Monday, October 7, 2013
மகிழ்ச்சியை கண்ட மணித்துளிகளில்...
நாகரிக வேகத்துக்கேற்ப நளினமான வீடுகள்
நகரத்து வாசமில்லாத நல்லவர்களின் புன்னகைகள்
தூய்மையான காற்று தூபமிடும் மரங்கள்
துணைக்கு இணையாய் துள்ளியோடும் பிராணிகள்..
மனிதத்தை போற்றிடும் மனதுள்ள மனிதர்கள்
மற்றவரின் துன்பத்தை ஏற்றிடும் மாநுடர்கள்
புனிதத்தை காட்டிடும் போலியில்லா வார்த்தைகள்
புகலிடந்தான் இவர்களிடம் புதிதான அன்புகள்
வாடைக்காற்றுக்குள் வட்டமிடும் வண்ணாத்தி
பாட்டுக்குரலோடு பரவசமாய் பட்டுப்பூச்சி
தேனுண்ட களிப்பினிலே தெம்மாங்கு கீதம்
இசைக்குதங்கே மலருக்குள் இதமாகவண்டு...
மழலை மாறாத மாணிக்கப்பிஞ்சுகள்
மகிழ்வுகுறையாத மணிக்கணக்கான பேச்சுகள்
மனம் நிறைந்த அப்பொழுதுகள் மீண்டிடுமாவென்று
மதிநிறைந்த கேள்வியோடு விடைபெற்றேனன்று....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment