Wednesday, November 25, 2015

இன்றும் மழைநாளாய்ப் போனது

ஒற்றைக்குடையில் உன்னோடு
ஒட்டிக்கொண்டு நடக்குமந் நாளுக்காகவே
மழை வர(ம்) வேண்டிய‌
நாட்களும் இருந்தது...

பாதி மழையிலும்
மீதி விழியிலுமென்று நனைய‌
மனதுக்குள் அச்சாரலுக்காகவே
மழைவிரும்பிய நாட்களும் இருந்தது...

அரைமணி நேர அடைமழைக்குப்பின்
அவலங்கள் எட்டிவிடுமிந் நாட்களில்
ஆசை குறைந்தே போனது என்
ஆனந்தமான மழைநாட்களில்...

வீதியெங்கும் விலகமுடியா
வாகன நெரிசல்கள்
மீதிவழியை கடக்கமுடியா
மாபெரும் திண்டாட்டங்கள்...

பளிச்சென பள்ளிசெல்லும் மாணாக்கரும்
பாதையிலே செல்லும் மற்றோரும்
பயந்தே பயணிக்கவேண்டியதாயிற்று
சலாரென வீசியடிக்கும்
சேற்றிலிருந்து மீண்டுகொள்ள....

ஆற்றங்கரையருகிலும்
அடுக்குப்பெட்டி வீடுகளிலும்
அன்றாடங்காய்ச்சிகளின் நிலை
அதோ கதிதான்...

ஏழ்மைக்கூரைகளில்
ஏராளமாய் துளையிடும்
மழைக்கரங்கள்
வீழ்ந்து உயிர்பறிக்கும் மண்மேடுகள்
இரக்கமில்லாது சுறுட்டிக்கொண்டுபோகும்
வெள்ளச் சக்கரங்கள் என‌
வெள்ளை மனதை காயப்படுத்திவிட்டிருந்தது
இந்த மழைக்காலம்....
என் ஒற்றை இதய‌
ஆனந்தத்துக்காய் இறைவா
அதிகமாய் கொடுத்துவிடாதே
அகதிகளாய் போகுமெம் மக்களுக்கு
அதிக இடமில்லை இவ்வையத்தில்...




Tuesday, November 24, 2015

சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள் **************************




ஞாயிறு வாராதா என்று
ஞாபகத்தில் உளைகின்றது மனது...

சிவப்பு நாளை கலண்டரில்
கண்டவுடன் வரும் குதூகலிப்பு
மேலதிக வேலையென்று பறக்கும்
அப்பாவினால் இப்போதெல்லாம்
பிடிக்காமலே போனது...


கண்விழிக்கையில்
உறங்கும் அப்பா நான்
கண்ணுறங்கையில் வந்துதரும்
முத்தத்தினை தூக்கத்தில்
தட்டிவிடுகின்றேன்...

பேச்சுப்போட்டியில் பெற்ற‌
முதற்பரிசு கூட இன்னும்
வராந்தாச்சாலை மேசையில்
அப்பாவின் வாழ்த்துக்காய்
ஏங்கிக்கொண்டிருக்கின்றது...

பாலர்வகுப்பு வரை
என்னோடு வந்த அப்பா
டாலர்களின் மதிப்பேறியதும்
ரொக்கத்தின் பின்னே ஓடியலைகின்றார்...

மாலைநேர சைக்கிளோட்டம்
மழைநாளின் ஐஸ்கிரீம்
சாலையோரம் கைகோர்த்த நடை
சாப்பாட்டுக்கடை தேடுமென் பிடிவாதம்
அப்பாவின் தோளில் குதிரையோட்டம்
அவர் மடியில் ஆட்டம்பாட்டம்
தப்பாமல் தருகின்ற செல்லமுத்தம்
தலைகோதும் விரல்கள் - எல்லாமே
தாள்களுக்குள் அடங்கிப்போய்
தாராளமாகவே இடைவெளியை
விசாலப்படுத்தி விட்டிருந்தது....

வாங்கிவந்த இனிப்பையூட்ட‌
வாசலிலிருந்தே கூப்பிடுமென்
அப்பாவின் குரல்கேட்க‌
இப்போதெல்லாம்
ஆசைப்பட மட்டுந்தான் முடிகின்றது...


பாசத்தை நிரூபிக்க‌
பணத்தை நிரப்ப வேண்டியதில்லை
என்றுணர்த்த நானின்னும்
வாழ்க்கையை படிக்கவில்லை....


சொத்துசுகத்தினால் மட்டுமே -தன்
சொந்த மகளின் சோகம்
தீராதென்றுணர அப்பா இன்னும்
உறவுகளை படிக்கவில்லை......


Monday, November 23, 2015

தடாகத்தின் "கடல் தேடும் நதி" கவிதை நூல் வெளியீடு பற்றிய சுருக்கப்பார்வை




http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/12/blog-post_94.html (02.12.2015)



தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் 21.11.2015 அன்று கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் ஓர் நூல் வெளியீட்டு நிகழ்வும் குறுந்திரைப்பட வெளியீடும் இனிதே நடைபெற்றது. புத்தளத்தைச் சேர்ந்த கவித்தீபம் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் "கடல் தேடும் நதி" கவிதைத்தொகுப்பும்  "பேச மறந்த வார்த்தை" குறுந்திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகளுமே அவை. 

பெண்கள் அமைப்பான தடாகத்தின் வெற்றிகளில் இவ்வெளியீட்டு நிகழ்வும் ஒன்றாகும். நிகழ்ச்சி நிரலின்படி காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும் நிகழ்வுக்கு வரவேண்டிய எல்லாரும் நேரத்திற்கு சமூகமளித்தாயிற்று. நிகழ்வு தொடங்குவதில் தாமதம். அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கு முகத்தில் சிறு வாடல். ஆமாம் அறிவிப்பாளர் வந்திசேரவில்லை விழாவுக்கு. அவருக்கு பதிலாக செய்தியொன்றே வந்தது, அவருடைய உறவினரின் மரணச்செய்தியறிந்து அறிவிப்பாளர் அந்நிகழ்வுக்கு சென்றுவிட்டதாக. சபையோரை வரவேற்று பேசிக்கொண்டிருந்தவர் எந்தவித சலனமுமற்று மேடையிலேறி அறிவிப்பாளராக அவதாரமெடுத்துவிட்டார். சுய பிராத்தனையுடன் தடாகத்தின் தலைவி கவிதாயினி சுஹைதா கரீம் வரவேற்புரையினையும்
தலைமையுரையை பாவரசு பதியத்தலாவை பாரூக் அவர்களும் ஆற்றி வரவேற்றனர்.

நேர ஓட்டம் சீராக செல்லவும் அறிவிப்பாளர் திருமதி வரதாராணி அவர்கள் வந்து இணைந்துகொள்ளவும் சரியாக இருந்தது. தன் இனிய குரலால் இளமையோடும் நிகழ்ச்சிகளை கலையாகவும் கலகலப்பாகவும் நடத்திச்சென்றார்.

நிகழ்வின் பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஸாட் பதியூதின் அவர்கள் கலந்து நிகழ்வினை சிறப்பித்தார். மற்றும் கெளரவ அதிதிகள் விஷேட அதிதிகள் அனைவரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். நூலின் முதற்பிரதியினை கனடாவைச்சேர்ந்த படைப்பாளிகள் உலகம் அமைப்பாளர் திரு. ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்கள் சார்பாக, அதன் இலங்கை அமைப்பாளரும்,செல்லமுத்து வெளியீட்டகத்தின் தலைவருமான கவிஞர் யோ.புரட்சி அவர்கள் பெற்றுக்கொண்டார். நூல் வெளியீட்டின் ஆரம்பம் மிக அழகான முறையில் அமைந்திருந்தது.
மேடையேறிய அமைச்சரிடன் சிறிய அளவுடைய குர் ஆன் ஒன்றினை பரிசளித்து வரவேற்றார் தடாக அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள்.  "எழுத்தாளர்கள் ஏனோ பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கின்றார்கள்,  நல்ல படைப்பாளிகள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள அரும்பாடு படுகின்றார்கள் என்ற ஆதங்கத்தோடும் அவர்களை ஊக்குவிக்கவேண்டுமென்ற நல்லெண்ணத்தோடும், அரசியல்வாதிகளை பலர் விமர்சிக்கின்றார்கள் அதில் சில காழ்ப்புணர்ச்சிகளாகவும், பல விமர்சனங்களால் தங்களை அறிந்துகொள்ளவும் முடிகின்றது என தொடர்ந்த‌ வெளிப்படையான‌ அமைச்சர் அவர்களின் உரையுடன் முக்கியமாக அரசியல் பேசா சூழ்நிலையில், சிறப்புப்பிரதிகளை பெறும் கலைஞர்கள் கெளரவ அமைச்சரிடமே நூலினை பெற்றுக்கொண்டார்கள். வந்த தொலைபேசி அழைப்பொன்றில் அவசரம் என்று கையசைத்து சென்றுவிடாமல் எல்லாரிடமும் நட்பாகப்பேசி சிறப்புப்பிரதிகளை பொறுமையாக வழங்கி, பட்டம் பெற்ற படைப்பாளிகளுக்கு பொன்னாடை போர்த்தி புகைப்படங்களெடுத்து சென்றதும் தனித்தனியாக கலைஞர்களை அறிந்து வைத்ததும், அரசியல்வாதி என்ற நிலையை சற்று தள்ளி வைத்திருந்தது. சரளமாக நடந்து கொண்டது சபையாரை சந்தோஷத்தில் ஆழ்த்தியது எனலாம்.

அமைச்சரிடம் தடாகத்தின் விருதுகளை பெற்றுக்கொண்டவர்கள், கலாநிதி துறை மனோகரன், மக்கியா முஸம்மில், வவுனியா செந்தூரன், பாவரசு பதியத்தளாவ பாரூக், அல்ஹாஜ் எம்.எச்.ஏ.சமத், கவிஞர் ஐங்கரன் கதிர்காமநாதன், மெளலவி காத்தான்குடி பெளஸ்,கவிஞர் த.ரூபன், கவிஞர் இஸ்மாயில் றியாஸ், கவிதாயினி எஸ். ஆர்.கலா, கவிதாயினி சுல்பிகா ஷரீப், கவிஞர் சுஜப்.எம். காஸிம் ஆகியோரே. சமூகமளிக்க முடியாதவர்களின் விருதுகளை அவர்களின் உறவினர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

அதன் பின்னர் கவிவாழ்த்தினை கவிதாயினி ஸிமாரா அலி அவர்கள் பாட, மிகச்செம்மையான ஓர் நூல் பார்வையினை தந்திருந்தார் வன்னியூர் செந்தூரன் அவர்கள். தாழ்ந்து உயரும் குரலில் சபையோரை தம்பக்கம் ஈர்க்க வைத்தது அவரது நிதர்சனமான விமர்சனப்பார்வை. மேடைக்காக குறைகளுக்கு ஆடைபோட்டு அலங்கரிக்காமல் நிறைகளை நிறைவாகவும் பிழைகளை அழகாகவும் சொல்லி உரையினை நிறைவு செய்தார்.  அத்தோடு செல்லமுத்து வெளியீட்டகத்தின் இணைப்பாளர் திரு யோ.புரட்சி அவர்களின் சிறப்புரையும் சிறப்பான இடத்தைப்பிடித்தது. நூல் விழா விமரிசையாக நிறைவடைய‌

குறுந்திரைப்பட வெளியீடு குதூகலமான ஆரம்பமானது. களைத்துப்போன பார்வையாளர்களுக்கு தன் கையாலேயே தடாகத்தின் தலைவி சுஹைதா அவர்கள் சிற்றுண்டிப் பரிமாறி உபசரித்தார். நிகழ்வு இனிதே சுல்பிகா ஷரீப் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது. 











'கடல் தேடும் நதி' கவிதை நூல் வெளியீட்டின் போது

21.11.2015 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டின் போது. தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் 'கடல் தேடும் நதி' கவிதை நூல் வெளியீட்டின் போது படைப்பாளிகளுடன் சில நினைவுப்பதிவுகள்.




 01. கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் கெளரவ ரிஸாட் பதியூதின் அவர்களிடம் நூலினை பெறும்போது...









                                                                


                                                             

02. கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் அவர்களின் புதல்வியுட‌ன்....















03. கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் அவர்களின் குடும்பத்துடன்......


கவிதாயினி சுஹைதா மற்றும் ஹிதாயா அவர்களுடன் 




                                            தோழி முனிரா அபூபக்கர் அவர்களுடன்


 சந்தக்கவிஞர் நஜுமுல் ஹுசைன்,டாக்டர் தாஸிம் மற்றும் அனைவருடனும்





                   நூலாசிரியர் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுடன்


கவிஞர் வவுனியூர் செந்தூரன் அவர்களுடன்







                                   எழுத்தாளர் பாத்திமா சில்மியா அவர்களுடன்




அறிவிப்பாளர் வரதராணி அவர்களுடன்

                                                                 



                               




                                                               





எம்மை பிரித்துவைத்த இறையில்.....





இதுவரை கண்டதில்லை
உன்னைப்போல ஓர் அதிசயத்தை
இழந்திடவும் விரும்பவில்லை
இடர்கள் எத்தனை வந்தபோதும்...

எனக்காகவே உருவெடுத்தவளாய் -நீ

விறுப்பு வெறுப்புக்களில்
வித்தியாசங்களில்லை
எண்ணங்கள் எழுத்துக்களில்
எள்ளளவும் வேற்றுமையில்லை...

ஒரே பாதையில்
ஒரே பார்வையில் நமக்கானது
ஒரே பயணமாய்...

புன்னைகை கூட‌
புரிதலாய் ஒத்துப்போகின்றது -இதை
புதுமையென்னாமல் என்னவென்பேன்...

இறைச்சட்டம் எத்தனை
சிக்கலானது என்பதனை
நமது உறவே உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றது...


உன்னை நானோ
என்னை நீயோ சந்திக்காவிடில்
கடவுள் அமைத்த விதி
சரியென்றேதான் ஒப்பித்திருப்பேன்...


எனது திருமணமோ
உனது திருமணமோ
வேறுவேறாய் நிச்சயிக்கப்படாதிருந்தால்
என்னாலும் சொல்லமுடிந்திருக்கும்
எனது விதியிலும் அதிஸ்டமுள்ளதென்று...

எல்லாவற்றையும் ஒன்றாக்கிவிட்டு
எம்மை பிரித்துவைத்த இறையில்
எள்ளளவும் கோபமில்லையென -என்னால்
எளிதில் சொல்ல முடியவில்லை...!!

Friday, November 20, 2015

மனித வஞ்சத்தையோ...... [20.11.2015]

http://www.oodaru.com/?p=9319


.த.ராஜ்சுகா-இலங்கை-
அன்னைக்கு அடக்கமானவள்
தந்தைக்கு அன்பானவள்
குடும்பத்துக்கு பொறுப்பானவள்
கூடப்பிறந்ந்தாருக்கு குதூகலமானவள்…

நண்பர்களுக்கு வெகுளியானவள்
நாளும் பழகுபவர்க்கு இனிமையான‌வள்
நம்பிக்கைக்கு தகுதியானவள்
நவநாகரிகத்தில் தூரமானவள்…

துன்பத்தில் துவண்டுவிடுபவள் -அது
தூரப்போகுமுன்னே எழுந்திடுபவள்
சின்னதற்கும் கலங்கிடுபவள்
சீக்கிரமாய் ஓய்ந்திடாதவள்…

மாணாக்கருக்கு கண்டிப்பானவள
மாப்பிள்ளையருக்கு அழகில்லாதவள்
மாமியாருக்கு சொத்தில்லாதவள்
நாத்தனாருக்கோ நாகரிகமில்லாதவள்…

ஏட்டறிவினை எட்டிடாதவள்
ஏழ்மையதை விர‌ட்டிடாதவள்
பாவறிவை கொஞ்சம் பார்த்தவள்
பாடியவழி நடக்க‌க நினைப்பவள்...

உறவின் மாயை உணராதவள்
உள்ளத்தின் வஞ்சம் அறியாதவள்
மறவா நெஞ்சம் கொண்டவள்
மனித வஞ்சத்திலோ தெளிந்தவள்…

நீ

சிரிக்கின்றாய் சிலிர்க்கின்றேன்
பிரிகின்றாய் எரிகின்றேன்
கதைக்கின்றாய் கரைகின்றேன்
வதைக்கின்றாய் புதைகின்றேன்

விரிவுரையாளரும், பெண் எழுத்தாளருமான லறீனா அப்துல் ஹக் அவர்கள் நேர்காணலில்

கல்குடா நேசன் இணைய  இதழில் வெளிவந்த நேர்காணல் [20.11.2015]http://kalkudahnation.com/



கல்குடா நேசனின் 15 வது வார இலக்கிய நேர்காணலில் இடம்பெறுகிறார் விரிவுரையாளரும், பெண் எழுத்தாளருமான லறீனா அப்துல் ஹக் அவர்கள்-நேர்காணல் உள்ளே… 


பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. இதன் தொடரின் இன்று 20.11.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 15 வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் பல்கலைக்கழக விரிவுரையாளரும், எழுத்தாளருமான லறீனா அப்துல் ஹக் அவர்கள். 

“தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கத்தக்கதாக நமது நாட்டின் கல்வி முறைமை மாற்றப்பட வேண்டும். இது தொடர்பில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி, நாட்டின் கல்வியியலாளர்களும் அதிகக் கரிசனை எடுக்க வேண்டும். நம்முடைய நாட்டில் “அனைவருக்கும் பல்கலைக்கழக உயர் கல்வி” என்ற தொனிப்பொருள் குறித்த பரந்து பட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என அவருடனான நேர்காணலில் எம்முடனும் கல்குடா நேசன் வாசகர்களுடனும் மனந்திறந்து பேசுகிறார். 

கவிதாயினி த. எலிசபெத்: பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்ட நீங்கள்இ உங்களுடைய அறிமுகத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்? 


லறீனா அப்துல் ஹக்: எனது முழுப்பெயர் லறீனா அப்துல் ஹக். பிறப்பிடம் மாத்தளை. திருமணமாகிவிட்டது. ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். கணவர் முஹம்மத் பிர்தௌஸ். தற்போது  ஹந்தெஸ்ஸ எனுமிடத்தில் வசிக்கின்றேன். உயர் தரம் (கலைப்பிரிவு) வரை மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். 
2002 பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பீ.ஏ. தமிழ் சிறப்புப் பட்டதாரியானதோடு, 2004 வரை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், 
2007 வரை மொழிபெயர்ப்புக் கற்கைநெறித் துறையிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். தற்போது முதுமாணிப்பட்ட (MPhil) ஆய்வுக்கட்டுரையை எழுதி முடித்துள்ளேன்.

கவிதாயினி த. எலிசபெத்: கலைத்துறையில் உங்களது ஆர்வம் குறித்து கூறுங்களேன்? 

லறீனா அப்துல் ஹக்: எல்லோரைப் போலவும் எனக்கும் கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடுண்டு. எனது பின்வரும் வெளியீடுகளை அதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். 1. எருமை மாடும் துளசிச்செடியும் (சிறுகதைத்தொகுதி) – 2003 2. வீசுக புயலே (கவிதைத்தொகுதி) – 2003 3. தமிழ்மொழியும் இலக்கியமும்: சில சிந்தனைகள் (ஆய்வுக்கட்டுரைத் தொகுதி) 2003 4. ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும் (நாவல்) 2004 5. செ. கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு (ஆய்வுநூல்) – 2004 6. மௌனத்தின் ஓசைகள் – மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுதி 2008 7. வார்த்தைகளின் வலி தெரியாமல்… – சமூகவியல் கட்டுரைகள் 2012 8. “பொருள் வெளி” ஆய்வுக் கட்டுரைத்தொகுதி 2012 இவை தவிர, ‘நம் அயலவர்கள்’ எனும் சிறுகதைத்தொகுதிக்காக 5 சிங்களச் சிறுகதைகளைத் தமிழிலும், ‘அசல் வெசி அப்பி’ எனும் சிங்களச் சிறுகதைத்தொகுதிக்காக ரஞ்சகுமாரின் ‘கோளறு பதிகம்’ சிறுகதையை (தம்மிக்க ஜயசிங்ஹ என்பாருடன் இணைந்து) சிங்கள மொழியிலும் மொழியாக்கம் செய்துள்ளேன். மேலும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் உரைகள், கட்டுரைகளை மொழி மாற்றம் செய்துள்ளேன். தற்போது ‘சிங்கள மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு’ எனும் எனது மொழி பெயர்ப்பு நூலை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ‘தென்றலிலே’ எனும் பெயரில் என்னுடைய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு ஒன்று விரைவில் வெளிவரவுள்ளது. அந்த இசைத்தட்டில் இடம்பெறவுள்ள, நான் இயற்றி, மெட்டமைத்து, இசையமைத்துப் பாடிய இரண்டு பாடல்கள் http://nilapenn.com தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும்,  http://nilapenn.com எனும் எனது இணையத்தளத்தை நிர்வகிக்கின்றேன். கவிதாயினி த. எலிசபெத்: கலைத்துறை சார்ந்த உங்களது ஈடுபாடு பற்றி…? லறீனா அப்துல் ஹக்: * பேராதனைப் பல்கலைக்கழக பட்டப் பின்படிப்பு ஆய்வுக்கருத்தரங்குகளில் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் குறித்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளேன். *  2011இல் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு) *  2012இல் சர்வதேச இலக்கிய மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (கவிதை மொழிபெயர்ப்பும் கோட்பாட்டியல் பிரச்சினைகளும்: சில அனுபவக்குறிப்புக்கள்) * 2012 இல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுக்கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பித்துள்ளேன். (கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் “பெண்” பற்றிய விம்பம்) 

கவிதாயினி த. எலிசபெத்: சமூகத்தின் அறிவுப்பாதைக்கு வித்திட வேண்டிய பல்கலைக்கழகச் சூழல் பல்வேறு அகஇ புறக்காரணிகளால் அடிக்கடி தளம்பல் நிலையினை சந்திக்கின்றது. இது பல்கலைக்கழக கல்வி முறையின் மீதான நம்பிக்கையின்மையினையும் ஆர்வமின்மையினையும் மக்களிடையே ஏற்படுத்துகின்றது. இது குறித்து உங்களது பதில் என்ன?

 லறீனா அப்துல் ஹக்: இது உண்மையிலேயே வருத்தமளிக்கக்கூடிய ஒரு நிலைமை தான். ஆனால், நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகள் ஏனைய எல்லாத்துறைகளைப் போலவே கல்வித் துறையிலும் பெரும் பாதிப்பைச் செலுத்தி வருவது தவிர்க்க முடியாததாகும். இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் நாட்டின் அரசியல் குழப்ப நிலையால் பல்கலைக்கழகங்கள் சில வருடங்கள் இயங்காமல் இருந்த காரணத்தால், பிற்காலத்தில் உயர் தரப் பரீட்சை எழுதி விட்டு, பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்காக இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. நாமும் அப்படிக் காத்திருந்து பல்கலைக்கழகம் சென்றவர்கள் தான். எனினும், இப்போதெல்லாம் உயர் தரப் பரீட்சை எழுதிய பின் அவ்வளவு நீண்ட காலக் காத்திருப்பின்றியே மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக்கூடியதாய் இருப்பதும், பல்கலைக்கழகங்களினதும், துறைசார் கற்கைகளினதும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் சாதகமான அம்சங்களே. உண்மையில், பல்கலைக்கழகக் கல்வி என்றதும், நாம் கருத்திற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. இது குறித்து நாம் அலட்டிக்கொள்வதில்லை அதாவது, நமது நாட்டில் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியெய்திய மொத்த மாணவர்களில் 10 சத வீதத்துக்கும் குறைவானோருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கிறது. இந்நிலைமை மாற வேண்டும். தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கத்தக்கதாக நமது நாட்டின் கல்வி முறைமை மாற்றப்பட வேண்டும். இது தொடர்பில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி, நாட்டின் கல்வியியலாளர்களும் அதிகக் கரிசனை எடுக்க வேண்டும். இவ்விடத்தில், சிலி நாட்டின் இளம் புரட்சி வீராங்கனை கமிலா வொலேஜோவின் பணி நினைவிற்கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டில் அனைவருக்கும் உயர் கல்வி கிடைக்க வேண்டுமென்ற போராட்டத்தை முன்னெடுத்து, அந்நாட்டு அரசுக்கே பெரும் சவாலாய்த் திகழ்ந்தவர் அவர். நம்முடைய நாட்டில் “அனைவருக்கும் பல்கலைக்கழக உயர் கல்வி” என்ற தொனிப்பொருள் குறித்த பரந்து பட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

 கவிதாயினி த. எலிசபெத்: மொழிபெயர்ப்பு எழுத்தாக்கம் ‘கத்தியின் மீது நடப்பது போன்ற செயல்’ என்று கூறப்படுகின்றது. இதைப் பற்றியும், உங்களுடைய மொழி பெயர்ப்பு அனுபவங்கள் பற்றியும் கூறுங்கள்? 

லறீனா அப்துல் ஹக்: உண்மை தான். எந்த ஒரு மொழிபெயர்ப்பும் 100% அதன் மூலப்படைப்புக்குச் சமமானதாக இருப்பதில்லை. என்ற போதிலும், அதிக பட்ச ஒத்த தன்மையைக் கொண்டு வர முயற்சிப்பதே ஒரு மொழிபெயர்ப்பாளர் செய்யக்கூடிய பணியாகும். எனினும், இதில் மிகப்பெரும் சவால்களை ஒரு மொழி பெயர்ப்பாளர் எதிர்கொள்ள நேர்கின்றது. இது தொடர்பில் தமிழிலே விரிவான ஒரு நூல் எழுதும் உத்தேசம் எனக்குண்டு. 

கவிதாயினி த. எலிசபெத்: ‘மொழிபெயர்ப்பு’ என்பது பல மொழி இலக்கியச் சுவைகளை அவரவர் மொழிகளில் பெற்றுக்கொள்ளும் அரிய அவசியமான விடயமாக இருக்கின்றது. அந்தச் சிறப்புத் தகைமையைப் பெற்ற உங்களுக்கு மொழி பெயர்ப்பில் எவ்வாறு  ஈடுபாடு ஏற்பட்டது? எவ்வாறான விடயங்களை மொழி பெயர்த்து தமிழ் இலக்கியத்துக்கு வழங்குகின்றீர்கள்? 

லறீனா அப்துல் ஹக்: பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில் தான் நான் இத்துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினேன். அங்கு நிலவிய பல்லின- பன்மொழிச் சமூகச் சூழலும் இதற்கு ஒரு காரணம் எனலாம். அவ்வப்போது சிங்கள, ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து கலாநிதி துரை. மனோகரனின் பார்வைக்கு அனுப்புவதுண்டு. சங்கப்பலகை என்னும் தமிழ்த்துறையின் அறிவித்தல் பலகையில்  அவை உடனுக்குடன் வெளியிடப்படும். அதுவே பின்னர் இடையறாத பயிற்சி மூலம் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராய்ப் பணியாற்றிய கால கட்டத்தில் தமிழ்-ஆங்கில-சிங்களத்துறைகள் மூன்றும் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்த ஐந்து வார கால மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமையை என் வாழ்வில் கிடைக்கப்பெற்ற  மகத்தான வரப்பிரசாதமாய்க் கருதுகின்றேன். இதன் பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட மொழி பெயர்ப்புக் கற்கைகளுக்கான டிப்ளோமா, பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பாடநெறிகளுக்கான விரிவுரையாளராகப் பணியாற்றியமை மூலம் நான் இத்துறையில் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அதன்படியே என்னுடைய முதுமாணிப்பட்ட ஆய்வேட்டுக்கான தலைப்பையும் மொழிபெயர்ப்புத்துறை சார்ந்ததாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். 


கவிதாயினி த. எலிசபெத்: பெண்ணியச் சிந்தனையை எவ்வாறு நோக்குகின்றீர்கள்? இச்சிந்தனையில் பலருக்கு உடன்பாடின்மையினை அவதானிக்க முடிகின்றது. இதற்கான காரணம் என்ன? 

லறீனா அப்துல் ஹக்: பெண்ணியம், பெண்ணியவாதம் என்பன குறித்து சமூகத்தில் ஒரு வகைத் தட்டையான புரிதல் பரவலாகியிருப்பது வருந்தத்தக்கதே! உண்மையில், பெண்ணியவாதம் என்பது சோஷலிசப் பெண்ணிலைவாதம், மார்க்ஸியப் பெண்ணிலைவாதம், தீவிரப் பெண்ணிலைவாதம் முதலான பல்வேறு வகைப்பட்டதாகும். என்னைப் பொறுத்த வரையில், ஆணும் பெண்ணும் இணைந்த சமூக அமைப்பில் இரு தரப்பாருக்கும் சிறப்பியல்புகள், தனித்தன்மைகள் உள்ளன. அவை பரஸ்பரம் புரிந்து கொள்ளப்படவும் மதிக்கப்படவும் வேண்டும். வீட்டுப் பணியிலும் சரி, சமூகப் பணியிலும் சரி, ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஒத்துழைப்போடும் பணியாற்ற முன்வர வேண்டும். இதில் ஈகோ பார்க்க எதுவும் இல்லை என்பதே என்னுடைய நிலைப்பாடாகும். “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்ற பாரதியின் வரிகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. மேலும், விளம்பரம், கலை, இலக்கியம் (சினிமா/பாடல் உட்பட) என்பவற்றில் பெண் ஒரு பாலியல் பண்டமாக, வெற்று உடலாகப் பார்க்கப்படும் மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக, பெண்ணின் உடல் ஒரு வர்த்தகப் பண்டமாக்கப்படுவதையும், அழகிப்போட்டி, ஃபெஷன் ஷோ என்ற பெயரில் அவளது உடல் ஒரு “பாலியல் பண்டமாக” ஆக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டுமானால், ‘தன்னுடைய உடல் அழகால் ஆண்கள் கவரப்படுவதே தனக்குப் பெருமை தருவது’ என்று எண்ணி அழகு சாதனங்களின் பின்னால் அலைந்து திரியும் அடிமை மனப்பான்மையைப் பெண்கள் வெற்றி கொள்ள வேண்டும். ஆம்! இது முதலில் தனக்குள் நிகழ்த்தப்பட வேண்டிய போராட்டம். அதன் பிறகே பெண்ணின் ஒடுக்குமுறைக்கெதிரான அடுத்த கட்ட போராட்டம் முனைப்புப்பெற முடியும் என்று நான் நம்புகின்றேன்.

கவிதாயினி த. எலிசபெத்: ஆண் படைப்பாளிகளும் பெண்ணின் மனவுணர்வை அப்படியே பிரதிபலிக்கும் ஆக்கங்களை படைக்கின்றனர். இது அவர்களின் நேரான சிந்தனையுடன் அதாவது, புரிதலுடன் கூடியதாக வெளிப்படுகின்றதா? பெண்ணைப் பற்றி ஒரு பெண் சொல்வதற்கும் ஆண் சொல்வதற்கும் எவ்வாறான ஒற்றுமை வேற்றுமைகளை உணர முடிகின்றது? 

லறீனா அப்துல் ஹக்: பொதுவாக, ஒரு படைப்பாளி எனும் போது உணர்வுகளைப் புரியும் ஆற்றல் இயல்பானதே என்பது முக்கியமானது. அவனோ அவளோ இன்னொரு நிலையில் தன்னை வைத்து உணரும் திறன் தான் ஒரு படைப்பாளியின் மிகப் பெரிய பலம். எனவே தான், ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் உணர்தல் சாத்தியமாகின்றது. நம்முடைய மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கனை எடுத்துக் கொண்டால், பெண்களின் பிரச்சினைகளை அவரளவுக்கு யாரும் பேசவில்லை என்ற அளவுக்கு அதில் மிகப் பெரும் பங்காற்றியுள்ளார். எனினும், இதில் குறிப்பிடத்தக்க நுண்ணிய வேறுபாடுகளும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாகப் பெண்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் இடங்களில் அவர்களுக்கு ஒரு பெண்ணாகவே இருந்து தீர்வுகளை முன்வைப்பதில் சில இடர்பாடுகள் இருக்கவே செய்கின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது. அதே வேளை, ஓர் ஆண் தன்னைப் பெண்ணாகப் பாவனை செய்து, தனது உணர்வு நிலையை வெளிப்படுத்துவதையும், ஒரு பெண் நேரடியாக தன் உணர்வை வெளிப்படுத்துவதையும் சமூகம் எதிர்கொள்ளும் விதமும் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். மாணிக்க வாசகர்- ஆண்டாள் இருவரதும் கடவுள் மீதான காதல் உணர்வின் வெளிப்பாடுகாளுக்கு வழங்கப்படும் சமூக அங்கீகாரமும், வெளிப்படையாகக் காதல் தாபத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதும் ஆண்களையும் பெண்களையும் சமூகம் பார்க்கும் விதத்திலுள்ள வேறுபாடுகளும் இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். எனவே, இது தொடர்பில்இ வெளிப்படுத்தப்படும் உணர்வு நிலை, அது கட்டமைக்கப்படும் சூழல்  சார்ந்த புறக்காரணிகள் ஆகியனவும் சேர்ந்தே இந்த ஒற்றுமை வேற்றுமைகளைத் தீர்மானிக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். 

கவிதாயினி த. எலிசபெத்: காத்திரமான கருத்துக்களோடு வெளிப்படும் உங்களுடைய எழுத்துக்களை எவ்வாறு சமூகத்திடம் கொண்டு சேர்க்கின்றீர்கள்? அதில் விஷேடமாக எதனை வலியுறுத்திக்கூற விளைகின்றீர்கள்? 

லறீனா அப்துல் ஹக்: பொதுவாக என்னுடைய எழுத்துக்களை சமூக அவலங்களை வெளிக்கொணரவும், குறிப்பாகப் பெண்ணின் துயரங்களை அடையாளப்படுத்தவும், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வைக் கட்டியெழுப்பவுமாகப் பல வகையிலும் நான் பயன்படுத்த முனைகின்றேன். எழுத்து என்பது இறைவனின் கொடை. அதனைச் சமூக மேம்பாட்டுக்காக, மானிட நலனுக்காகப் பயன்படுத்துவது அந்தக் கொடைக்கான நன்றிக்கடன் என்றே கருதுகின்றேன். எனவே, அதன் பொருட்டு பாரம்பரியமான ஊடகங்களோடு, இணையம் முதலான மின்னூடகங்களையும் பயன்படுத்துவதன் மூலமும், அக்கருத்துக்களை தமிழ்-சிங்களம்- ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எடுத்துச் சொல்வதன் மூலம் மிகப் பரவலாகக் கொண்டு செல்ல முடியும் என்பது எனது நம்பிக்கை. 

கவிதாயினி த. எலிசபெத்: பெண் படைப்பாளிகளின் படைப்புக்கள் எவ்வாறான நிலையில் காணப்படுகின்றது? வளர்ந்து வருகின்ற பெண் படைப்பாளிகளின் போக்கினில் எவ்வாறான தன்மையினை அவதானிக்கின்றீர்கள்? 

லறீனா அப்துல் ஹக்: இன்றைய பெண் படைப்பாளிகளின் எழுத்துப் பங்களிப்புக்கள் முன்னர் எப்பொழுதையும் விட மிகவும் காத்திரமாக முனைப்புப் பெற்றுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, இலங்கைப் பெண் படைப்பாளிகள் பலரும் தமது வெளியீடுகளை நூல் வடிவில் கொண்டு வந்துள்ளார்கள். பட்டியல் சற்று நீளமானது என்பதால் பெயர்களைச் சுட்டுவதைத் தவிர்த்துக்கொள்கின்றேன். அவற்றுள் பெண்கள் தமக்கான பொருள் வெளியைத் தாமே வரையறுத்துக் கொண்டவர்களாகவும், தமக்கான மொழியை மிகவும் சுதந்திரமாகக் கையாள்பவர்களாகவும் உள்ளமை மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. இது குறித்து, கொழும்புத் தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேசத் தமிழ்  எழுத்தாளர் மாநாட்டில் சமர்ப்பித்த கட்டுரையிலும் நான் விரிவாகப் பேசியுள்ளேன். 

கவிதாயினி த. எலிசபெத்: இசை மீது ஆர்வங்கொண்ட நீங்கள் எதிர்காலத்தில் பாடல் இயற்றி, இசையில் பாடுகின்ற திட்டங்கள் ஏதும் கொண்டுள்ளீர்களா? 

லறீனா அப்துல் ஹக்: ஆம். என்னிடம் 10 பாடல்கள் கைவசமுள்ளன. நானே எழுதி மெட்டமைத்துள்ளதோடு, அவற்றுக்கான இசை எப்படி அமைய வேண்டுமென்பது பற்றியும் திட்டமிட்டு வைத்துள்ளேன். அவற்றுள் இரண்டை நீங்கள் என்னுடைய இணையத்தளத்தில் கேட்டு மகிழலாம். இன்ஷா அல்லாஹ், வெகு விரைவில் என் பாடல்கள் அடங்கிய அல்பமொன்றை வெளியிட உத்தேசித்துள்ளேன். கவிதாயினி த. எலிசபெத்: தமிழிலிருந்து ஏனைய மொழிகளுக்கு கவிதைகளை மொழி பெயர்ப்புச் செய்துள்ளீர்களா? அதற்கான திட்டங்கள், ஆர்வம் எப்படி காணப்படுகின்றது? லறீனா அப்துல் ஹக்: இன்னும் இல்லை. இனி அப்படியான முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வமுண்டு. 

கவிதாயினி த. எலிசபெத்: பல்வேறு சிக்கல்களோடும் பிரச்சனைகளோடும் அல்லல்படும் பெண் சமூதாயத்துக்கு  என்ன கூற விரும்புகின்றீர்கள்?

 லறீனா அப்துல் ஹக்: வாழ்க்கை என்பது எப்போதும் ஒரு போராட்டம் தான். வீட்டிலும் சரி வெளியிலும் சரி அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, சவால்களைக் கண்டு ஒருபோதும் மனம் தளர்ந்து விடக்கூடாது. நம்மை நாமே வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் முதற்படியாக நமது கல்வித் தகைமையை வளர்த்துக் கொள்வதோடு, நம்முள் உள்ளார்ந்திருக்கும் ஆற்றல்களை இனங்கண்டு அவற்றை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மிக முக்கியமான ஓர் அம்சம் என்னவென்றால், பெண்கள் தம்முடைய சுய கௌரவம் குறித்த விழிப்புணர்வுடையவர்களாய் மாற வேண்டும். தாம் வெறுமனே ஒரு பாலியல் பண்டமாக, அலங்காரப் பதுமையாக, வெற்று உடலாகப் பார்க்கப்படுவதை பெருமைக்குரியதாகக் கருதும் அறியாமையிலிருந்து பெண்கள் மீள வேண்டும். குறிப்பாக, இணையப் பாவனை இருந்தும் கூட எப்போது பார்த்தாலும் சமையல் குறிப்பு, அழகுக்குறிப்பு என்பவற்றையே தேடிச் செல்லும் கிணற்றுத் தவளைகளாக இருக்காமல், அந்நிலையை மாற்றி நாட்டு நடப்பு, உலக நடப்பு என்பன குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள முன்வர வேண்டும். சமூக அக்கறை, மானிட நலன் என்பனவற்றை நாடும் வகையில் அறிவையும் மனதையும் விசாலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறே, ஒரு பெண்ணின் வெற்றியும் சிறப்பும் அவளின் அறிவிலும் ஆற்றலிலும் ஆளுமையிலுமே தங்கியுள்ளன என்ற தன்னம்பிக்கையும் நிமிர்வும் தன்மானமுள்ள ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய பண்புகளாகும். பாரதி இதனையே “நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச் செருக்கும்”  என்று குறிப்பிட்டுள்ளான். அத்தகைய புதுமைப் பெண்களே உருவாகவும் உருவாக்கப்படவும் வேண்டும்.

 கவிதாயினி த. எலிசபெத்: உங்களுடைய கலை, இலக்கியத் திறமைகளுக்கு கிடைத்த வெற்றிகளையும் விருதுகளையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்? 

லறீனா அப்துல் ஹக்: சிறுகதைக்கான பரிசுகள், விருதுகள் * வீரகேசரி பவள விழா சிறுகதைப்போட்டி (2005) 3ஆம் பரிசு * சிறுகதை: வேரில் வைத்த தீ * அமரர் வரப்பிரகாஷ் நினைவு தின சிறுகதைப்போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம்) (2000) 2 ஆம் பரிசு * சிறுகதை: எருமை மாடும் துளசிச்செடியும் *அவுஸ்திரேலிய கலை இலக்கிய சங்கத்தின் பத்தாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டையொட்டி நடாத்தப்பட்ட சர்வதேச சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு (2010) சிறுகதை: எனக்கான ‘வெளி’ கவிதை * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள்: 1 ஆம் பரிசு (2000) * அமரர் வரப்பிரகாஷ் நினைவு தின கவிதைப்போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம்) (2000) 2ஆம் பரிசு பாடல் * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 1ஆம் பரிசு (2000) * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 3ஆம் பரிசு (1993இ 1995) * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2 ஆம் பரிசு (1992) சிறுவர் இலக்கியம் * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2ஆம் பரிசு (2003) * தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் : 2 ஆம் பரிசு (1994) நாடகம் ழூ பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க நாடகப்போட்டி : நினைவில் நின்ற நடிகைக்கான சுழற்கேடய விருது (1998) ழூ நாடகம்: “இதுவரை இவர்கள்…” கட்டுரை * கட்டுரை: “நமக்கென்றொரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்” என்ற தலைப்பில் “பாலைவனத்தூது” * வலைதளம் நடத்திய சர்வதேச கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு. பாடல் இயற்றுதல் (வரிகள், மெட்டு, இசையமைப்பு) * பேராதனைப் பல்கலைக்கழக சங்கீத நாட்டிய சங்க வருடாந்தப்போட்டிகள்: 3ஆம் பரிசு (1999) * வவுனியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் 2003 ஆம் ஆண்டு ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின விழாவில்இ ‘பல்துறை ஆற்றல் கொண்ட முஸ்லிம் பெண்’ணுக்கான விருது கிடைக்கப்பெற்றது.

 இவரது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற கல்குடா நேசன்  சார்பாக நாமும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

Thursday, November 19, 2015

மேகம் அமைத்த கோபம்




மேகம் கூடிக்கதைத்தது
மேலே திட்டம் அமைத்தது
வேகம் எடுத்து நிறைத்தது
வேண்டாமென்றும் திணித்தது...

வழிகளை நதிகளாய் வனைந்தது
வரப்புக்களை குத்தகைக்கு எடுத்தது
வலிகளை சுலபமாய் பொழிந்தது
வரலாற்றில் கண்ணீரை பதிந்தது...

இருந்த இடத்தை அழித்தது
இல்லா வாழ்வை தந்தது
வருந்தி அழுதிட வைத்தது
வையத்தில் அதிர்வை இறைத்தது..

ஏதிலிக்கூட்டத்தை படைத்தது
ஏந்திநிற்கும்படி விதித்தது
பாதிநிலை வாழ்வை பழக்கியது
பாரிலெம் மக்காளை வதைத்தது

சூரியனை கடத்திச் சென்றது
சூழ்நிலை கைதியாக சொன்னது
பாரிற்கு வரத்தடை என்றது
பார்த்தாலே குற்றமென்றுரைத்தது...!!

Tuesday, October 27, 2015

புதிதாய் வானில் பறக்கிறேன்




இப்போதெல்லாம் மனம்
இலேசாகிப் போ யிருக்கிறது
கறுத்த இரவுகளும்
காணாமல்போன இனிமைகளும்
அநாயசமாய் வந்தமர்ந்திருக்கிறது
ஓலமிட்ட துயரங்கள்
ஒன்றுக் குமுதவாத கண்ணீர்களும்
ஓடிப்போய் ஒளிந்துகொண்டன‌

அத்தனைப்பூக்களையும் ரசிக்கின்றேன்
அழும் குழந்தைகளையும் கொஞ்சுகின்றேன்
பித்துப்பிடித்த நிஜங்களைய‌ழித்து
புதிதாய் வானில் பறக்கிறேன்

நிமிடங்கள் அழகானது
நிதர்சனங்களை யது காட்டியது

நீலவானம் நிறம்மாறினாலும்
நின்று ரசிக்கத்தோன்றுகின்றது

வாழ்க்கை விசித்திரமானது
தாழ்வை தூக்கி மிதித்துப் போட்டால்
கடந்திடும் பாதை சுவையானது
கண்டால் அதுவே சுவாரஸ்யமானது

இதையும் கடந்து போ.



வழிகள் முழுவதும்
வலிகள் கொட்டிக்கிடக்கலாம்
ஒளியே இல்லாப்பாதையில் நீ
விழி திறந்துகொண்டே பயணிக்கலாம்

    அதையும் கடந்துபோ.....


நம்பிப்பிடித்த கைகள்
நரம்பறுத்துச் செல்லலாம்
வெம்பிநின் றழுதாலும் திரும்பாத‌
வெறுமுறவுகள் நீங்கிச்செல்லலாம்

   இதையும் கடந்துபோ......

புன்னகைசாலையில் போன பயணம்
புண்களை தூவிவிட்டு
எண்ணிக்கையில்லா இரும்புக்கம்பிக்குள்
மண்டியிடச்செய்திருக்கலாம்

    அதையும் கடந்து போ...

எதிர்பார்ப்புக்கள் எல்லைவரைசென்று
புதிர்களை மட்டும் ஏந்திக்கொண்டு நீ
பிதிர்க்கடனாளியாய் வேதனையோடு
அதிர்ந்துபோய் திரும்பி வந்திருக்கலாம்

    இதையும் கடந்துபோ...

லட்சியக்குதிரையிலேறி வேகமான நீ
லட்சக் குறைவினால் நொண்டியாகி
எட்டி நடக்கும் பலமிழந்து படுக்கையில்
முட்டிமோதியெழும் கண்ணீரினை துடைத்துக்கொண்டிருக்கலாம்
 
     அதையும் கடந்துபோ....


கடப்பதற்காகத்தான் கால்கள்
நடப்பதற்காகத்தா னுன் கண்கள்
திடமாய் பிடித்துக்கொள்ளத்தானே காலங்கள்
மடமடவென்று மேல்நோக்கி பறந்து

      இதையும் கடந்துபோ

இருளேயென்று முடங்கிப்போய்விடாதே
இதயமேனோ மென்மையென்று புலம்பாதே
அருளான தைரியத்தை அணிந்துகொண்டு நீ
விரும்பிய பாதையில் நடந்து

      அத்தனையும் கடந்துபோ....

வஞ்சங்களையும் தோல்விகளையும்
நெஞ்சத்துள் சுமந்து திரியாதே
கொஞ்சமாய் விழித்துகொண்டாலும்
துஞ்சலாம் தன்னம்பிக் கையினின் பங்களை


   இதையும் கடந்துபோ....

எதுவும் கடந்து போய்விடும்
நிரந்தரமாய் எதற்கும் ஆயுளுமில்லை
இதுவா வாழ்வென்று வெம்பிடாதே
இதையும் கடந்து போய்க்கொண்டேயிரு.... 

Sunday, October 25, 2015

யன்னலோர இருக்கை







பேரூந்து பயணத்தில்
மகிழ்ந்து போவதுஎன்னவோ
யன்னலோர இருக்கையில்தான்..


நாசியை துளைக்கும்
வியர்வை மணத்தையும்
நாகரிகமில்லா நரகர்களின்
வினைகளில் விடுபடவும்
விரும்பிடுவது ஏனோ
யன்னலோர இருக்கையில்தான்....

முன்னெழுந்து பிந்தூங்கும்
முறைமையில் உழல்வதால்
சின்ன உறக்கத்தில் தேக‌
இறுக்கத்தை குறைத்திட‌
ஏங்குவதோ இந்த
யன்னலோர இருக்கைக்காகத்தான்....

என் தொலைபேசியில்
குவிந்து போ யிருக்கும்
குறுஞ்செய்திகளுக்கும்
பதிலளிக்க முடியாது போன‌
அம்மாவின் அழைப்புக்கும்
ஆறுதலாய் பேசிட‌
ஆர்வமாய் தேடுவது
யன்னலோர இருக்கையைத்தான்...

முகநூலில் மலர்ந்துபோயிருக்கும்
நண்பர்வட்டத்து அரட்டைக்கும்
வகைவகையான அவர் படைப்புக்களை
வாசித்து பின்னூட்டமிடவும்
வாஞ்சித்து நிற்பது
யன்னலோர இருக்கைக்காகத்தான்...

காற்றோடு சுமந்துவரும்
கவிக்கருவை சுகமாய் அள்ளிக்கொள்ள‌
நேற்றோடு மறந்துபோன பல‌
நேச நினைவுகளை மீட்டுச்சுவைத்திட‌
தேர்ந்தெடுப்ப தென்னவோ
யன்னலோர இருக்கையைத்தான்..


என்னதான் இரக்கக்குணம்
இதயத்தோடு ஒட்டிக்கொண்டாலும்
பட்டென எழுந்து
இருக்கையை பகிர்ந்தளித்தாலும்
நின்றுகொண்டு ஏக்கமாய்
நெஞ்சுக்குள் ஏங்குவது இந்த‌
யன்னலோர இருக்கைக் காக‌
மட்டு மாகத்தானிருக்கும்
பேருந்து பயணத்தில்.....!!

Friday, October 16, 2015

யோசிக்கமுடியா வுலகில் வாழ்ந்தோம்

பேசிப்பேசி நேசம் வளர்த்தோம்
நாசிவரையில் பாசம் நிறைத்தோம்
வாசித்தறியா கவியில் திளைத்தோம்
யோசிக்கமுடியா வுலகில் வாழ்ந்தோம்

பாசிப்போல படிந்துகொண்டோம்
தூசிவிழுந்தாலும் துடித்துப்போவோம்
ஏசிப்பேசிய கோபங்களறியோம் -நமக்குள்
ஆசியளிக்கும் இறைகளானோம்....

ஊசிக்குள் நுழைந்திடும் விந்தைக்கற்றோம்
வீசியெறிந்திடா உறவை காத்தோம்
ஓசிவாங்காமல் கவிதை படைத்தோம்
ராசியானவர்களாய் நாமுமானோம்...

கூசிடும் வார்த்தைகள் அழித்துவிட்டோம்
நேசித்திடும் வித்தைகளை அறிமுகம்செய்தோம்
பேசிப்பேசி நேசம் வளர்த்தோம்
யோசிக்கமுடியா வுலகில் வாழ்கின்றோம்...

Friday, October 2, 2015

மித்திரன் வார இதழுக்காக லண்டன் வானொலி அறிவிப்பாள் ஷைபா பேகம் அவர்களின் நேர்காணல்


கல்குடா நேசன் இணையத்தளத்தில் வெளியான எனது நேர்காணல் (25.09.2015)

இவ்வார “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில்” தலவாக்கலை கவிதாயினி த. எலிசபெத் inShare Screenshot_2015-09-21-14-07-41-1-minகல்குடா நேசனுக்காக ஓட்டமாவடி றியாஸ் அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று எழுதி வரும் பிரபலமான பெண் எழுத்தாளர் ஒருவரை இவ்வார இலக்கிய நேர்காணலூடாக சந்திப்பதில் கல்குடா நேசன் மகிழ்ச்சியடைகிறது. அந்த வகையில், ‘கல்குடா நேசனின் இவ்வார இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் மலையகத்தின் தலவாக்கலையில் பிறந்த கவிதாயினி த. எலிசபெத் 10356264_684363331635840_8923784676178505349_n-minஉங்களைப் பற்றி அறிமுகமொன்றை எங்கள் ‘கல்குடா நேசன்” இணையத்தள வாசகர்களுக்காக சொல்லுங்களேன்? 12047282_932514450154059_1512616066_n-min-minஇலங்கையின் இதயமாம் மலையகத்தின், இயற்கை எழிலே சூழலாகக்கொண்டு, வரலாற்று சிறப்பிடமாக கூறப்படும் தலவாக்கலை எனுமிடத்தில் பிறந்து அங்கேயே எனது பாடசாலை காலம் வரை கழித்திருந்தேன். தொழில் நிமித்தமாக தலைநகரில் தற்போது வசித்து வருகின்றேன். மூன்று சகோதரர்களுக்கு மூத்தவளான நான் சிவபதி தங்கராஜ் தம்பதிகளின் புதல்வி. ஆசிரியையாக பணியாற்றி வருகின்றேன்.

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
இவ்வார “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில்” தலவாக்கலை கவிதாயினி த. எலிசபெத் inShare Screenshot_2015-09-21-14-07-41-1-minகல்குடா நேசனுக்காக ஓட்டமாவடி றியாஸ் அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று எழுதி வரும் பிரபலமான பெண் எழுத்தாளர் ஒருவரை இவ்வார இலக்கிய நேர்காணலூடாக சந்திப்பதில் கல்குடா நேசன் மகிழ்ச்சியடைகிறது. அந்த வகையில், ‘கல்குடா நேசனின் இவ்வார இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் மலையகத்தின் தலவாக்கலையில் பிறந்த கவிதாயினி த. எலிசபெத் 10356264_684363331635840_8923784676178505349_n-minஉங்களைப் பற்றி அறிமுகமொன்றை எங்கள் ‘கல்குடா நேசன்” இணையத்தள வாசகர்களுக்காக சொல்லுங்களேன்? 12047282_932514450154059_1512616066_n-min-minஇலங்கையின் இதயமாம் மலையகத்தின், இயற்கை எழிலே சூழலாகக்கொண்டு, வரலாற்று சிறப்பிடமாக கூறப்படும் தலவாக்கலை எனுமிடத்தில் பிறந்து அங்கேயே எனது பாடசாலை காலம் வரை கழித்திருந்தேன். தொழில் நிமித்தமாக தலைநகரில் தற்போது வசித்து வருகின்றேன். மூன்று சகோதரர்களுக்கு மூத்தவளான நான் சிவபதி தங்கராஜ் தம்பதிகளின் புதல்வி. ஆசிரியையாக பணியாற்றி வருகின்றேன். Screenshot_2015-09-21-14-06-04-1-min 10356264_684363331635840_8923784676178505349_n-minஉங்களை கவிதை எழுதத்தூண்டியது வாசிப்பு அனுபவமா? இல்லை இயல்பாகவே எழுந்த உள்ளார்ந்த தூண்டுதலா? 12047282_932514450154059_1512616066_n-min-minவாசிப்பனுபவமே என்று தான் கூற வேண்டும். மிகச்சிறிய வயதிலேயே எனது அப்பாவின் அப்பா என்னை வாசிப்பதற்கும் வானொலியில் சிறுவர் நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கும் பழக்கியிருந்தார். அந்தப்பழக்கம் தொடர்ந்து என்னை வாசிக்க ஊக்குவித்தது. பாடசாலைக்காலங்களில் நிறைய வாசிக்கும் வசதி கிடைத்தது. பயன்படுத்திக்கொண்டேன். பத்திரிகை, கதைப்புத்தகங்கள், நாவல்கள் என்று ஒரு பக்கம் விடாமல் படித்து முடித்து விடுவேன். இப்போது நினைத்தாலும் அந்த அனுபவங்கள் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியைத்தருகின்றது. 10356264_684363331635840_8923784676178505349_n-minஉங்கள் எழுத்துப்பணிக்கு உங்கள் குடும்பம் ஆதரவளிக்கிறதா? 12047282_932514450154059_1512616066_n-min-minஎந்த விதத்திலும் எதிர்ப்பு இதுவரை வந்ததில்லை. பத்திரிகை, வானொலிகளில் எனது படைப்புக்கள் வந்ததும் முதலில் பார்த்து மகிழ்வது அவர்களே. 10356264_684363331635840_8923784676178505349_n-minமலையக தோட்ட தொழிளாலர்களின் வாழ்வு மிகவும் கஷ்டங்களும் வலிகளும் நிறைந்ததுமாகும். எந்த உரிமைகளற்றதும் அடக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் அதிகம் கொண்டதும் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் உங்கள் படைப்புகள் அவ்வாறான அடிமட்ட மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளைப் பேசுகிறதா? 12047282_932514450154059_1512616066_n-min-minநிச்சயமாக. எனது பல கவிதைகள், சில சிறுகதைகள் மலையக‌ப்பிரச்சினைகள் சார்ந்ததாக எழுதியிருக்கின்றேன். எதிர்காலத்தில் இன்னும் அது பற்றி நிறைய விடயங்களை பேச வேண்டுமென்ற ஆசை காணப்படுகின்றது. கட்டாயம் அது பற்றி விஷேடமாக எழுதுவேன். FB_IMG_1442904207956-min 10356264_684363331635840_8923784676178505349_n-minமலையகத்திலிருந்து பெண்ணியல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் சிலவும் வந்திருந்த போதிலும் ஒரு முழுமையான இலக்கியப் படைப்போ ஆய்வு நூலோ வெளி வராமை பெரும் குறையாகவே காணப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து? 12047282_932514450154059_1512616066_n-min-minவருந்தக்கூடிய உண்மை தான். மலையகத்திலிருந்து பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கையும் குறைவே, பெண்ணியல் சார்ந்த விடயங்களைப் பேசுவதற்கும், அது குறித்த எழுத்தாக்களையும் செயன்முறைகளையும் பலர் முன்னெடுத்து வந்திருந்த போதும், முழுமையாக நூல் வடிவில் வராத போதும் அது பற்றி அதிகமாகவே பேசப்படுகின்றது. ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் போய் சேர்கின்றது. அந்த வகையில் மகிழ்ச்சியே. எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நூல்களை எதிர்பார்க்கலாம். 10356264_684363331635840_8923784676178505349_n-minயாழ் இலக்கிய குவியம் வெளியிட்ட ‘நாம்” என்ற கவிதைத்தொகுதியில் உங்கள் கவிதையும் இடம் பெற்றிருக்கிறதே? 12047282_932514450154059_1512616066_n-min-minமகிழ்ச்சியான விடயமொன்று, முகநூலில் வெளிவருகின்ற சிறந்த கவிதைகளைத் தொகுத்து யாழ் இலக்கிய குவியம் கையடக்கமான சிறிய கவிதை நூலினை வெளியிட்டதது. பல இளம் படைப்பாளிகளின் கவிதைகளை சுமந்து வந்தது. எனது கவிதையும் அந்நூலில் இடம்பெற்றதை பெறுமையாக எண்ணுகின்றேன். யாழ் இலக்கிய குவியத்தின் அமைப்பாளர் திரு. தாஸ் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியினை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். அந்த அவரின் முயற்சியானது படைப்பாளிகளுக்கு ஊக்கமாகவும் தங்களை வளப்படுத்திக்கொள்ள களமாகவும் அமைந்திருந்தது. FB_IMG_1443000569082-min 10356264_684363331635840_8923784676178505349_n-minஇலங்கை தேசிய கவி சம்மேளனம் 2012 நடாத்திய கலை இலக்கிய பெரு விழாவில் உங்களுடைய இலக்கியப் பணியைப் பாராட்டி காவியப்பட்டம் வழங்கி கெளரவித்தார்கள். இது பற்றி…? 12047282_932514450154059_1512616066_n-min-minநான் எதிர்ப்பார்க்காத ஓர் அதிர்ச்சியான பொழுதுகள் அவை. இந்நிகழ்வுக்கு அழைப்புக்கடிதம் வந்ததும் வியந்து போனேன், நூலொன்றினை வெளியிடாமல் முழுமையான ஒரு படைப்பாளியாக ஏற்றுக்கொள்ளாத இலக்கிய சமூகம் பட்டம் வழங்கிக் கெளரவித்திருப்பது என்னளவில் பெறுமையே. ஊடகங்களில் வெளிவந்த படைப்புக்கள் பட்டம் வரை கொண்டு சென்றது. எனது இலக்கிய முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியென்று நினைக்கிறேன். அத்தனைப் பெரிய இலக்கியவாதிகள் மத்தியில் சிறியளவில் முயற்சித்துக்கொண்டிருக்கும் என்னையும் தெரிவு செய்து ஊக்குவித்த அமைப்பினருக்கு இவ்வேளையில், மனப்பூர்வமான நன்றிகளினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 10356264_684363331635840_8923784676178505349_n-minமலையக மண்ணிலிருந்து தலைநகர் கொழும்பில் பணி நிமிர்த்தமாக ஒரு தற்காலிகமான வாழ்வினை அமைத்திருக்கின்றீர்கள். இந்த சூழல் எப்படியிருக்கிறது? 12047282_932514450154059_1512616066_n-min-minஇந்தச்சூழல் ஆரம்ப காலங்களில் மிக மிகக்கடினமாக இருந்தது. எல்லாமே குடும்பத்தின் ஆதரவில் கிடைத்தது. பிறகு சுயமாகச் செய்ய வேண்டியேற்பட்டதால் மிகவும் சிரமப்பட்டேன். எனது அண்ணாமார்களும் பெரியம்மாவும் இந்த சிரமத்திலெல்லாம் உதவி செய்தார்கள். இப்போது பழக்கப்பட்டு விட்டேன். நிறைய மனிதர்களைப்பற்றி படித்துக்கொண்டும் விட்டேன் 10356264_684363331635840_8923784676178505349_n-minநல்ல கவிதைகளை எப்படி வரையறுக்கிறீர்கள்? 12047282_932514450154059_1512616066_n-min-minநல்ல கவிதை என்பது வாசகனுக்குப் புரிந்திருந்தால், அவன் அதில் மகிழ்ந்திருந்தால் ஓர் செய்தியினைப் பெற்றுக்கொண்டால், அதனை நல்ல கவிதை எனக்கூறலாம். மற்றும் படி வரையறுக்க வேண்டிய பெரிய தகுதியெல்லாம் தேவையில்லை என நினைக்கின்றேன். கவிதை கட்டுரையாகாமல் இருப்பதே அதன் முதல் தகுதி. இன்று அதிகமானவர்கள் புதுக்கவிதையென கட்டுரைகளையே எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். வாசகனே கவிதையின் தரத்தைத் தீர்மானிப்பவன். FB_IMG_1442178873449-min 10356264_684363331635840_8923784676178505349_n-minதொடர்ந்து செல்லும் உங்கள் இலக்கியப் பயணத்தில் உங்கள் முன்னோடி வழிகாட்டி என்று யாரையாவது குறிப்பிடுவீர்களா? 12047282_932514450154059_1512616066_n-min-minஎன்னுடைய இலக்கியப் பயணத்தில் நிறைய பேரை சொல்ல வேண்டும். முதலில் எனக்கு எழுத்தார்வத்தை ஊட்டிய என் அப்பப்பாவை சொல்ல வேண்டும். அவர் தான் இதன் ஆரம்பம். அதன் பிறகு நல்ல புத்தகங்கள், இலக்கிய நண்பர்கள், மூத்த இலக்கியவாதிகளின் ஆலோசனைகள் இவைகளே என்னை ஊக்கப்படுத்தியது. 10356264_684363331635840_8923784676178505349_n-minதா.எலிசபெத் என்ற பெயரிலும் எழுதுகிறீர்கள். அதே போல் முகநூல் இணைய தளங்கள் வாயிலாக ராஜ் சுகா என்ற பெயரிலும் எழுதுகிறீர்கள். இது தவிர்த்து வேறு புனைப்பெயர்கள் எதுவுமுண்டா? 12047282_932514450154059_1512616066_n-min-minஇல்லை. இந்த இரண்டு பெயர்களில் மட்டும் தான் எழுதி வருகின்றேன். 10356264_684363331635840_8923784676178505349_n-minநீங்கள் ஒரு ஆசிரியை என்ற வகையில் இன்று மாணவர்கள் மத்தியில் வாசிப்புப்பழக்கம் எப்படியிருக்கிறது? 12047282_932514450154059_1512616066_n-min-minதற்கால மாணவர்கள் மத்தியில் வாசிப்புப்பழக்கம் மிகக்குறைவு என்றே நினைக்கின்றேன். மாணவர்கள் நூலகங்களைத்தேடிச்செல்வதை விட இன்டநெட், கபேக்களை நாடிச்செல்வதே அதிகமாகக் காணப்படுகின்றது. மிகக்குறுகிய வட்டத்துக்குள்ளே தங்களது வாசிப்பனுபத்தை கொண்டுள்ளார்கள். பத்திரிகைகள், நூல்கள், வரலாற்று, இலக்கிய நூல்களைத் தெரிவு செய்து வாசிப்பது மாணவர்கள் மத்தியில் அரிதாகிக்கொண்டே வருகின்றது. கணனி விளையாட்டுக்களிலும், முகநூல் கணக்குகளிலும் (உயர் வகுப்பு மாணவர்கள்) தங்களது நேரத்தைச் செலவிடுகின்றனர். 12026447_935374449868059_1416475932_n (1)-min 10356264_684363331635840_8923784676178505349_n-minஅருகி வரும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த எவ்வாறன வழிகளை ஆசிரியர்களும் பெற்றோர்களும் கையாள வேண்டும் ? 12047282_932514450154059_1512616066_n-min-minமுன்பெல்லாம் வீடுகளில் நாளிதழ் வாங்காவிட்டாலும் வாரப்பத்திரிகையாவது வாங்கி விடுவார்கள். அப்போதெல்லாம் எமக்கு ஏதாவதொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இன்றைய கணனி யுகத்தில் இணையத்தில் அந்த வசதியிருந்த போதும் அவை சரியாகப் பயன்படுத்தப்படுகின்றதா? என்பது கேள்விக்குறியே. ஆதலால் பாடசாலை நூலகங்களைச் சரியாக பயன்படுத்த மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க‌ வேண்டும். புதிய நூல்கள் கிடைப்பதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த வேண்டும். வீடுகளில் பெற்றார்கள் சிறுவயது முதலே வாசிப்புப்பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது பெற்றோரின் தலையாய கடமையென்றே கூறுவேன். பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்களுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் பெற்றார், நண்பர்கள், அவர்களுக்கு குறைந்தது ஒரு நூலையாவது பரிசளிப்பது ஒரு நல்ல பழக்கமாகும். பத்திரிகை வாசித்தலை பழக்கப்படுத்துங்கள், சிறந்த நூல்களைத் தெரிவு செய்து கொடுத்து வாசிப்புப்பழக்கத்தை மேம்படுத்துங்கள், இதுவே நாம் நம் சந்ததியினரின் எதிர்கால வளர்ச்சிக்குச் செய்யும் ஓர் நல்ல விடயமாகும். Screenshot_2015-09-21-14-07-41-1-min 10356264_684363331635840_8923784676178505349_n-minஉங்கள் முதலாவது கவிதை தொகுப்பு வெகு விரைவில் வரவிருப்பதாக அறிந்தோம். இது பற்றிச் சொல்லுங்களேன்? 12047282_932514450154059_1512616066_n-min-minஆமாம். ‘சுமைகளின் சத்தங்கள்’ என்ற தலைப்பில் ஓர் கவிதை நூலினை வெளியிடுவதற்காக முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன். கடவுள் சித்தமானால் இவ்வருடத்துக்குள் வெளியிடலாமென்று நினைத்திருக்கின்றேன். 10356264_684363331635840_8923784676178505349_n-minஇறுதியாக….? 12047282_932514450154059_1512616066_n-min-minஇலங்கையில் எங்கோ ஓர் மூலையிலிருந்த என்னையும் எனது கவிதைகளையும் இவ்வளவு தூரம் கொண்டு வந்த கல்குடா நேசன் இணையத்தளத்திற்கும் என்னை நேர்கண்ட எழுத்தாளர் றியாஸ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். Share ! inShare

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
http://kalkudahnation.com/

கல்குடா நேசனுக்காக ஓட்டமாவடி றியாஸ் அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று எழுதி வரும் பிரபலமான பெண் எழுத்தாளர் ஒருவரை இவ்வார இலக்கிய நேர்காணலூடாக சந்திப்பதில் கல்குடா நேசன் மகிழ்ச்சியடைகிறது. அந்த வகையில், ‘கல்குடா நேசனின் இவ்வார இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் மலையகத்தின் தலவாக்கலையில் பிறந்த கவிதாயினி த. எலிசபெத்

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

வாழ்க்கை விசித்திரமானது

இப்போதெல்லாம் மனம்
இலேசாகிப் போ யிருக்கிறது
கறுத்த இரவுகளும்
காணாமல்போன இனிமைகளும்
அநாயசமாய் வந்தமர்ந்திருக்கிறது

ஓலமிட்ட துயரங்கள்
ஒன்றுக் குமுதவாத கண்ணீர்களும்
ஓடிப்போய் ஒளிந்துகொண்டன‌....

அத்தனைப்பூக்களையும் ரசிக்கின்றேன்
அழும் குழந்தைகளையும் கொஞ்சுகின்றேன்

பித்துப்பிடித்த நிஜங்களைய‌ழித்து
புதிதாய் வானில் பறக்கிறேன்
நிமிடங்கள் அழகானது
நிதர்சனங்களை யது காட்டியது
நீலவானம் நிறம்மாறினாலும்
நின்று ரசிக்கத்தோன்றுகின்றது

வாழ்க்கை விசித்திரமானது
தாழ்வை தூக்கி மிதித்துப் போட்டால்
கடந்திடும் பாதை சுவையானது
கண்டால் அதுவே சுவாரஸ்யமானது

துடிப்பே இல்லாத பயணம்...


அதிகாலையை எழுப்பிடும் அலாரம் விழிகளுக்கோ
அலாதிக்குள் மூழ்கிடும் உறக்கம்
அலுவலக நினைப்போ நெஞ்சுக்குள்
அலறியடிக்கத் தூண்டிடும் நெருக்கம்

சிட்டாய் தேனியாய் எனக்குள்
சில்லென்ற உற்சாகம் தொற்ற‌
பட்டாய் பட்டமாய் நானும்
பறப்பதற்காய் பாதையிலே

தேங்கி நின்றிடும் தேக்கங்களாய்
வேகமெடுக்கா வாகன சில்லுகள்
ஓங்கி அடித்தான் ஒருவன் சேற்றை
ஓரத்தில் நிற்குமென்மேல்

மனிதம் தேடும் உலகினில் அந்தோ
மடிந்து போனது உள்ளம்
துணிந்து தவறை இழைத்தும்
துடிப்பே இல்லாத பயணம்...

அமைதியாய் விடிந்த அழகான காலை
ஆர்ப்பரிக்கும் கடலலையானதே இதயம்
சுமையாய் படர்ந்து அழுக்கான அவனை
சுட்டெரிக்கத்தோன்றியதே...

எக்கேடு கெட்டாலும் தன்னலம் காக்க‌
எதனையும் செய்திடும் மக்காள்
பக்கத்தில் நின்றிடும் மனிதம் காக்கா தூநீ
பறந்து எங்கேபோய் முடிவாய்....


(மழைக்காலமான இந்நாட்களில் வாகன சாரதிகளின் மெத்தப்போக்கு இன்று காலையில் என்னை கடுப்பாக்கியது. ஏதோ பெரிய அப்பாடக்கர்களைப்போல வேகமாக‌ போகும் அவர்களின் திமிர்தனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அந்த ஆதங்கம். சம்பவம் இதுதான்: வயதான ஒருவர் குடையுமில்லாமல் வேகமாக வேலைக்கு போகும்போது அதிவேகமாய் வந்த அந்தக்கார் சேற்றை அள்ளியடித்து விட்டுபோனதும் அப்பாவியாய் பார்த்து தனது உடையின் சேறுகளை தட்டிக்கொள்கிறார் அந்தப்பெரியவர்.... )

தோஹா கட்டார் நாட்டில் வெளிவரும் "தமிழ் டைம்ஸ்" பத்திரிகையில் வெளியான எனது கட்டுரை