13.07.2011 எழுதியது
மொழிவள நாட்டிலே
கனி வளமாய் கவிந்துருகிடு துங்கள்
கலை நிலம்!
தமிழ் காத்திடு தலைமக னகராதியில்
தனித்து வக்குரலாய் கர்ஜனையில்
தகித்திடும் சிம்ம சொப்பனமே -நீவீர்
காலச்சமூத்திரம் கண்டெடுத்த
வையகத்தின் முத்து -நின்
வைரங்கள் பாய்ந்த பாக்களால் -தமிழ்
சுர மீட்டுகையில் மனதெங்கும்
உர மாயிடுதே உலகமொ ழியின்னும்
தரமாகிடுதே...
வாழ்வாங்கு வாழ்தலினை பெற்று
தாழ்வாங்கு போயிடா தமிழினைகொண்டு
புகழ்வாங்கு பேரரசே நீ சாதனைபல கண்டு
புவி வாழ்வின் பேற்றினை பெறவே -இப்
புல்லி னுஞ்சிறிய கவிப்பூக்களை உங்கள்
அகவை கடந்த அகமகிழ் நாளில்
அள்ளி தெளிக்கிறேன் மனதாரச்
சொல்லி லளிக்கிறேன்...
No comments:
Post a Comment