இரவு 7மணிக்குப்பின் வெளியில் சென்றுவரும், முகநூலில் இருக்கும், தொலைபேசியில் பேசும் போன்ற இதர வேலைகளில் ஈடுபடும் பெண்கள் பற்றி நாகரிக வளர்ச்சியடைந்த சமூகத்தின் பார்வையில் ஆரோக்கியம் இல்லை. கோணலும் மாணலுமாய் கொள்ளிக்கட்டைவைக்குமளவுக்கு கொடுரமாய் இருக்கிறது அதற்கு ஒரு சிறிய உதாரணம்.
சுவாரஸ்யமான ஒரு கவிதை நூலினை வாசித்த களைப்போடு அதன் விமர்சனத்தையும் எழுதவேண்டுமென நினைத்து அதனையும் நிறைவேற்றிவிட்டு நிமிர்கையில் நேரம் இரவு பத்துமணியை தாண்டிவிட்டது. அப்போதுதான் தெரியும் நூலின் முகப்பட்டை என்னிடம் இருக்கவில்லை எப்படி இதனை பிரசுரிப்பது என எண்ணியவாறு நூலாசிரியருக்கு குறுஞ்செய்தியனுப்பினேன் மின்னஞ்சலில் முகப்பட்டையை அனுப்புமாறு. குறுஞ்செய்தி 'நான் போய்விட்டேன்' என்று சைகை காட்டியபின்னர்தான் என் மண்டைக்கு ஒரு விடயம் உறைத்தது. இத்தனை மணிக்கு ஒரு ஆண் நண்பருக்கு அதுவும் முதன்முதலில் குறுஞ்செய்தி அனுப்புகின்றோமே அவர் என்னைபற்றி என்ன நினைப்பார் ஏதாவது தவறாக நினைக்கக்கூடுமோ என அங்கலாக்கத்தொடங்கினேன். "அட இந்த பொண்ணு என்னடா, ஏன் அப்படி யோசிக்கிறீங்க உங்கள யார் தப்பா நினைக்கபோறாங்க அல்லது தப்பா நினைக்க இதில் என்ன இருக்கின்றது?" என்று நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அப்படி ஒரு எண்ணம் எனக்கு முதன்முதலாய் வருவதற்கு ஒரு பெரிய காரணம் இதுதான்.
அந்த பெண்மணி சமூசத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் சமூகத்திற்கு பிரயோசனமான பல தளங்களில் செயலாற்றும் ஒருவர். அதிகாலைமுதல் வீடுவேலைகளோடு போராடி பின்னர் தொழில், பொறுப்புக்கள், கடமை, குழந்தை என இயங்கிவிட்டு இரவு வேளைகளிலே தனது இதர விடயங்களைக்கவனிப்பார் பத்திரிகை, முகநூல், எழுத்து போன்றன அப்படி ஒருநாள் இரவு முகநூலினை பயன்படுத்தும்போது (அவர் நேரத்தை கவனிக்கவில்லை) ஒரு ஆண் அவருக்கு ல் செய்தியனுப்பிக்கொண்டிருந்தார் தனது தந்தை வயதிலிருக்கும் ஒருவர் என்ற ரீதியில் அவரும் பதிலளித்திருக்கின்றார் சில கேள்வி பரிமாற்றத்தின் பின்னர் அவர் தவறான எண்ணங்களுடன் வார்த்தைகளை பிரயோகித்திருக்கின்றார் அதற்கு நல்ல பதிலடியினை கொடுத்துவிட்டு நேரத்தைப்பார்க்கையில் நேரமோ பன்னிரெண்டை தாண்டிக்கொண்டிருக்கின்றது இந்த நேரத்தில் ஒரு பெண் முகநூலில் இருப்பதுகூட தவறான சிந்தனையை ஏற்படுத்துமா? இரவு 7 மணிக்குப்பின்னர் பெண்களின் தரம் கணிக்கப்படும் விதங்கள் சரியானதா? இதற்கான விடை கிடைக்கப்போவதில்லை இப்படிப்பட்ட பார்வைகள் மாறுவதற்கு இந்த கருத்துமட்டும் போதுமானதில்லை என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும் ஆதங்கத்தை கொட்டிக்கொள்வதற்காக மட்டுமே இந்தப்பதிவு, திருத்துவதற்காக அல்ல......
No comments:
Post a Comment