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச்சேர்ந்த கவிஞரும் எழுத்தாளரும் சிறந்த கணித ஆசிரியருமான சீனா உதயகுமார் அவர்கள் தனது பரந்த தேடலினால் இல...
  • துருவ இணைய இதழில் இணைகின்றார் லறீனா அப்துல் ஹக்.
    http://www.thuruvam.com/2013/03/php_8.html நம்நாட்டில் "அனைவருக்கும் பல்கலைக்கழக உயர்கல்வி" என்ற தொனிப்பொருள் குறித்த பரந்த...
  • கற்கவழி செய்குவீர்...
    சோறில்லையென்ற நிலைவந்தபோது ஜகத்தினையழிக்க ஓர் பாரதியில்லை காரில் வந்திறங்குவோர் கண்களில் கடுகளவிலும் கருணையில்லை! பாத்திரமேற்று அல...
  • கல்குடா நேசனின் 47வது படைப்பாளி சஹாப்தீன் முகம்மது சப்றீன்
    http://kalkudahnation.com/51353 வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம்....
  • தெமட்டகொட இல்லத்தில் ஹிதாயா அக்காவுடன் நானும் தம்பியும்.. (13.11.2013)
    \
Watermark theme. Powered by Blogger.