சோகந்தனை சொல்லிடவும்
சொந்தமென்று எவருமில்லை
சோதனையை சுமந்திடவும்
இதயத்தினில் வலிமையில்லை...
ஆழ்ந்து அழத்தோன்றுகிறது
அடிமனதேனோ கனத்திடுகிறது
ஆனந்தங்கொண்ட நெஞ்சமின்று
ஆறுதலின்றியே அடங்கியிருக்கிறது...
தோல்வியினால் வீழ்ந்திடவே
கோழையல்ல என்நெஞ்சம்
வேள்வியினால் ஏழ்ந்திடவே
வாழ்வினிலே என்தஞ்சம்...
எண்ணை தீர்ந்த விளக்கிது
என்னை தீயாய் வளர்த்திட்டேன்
மண்ணைபோல விளைந்திட
கல்லையும் காலமாய்கொண்டிட்டேன்...
பாதை வேகமாய் நீள்கின்றது
பயணம் எனையும் சூழ்கின்றது
வழியை எங்கோ தொலைத்திட்டேன்
விழியை ஒளியாய் தொடர்ந்திட்டேன்...
Friday, August 12, 2011
லண்டன் தமிழ் வானொலிக்கு என்றன் நன்றிகளுடன் சில வார்த்தைகள்
தேசம் கடந்துவாழும் நேசங்களுடன் கிட்டிய ஓர் உறவுப்பாலந்தனை வழங்கிய லண்டன் தமிழ் வானொலி பொறுப்பாளர் திரு நடாமோகன் அவர்களுக்கும் "கீதாஞ்சலி" நிகழ்ச்சியின் அறிவிப்பாளினி திருமதி ஷயிப் மலிக் அவர்களுக்கும் வானொலியின் சகல அங்கத்தவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
31.07.2011 அன்றைய கீதாஞ்சலி நிகழ்ச்சியில் எனது நேர்காணலை ஒலிபரப்பி புதிய படைப்பாளியாக தமிழ் நெஞ்சங்களுக்கு மத்தியில் என்னை அடையாளப்படுத்தியதில் மகிழ்வடைகின்றேன்.இந்நேர்காணலை மீண்டும் ஒலிபரப்பி நேயர்களின் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் இணைத்து எனது கவிதைகளை உங்கள் பார்வையில் ஆராய்ந்து நல்ல பகர்ந்துகொண்டபோது உண்மையில் எனது கவிதைகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பாதாக உணர்ந்துகொண்டேன்.அந்த அனுபவத்தினை பெற்றுத்தந்த உங்களுக்கு எனது நன்றிகள்.நிறந்த நேசத்தோடு வளமான வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் பகர்ந்துகொண்ட தமிழ் உறவுகளுக்கு எனது நன்றியினை மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
திரு நடாமோகன் அண்ணா அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். உங்களது கவி விமர்சனம் உண்மையில் என் மனதை நெகிழவைத்தது. அத்தோடு எனது குறைகளையும் உணரமுடிந்தது.நீங்கள் தந்த ஆதரவும் ஊக்குவிப்பும் எனது உற்சாகத்தை இன்னும்ம் அதிகப்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை. இன்னும் உங்களின் ஆதரவுகளையும் ஆலோசனைகளையும் எதிர்ப்பார்த்திருகின்றேன்.
நான்குவரிக் கவிதைகளுக்கு கிடைத்த வாழ்த்துக்கள் என் கவிகளுக்கு உரமூட்டியிருக்கிறது ஆனாலும் ஷயிப் மலிக் அக்கா அவர்கள் ஒரு வளர்ந்த கவிஞருக்கு தரக்கூடிய வாழ்த்துக்களை அல்லது மகுடத்தினை பகர்ந்தது அதிகப்படியென்றாலும் உங்களின் பரந்த மனதிற்கும் ஊடகத்திற்கே இருக்கக்கூடிய சமநிலைப்பார்வைக்கும் என் சிரந்தாழ்த்துகின்றேன்.
திரு நடா அண்ணா சொன்னதுபோல குழந்தையென்றால் அதை குழந்தையாத்தான் பார்க்கவேண்டும் வெள்ளைக்குழந்தை, கருப்புக்குழந்தை குண்டு குழந்தை, மெல்லிய குழந்தையென்ற பாகுபாடிருக்கக்கூடாது. இக்கொள்கையினை உங்களின் நிகழ்ச்சியினூடாக அறிய முடிந்தது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் நிகழ்ச்சிகள் வளரவேண்டும் சிறப்படைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன்.
நன்றி!
-த.எலிசபெத்-

ஓருயிர்
நீயும்
நானும்
ஒன்று
இரண்டு
நூறு
ஆயிரமென
எண்ணிக்கை
கடந்தின்று
ஓருயிர்
ஓரிதயமானோம் நம்
மண(ன)நாளில்
நானும்
ஒன்று
இரண்டு
நூறு
ஆயிரமென
எண்ணிக்கை
கடந்தின்று
ஓருயிர்
ஓரிதயமானோம் நம்
மண(ன)நாளில்
சின்னச் சின்ன சிந்தனைகள்
01.உனக்கு எதிரி நீயேதான்!!
உன்னை வென்றுபார்-இதோ
உலகையும் வென்றிட்டாய்...
உள்ளந்தனை உற்றுப்பார்-இதோ
உண்மைகளை கண்டிட்டாய்...
உபாதைகளை தாண்டிப்பார்-இதோ
உயரங்களை அடைந்திட்டாய்...
உனக்கு எதிரி நீயேதான்
உன்னை வென்று பார்!!
02.வாலிபத் திரை கிழிகையிலேதான்
வாழ்க்கையை நீயுமறிகிறாய்
வசந்தங்களிருக்கும் போதோ
விழி மூடியே துயில்கிறாய்!!
03.நீதியின் பாதைகள்
நீண்டு சென்றாலும்
வழியதின் நடுவிலே
வலித்து நிறுத்திடுகிறது
பாதங்கள்!!
04.நெருக்கப்படும் போதெல்லாம்
நொருங்கி விடாதே
வருத்தப்பட்டுன் மனமெல்லாம்
திருத்தப் படுவதையறிந்திடு!!
05.பொருந்தாக் காதலினால்
பொல்லடி படுவதிலும்
பொசுக்கும் காதலையே
பொறுமையோடே கழித்திடலாம்!!
உன்னை வென்றுபார்-இதோ
உலகையும் வென்றிட்டாய்...
உள்ளந்தனை உற்றுப்பார்-இதோ
உண்மைகளை கண்டிட்டாய்...
உபாதைகளை தாண்டிப்பார்-இதோ
உயரங்களை அடைந்திட்டாய்...
உனக்கு எதிரி நீயேதான்
உன்னை வென்று பார்!!
02.வாலிபத் திரை கிழிகையிலேதான்
வாழ்க்கையை நீயுமறிகிறாய்
வசந்தங்களிருக்கும் போதோ
விழி மூடியே துயில்கிறாய்!!
03.நீதியின் பாதைகள்
நீண்டு சென்றாலும்
வழியதின் நடுவிலே
வலித்து நிறுத்திடுகிறது
பாதங்கள்!!
04.நெருக்கப்படும் போதெல்லாம்
நொருங்கி விடாதே
வருத்தப்பட்டுன் மனமெல்லாம்
திருத்தப் படுவதையறிந்திடு!!
05.பொருந்தாக் காதலினால்
பொல்லடி படுவதிலும்
பொசுக்கும் காதலையே
பொறுமையோடே கழித்திடலாம்!!
Monday, August 8, 2011
மனதில் நின்றவை வரிகளாய்...
01.என் கனவுகளெலாம்
உனதான தென்பதற்காய்
என் விடியல்களையும்
இருட்டடிப்புசெய்ய விரும்பவில்லை!!
02.ஆழ்ந்த உறக்கத்தினில்
ஆலமரத்தினின் றேதோ
ஆத்மாவின் சலசலப்பு
மரத் தடிச்சூழவுள்ள மனங்களுக்கு
மர்மப் பீதி இரண்டுநாட்களாய்
மந்திரஞ் சொன்னபிறகே
மாயமாய் போனதெலாம்
இரண்டுநாள் வேலைநிறுத்தத்தில்
இன்று காலைதான் வந்ததுபோனது
குப்பை வண்டி!!
03.சட்டத்தினை மதிக்கச்சொல்கின்றோம்
சட்டமெம் கையிலிருக்கும்போது
சட்டத்தினை குத்தகைக் கெடுக்கிறோம்
சட்டத்தின் கையில் நா மிரு(று)க்கும்போது!!
04.மனம் முழுக்க
வலியின் விம்பங்கள்
வழிந்து கிடந்தாலும்
நம்பிக்கை மின்மினிகள்
சிறகடிக்க தவறுவதில்லை!!
05.நீ சிவனே என்றதை
நான் இயேசுவே என்கின்றேன்
நீ அல்லா என்பதை
நான் புத்தாவென்கின்றென்
அழைப்புக்கள் வேறுபட்டாலும்
மூல மொன்றுதான்
முளைகளும் கிளைகளுந்தானிங்கே
முட்டுக்களை பரப்பின!!

Thursday, August 4, 2011
மனிதனாய் வாழ்ந்திடலாம்!!
நோன்புதனை நோற்பதினால்
மாண்புதனை பெற்றிடலாம்
அன்புதனை கொண் டதனால்
அண்ணலினை கண்டிடலாம்...
நபி வழியில் நடப்பதனால்
நல் லொளியை பெற்றிடலாம்
தூஆக்கள் கேட்பதனால்
தூய வழி கொண்டிடலாம்...
உயிருள்ள நாட்களெலாம்
உண்மையாக இருந்திடுவோம்
தீங்கு செய்யும் கயவருக்கும்
நன்மைதனை செய்திடுவோம்...
தூற்றுதலை தூஷனத்தை
தூரத்திலே தள்ளிடுவோம்
தூயவரின் வழிநடந்து
மாய லோகை வெறுத்திடுவோம்...
குர் ஆனை ஓதுவதால்
குற்றங்களை உணர்ந்திடலாம்
மற்றவரை மன்னிப்பதால்
மனிதனாய் வாழ்ந்திடலாம்...
[ரமழான் பெருநாளை கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்]

சாதிநெறி சாகட்டும்
சாதிகளில்லையடி பாப்பா
சாதனைத்தலைவன்
சரித்திரம் படைத்திட்டா னேயவன் பாவிலே...
சதையை யறுத்திடும்போது
சாதியை யெதிலே தேடுவாயோ
சிவந்த குருதிக்கடலிலே எந்த
சா(ந)திமூலத்தை அறிவாயோ??
ஊற்றுக்கள் உறவாய் உதிக்கையில்
உனக்கு மெனக்குமேனடா
உரிமைச்சண்டைகள்...
தேசம் வேறில்லை
தேகம் வேறில்லை
தோற்றமும் வேறில்லை
விலங்கென்றும் மனிதரென்றும்
வித்தியாசம் அறியாயோ...
மனிதக் கழிவாய்
மனதின் வழியாய் உன்
சாதிச் சரித்திரத்தை
சாக்கடை யிலிட்டெரித்திடு
சந்தோசக்குலைச்சல்கள் சாகட்டும்...
ஊரெங்கும் உறவுச்சூரியன் உதிக்கட்டும்
உலகெங்கும் உன்னதவொளி பரவட்டும்...
[முகப்புத்தகச்சொந்தங்களின் கருத்துக்களையும் இணைத்துள்ளேன் மனப்பூர்வமான வாழ்த்துக்களை பகர்ந்து கொண்ட சகோதர சொந்தங்களுக்கு மகிழ்வுடன் நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.]

கவித் தோழன் கோத்திரக் கொள்கைகள் அழியட்டும் - யாரும்
குலம் ஒன்றென்பதையே மொழியட்டும்.
வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்
June 22 at 1:36am · · 3 peopleLoading...
Bharathi Pitthan ஊணுங் குருதியும் பால்மாறா தோற்றமுங்
காணும் மனிதற் கியல்பே- காண்கிலேன்
நாண மிலாதார்க் கலந்திட்ட நஞ்சினால்
வீணாய் பிரிந்த பிரிவு.
தங்கை சுகாவின் கவிதையில் எழுச்சியும், வேகமும் தெரிகிறது......
அவரைச் சார்ந்தவர்களாவது திருந்தக்கூடும்.....
June 22 at 3:03am · · 1 personLoading...
Vithya Rajkumar அழகு... அழகு.. வாழ்த்துக்கள்::::::::::::::.
June 22 at 4:36am · · 2 peopleLoading...
Jolley Jo வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்................
June 22 at 5:36am · · 1 personLoading...
Renu Anthony miga arumai nanbare. en ore kelvi. intha saathi eppothu aliyum?
June 22 at 7:34am · · 1 personLoading...
Malikka Farook சாதிகளின் காதில் விழுந்திடுமா? இச்சேதி. மிக அருமை சுஹா.
June 23 at 4:30am · · 1 personLoading...
பறவையாய் பிரிந்த பாவை...
ஆம்ப லழகினை ஆதாரமாய் கொண்டே
ஆண்டவன் வடித்திட்டயென் பொன் வண்டே
ஆருயிர் வாங்கிடுமுன் வதனச் சொண்டே
ஆட்டிப் படைக்குதென் நெஞ்சமதை பெண்டே...
இடைக்குக் கீழே இலாவகமாய் விழுந்திருக்கும்
இளையநதி போலது சுண்டியே யெனையிழுக்கும்
கருங்கூந்தல் நெட்டாற்றில் மனம் தொலைந்திருக்கும்
காளையிவன் நெஞ்சமதும் கலங்கியிருக்கும்...
மேவிவந்த எண்ணமதை மெளனமுமே தட்டிவிட
மோகனச் சின்னமதை மொழியாலே திட்டிவிட
உனதி மையசைவுகள் என்னிதயம்வரை எட்டிவிட
உனக்கில்லையி தென உள்ளமெனை குட்டிவிட...
ஆடியசைந்த பேரூந்தும் அடைக்கலமதை கண்டு
ஆர மர அனைவரும் இறங்கும்வரை நின்று
ஆழ்மனதில் உருண்டோடிய ஆம்பலே நீயும்
அறியா திறங்கிபோகையிலே பற்றியது தீயும்...

என் காதல்!!
என் காதல்
கை கோர்த்து பூங்காக்கள் தோறும்
பூரித்திட்டதில்லை...
கடற்கரை மணலில்
கால்கள் பதித்ததில்லை
காற்றுவாங்கி
காலாற காதல் வளர்த்ததில்லை...
காதலர்தின கொண்டாட்டங்களில்
களித்ததில்லை
பரிசுகளால்
பட்டைதீட்டப்பட்டதில்லை....
சந்துக்கள் தோறும் சந்தித்து
சமூகக் கண்களால்
சவுக்கடிவாங்கியதில்லை
ஊர்வாய்கள்
உமிழ்ந்து தூற்றியதில்லை...
உயிருக்குள் சுமந்து
உணர்வுகளை நேசித்து
உள்ளத்தால் வளர்த்த
இரவுகளின் துணையோடு
இதயத்தின் நாதங்களை
கவியாய் மொழிபெயர்த்த
காவியக்காதலிது...
வீணென்று சொல்வதற்கும்
வீண்வார்த்தகளிதிலில்லை
விளையாட்டாய் கோபித்து
செல்லமாய் சண்டையிட்டு
சமரசமான சாதாரணக்காதலில்லை...
பொத்தி பொத்தி பதுக்கிவைத்தும்
பொசுக்கென்று முளைவிட்டு விருட்சமாயிடா
கண்ணீர் குவளைக்குள்ளே
நினைவுகளால் நீந்திவரும்
நிறைவேறாக்காதலிது -என்
நிர்கதியான காதலிது...
[வெற்றிFM ன்(30.05.2011) "காற்றின் சிறகுகள்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பான எனது கவிதை]
பூரித்திட்டதில்லை...
கடற்கரை மணலில்
கால்கள் பதித்ததில்லை
காற்றுவாங்கி
காலாற காதல் வளர்த்ததில்லை...
காதலர்தின கொண்டாட்டங்களில்
களித்ததில்லை
பரிசுகளால்
பட்டைதீட்டப்பட்டதில்லை....
சந்துக்கள் தோறும் சந்தித்து
சமூகக் கண்களால்
சவுக்கடிவாங்கியதில்லை
ஊர்வாய்கள்
உமிழ்ந்து தூற்றியதில்லை...
உயிருக்குள் சுமந்து
உணர்வுகளை நேசித்து
உள்ளத்தால் வளர்த்த
உண்மைக்காதலிது...
இரவுகளின் துணையோடு
இதயத்தின் நாதங்களை
கவியாய் மொழிபெயர்த்த
காவியக்காதலிது...
வீணென்று சொல்வதற்கும்
வீண்வார்த்தகளிதிலில்லை
விளையாட்டாய் கோபித்து
செல்லமாய் சண்டையிட்டு
சமரசமான சாதாரணக்காதலில்லை...
பொத்தி பொத்தி பதுக்கிவைத்தும்
பொசுக்கென்று முளைவிட்டு விருட்சமாயிடா
கண்ணீர் குவளைக்குள்ளே
நினைவுகளால் நீந்திவரும்
நிறைவேறாக்காதலிது -என்
நிர்கதியான காதலிது...
[வெற்றிFM ன்(30.05.2011) "காற்றின் சிறகுகள்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பான எனது கவிதை]
ஏது செய்வது??
தமிழ் காற்றை
தரணியெங்கும் சுவாசித்து-நல்ல
தலைமைகள் உருவாகிட
தலைவிதிகள் செய்திடலாம்...
பூமியெங்கும்
பூத்துக்கிடக்கும்
பூரிப்புக்களெல்லா மொன்றாக்கி-புது
பூலோகம் செய்திடலாம்...
கண்மணிக்குள் கலந்திருக்கும்
கனவுகளையும்
கல்லுக்குள் ஒளிந்திருக்கும்
கலைகளையும் புனரமைத்து
கலியுகம் செய்திடலாம்...
விண்ணுக்குள் புகுந்திடும்
விஞ்ஞானம் போல
காலங்காலமாய்
காதல் வளர்த்து
கல்லறைகளமைத்திட்ட நாம்
கல்யாணங்களை முறித்திடும்-காதலுக்கு
கல்லறை செய்திடலாம்...
எதுவுமற்ற மடமைகளகற்றி
எண்ணற்ற எண்ணங்கள் சூழ
ஏதேனும் செய்திடலாம்-மனிதத்தை
எய்திடலாம்..!!!
(இக்கவிதை 'மித்திரன்' வார இதழிலும், தினகரன் வாரமஞ்சரி , ' வார்ப்பு', 'தமிழ் ஓதர்ஸ்' 'LANKA SRI' ஆகிய தமிழ் இணைய இதழ்களிலும் வெளியானது.)
தரணியெங்கும் சுவாசித்து-நல்ல
தலைமைகள் உருவாகிட
தலைவிதிகள் செய்திடலாம்...
பூமியெங்கும்
பூத்துக்கிடக்கும்
பூரிப்புக்களெல்லா மொன்றாக்கி-புது
பூலோகம் செய்திடலாம்...
கண்மணிக்குள் கலந்திருக்கும்
கனவுகளையும்
கல்லுக்குள் ஒளிந்திருக்கும்
கலைகளையும் புனரமைத்து
கலியுகம் செய்திடலாம்...
விண்ணுக்குள் புகுந்திடும்
விஞ்ஞானம் போல
விளைநிலங்களில்-வறுமையகற்றும்
வித்தைகள் செய்திடலாம்...காலங்காலமாய்
காதல் வளர்த்து
கல்லறைகளமைத்திட்ட நாம்
கல்யாணங்களை முறித்திடும்-காதலுக்கு
கல்லறை செய்திடலாம்...
எதுவுமற்ற மடமைகளகற்றி
எண்ணற்ற எண்ணங்கள் சூழ
ஏதேனும் செய்திடலாம்-மனிதத்தை
எய்திடலாம்..!!!
(இக்கவிதை 'மித்திரன்' வார இதழிலும், தினகரன் வாரமஞ்சரி , ' வார்ப்பு', 'தமிழ் ஓதர்ஸ்' 'LANKA SRI' ஆகிய தமிழ் இணைய இதழ்களிலும் வெளியானது.)
என் சொர்க்கங்கள் சொற்பமாகின
.
அழுதழுது போகும்
ஆரம்ப வகுப்புக்கு
அடுத்த வீட்டு விமலா அக்கா
விரல் பிடித்து கூட்டிச்சென்ற
பயணங்களின்றும்
பசுமையாகவே....
செருப்பில்லாமல்
நடைபழக்கிய-அந்த
செம்மண் பாதை...
சாமி வைத்து விளையாடிய
கற்கள் நிறைந்த ஆற்றங்கரை
பூஜைக்கு பூப்பறித்த
காட்டுச்செடிகள்....
நான் டீச்சராகி அடிவாங்கிய-அந்த
பாவப்பட்ட வேலிச்செடிகள்-இப்போ
நான் பெரியவளாகியதைப் போலவே
மாற்றங்கள் கண்டிருந்தது...
விதியின் வேகத்தில்
விபத்துக்கள் அடைந்திருந்தது-என்
வியத்தகு கிராமம்
விழிகளுக்குள் சிக்கிக்கொண்ட
தேயிலை விரிப்பு-பசுமையின்
புதுமையினை ருசித்துக்கொண்டது!
மண் பாதைகள் மறுரூபமடைந்து
'தார்' சேலையை தமதாக்கியிருந்தது
சிக்கனமாய் கட்டியிருந்த
சின்னச்சின்ன வீடுகள்
சிங்கார மாளிகையாயிருந்தது
சின்னதாய் வருத்தம்தான்
எளிமையும் இயற்கையும்
வாடியிருந்ததால்...
நாங்கள் கூட்டாஞ்சோறாக்கி
கூடிவிளையாடிய-அந்த
மண்திட்டை
நீண்ட தேடலின் பின்
அடையாளங்கண்டேனது
பொது மலசலகூடமாய்...
வேறுபடுகள் ஒவ்வொன்றிலும்
வேதனை தெறிக்கிறது-என்
பள்ளிக்கால பசுமை
சில்மிஷங்கள் சிதைந்திருந்தது...
சிறு வயது சினேகிதராரும்
சிக்கவில்லை-மாங்கல்யம் பெற்று
மாமியார் வீட்டிலாம்...
வறுமைச் சொரூபங்களின்
வடிவம்-வடுக்களாய்
விலகியிருந்தது...
நிமிர்ந்து நின்ற தோட்டத்தின்
தோரணை கண்டு
வியந்த விழிகளுக்கு
பழமையின் பசுமை
பாழாகியது வேதனைதான்...!!!
(இக்கவிதை 29.09.2009 அன்று"மித்திரன் வாரமலர்" சஞ்சிகையிலும், 04.04.2011 அன்று 'வசந்தம்' தொலைக்காட்சியின் "தூவானம்" நிகழ்ச்சியில் "காணாமல் போன கவிதைகள்" எனும் தலைப்பில் ஒளிபரப்பானது)
ஆரம்ப வகுப்புக்கு
அடுத்த வீட்டு விமலா அக்கா
விரல் பிடித்து கூட்டிச்சென்ற
பயணங்களின்றும்
பசுமையாகவே....
செருப்பில்லாமல்
நடைபழக்கிய-அந்த
செம்மண் பாதை...
சாமி வைத்து விளையாடிய
கற்கள் நிறைந்த ஆற்றங்கரை
பூஜைக்கு பூப்பறித்த
காட்டுச்செடிகள்....
நான் டீச்சராகி அடிவாங்கிய-அந்த
பாவப்பட்ட வேலிச்செடிகள்-இப்போ
நான் பெரியவளாகியதைப் போலவே
மாற்றங்கள் கண்டிருந்தது...
விதியின் வேகத்தில்
விபத்துக்கள் அடைந்திருந்தது-என்
வியத்தகு கிராமம்
விழிகளுக்குள் சிக்கிக்கொண்ட
தேயிலை விரிப்பு-பசுமையின்
புதுமையினை ருசித்துக்கொண்டது!
மண் பாதைகள் மறுரூபமடைந்து
'தார்' சேலையை தமதாக்கியிருந்தது
சிக்கனமாய் கட்டியிருந்த
சின்னச்சின்ன வீடுகள்
சிங்கார மாளிகையாயிருந்தது
சின்னதாய் வருத்தம்தான்
எளிமையும் இயற்கையும்
வாடியிருந்ததால்...
நாங்கள் கூட்டாஞ்சோறாக்கி
கூடிவிளையாடிய-அந்த
மண்திட்டை
நீண்ட தேடலின் பின்
அடையாளங்கண்டேனது
பொது மலசலகூடமாய்...
வேறுபடுகள் ஒவ்வொன்றிலும்
வேதனை தெறிக்கிறது-என்
பள்ளிக்கால பசுமை
பறிபோயிருந்தது...
சிங்கார பருவத்தின்சில்மிஷங்கள் சிதைந்திருந்தது...
சிறு வயது சினேகிதராரும்
சிக்கவில்லை-மாங்கல்யம் பெற்று
மாமியார் வீட்டிலாம்...
வறுமைச் சொரூபங்களின்
வடிவம்-வடுக்களாய்
விலகியிருந்தது...
நிமிர்ந்து நின்ற தோட்டத்தின்
தோரணை கண்டு
வியந்த விழிகளுக்கு
பழமையின் பசுமை
பாழாகியது வேதனைதான்...!!!
(இக்கவிதை 29.09.2009 அன்று"மித்திரன் வாரமலர்" சஞ்சிகையிலும், 04.04.2011 அன்று 'வசந்தம்' தொலைக்காட்சியின் "தூவானம்" நிகழ்ச்சியில் "காணாமல் போன கவிதைகள்" எனும் தலைப்பில் ஒளிபரப்பானது)
Wednesday, August 3, 2011
மனந் திறந்திட்டவோர் மகிழ்வான சந்தர்ப்பந்தனில்......
எழுத்துத்துறையில் என் பாதங்களை எட்டிவைத்து நடந்திடவே கிறுக்கிவந்த என் எழுத்துக்களை மக்களின் பார்வைக்காக ஊடகங்களினூடாக உட்புகுத்தினேன் சென்ற பயனது பெற்று மனங்களாளுணர்ந்து பாராட்டப்பட்டபோது என் கவிகளும் பூப்பெய்திய பூரிப்பையடைந்தன.
தமிழமுதக்கடலில் நானும் நீந்திச்செல்லவெ ஆசைகொண்டு வீழ்ந்தேன் ஆனாலும் என்னால் தத்தளிக்கத்தான் முடிகிறது. தத்தித்தத்தளித்து எப்படியேனும் நீந்தக்கூடிய நிலையினையடைய முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் இம் முயற்சியும் அங்கீகரிக்கப்பட்டபோது எனதான ஆர்வங்கள் இன்னுமின்னும் அதிகரித்தது அந்த அங்கீகாரத்தின் முதல் அத்தியாயம் "லண்டன் தமிழ் வானொலி"யின் 'கீதாஞ்சலி' எனும் நம்மவர் படைப்புக்களை அறிமுகப்படுத்தும் அருமையான நிகழ்ச்சிக்காக என்னை நேர்காண அழைத்த சந்தர்ப்பமே.
எந்தவிதமான முன்னறிமுகமுமில்லாது கவிதைகளினூடாக கிடைத்த இவ்வரிய சந்தர்ப்பத்தினை அநுபவித்தபோது என் கவிதையின் உயிரோட்டத்தினை என்னால் உணரமுடிந்தது.
பொதுவாக ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் என்ற அந்தஸ்தினையடைய மிகவும் சிரமப்பட்டு கஸ்டப்பட்டு பல பாதைகளை கடந்தே அடையவேண்டியிருக்கிறது அதிலும் அந்த அந்தஸ்தினை பெறுவதற்கும் ஒரு தகுதி இருக்கவேண்டும், சமூகத்தை நோக்கிய வீச்சுக்களில் ஆளுமையிருக்க வேண்டும். இவ்வாறான தகுதிகளே ஒரு படைப்பாளியையும் அவரின் படைப்புக்களையும் சமூகத்திடம் கொண்டுசெல்கிறது.என்னதான் படைப்புக்களை பிரபல்யப்படுத்தினாலும் அது ஒரு நூலுருவில் வெளிவரும்போதே அவன் படைப்பாளியாக அங்கீகரிக்கப்படுகின்றான்.
ஆனாலும் மேற்குறிப்பிட்ட எந்தத்தகுதியுமில்லாத ஒரு வளரும் அல்லது வளர எத்தனிக்கும் எனது முயற்சியையும் ஊக்கப்படுத்தும் இந்நிகழ்வானது உண்மையில் எனது எழுத்துலகின் முதற்கல்லாகவே எண்ணுகின்றேன் இந்த சந்தர்ப்பத்தினை எனக்கு வழங்கிய அறிவிப்பாளினி திருமதி பேகம் அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றியினை மனதார சமர்ப்பிக்கின்றேன்.
30.07.2011 சனிக்கிழமை மாலை கிட்டத்தட்ட அரைமணித்தியாளங்களை சுமந்த நேர்காணலின் ஒலிப்பதிவு சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் செய்யப்பட்டது. 31.07.2011 அன்று இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணிக்கும் மறுஒலிபரப்பு மாலை 5.30 மணிக்கும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. குறைகளையும் நிறைகளாக காட்டி ஊக்கப்படுத்திய பேகம் அக்காவுக்கு மீண்டும் என் நன்றிகள்.
உள்ளூரிலே அதிகமாக பேசப்படாத என் கவியை உலக தமிழ் காதுகளுக்கு எட்ட வழிசமைத்த லண்டன் தமிழ் வானொலி அங்கத்தவர்களுக்கு நன்றிகள்.
இதுபோல இன்னும் பல இலைமறைக்காய் கலைஞர்களை ஊக்கப்படுத்தி உலகறியச்செய்து அவர்களுடய படைப்புக்களை சமூகத்திற்கு வழங்கிட இவ்வானொலி நிகழ்ச்சிகளின் முயற்சியும் சேவையும் வளரவும் வெற்றிப் பாதைதனையடையவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

நியதிகளின் வழியதினிலே...
ஆழ்வது மாள்வதும் மண்ணிலே நியதி
ஏழ்வதுந் தாழ்வதும் வாழ்வியல் பவனி வீழ்ச்
சியின் வடிவிலோர் விடியலின் மலர்ச்சி
சிந்தனையின் எழுச்சியில் சிகரம்போ லுயர்ச்சி...
குற்றஞ் சொல்லு லகைகுறையாய் நினைக்காதே
ஏற்றங் காண் பதிலுனக்குதவி மறக்காதே தற்
பெறுமையூ டதினால் தனித்துவ மிழக்காதே
பெற்ற பேற்றினையணைக்க சோம்பலினை வளர்க்காதே...
பட்டப் பாடுதனை கற்களாய் கொண்டிடு
திட்டங்கள் தீட்டியதை கோபுரமாய் நட்டிடு எட்ட
நின்றிடும் சிக்கலை வீரமா யுடைத்திடு
நிசப்தமான தென்றலாய் மீண்டுமீண்டுஞ் சுழன்றிடு...
வேகமாய் போவதெலாம் வெற்றியின் வடிவல்ல
யோகமாய் வாய்ப்பதெலாம் தோல்வியின் முடிவுமல்ல வி
வேகமாய் நடப்பதுவே வாழ்வழியதின் வேட்கை
வேரூன்றி நிற்பதற்கு கிடைத்தநல் தீட்சை...

Tuesday, August 2, 2011
ஆகஸ்ட் மாத "ஞானம்" இலக்கிய சஞ்சிகையின் புதிய படைப்பாளி அறிமுகத்தில் என்னுடைய புகைப்படத்துடன் அறிமுகக்குறிப்பும் கவிதையும் பிரசுரமாகியுள்ளது. எனது கவிதையையும் உள்வாங்கிக்கொண்ட ஞானம் சஞ்சிகைக்குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
வெளியான கவிதை
கலியுக போராட்டம்!!
குட்டைப்பா வாடையும் குதறிய தலைமுடியும்
கட்டுக்கடங்கா அலங்காரமும் கவர்ச்சியின் வனப்பும்
ஆண்களினா டைக்குள் அடைக்கலமான பெண்மையும்
வீதிகளின் வழியே விகாரமாய்த் தெரிகிறதே...
சேலையும் தாவணியும் சேராமலே யுடம்பில்
பாதியாடையும் பறந்திடு நிலையில்
பண்பாட்டை யுமெம் பண்புகளைத் தெருவில்
பார்க்கும் கண்களெல்லாம் பழிக்கிறதே...
நாகரிக மென்றெதை நாளும் வளர்க்கிறாய்
நாமெலாம் பெண்ணென்பதை நிமிடத்தில் மறக்கிறாய்
அச்ச மடமென்பதை ஆதிகால பெண்ணுக்கென்கிறாய்
அடக்கமென்தை அடக்குமுறையென அழுதார்ப்பரிக்கிறாய்...
பூவுக்கும் புயலுக்கும் புவியரின் வரையரை
பெண்ணுக்குமா ணுக்கும் பூர்வீக வரைமுறை
வகுத்திட்டது குற்றமன்று விளங்கிட்டதில் தவறுண்டு...
அழுகையால் கண்ணீராலல்ல அன்புமடக்கத்தினில்
ஆளுமையினா திக்கத்தில் ஆதரைமீதினில்
கலியுக போரட்டம் கரையெட் டிடட்டும்
கயவரின் கண்களும் கைதொழ துணியட்டும்...

Monday, August 1, 2011
உண்மையில் இவை சமூகத்தில் கண்டவைதான்
01.இங்கெந்த விண்ணப்பங்களும்
நிராகரிக்கப்படுவதில்லை
மரணம்!!
02.உதிர்ந்தவை மீண்டும்
பறக்க நினைக்கின்றன
பழுத்த இலைகள்!!
03.கல்லுக்குள் ஒளிந்தாலும்
கடலுக்குள் மறைந்தாலும்
கடவுளின் கண்களுக்குன்
பாவங்கள் மறைக்கப்படுவதில்லை...
04.பகுத்தறிந்ததை
பருகிட வஞ்சியே
பாட்டியின் கைப்
பார்வையாலே யுயிர்த்து
படுக்கை விட்டெழுந்த
பாடமு மிங்குண்டென்பதை யறிவீரோ
பாமரக்கை வைத்தியத்தின் முன்
பாண்டித்தியம் தோற்றதையு மறிவீரோ...
நிராகரிக்கப்படுவதில்லை
மரணம்!!
02.உதிர்ந்தவை மீண்டும்
பறக்க நினைக்கின்றன
பழுத்த இலைகள்!!
03.கல்லுக்குள் ஒளிந்தாலும்
கடலுக்குள் மறைந்தாலும்
கடவுளின் கண்களுக்குன்
பாவங்கள் மறைக்கப்படுவதில்லை...
04.பகுத்தறிந்ததை
பருகிட வஞ்சியே
பாட்டியின் கைப்
பார்வையாலே யுயிர்த்து
படுக்கை விட்டெழுந்த
பாடமு மிங்குண்டென்பதை யறிவீரோ
பாமரக்கை வைத்தியத்தின் முன்
பாண்டித்தியம் தோற்றதையு மறிவீரோ...
Subscribe to:
Posts (Atom)