http://www.vaarppu.com/view/2778/
ஏமாற்றுக்காரி!!.. அந்தக்காலந்தான் வந்திடுமா
01.
ஏமாற்றுக்காரி!!
-------------------------
அன்பை கொண்டுவந்தேன்
ஆஸ்தியைத் தேடினாய்
பாசத்தோ டோடிவந்தேன்
பணமா வென்று பார்த்தாய்
பரிவுடன் பக்கத்திலிருந்தேன்
பதவியெங்கே யென்றாய்
பிரியத்தோடு நெருங்குகையில்
பட்டத்தினையும் பெற்றுக்கொள்ளென்றாய்
காதலோடு வந்தபோதெல்லாம்
குடும்பத்தை தாண்டமாட்டேனென்றாய்
ஏழைக்காதலியாய்
ஓடிவரும்போதெல்லாம்
ஏளனமா யொதுங்கிப்போனாய்
சமூகக்கேள்விக்கு
சர்வாங்கப்பலியாகாமல்
சம்சாரமாகிவிட்ட எனைபார்த்திப்போ
என்ன சொல்லப்போகின்றாய்
ஏமாற்றுக்காரியென்பதைத் தவிர????
02. அந்தக்காலந்தான் வந்திடுமா...
------------------------------------
ஒருசுண்டு கஞ்சி காய்ச்சி
உறவெல்லாம் கூடியிருந்து
வயிறார உண்டுகளித்த
வசந்த மினி வந்திடுமா...
அம்மம்மா கதை சொல்ல
அப்பப்பா நடைபழக்க
அத்தைசோறு ஊட்டிவிட்ட
அந்தக்காலந்தான் வந்திடுமா...
அம்மாகை ஓங்கிவர
அப்பம்மா அதைத்தடுக்க
தேம்பியழும் எந்தனுக்கு -கிடைத்த
தேறுதலினி கூடிடுமா...
பள்ளிசென்று வந்தவுடன்
களைநீக்கும் அப்பம்மா
துள்ளிவிளையாடிவிட
சொல்லித்தரும் அம்மப்பா...
தலைவலி காய்ச்சலுக்கு
தைலங்க ளேதுமின்றி
பாட்டிசெய்த வைத்தியத்தில்
கிடைத்த சுகந்தான் கிட்டிடுமா..
கூட்டாக கதைபேசி
குடும்ப பலம் வலுத்திட்ட
கூடிக்களித்த காலமினி
கோடிகொடுப்பினும் மீண்டிடுமா...
இழப்புக்கள்
பலாத்காரமாய் சந்திக்கவேண்டிய
பலவந்தம்...
விரும்பியோ விரும்பாமலோ
விதியின் வழியில்
வழிமறித்திடும் நிஜங்களிவை...
நாளை பார்த்திட முடியுமெ ன்ற
தற்காலிக பிரிவு முண்டு
நாட்கள் சென்றாலும்
நினைவுகளை மட்டும் சுமந்திடும்
நிரந்தர பிரிவுமுண்டு...
காலவோட்டத்துக்கு பின்னால்
கட்டளை போலோட வேண்டிய
கடப் பாடுண்டெமக்கு
நிதர்சனங்களை சுமந்துகொண்டு
நடைபோட வேண்டியது
நமக்கான வாழ்வியல் சட்டங்கள்...
தமிழுக்கு மரணமில்லையென்றால்
தமிழ் காத்த தலைவர்களுக்கும் மரணமில்லை
அவர்களின் சுவாசம்
மண்ணின் மறைவு வரையில்
தமிழோடு சுவாசித்துக்கொண்டேயிருக்கும்
காலமவர்களை அசைபோட்டுக்கொண்டேயிருக்கும்...
பலாத்காரமாய் சந்திக்கவேண்டிய
பலவந்தம்...
விரும்பியோ விரும்பாமலோ
விதியின் வழியில்
வழிமறித்திடும் நிஜங்களிவை...
நாளை பார்த்திட முடியுமெ ன்ற
தற்காலிக பிரிவு முண்டு
நாட்கள் சென்றாலும்
நினைவுகளை மட்டும் சுமந்திடும்
நிரந்தர பிரிவுமுண்டு...
காலவோட்டத்துக்கு பின்னால்
கட்டளை போலோட வேண்டிய
கடப் பாடுண்டெமக்கு
நிதர்சனங்களை சுமந்துகொண்டு
நடைபோட வேண்டியது
நமக்கான வாழ்வியல் சட்டங்கள்...
தமிழுக்கு மரணமில்லையென்றால்
தமிழ் காத்த தலைவர்களுக்கும் மரணமில்லை
அவர்களின் சுவாசம்
மண்ணின் மறைவு வரையில்
தமிழோடு சுவாசித்துக்கொண்டேயிருக்கும்
காலமவர்களை அசைபோட்டுக்கொண்டேயிருக்கும்...










.jpg)






















.jpg)







