******************************************************************************************************************************************************************
எப்போதும் குழந்தைகள் என்றால் எனக்கு பிரியம்தான் அதுவும் அவர்களது மழலையினை ரசிப்பது இன்னும் கொள்ளைப்பிரியம். இந்த குட்டிஸ்களின் சிரிப்பு அழுகை குறும்பு குழப்படிகள், தத்தித்தத்தி நடக்கும் புதிய நடை, விழுந்து எழும் அழகாக முகஞ்சுழிப்புக்கள் என்று இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.
குழந்தை மனம் எவ்வளவு அழகானது என்பதனை அநுபவித்து பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கே அதை வார்த்தைகளில் வர்ணித்துவிட முடிவதில்லை. ஒருவித கள்ளங்கபடம் சஞ்சலம் இல்லாத அந்த வெள்ளை உள்ளங்களை பார்த்துமகிழும்போது கிடைக்கும் திருப்தி எனக்கு எப்போதும் பரமதிருப்தி.
அதிலும் இப்போதெல்லாம் நான் வேதனையின் உச்சத்துக்கு போய்வருவது வழமையாகிவிட்டது அப்போது எங்காவது குழந்தைகளை கண்டால் என்னையறியால் என்னையே நான் மறந்துவிடுவேன் அந்தளவிற்கு குழந்தைகளின் அசைவுகள் என்னை அசையாமல் நிலைக்கச்செய்துவிடும்
என்னை மறந்து உண்மையாக சிரிப்பதுகூட இந்த குழந்தைகளை கண்டு ரசிப்பதில் மட்டுமே என்று நான்கூறுவதை எத்தனைபேர் நம்புவீர்களோ தெரியாது ஆனால் என் மனம் இப்போதெல்லாம் இதற்குமட்டுமே அடிமையாகிக்கிடக்கின்றது போலியான இந்த உறவுகள் மத்தியில்....
நான் வேலைக்கு பேரூந்தில் செல்வது எனது வழக்கம்
போகும்போது அந்த சனநெரிசலிலும் போக்குவரத்து நெரிசலிலும் பேரூந்து மிக மெதுவாக போய்க்கொண்டிருந்தது வெளியில் ஒரு 2வயது மதிக்கத்தக்க அந்தக்குழந்தை தன் தந்தையுடன் நடந்துபோகும் அந்த மழலை நடையும் பிஞ்சுக்கைகளை ஆட்டி ஆட்டி நடக்கும் விதமும் என் பார்வைக்கும் மனதுக்கும் புதுய உற்சாகத்தை பிரவாகித்துக்கொண்டிருந்தது. அன்றைய நாள் முழுதும் அந்தக்குழந்தையில் நினைவுகளை நிழலாடிக்கொண்டிருந்ததோடு அன்றைய நாளுக்கான என்னுடைய கதைக்களமாகவும் மாறிவிட்டது.
குழந்தைகளுக்கு அலங்காரமிட்டு அழகுபார்க்க எனக்கும் கொள்ளை ஆசைதானுங்க ஆனால் யார் அவங்க குழந்தைய என்னிடம் தருவாங்க?? அதனால அவங்க செய்வதை சும்மா நின்று பார்த்துகொண்டு இருப்பன்.நெற்றியில் பொட்டு வைக்க அம்மா படும்பாடும் அதை வைக்கவிடாமல் அவர்கள் படும் பிரயத்தனமும் இருக்கே அப்பப்பா என்ன ஒரு பிடிவாதம் அழாகான பிள்ளைவாதம்.
அழும் குழந்தையை அள்ளிக்கொஞ்சிட ஆசை......
துயிலும் குட்டிக்களை தலைக்கோதி மகிழ்ந்திட ஆசை
அசைவுகள் ஒவ்வொன்றும் அகிலத்தின் ஆச்சரியங்கள்.....
இவர்களின் குறும்புகளை உங்கள் உள்ளங்களில் சேமித்துக்கொள்ளுங்கள் உயிரை உருக்கும் சோகம்கூட சுகமாக மாறிவிடும்...
****************************************************************
எனக்கும்கூட குழந்தையாகிவிட ஆசைதான் ஆனால் முடியாது இருந்தாலும் மனதை குழந்தைத்தனமாக வைத்துக்கொள்ளமுடியும் அதைத்தான் முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன் நீங்களும் முயன்றுபாருங்கள்.
முக்கியமாக குழந்தைகள் உன்னை ஞாபகப்படுத்துவதாலும் உன்னுடைய குழந்தைத்தனங்களை அவர்கள் வெளிப்படுத்துவதாலும் இன்னும் குழந்தைகளை அதிகமாக விரும்புகின்றேன்.
No comments:
Post a Comment